Tuesday, April 18, 2006

arasiyal!


"அரிசியல்"
அனா ஆவன்னா படித்தாலும் சரி

படிக்க வில்லையாயினும் சரி
மானமிழக்க மனமுண்டா?

இதோ உனக்கு ஒரு சீட்டு!

அரசியலில் ஒரு எழவும் தெரியாதா?
அரசியல் என்றாலே புரியாதா?
சசிகலா வம்சத்தின் உடன் பிறப்பா?

இதோ உனக்கு ஒரு சீட்டு!

வாரிசு முறையில் பிணக்குண்டா?
"பெரிசின்" பேச்சில் விருப்புண்டா?
தீக்குளிக்கத் தயாரா நீ?

இதோ உனக்கு ஒரு சீட்டு!

அரசியல் என்பது யாருக்கு வேண்டும்?
அரசியல் இனிமேல் யாருக்கு வேண்டும்?
"அரிசியல்" தெரியுமா உனக்கு?

இதோ உனக்கு ஒரு சீட்டு!

மானமிழந்து தமிழர் இங்கே
மானமின்றிப் பின் செல்கின்றார்
மானமுள்ள எவனும் இனிமேல்
மானம் காத்து மறுத்திடுவாரோ
ஈனமில்லா இவ்விரு கழகங்களையும்?

உப்பு போட்டுத் தின்கின்ற அனைவரும்
முப்பதாண்டு சுயநல ஆட்சியை
இப்போதிங்கு ஒதுக்கா விட்டால்
எப்போதும் இனி விடிவில்லை நமக்கு!

'அரிசியல்' பேசி அவமானப் படுத்துகிறார்.
'அரிசியல்' மூலமே ஆட்சி பிடிக்க எண்ணுகிறார்.
'அரிசியல்'ஆல் ஆட்சிக்கு வந்தவர்
'அரிசியல்'ஆல் அழிவதுதானே முறை!

அரசு அன்று கொல்லும்!
அது பழைய மொழி!
"அரிசி" இன்று கொல்லும்!
இது புது மொழி!!

ரசிகர் கூட்டங்கள் உடனே வருமென்று
சரியாகத் தெரியும்எனக்கு!
'என்னெஸ்'சும் மற்றோரும்
உடனிங்கு வந்திடுங்கள்!

Read more...

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP