Sunday, September 14, 2008

"விநாயகர் அகவல்" --- 1

"விநாயகர் அகவல்" --- 1
என் இனிய அன்பான நண்பர்களே,

ஔவையார் அருளிய விநாயகர் அகவல் நான் தினமும் ஓதும் ஒரு பனுவல்.

சேரமான் நம்பி கைலாயம் செல்ல விரைகிறார்!

ஔவையாரையும் உடனழைக்க, தன் பிள்ளையார் பூஜையை முடித்த பின்னே வர முடியும் என்கிறார் ஔவையார்.

காத்திராமல் நம்பி விரைய, ஔவையார் பூஜையைத் தொடர்கிறார்.

அப்போது பிறந்ததுதான் விநாயகர் அகவல்!

அகவலைப் பாடி முடித்ததும், தன் தும்பிக்கை மூலம், விநாயகப் பெருமான் ஔவையாரை நேராக ஒரு நொடியில் கைலாயம் கொண்டு சேர்த்ததாக வரலாறு!

அதாவது, இதில் சொல்லியபடி செய்தால், இறைவனடி சேரலாம் என்பது கருத்து!!

இதெல்லாம் தெரியாமலேயே, இதன் இனிமையும் சந்தமும் என்னை மிகவும் கவர்ந்தது.

பொருள் முழுதும் அறியாமலேயே இதனைச் சொல்லி வந்திருந்தேன்.

தமிழ்மணத்தில் பதிவெழுதத் தொடங்கியபின், இதனை மேலும் ஆழ்ந்து படிக்கத் துவங்கினேன்.


அகவல் என்றால் "அழைப்பது" எனப் பொருள்!

என் முருகனின் மயிலும் அகவும்!!

எனவே, இது மேலும் என்னைக் கவர்ந்தது!

இதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் என்னை வியப்பில் ஆழ்த்தின!

இதனை என் மொழியில் சொல்ல வேண்டும் என்ற ஆசையை என்னுள் ஏற்படுத்தியது முருகனருள்.

எழுதி முடித்ததும், நான் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரிடம் இதை அனுப்பினேன்.

பத்து நாட்களாகியும் அவரிடமிருந்து பதிலில்லை.

இன்று காலை ஒரு மடல்...... பதியச் சொல்லி!

தாமதம் இல்லாது, இதோ உங்கள் பார்வைக்கு.

சொல்ல வேண்டிய செய்திகள் அனைத்தையும்,....... சொல்லப்போகும் அவையின் மனமறிந்து, ....... சொல்லி இருக்கிறேன் என நினைக்கிறேன்

திங்கள் முதல் வெள்ளி வரை, தினம் ஒரு பதிவாகத் தொடர்ந்து வரும்.

வழக்கம் போல் நீட்டி முழக்கித்தான்!

படித்துவிட்டு உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்!



வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்!


அனைவர்க்கும் முருகனருள் முன்னிற்கும்!

*******************************************************




13 பின்னூட்டங்கள்:

VSK Sunday, September 14, 2008 10:13:00 PM  

கணபதி எல்லாம் தருவான்!

jeevagv Sunday, September 14, 2008 11:04:00 PM  

பிரம்மம் : நல்லது, நடக்கட்டும் நர்த்தனம்!
ஜீவன் : ஆகா, இச்சீவன் கடைத்தேற ஏதோ ஒரு வழி தென்படுகிறதே!

அருப்புக்கோட்டை பாஸ்கர் Monday, September 15, 2008 10:42:00 AM  

அய்யா ,
விநாயகர் அகவலை பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆவலாக உள்ளேன் .
நன்றியுடன்,
பாஸ்கர்

MSATHIA Monday, September 15, 2008 2:29:00 PM  

சீர்காழியின் கணீரென்ற குரலில் கேட்டுக்கேட்டும் என் அம்மா அடிக்கடி இதை சொல்லக்கேட்டும் எளிமையான வரிகளும் இதை மனதில் பதியவைத்துவிட்டது.

ஆகையால்,
அவலுடன்..மன்னிக்க
ஆவலுடன்.

-சத்தியா.

VSK Monday, September 15, 2008 4:02:00 PM  

//ஜீவன் : ஆகா, இச்சீவன் கடைத்தேற ஏதோ ஒரு வழி தென்படுகிறதே!//

வேண்டுபவர்க்கு வேண்டியாங்கு! நன்றி திரு.ஜீவா

VSK Monday, September 15, 2008 4:04:00 PM  

//ஆகையால்,
அவலுடன்..மன்னிக்க
ஆவலுடன்.//

அவல் மட்டும் கொண்டுவந்தா...??

அப்பம், பொரி, கடலை யார் கொண்டுவருவது?

எப்படியோ வந்தீங்களே! அதுவே மகிழ்ச்சி சத்தியா!:))

குமரன் (Kumaran) Monday, September 15, 2008 6:08:00 PM  

ஒவ்வொரு நாளும் படிக்க இயலாவிட்டாலும் தொடர்ந்து எல்லா பகுதிகளையும் படிக்கும் ஆவல் இருக்கிறது எஸ்.கே.

நன்றிகள்.

VSK Monday, September 15, 2008 8:34:00 PM  

நீங்க படிப்பீங்கன்னு எனக்குத் தெரியும் குமரன்!

நன்றி.

SP.VR. SUBBIAH Monday, September 15, 2008 10:20:00 PM  

நன்று வி.எஸ்.கே சார். பதிவிடுங்கள். அனைவரும் பயன் பெறட்டும்.

மொத்தம் 72 வரிகள். ஒரே நாளில் மனனம் செய்தேன். இருபது வருடங்களுக்கு முன்பு.

எப்போது நினைத்தாலும் அந்த 72 வரிகளும் மனத்திரையில் ஒரு ஓட்டத்தில் வந்து நிற்கும்.

இந்த 72 வரிகளுமே மந்திர சித்தி வாய்ந்தது என்பார்கள்.

தினமும் படிப்பவர்களுக்கு ஆத்ம பலம் கிடைக்கும்!

S.Muruganandam Monday, September 15, 2008 10:45:00 PM  

//பொருள் முழுதும் அறியாமலேயே இதனைச் சொல்லி வந்திருந்தேன்.//

அடியேனும், பொருள் கொடுக்கின்ற VSk ஐயாவுக்கு கணபதி சகல நலங்களும் அருள பிரார்த்திகின்றேன்.

தினமும் வந்து பொருள் அறிந்து கொள்கிறோம் ஐயா.

VSK Monday, September 15, 2008 11:28:00 PM  

//தினமும் படிப்பவர்களுக்கு ஆத்ம பலம் கிடைக்கும்!//

வாருங்கள் ஆசானே!
ஒரு சில தொழில் நுட்பத் தகறாருகளால் உடனே பதிய இயலவில்லை.
நாள்ளைக்குள் சரியாகிவிடும் என நம்புகிறேன்.
கணபதி ""எல்லாம்"" தருவான்!:))
இடுக்கண் வருங்கால் நகுகன்னு மன்னார் சொல்லித் தந்திருக்கான்!:))

VSK Monday, September 15, 2008 11:30:00 PM  

//அடியேனும், பொருள் கொடுக்கின்ற VSk ஐயாவுக்கு கணபதி சகல நலங்களும் அருள பிரார்த்திகின்றேன்.

தினமும் வந்து பொருள் அறிந்து கொள்கிறோம் ஐயா.//

வாழ்த்துக்கு நன்றி.

வருகைக்கு மிக்க நன்றி திரு. கைலாஷி!
ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்!

கோவி.கண்ணன் Tuesday, September 16, 2008 9:26:00 AM  

விநாயகர் அ(க)வல் நல்லா இருக்கு !

டெம்ப்ளேட் மாற்றி இருக்கிங்க சொல்லவே இல்லையே ?

என்ன கோபமோ ?
:)

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP