"விநாயகர் அகவல்" -- 15
"விநாயகர் அகவல்" -- 15

முந்தைய பதிவு
நான் வணங்கும் பெரியவர் சொன்னது!
"பெரியோர்களை மெய்யாக பணிந்து தெரிந்ததை சொல்கிறேன்.
சீதக் களபச் செந்தாமரை பூம்பாதச் சிலம்பு பலஇசை பாட...
சீதம் (seetham) எனும் சொல் பொதுவாக குளிர்ச்சியை குறிக்கும். சீதம் எனும் சொல் சந்தனத்தையும் குறிக்கும். களபம் என்றால் கலவை; வாசனையுடன் கூடிய கலவை எனும் பொருளைத் தரும். ஆக சந்தனகலவை பூசப்பெற்ற செந்தாமரை பூ போன்ற திருவடிகளில் உள்ள சிலம்பு பல இசையை பாட...என்னும் நேரடி பொருள் வருகிறது.
ஒரு யோகியரின் ஒவ்வொரு சொல்லும் பெரிய விளக்கத்தை உள்ளே வைத்துக் கொண்டிருக்கும். காரணம் ஒரு சொல் இங்கே தவறினாலும், சங்கேதமாக இருக்கும் இவற்றின் பொருளை சிந்திக்கும் யோக மாணவன் திசை தடுமாறி விடக்கூடும். ஆகவே அத்தனை சொற்களும் எந்த அர்த்தத்தை ஒரு சேர காண்பிக்கின்றவோ அதுவே சரியானதாக ஆகும்.
சீதா எனும் சொல்லிற்கு ஏர்க்காலினால் உழும் போது நிலத்தில் ஏற்படும் உழுத அடையாளம் எனும் பொருளுண்டு. அதில்தான் விதையை தூவுவார்கள் அல்லது நீர் பாய விடுவார்கள். அதனால்தான் சீதா என்று ஜனகரின் மகளுக்கு பெயர் வந்தது. நிலத்தில் உழுத போது அந்த பிளவில் அவள் கிடைத்ததால் அவளுக்கு அந்த பெயர்.
மூலாதாரம் பிருத்வி தத்துவமாகும். அதாவது நிலத்தின் தன்மை கொண்டது. நிலத்தின் தன்மையை உள்ளும்,புறமும் அறிவதற்கு, ஆள்வதற்கு உதவும் இடம். அதற்கு கீழே குல குண்டம் எனும் இடமே குண்டலினியின் இடம். பிராணனால் அங்கு உழுது கீறப்படும் போது அவள் விழித்தெழுகிறாள் அல்லது வெளிப்படுகிறாள். ஆக யோக மார்க்கத்தில் சீத எனும் சொல் வரும்போது சங்கேதமாக குலகுண்டம் சுட்டிக் காட்டப்படுகிறது. ஜனன உறுப்பிற்கும், குதத்திற்கும் இடையே சற்று உட்புறம் அமைந்திருப்பதாக பெரியோர் கண்டறிந்து சொல்கின்றனர்.ஆங்கிலத்தில் Perineum என்பார்கள்.
களபம் என்றால் கலவை! சரி என்ன கலக்கிறது? அந்த குலகுண்டத்தில் (perineum) குண்டலினியுடன் பிராணவாயு கலக்கிறது. இரண்டும் சேர்ந்து மேலே ஒன்றாக எழும்புவதால் இங்கு களபம் என்ற சொல் பயன்படுகிறது.
சரி! வேறு என்ன பொருள் இந்த சொற்களுக்கு வருகின்றன? அவையும் இதே பொருளை சுட்டிக்காட்ட வேண்டும். அப்படி இருந்தால்தான் இந்த சங்கேத குறிகளை கண்டறிந்தது சரியென்று ஆகும்.
சீதம் என்றால் சந்தனம், களபம் என்றால் கலவை! சந்தனம் என்பது வாசனையை குறிக்கும். நாற்றம் (வாசனை) என்பது பிருத்வி தத்துவத்தின் தன்மாத்திரையாகும். அதாவது மூலாதாரத்தின் வேலை. களபம் என்றால் வழக்கம் போல் கலவை! ஆக வாசனை என்றாலே வாயு இல்லாமல் இல்லை! காற்று இல்லாமல் மணத்தை உணரமுடியாது. ஆக இங்கே சந்தனம் என்பது மூலாதாரத்தில் வந்த வாயுவை குறிக்கும். எது கலக்கிறது? குண்டலினி! ஆக இந்த முறையிலும் சீத களபம் என்றால் அதே பொருள் வருகிறது.
சீதம் என்றால் மது என்று ஒரு பொருள் உண்டு! களபம் என்றால் யானைக்கன்று என்று ஒரு பொருள் உண்டு! மதுவை போன்ற மதநீரால் மதமான யானைக்கன்று என்று பொருள் வருகிறது. சஹஸாரரத்தில் முழு கடவுளாய் விளங்குபவர் இங்கே முதற்கடவுளாயும் இருக்கிறார்.
மேலே இருப்பவர் மஹாகணபதி என்றால் இவர் பாலகணபதி. எல்லா ஆதார தெய்வங்களுக்கும் மிக இளைய தெய்வமாய் இருப்பதால் பாலவிநாயகன் ஆகிறார். மேலே இருக்கும் மஹாகணபதி முழுமுதற்கடவுளின் சிரசு என்றால் மூலாதார கணபதி பாதம் ஆகிறார். ஆகவே சீதக் களபப் பூம்பாதம் இங்கேயும் பொருந்துகிறது. இங்கே மது போன்ற மதநீராக ஆவது கீழே வந்த வாயுவே! குண்டலினி மூலாதாரத்தை தொடும்போது ஒரு விளைவு ஏற்பட்டு அங்கு குண்டலினியே விநாயகராய் காட்சி அளிக்கிறாள். எனவே இங்கும் சீதக்களப என்றால் வாயுவுடன் சேர்ந்த குண்டலினி எனும் பொருள் வந்துவிடுகிறது.

சீதம் என்றால் மேகம் என்றும் ஒரு பொருளுண்டு. குளிர்ச்சியினால் அதற்கும் அந்த பெயருண்டு. மேகம் என்பது வாயுநிலையை தொட்ட நீரே! ஆக இங்கும் மேகம் வாயுவை குறிக்கும் சொல்லாக யோகம் சொல்லும். அதனால்தான் பல யோக நூல்களில் மஹாவாயுவை மேகம் என்று குறியீடாக சொல்லும் வழக்கம் உண்டு. பின் களபம் என்றால் அதே பொருள்! யானைக்கன்று என்று வைத்துக் கொண்டாலும், கலவை என்று வைத்துக்கொண்டாலும் குண்டலினியுடன் சேருவதையே குறிக்கும்.
சீதம் என்றால் நீர்! வாயுவே கீழே இறங்கும் போது அடர்த்தியினால் நீர்தன்மை பெறுகிறது. எனவேதான் வாயு மூலாதாரத்தை நோக்கி இறங்குகிறது. அங்கே மூலக்கனலால்தான் மீண்டும் சுத்த வாயுவாக ஆகிறது. திரும்ப களபத்துடன் சேர்த்தால் அதே பொருள் வரும்.
சீதம் என்றால் பிரதிப்பலிக்கக்கூடிய என்ற பொருளும் உண்டு. நீரை சீதம் என்று சொன்னதால்தான் இந்த பொருள் வந்தது என்றாலும். உண்மையில் மஹாவாயு நேரடியாக பார்க்கமுடியாத உண்மையை பிரதிபலிப்பதால் அதனை அந்த பெயரில் சில யோக நூல்களில் சொல்லுவதுண்டு!
நேரடியாக பார்க்கமுடியாத உண்மையை பிரதிப்பலிப்பது என்றால்?
சூரியனை நேரடியாக பார்க்கமுடியாத போது கண்ணாடியில் அதனை பிரதிபலிக்க செய்து காண்பதை போல.
மஹாவாயு ஆத்ம தன்மையை பிரதிபலித்து காட்டும் தன்மை கொண்டது. எனவே அதை கண்ணாடி என்றும் சொல்வர். மஹாவாயு சரி வர ஏறாத யோகிகள் எனக்கு இன்னும் கண்ணாடி போடவில்லையப்பா என்று பரிபாஷையில் சொல்வதை கேட்டிருக்கிறேன்.
செந்தாமரை பூம்பாத சிலம்பு பல இசை பாட
செந்தாமரை பூம்பாத சிலம்பு பல இசை பாட
செந்தாமரை போல சிவந்த நிறத்தில் இருப்பது மூலாதாரம் மாத்திரமே! பாதம் என்பதை கால் என்றும் சொல்வர். கால் என்றால் காற்று! பாதம் என்றாலே யோக முறையில் காற்றுதான். மூல ஆதாரமாகிய பாதத்தில் விழுவது காற்று. அதன்பிறகு அது மஹாவாயுவாக ஆகிவிடும். சிலம்புதலால் சிலம்பு என்ற பெயர் அதற்கு வந்தது. இங்கே வாயுவானது சுழுமுனை வழியே நுழைய ஆரம்பித்ததில் இருந்து செவியில் சின்சின் எனும் ஒரு ஒலி எழும்ப ஆரம்பிக்கிறது. சுவற்றுகோழி கத்துவதை போல. சில் வண்டு சத்தம் எழுப்புவதை போல. சில்வண்டின் சத்தத்தை கொலுசு சத்தம் என்றெண்ணி பயந்தவர் பலருண்டு அல்லவா?
மூலாதாரத்தில் வாயு நுழைந்த அக்கணம் அந்த கொலுசு சத்தம் போன்ற சின்சின் எனும் ஒலி கேட்க ஆரம்பிக்கிறது. அதன் பின் வாயுவின் நகர்தலால் ஒவ்வொரு இசை கேட்க ஆரம்பிக்கிறது. சின் எனும் ஒலி, மத்தளம், புல்லாங்குழல், கண்டா மணி, வண்டு,வீணை, சங்கு, அலையோசை, இடி போன்ற சத்தங்களும் கேட்கின்றன. இதையே பல இசை பாட என்று சொல்லப்படுகிறது.
பூ என்ற சொல் பூவாகிய ஆதாரத்தையும் குறிக்கும்; பூ ஆகிய பூமி எனும் மூலாதாரத்தையும் குறிக்கும்.
இப்படி சிந்தித்து அறியும் மாணாக்கன் தன் அனுபவத்தின் மூலமாக இவை உண்மை என்னும் ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறான்.
இறைவன் அருளால் தவறின்றி சொல்ல முயல்கிறேன். வழக்கம் போல் பெரியோர்களும், நண்பர்களும் காணும் தவறுகளை பொறுத்து விடுங்கள்."
மேலே சொன்னது அனைத்தும் நான் வணங்கும் பெரியவர் சொன்னவை!
**************************
[தொடரும்]