Thursday, April 27, 2006

" கொட்டு முரசே" !!

6.
வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு 'முரசே' !!

"பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்" என்னும் பழமொழிக்கேற்ப,
"யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும்" என்னும் முதுமொழிக்கேற்ப,
"உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய்" என்று, பொறாமையில் வளர்ந்தவர்கள் கடைசியில் அழுவது போல,

இரு கழகங்களும், 'இந்தமுறை எப்போதும் போல நமக்கு நாம்தான் போட்டி; நம் பங்கீட்டுக்குள் அடுத்தவனுக்கு கொஞ்சம் காட்டி விட்டு, நாமே சுருட்டிக்கொள்வோம்', என நினைத்த கணக்கெல்லாம் பொய்யாக,

நினைத்தபடி 'அலை' ஒன்றும் வீசாத நிலை கண்டு,
மனம் புழுங்கி,
உளம் வெதும்பி,
என்ன செய்வது என அறியாமல்,
ஏனிப்படி ஆயிற்று?
யார் காரணம்?என
தலையைச் சொறிந்து கொண்டும்,

விடை ஒன்றும் கிடைக்காமல்,
திகைத்து நிற்கின்ற நேரத்தில்,
தேர்தலுக்குப் பத்து நாட்கள் மட்டுமே உள்ள இந்த நேரத்தில்,
என்ன செய்யலாம்,
யாரைத் திட்டலாம் என்று புரியாது,
அரண்டு போயிருக்கும் நிலையில்,

இவனைத் திட்டுவதாக நினைத்து,
யாரையோ உசுப்பி விட்டோமே!
தேர்தல் நெருங்கும் போது தென்னாட்டில்
"சிங்கத்தையும், சிறுத்தையையும்" தூண்டி விட்டுவிட்டோமே என்று,
இல்லாத முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கும்
கலைஞர் ஒரு புறம்,

பெண்ணென்பதை மறந்து பேயாட்டம் போட்டோமே,
நல்லோரையும், எளியோரையும் உள்ளே வைத்தோமே,
வல்லாரையும், எல்லாரையும் காலில் விழ வைத்தோமே,
அந்தப் பாவங்கள் எல்லாம் இப்போது வந்து சூழ்ந்து ,

"சிலம்பில்" சொன்ன படி,
'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்'என்னும்
உன்னத வாக்கியம் உண்மையாக
உரு முன்னே தோன்றுவதைப் பார்த்து,
தலைவியும், தோழியும் மயங்க,

கறுப்புச்சிங்கம் 'விஜய'நடை போட்டு வர,
தென்னகத்தில் 'தேவர்மகன்' துள்ளி எழுந்து வர,
தென்கோடியில் சத்தமின்றி,
முல்லைப்பெரியார் மக்களெல்லாம்
மனமுவந்து கூடிவர,

தமிழகத்தில்,
தலைவிரித்து,
முப்பதாண்டுக் காலம் மோசடி செய்த
கழகங்களின் ஆட்சிக்காலம்
முடிவுக்கு வருகுதென,

'விஜய'மெனக் 'காந்தம்'ஒன்று வேகமாகப் பரவுகின்ற
'முரசு'க்கே ஓட்டென்று கொட்டு முரசே!
வீணர் ஆட்டம் ஓய்ந்ததென்று கொட்டு முரசே!
வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு 'முரசே' !!


""வினைக்குரிமை நாடிய பின்றை அவனை

அதற்குரியனாகச் செயல்." [குறள் 518]

[ஒருவன் ஒரு செயலுக்குத் தகுதியுடையவனாதலை ஆராய்ந்து துணிந்த பின்னர், அவனை அச்செயல் செய்தற்கு உரியவனாக அச்செயலில் அமர்த்துதல் வேண்டும்.]





Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP