Sunday, September 21, 2008

"விநாயகர் அகவல்" -- 7

"விநாயகர் அகவல்" -- 7


[முந்தைய பதிவு]

ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்

ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி [34]

ஐம்புலன் அவஸ்தை கருவிகள் நிகழ்த்தும்!

'கண் செவி மூக்கு வாய் தொடுபுலன்' என்னும்

ஐம்புலன் ஆட்சி-- இரு கண், இரு செவி,

இரு துளை நாசி, ஒருவாய், ஆண்குறி,

ஆசனவாய்-- எனும் ஒன்பது வாயில்

வழியே நிகழும் வகையினை அறிந்து

வாசல் திறக்கும் கதவினை ஓம் எனும்

மந்திரச் சொல்லால் அடைத்திடும் வழியை

எனக்கு இன்புடன் அருளிக் காட்டி,

ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே [36]


ஆழ்நிலை தியானம் புரிந்திடும் தவத்தோர்

ஆறாதாரங்கள் வழியினில் செலுத்தி

பிராணனை ஒடுக்கும் வித்தையை அறிவர்!

மூலாதாரம் என்னும் முதல்நிலை

குதம்,குறி இவற்றின் நடுவே இருக்கு

கணபதி இங்கே ஆளுமைசெய்து

சாதகன் தன்னை வழிநடத்திடுவார்

குறிமூலம் தன்னில் சுவாதிட்டானம்

பிரமன் இங்கு அமர்ந்திருப்பார்

உந்திக் கமலம் தன்னில் மணிபூரகம்

திருமால் இதிலே வாசம் செய்கிறார்

இதயநாடியில் அநாகதம் உளது

உருத்திரர் இதனின் தலைவர் ஆவார்

கண்டம் நடுவே விசுத்தி ஆகும்

மகேசர் தலைமையில் இயக்கம் நடக்கும்

புருவமத்தியில் ஆக்ஞை எனப்படும்

சுழுமுனை என்பதும் இதுவேதான்

ஆளுமை செய்பவர் சதாசிவர் ஆவார்

மூலம் தொடங்கி மேலே எழும்பி

பிராணன் இவற்றின் வழியே கடந்து

சுழுமுனை வரையில் சுழன்று செல்லும்

இந்நிலை வந்தவர் இகத்தை மறப்பர்

ஆன்ம உணர்வினில் எல்லாம் மறந்த

இனிமை அனுபவம் தன்னில் திளைப்பர்

இவ்வகை செய்திடும் யோகப்பயிற்சி

ஆதாரயோகம் என்பர் ஆன்றோர்

தன்னை மறந்தவன் இறையினை உணரும்\


இன்னொருநிலையே நிராதாரம் என்பர்


இவ்வகை யோகம் கைகூடிவிட

பிராணன் வீணே செலவாகாமல்

இடம் வலம் என்னும் இரண்டும் அடக்கி

ஆனையைப் பழக்கும் அங்குசம்போல

ஆனைமுகனும் மூலத்தில் நின்று

அன்புடன் அருள்வார் அவரைத் துதித்தால்!

இந்நிலை கைவரின் பேச்சும் ஒழியும்

ஆன்மா என்றும் ஒருநிலை நிற்கும்


இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி [38]


சூரியன், சந்திரன், அக்கினி என்னும்

மூவகை நாடிகள் உடலில் உள்ளன.

பிங்கலை என்னும் சூரியநாடி

வலப்பக்க நாசியின் வழியே செல்லும்

இடகலை என்னும் சந்திரநாடி

இடப்பக்க நாசியின் வழியினில் செல்லும்

சுழுமுனை என்னும் அக்கினிநாடி

உடலின் நடுவில் உயிர்த்து நிற்கும்

வல, இடம் வாயு சென்றுவருவதில்

உடலின் இயக்கம் நிகழ்கிறது

பிராணனின் வாயு உள்ளே செல்வது

பூரகம் என்னும் சொல்லால் அறியும்

உள்ளே சென்றதை உடலிருத்துவது

கும்பகம் என்னும் சொல்லால் அறியும்

வெளியே சென்றிடும் வாயுவின் செயலை

இரேசகம் என்னும் சொல்லால் அறிக

ஓமெனும் சொல்லைப் பிரித்துப் பார்த்தால்

அகரம் உகரம் மகரம் புரியும்


பிங்கலைக்குரியது அகரம் ஆகும்

உகரமும் மகரமும் இடகலை சுழுமுனை

இரண்டையும் குறிக்கும் எழுத்துகள் ஆகும்

மூலத்தில் எழுந்திடும் முக்கோண ஜோதியை

மேலே எழுப்பிச் சிரசில் கொணர்ந்தால்

ஆயிரம் இதழுடை தாமரை ஒன்று

அகலவிரிவதை ஆன்றோர் உணர்வர்

இவ்வகை வழிகளின் முறைகள் யாவையும்

குருமுகம் அறிவது சாலச் சிறந்தது


இடகலை பிங்கலை இரண்டும் நிறுத்தி

சுழுமுனைவழியே சிரசைக் காட்டிட

கணபதி அருள ஔவை மகிழ்கிறாள்!


************************************************

[தொடரும்]

அடுத்த பதிவு

5 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Monday, September 22, 2008 9:45:00 PM  

//ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே [36]ஆழ்நிலை தியானம் புரிந்திடும் தவத்தோர்

ஆறாதாரங்கள் வழியினில் செலுத்தி

பிராணனை ஒடுக்கும் வித்தையை அறிவர்!

மூலாதாரம் என்னும் முதல்நிலை

குதம்,குறி இவற்றின் நடுவே இருக்கு

கணபதி இங்கே ஆளுமைசெய்து

சாதகன் தன்னை வழிநடத்திடுவார்

குறிமூலம் தன்னில் சுவாதிட்டானம்

பிரமன் இங்கு அமர்ந்திருப்பார்

உந்திக் கமலம் தன்னில் மணிபூரகம்

திருமால் இதிலே வாசம் செய்கிறார்

இதயநாடியில் அநாகதம் உளது

உருத்திரர் இதனின் தலைவர் ஆவார்

கண்டம் நடுவே விசுத்தி ஆகும்

மகேசர் தலைமையில் இயக்கம் நடக்கும்

புருவமத்தியில் ஆக்ஞை எனப்படும்

சுழுமுனை என்பதும் இதுவேதான்

ஆளுமை செய்பவர் சதாசிவர் ஆவார்

மூலம் தொடங்கி மேலே எழும்பி

பிராணன் இவற்றின் வழியே கடந்து

சுழுமுனை வரையில் சுழன்று செல்லும்

இந்நிலை வந்தவர் இகத்தை மறப்பர்

ஆன்ம உணர்வினில் எல்லாம் மறந்த

இனிமை அனுபவம் தன்னில் திளைப்பர்

இவ்வகை செய்திடும் யோகப்பயிற்சி

ஆதாரயோகம் என்பர் ஆன்றோர்

தன்னை மறந்தவன் இறையினை உணரும்\


இன்னொருநிலையே நிராதாரம் என்பர்


இவ்வகை யோகம் கைகூடிவிட

பிராணன் வீணே செலவாகாமல்

இடம் வலம் என்னும் இரண்டும் அடக்கி

ஆனையைப் பழக்கும் அங்குசம்போல

ஆனைமுகனும் மூலத்தில் நின்று

அன்புடன் அருள்வார் அவரைத் துதித்தால்!

இந்நிலை கைவரின் பேச்சும் ஒழியும்

ஆன்மா என்றும் ஒருநிலை நிற்கும் //

இரண்டு வரிக்கு இவ்வளவு விளக்கமா ? அதற்கு பொருளே அது தானா, இல்லை, நீங்களே வழக்கம் போல் எழுதுவதா ?

எல்லா தெய்வமும் அங்கங்கே இருக்குன்னு சொல்லி இருக்கிங்க, அதுல பெண் தெய்வம் எதையுமே காணுமே ? எழுதும் போது நினைவுக்கு வரவில்லையா ?

VSK Wednesday, September 24, 2008 8:39:00 PM  

விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்துவரும்!

கோவி.கண்ணன் Wednesday, September 24, 2008 8:58:00 PM  

//விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்துவரும்!//

மற்ற சாமிகளை தொழ ?

Anonymous,  Sunday, November 24, 2013 8:50:00 AM  

I'm extremely happy on your explanation of the Agaval. You have nailed many concepts on their head. Surely, your guru must be a great man. You are a lucky soul.

Anonymous,  Sunday, November 24, 2013 8:54:00 AM  

May I know the name of your Guru.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP