"இது ஒரு கொலைக் கதை!" - 2
"இது ஒரு கொலைக் கதை!" - 2
2.
உறைகள் மாட்டிய கைகளில் தீயில் கருகிய ஒரு பாதி மண்டை ஓட்டோடு தீயணைப்பு அதிகாரி!!
சாதாரண தீவிபத்து இல்லை; ஒரு மரணமும் இதில் இருக்கிறது எனப் புரிந்த ராஜேஷ், இன்றைய தூக்கம் அவ்வளவுதான் என்ற புரிதலோடு அதிகாரியை நோக்கி நடந்தார்!
"யோவ், 612, அந்த மண்டையோட்டை பத்திரமா ஒரு ப்ளாஸ்டிக் கவர்ல வாங்குய்யா! உடனே அதை பரிசோதனைக்கு அனுப்பு. வீட்டுல ரெண்டு பேர் இருந்ததாச் சொல்றாங்க. வேற ஏதாவது கிடைக்குதான்னு பாருங்க சார்! ஏம்ப்பா, சத்யன், கலா இவங்கள்ல யாரையாவது நீங்க நேத்து பாத்தீங்களா?" எனக் கூட்டத்தைப் பார்த்துக் கேட்டவாறே சுறுசுறுப்பானார் ராஜேஷ்.
"நேத்து சாயந்தரம்கூட அவங்க ரெண்டு பேரையும் கடைத்தெருவுல பார்த்தேனுங்க. சிப்பி கூட வாங்கினாங்களே!" என்ற ஒருவனை அருகில் அழைத்தார்.
"உனக்கு அவங்களைத் தெரியுமா?"
"அப்படில்லாம் ஒண்ணும் ரொம்பப் பழக்கம்லாம் இல்லீங்க! ஏதோ வருவாங்க, போவாங்க. வழியில பாத்தா சிரிப்பாங்க. அவ்ளோதாங்க நம்ம பழக்கம்லாம்" என ஜகா வாங்கியவனை,
"என்னமோ சிப்பி வாங்கினாங்கன்னு சொன்னியே. அதைப்பத்தி சொல்லு" எனத் துருவினார் ராஜேஷ்.
"ஓ! அதுங்களா! இந்தப் பக்கம்தான் சிப்பி அள்ளுவாங்கன்னு ஒங்களுக்கும் தெரியுமே! அவரு அதை மொத்த விலைக்கு வாங்கி, தரம் பிரிச்சு, அடுத்தவங்களுக்கு விக்கற ஆளுங்க. அந்த வகையில பார்த்திருக்கேன்" என்றான் அவன்.
"சரி நீ போகலாம்" என அவனை அனுப்பிவிட்டு,
"என்னங்க, எதுனாச்சும் கிடைச்சுதா?' என அதிகாரி பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.
"சில எலும்புங்கல்லாம் கிடைச்சிருக்கு. தேடிகிட்டு இருக்கோம்." என்றார் அதிகாரி.
"எல்லாத்தியும் பத்திரமா சேகரிச்சு ஆய்வுக்கு அனுப்பணும்" என உத்தரவிட்டுவிட்டு, "வேற ஏதாவது தகவல் தெரிஞ்சா எங்கிட்ட வந்து சொல்லுங்க" என கூட்டத்துக்கும் சொல்லிவிட்டு காவல்நிலையம் செல்ல ஆயத்தமானார்.
முழு அறிக்கை எழுதி முடிக்காம இன்னிக்கு வீடு போக முடியாது என்ற எண்ணம் கொஞ்சம் வாட்டினாலும், கடமை உணர்வு அவரை நேராகக் காவல்நிலையத்துக்கு இட்டுச் சென்றது.
************************************************************
மறுநாள் காலை.............
பத்திரிகைகளில் முதல் பக்க செய்தியாக வந்தது இதுதான்!
"முட்டத்தில் பயங்கர இரட்டைக் கொலை!"
"துப்பாக்கியால் சுடப்பட்டு தடயத்தை மறைக்க இருவரையும் சேர்த்தே எரித்த கோரம்!!"
"தடயங்கள் ஏதுமில்லாமல் காவல்துறை திணறல்!!!"
ராஜேஷ் தினசரியை விட்டெறிந்தார்!
"இவங்களுக்கு இதே வேலையாப் போச்சு. காவல்துறையை திட்றதுக்கு எதுடா சாக்குன்னு காத்துகிட்டு இருக்காங்க! ரெண்டு பேரு செத்துப் போயிருக்காங்க! இல்லை, இல்லை, கொலை செய்யப்பட்டிருக்காங்க! அவங்களைப் பத்திக் கவலையே இல்லை இவங்களுக்கு!" எனப் பொருமினார்!
"இளவயசு! அதான் இப்படி அடிச்சுக்கறாரு!" எனக் கண்ணடித்தார் 612!
2 நாட்களுக்குப் பிறகு....
"404! ரிப்போர்ட் ஏதாவது வந்திருக்கா?" எனக் கேட்டார் ராஜேஷ்!
"உங்க மேஜை மேல வைச்சிருக்கேன் ஐயா!" என்றார் 404.
எடுத்துப் படித்தார் ராஜேஷ்!
'கிடைத்த தடயங்கள்:
பாதி எரிந்த ஒரு மண்டையோடு
இரண்டு கை எலும்புகள்- எரிந்த நிலையில்
மேலும் சில எலும்புத் துண்டுகள்
மண்டையோட்டைத் தவிர, மற்ற தடயங்களில் இருந்து எதுவும் அறிய முடியவில்லை.
மண்டையோடு முழுக்கவும் எரிந்த நிலையில் இருந்தாலும், அதில் ஒரு சிதிலமடைந்த குண்டு இருக்கிறது.
அதிலிருந்து என்ன மேல் விவரங்கள் தெரிய முடியும் எனக் குற்றப் புலனாய்வுத் துறைக்கு[Criminal investigation] அனுப்பி வைத்திருக்கிறோம்."
படித்தவுடன் ஒரு ஏமாற்றம் பிறந்தது ராஜேஷுக்கு.
"இனி நமக்கு இதில் வேலையில்லை. புலனாய்வுத்துறை இதை எடுத்துக் கொள்ளும். நம்மளை ஒரு ஊறுகாயாத்தான் எடுத்துக்கும்! நமக்கு வழக்கம் போல அடிபுடி கேஸ்தான்!" வெறுப்புடன் உமிழ்ந்தார் ராஜேஷ்.
"அப்பிடி இல்லீங்க! நாமளும் இதில் உதவ முடியும்!" அனுபவம் மிகுந்த 612 ஆதரவாய்ச் சொன்னார்.
"நமக்குத்தான் இந்த ஊரைப் பத்தி அவங்களை விட நல்லாவே தெரியும்! அதுனால நாம இதை செஞ்சது யாருன்னு கண்டுபிடிக்கமுடியும்" எனச் சொன்ன 612-ஐ கனிவுடன் பார்த்தார் ராஜேஷ்.
[தொடரும்]
**********************
13 பின்னூட்டங்கள்:
test
//"இது ஒரு கொலைக் கதை!" - 2 //
இதுவரை சுவையார்வமாகப் போகுது ...!
கதையை கொலை பண்ணவில்லையே ? :)
//கதையை கொலை பண்ணவில்லையே ? :)//
நீங்க என் மேல வைச்சிருக்கும் அசாத்திய நம்பிக்கையைப் பார்க்கும்போது புல்லரிக்குது கோவியாரே!!
:))))))))))))
கதை நல்லா இருக்கு.... எப்போ அடுத்த பகுதி??
//
கதை நல்லா இருக்கு.... எப்போ அடுத்த பகுதி??//
இந்தியத் திங்கள் காலை.
அதைத் தொடர்ந்து, தி, பு, வெ, என அடுத்து 3 வாரங்களுக்கு!
Criminal Investigation - குற்றப் புலனாய்வு; சட்டப் புலனாய்வு இல்லை
Criminal Investigation க்கு அனுப்பி வைத்தது யார்..
அப்படி அனுப்புவதற்கு Cr. P.C ( Criminal Procedure Code) ல் வழிமுறை
சொல்லியிருக்கு.
இப்படி அடுத்த நாளே அனுப்ப முடியாது..
சட்ட நடைமுறைகளில் இருக்கும் வார்த்தைகளை கையாளும் போது கவனமா பண்ணுங்க
சங்கர் குமார்
உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்
திருத்தத்துக்கு நன்றி, 'நலம் பெறுக'.
எழுதும் போதே நெருடியது. சரி, பதியும் போது பார்த்துக் கொள்ளலாம் என நினனத்து விட்டேன். பிறகு மறந்துவிட்டேன்.
இப்படி உங்களைப் போல விவரம் தெரிஞ்ச பெருசுங்க வந்து சொல்லுவாங்கன்னு நினனச்சேன். அதேபோல வந்துட்டீங்க! நன்றி.
தகவலுக்கு நன்றி, திரு. அனானி.
விரைவில் இணைக்கிறேன்.
ஒரே ஒரு மண்டையோடு ஆனா செய்தி என்னவோ ரெட்டைக் கொலை! ஒரு வேளை ரெட்டை மண்டையோ?! :))
//ஒரே ஒரு மண்டையோடு ஆனா செய்தி என்னவோ ரெட்டைக் கொலை! ஒரு வேளை ரெட்டை மண்டையோ?! :))//
கதைய்யைச்சரியா படிக்காம பின்னூட்டம் போட்டா இப்படித்தான்.
//அந்த மண்டையோட்டை பத்திரமா ஒரு ப்ளாஸ்டிக் கவர்ல வாங்குய்யா! உடனே அதை பரிசோதனைக்கு அனுப்பு. வீட்டுல ரெண்டு பேர் இருந்ததாச் சொல்றாங்க. வேற ஏதாவது கிடைக்குதான்னு பாருங்க சார்! ஏம்ப்பா, சத்யன், கலா இவங்கள்ல யாரையாவது நீங்க நேத்து பாத்தீங்களா?" //
இதன் படி, ரெண்டு பேர் இருந்தாங்க. இப்ப ரெண்டு பேரையும் காணலை.
அதைவைச்சு பத்திரிக்கைங்க போட்ட செய்தி அது,கொத்ஸ்!
//கதைய்யைச்சரியா படிக்காம பின்னூட்டம் போட்டா இப்படித்தான்.//
அதான் சிரிப்பான் எல்லாம் போட்டு இருக்கேனே. பத்திரிகைக் காரங்க ரெண்டு பேர் அப்படின்னு சொன்னதுக்கு காரணம் கண்டு பிடிக்கறேன். நீங்க வேற....
ஓ!>>>>> சிரிப்பான் போட்டா இதைக் கண்டுக்கக்கூடாதில்ல! மறந்துட்டேன்! :)))))0
Post a Comment