"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 38
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 38
முந்தைய பதிவு இங்கே!
36.
"ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்." [464]
காற்றின் வேகம் தாங்க முடியாமல், காடு தவித்தது.
மிருகங்கள் பதுங்கின.
இந்த திடீர் மாற்றத்தை உணரமுடியாமல், வழக்கமாகப் பறந்துவிடும், பறவையினங்கள் ஒடுங்கின.
தலைவனின் கூட்டமும் இதன் வேகத்தைக் கண்டு மிரண்டது.
'இதை நிறுத்தச் சொல்லலாமே' என ஒருவன் கத்தினான்.
'ஆமாம். அதான் சரி. சித்தரை நிறுத்தச் சொல்லுங்க!' என இன்னொருவன் ஆமோதித்தான்.
'நம்ம சவாலே அந்த சித்தர் தன்னையே காத்தா மாத்திக் காட்டணும்ன்றதுதான்! இப்ப வீசறது காத்துதான். சித்தரில்லை! அவர், அதோ, அங்கே நிக்கறாரு. என்ன என்ன நடக்குதுன்னு பார்ப்போம்!'
தலைவன் மட்டும் உறுதியாக நின்றான். அதே சமயம் அவன் கண்கள் முன்பு பேசிய அந்த இரண்டு பேரையும் குறித்துக் கொண்டன.
'இது முடிஞ்சதும் முதல் வேலையா, இவனுக ரெண்டு பேரையும் கவனிக்கணும். பயப்படற ஆளுங்க நம்ம இயக்கத்துக்கு லாயக்கில்லை' என எண்ணிக் கொண்டான்!
----------------
'காத்து சொல்லுது,... உனக்குத்தான் அன்பைப் பத்தி நல்லாத் தெரியுமின்னு! அது தெரியும்னா, உனக்கு இந்த உலகத்தோட ஆத்மாவையும் தெரியணுமே! ஏன்னா, அதுவும் அன்புதான்'
என்று காற்று எழுப்பிய புழுதியில், சற்றே மங்கலாகத் தெரிந்த சூரியனைப் பார்த்துக் கேட்டான், கந்தன், தன் கண்களை இடுக்கியபடி!
'நான் இருக்கற இடத்திலேர்ந்து என்னால அந்த ஆத்மாவைப் பார்க்க முடியுது.
என் மூலமாத்தான் அது இந்த உலகத்தைப் பாதுகாக்குது!
மரம், செடி, கொடி, பறவை, மிருகம், மனுஷன், வெயிலு,நிழலு எல்லாமே எங்களாலதான் வருது.
எவ்வளவோ தூரத்துல நான் இருந்தாக் கூட,எனக்கும் அதுக்கும் ஒரு தொடர்பு இருக்கு.இப்ப நான் இருக்கற இடத்துலேர்ந்து கொஞ்சம் கிட்ட வந்தாக்கூட, இந்த பூமியில இருக்கற எல்லாமே வெந்து சாம்பலாயிடும்.
அந்த ஆத்மாவும் அழிஞ்சிடும்.
ஆனாலும், எங்களுக்குள்ள ஒரு பரஸ்பரம் அன்பு இருக்கு.
அதுக்காக நான் இந்த உலகத்துக்கு வெப்பத்தையும், உயிரையும் கொடுக்கறேன்; அது எனக்கு நான் வாழறதுக்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்குது'
என்று சூரியன் பேசியது!
'அப்படீன்னா, உனக்கும் அன்பைப் பத்தித் தெரியும்னு சொல்லு!' என்றான் கந்தன்.
'நானும் இந்த உலக ஆத்மாவும் இதைப் பத்தி நிறையவே பேசியிருக்கோம். அதோட கவலை என்னான்னா, இந்த உலோகங்களையும், தாவரங்களையும் தவிர மத்த எல்லாருமே, தாங்கள்லாம் ஒண்ணுதான்னு புரிஞ்சுக்கலியேன்னுதான்.
ரொம்ப வருத்தம் அதுக்கு!
இரும்பு இரும்பா இருக்கு, வெள்ளி வெள்ளியா இருக்கு, தங்கம் தங்கமாவே!
எதுவும், தான் இன்னொண்ணா மாறணும்னு ஆசைப்படறதில்லை.
'நீரளவே ஆகுமாம் நீராம்பல்'னு, தாவரங்களும் அதே மாதிரிதான்!
இந்த மனுஷங்களும், மிருகங்களும்தான் இன்னும் அதைப் புரிஞ்சுக்காம, ஒண்ணை ஒண்ணு அடிச்சுகிட்டு,.. ஒத்துமையா இருக்க மறுக்கறாங்க....' என சற்று வருத்தத்துடன் பேசியது சூரியன்.
'அப்படியே இருந்தா என்ன பயன்? எல்லாத்துக்குமே ஒரு விதி இருந்தாக்கூட, எல்லாரும் அதுவே போதும்னு இருந்திடக்கூடாது. அடுத்த நிலை என்னன்னு அதுக்குப் போக முயற்சி பண்ணனும். விதியை மாத்தணும்!எல்லாரும் ஒண்ணாகணும்! இந்த உலக ஆத்மாவோட ஒண்ணாப் போகணும்! அதுதான் சித்துவேலை!
ஒவ்வொருத்தரும் ஒரு தேடலை எடுத்துக்கணும்; முயற்சி பண்ணி அதைக் கண்டுபிடிக்கணும்; போன ஜன்மத்துல இருந்ததைவிட, இன்னும் கொஞ்சம் மேல் நிலைக்கு வர தொடர்ந்து முயற்சிக்கணும். தன்னோட தேவைகளை குறைச்சுகிட்டு, ஒண்னுமில்லாம ஆகி, 'சரி, இனிமே இப்படியே இருந்தா ஒரு பிரயோஜனமும் இல்லை. நாம அடுத்த நிலைக்குப் போகணும்னு உழைக்கணும். அதைத்தான் சித்தருங்க நமக்குக் காட்டறாங்க!
இப்ப இருக்கறதை விட உசர ஆரம்பிக்கறப்ப, நாம மட்டும் இல்லை,
கூட இருக்கறவங்களும் நம்மளோட சேர்ந்து உசருவாங்க'ன்னு புரிய வைக்கறாங்க. இப்ப நான் உன்கிட்ட நின்னு பேசறதுக்குக் கூட அதான்.... அந்த அன்புதான் காரணம்!'
கந்தன் சொன்னதைக் கேட்டு சற்று நேரம் மௌனமாக இருந்தது சூரியன்.
'எனக்கு எப்படி அன்புன்னா தெரியாதுன்னு சொல்றே?' எனக் கேட்டது.
'ஒரே இடத்துல இருக்கற காடோ, கண்ட இடமெல்லாம் சுத்தற காத்தோ, இல்லை உன்னை மாதிரி எல்லாத்தையும் தொலைதூரத்துலேருந்து பாக்கற உனக்கோ அன்பு, காதல் இதெல்லாம் தெரிய வாய்ப்பே இல்லை!
அன்புன்றது, இந்த உலகத்தோட ஆத்மாவுக்கு ஏதாவது நல்லது பண்றதா இருக்கணும்.
நானும் இந்த ஆத்மாவைப் பாத்திருக்கேன்!
என்னமோ அது ரொம்ப சுத்தமானதுன்னு நினைச்சிருந்தேன்.
ஆனா, அதுக்கும் சராசரி ஆசா பாசங்கள் எல்லாம் இருக்குது!
அதுக்கு தீனி போடறது யாருன்னு பார்த்தேன்.
அது வேற யாருமில்லை!
நாங்கதான்!
எங்க நடத்தையைப் பொறுத்துதான் அதோட நல்லது, கெட்டது எல்லாமே நடக்குது.
இங்கதான் அன்போட சக்தி தெரிய வருது.
நாங்கள்லாம் அன்புவழியுல நடந்தா, இந்த உலகமும் அப்படியே மாறிடும்.'
'அப்போ, என்கிட்ட என்னதான் எதிர்பார்க்கற?' சூரியன் புரியாமல் விழித்தது!
'என்னை ஒரு காத்தா மாத்த உதவி பண்ணனும்!' தைரியமாகக் கேட்டான் கந்தன்!
'எல்லாமே தெரிஞ்சவன்னு என்னை சொல்லுவாங்க. ஆனா, எனக்குக் கூட உன்னை காத்தா மாத்தறதுக்கு என்ன வழின்னு தெரியலியே'
'அப்போ யாரைக் கேக்கணும்?'
காற்று இவர்களின் உரையாடலைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது! 'எல்லாம் வல்ல' என இன்றுவரை நினைத்திருந்த சூரியனாலும் கூட முடியாதது என ஒன்று இருக்கிறதே! இதை இப்படியே மூலை முடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்க்கணுமே !' எனக் கவனித்தது.
'படைச்சவனைத்தான் கேக்கணும்!' என்றது சூரியன்.
காற்றுக்கு ஒரே குஷி! இன்னும் பலமாக வீசியது! கீழிருந்த கூட்டம் அஞ்சி நடுங்கியது. மரங்களின் அடியில் சென்று பதுங்கினார்கள்.
கந்தன் தன் பார்வையை "படைத்தவனை" நோக்கித் திருப்பினான். இந்த உலகமே அமைதியானதை உணர்ந்தான். அவனாலும் பேச முடியவில்லை.
இனம் புரியாத ஒரு அன்பு ஊற்று அவன் இதயத்தில் இருந்து கிளம்புவதாக உணர்ந்தான். அப்படியே அவனை அறியாமல் விழுந்து கும்பிட்டான். இதுவரையிலும் அவன் செய்யாத பிராத்தனை அவனுள்ளில் இருந்து புறப்பட்டது. வார்த்தைகள் இல்லை அதிலே! தனது ஆடுகளுக்காகவோ, அண்ணாச்சிக்காகவோ... ஏன்.... பொன்னிக்காகவோ கூட அவன் பிரார்த்தனை அமையவில்லை.அந்தப் பிரார்த்தனையின் போது அவனுக்குஒன்று புலப்பட்டது..
"இந்தக் காடு, காற்று, சூரியன் இன்னும் எல்லா ஜீவராசிகளுமே தனக்கென விதிக்கப்பட்ட வழியில் செல்ல முயற்சிக்கிறது என்ற உண்மை அவனை பலமாகத் தாக்கியது.
அந்த வழியெங்கிலும் பல்வேறு நற்சகுனங்கள் அவரவர்க்குத் தெரிகிறது. அதை எடுத்துக் கொண்டு தன் வாழ்வை வளப்படுத்துகிறவர்கள் சிலரே!தனது படைப்பின் ரகசியம் என்னவென எவருக்குமே தெரியவில்லை. படைத்தவன் ஒருவன் மட்டுமே இதையெல்லாம் தீர்மானிக்கிறான். அவனால் மட்டுமே அதிசயங்கள் நிகழ்த்த முடியும்.
கடலைப் பாலைவனமாக்க முடியும்; மனிதனைக் காற்றாக்க முடியும்! இந்த உலத்தின் ஆத்மாதான் அந்தப் "படைத்தவனிடமும்" வியாபித்திருக்கிறது. அதுதான் தன்னுள்ளும் நிறைந்திருக்கிறது. இதை உணர்ந்தால், தன்னாலும் அதிசயங்கள் நிகழ்த்த முடியும்"
என!
அவன் எழுந்தான்!
காற்றானான்!
அனைவரும் இதைக் கண்டனர்!
காற்று பலமாக வீசியது!
சிறிது நேரம் கழித்து அது குறைய ஆரம்பித்தபோது, கந்தன் ஒரு மரத்தின் கீழே நின்றுகொண்டிருப்பதைப் பார்த்தனர்.
அவர்களால் இந்த மாயத்தை... சற்றுமுன் காற்றோடு காற்றாக எழுந்தவன், இப்போது தனியே நின்றுகொண்டிருக்கும் அதிசயத்தை... நம்பவே முடியவில்லை!
சித்தர் மட்டும் வாய்விட்டு ஆனந்தமாகச் சிரித்துக் கொண்டு இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார்!
தான் தேடிக்கொண்டிருந்த சீடன் கிடைத்துவிட்டான் என்ற திருப்தி அவர் சிரிப்பில் வெளிப்பட்டது!
[தொடரும்]
************************************* "ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்
கருதி இடத்தார் செயின்." [464]
அடுத்த அத்தியாயம்
23 பின்னூட்டங்கள்:
நான் எங்கியோ போய்க்கிட்டு இருக்கறமாதிரி ஒரு உணர்வு வருது.
//நானும் இந்த ஆத்மாவைப் பாத்திருக்கேன்!
என்னமோ அது ரொம்ப சுத்தமானதுன்னு நினைச்சிருந்தேன்.
ஆனா, அதுக்கும் சராசரி ஆசா பாசங்கள் எல்லாம் இருக்குது!
அதுக்கு தீனி போடறது யாருன்னு பார்த்தேன்.
அது வேற யாருமில்லை!
நாங்கதான்!
எங்க நடத்தையைப் பொறுத்துதான் அதோட நல்லது, கெட்டது எல்லாமே நடக்குது. //
ஆஹா!
திவா
வீஎஸ்கே சார்,
பின்னூட்ட கணக்கை தொடங்க இது.
படத்தில் ஆகயத்திற்கு கண்ணும் வாயும் வைத்தது போல் பறவைகள் இருப்பாது இயற்கையாக இருக்கிறது.
Present and the birds look like a face of a human?
சொல்ல விட்டுப்போனது.
படத்தில் அந்த மூன்று பறவைகளுமொரு சிரிச்ச முகத்தை
உண்டாக்கியது ரொம்பப் பிடிச்சது
கந்தன் மாதிரி சீக்கிரமே திரும்பி வந்திடுங்க டீச்சர்!
பலூன்லியே ரொம்ப நேரம் இருக்காதீங்க!
:)0
நீங்க சொன்ன அதே ஆஹா தான் எனக்கும் தோணிச்சு திவா!
அன்பின் வழியது உயிர்நிலை!
அந்தப் படத்தைப் பற்றி யாராவது சொல்லணும்னு நினைச்சேன்.
நீங்க சொல்லிட்டீங்க திரு.சின்னப்பதாஸ் !
இரண்டாவதாகப் போட்ட படம்தான் முதலில் தலைப்பில் போட்டிருந்தேன்.
நம்ப மாட்டீர்கள்!
இன்று காலை எனது சாயி நண்பர் ஒருவர், இத்தொடரைப் பற்றி சற்றும் அறியாதவர், பாபா பிறந்த நாளை ஒட்டி சாயி நண்பர்கள் எல்லாருக்கும் அனுப்பிய படம் இது!
உடனே, இது இன்றையப் பதிவுக்குப் பொருத்தமான படம் என்று சுட்டுவிட்டேன்.
நன்றி.
Marked and yes, it does look like the face of a human!
Thanks for noting it!
நீங்களும் அதைக் கவனிச்சு சொன்னதுக்கு நன்றி டீச்சர்!:))
உள்ளேண் ஐயா!
டீச்சர்கிட்ட திட்டு வாங்கணும்னே எழுத்துப்பிழையோட எழுதறீங்க இல்லையா கொத்ஸ்!:))
'உள்ளேன்' 'ண்' இல்லை!
கந்தன் காற்றாக மாறி விட்டான். கதை முடியப் போகிறது. இலக்கு சரியாக நிச்சயிக்கப் பட்டால், மனதை ஒருமைப் படுத்தி, முழு ஈடுபாட்டுடன் செயல் பட்டால், இலக்கை அடைய அனைவரின் - இயற்கையையும் சேர்த்து - உதவியும் தன்னாலே வரும்.
இயக்கத் தலைவனுக்கே தேவையான குணங்கள் அவனிடம் இருக்கின்றன. போகிற போக்கில் தலைவனுக்கு இருக்க வேண்டிய குணங்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள். கதை ஓடும் ஓட்டத்தில் - மனம் சூறாவளிக் காற்றாக இயங்கும் போது - இவ்வரிகள் கண்னுக்குத் தட்டுப்படும் வாய்ப்புகள் குறைவான நிலையிலும், எனக்கு மனதில் சுருக்கென தைத்தது.
இது மாதிரி செய்திகள் தொடர் முழுவதும் நிறைந்திருக்கின்றன
தொடர்ந்த உங்களது சுருக்கமான 'நச்' சென்ற விமரிசனக் கருத்துகள் மிகவும் அருமையாக இருக்கின்றன, சீனா! நன்றி!
பறவைகள் நமக்கு சிரித்த முகம் காட்டிப் பறப்பது அற்புதம்!
இயற்கையாக கிடைத்ததா? அல்லது எடிட் செய்ததா? எதுவாகினும் நல்லாவேயிருக்கு.
காற்றின்ன்ன்ன் மொழி'' பாட்டுதான் நினைவு வருகிறது. சித்தர் சிரிப்பே படமானதோ!!
ஒரு பக்கம் வேளுக்குடிஸ்ரீ கிருஷ்ணன் பக்தியோகம் ஞானயோகம்னு சொல்லி வருகிறார்.
அடுத்தபக்கம் இங்கே சித்தரின் சித்து.
அப்படியாவது மனம் நிலைப் படுகிறதா பார்க்கலாம்.:00
//இப்ப இருக்கறதை விட உசர ஆரம்பிக்கறப்ப, நாம மட்டும் இல்லை,
கூட இருக்கறவங்களும் நம்மளோட சேர்ந்து உசருவாங்க'ன்னு புரிய வைக்கறாங்க//
மிகவும் பிடிச்ச வரிகள் SK!
இந்தப் பகுதியை மட்டும் ரொம்ப நேரம் படிச்சேன்!
படத்தின் முகச் சிரிப்பை எல்லாரும் நோட் பண்ணிச் சொல்லி இருக்காங்க!
எனக்கு என்னமோ
அருவமான வானத்துக்கும், காற்றுக்கும்
உருவமான உருவம் கொடுத்தாப் போல இருக்கு!
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
தான் நினைவுக்கு வந்துச்சு!
அருவத்தில் உருவமும்
உருவத்தில் அருவமும்
கந்தன் காண்கிறானோ?
படம் சூப்பர்... எங்க பிடிச்சிங்க எஸ்.கே...
இவ்வளவு செய்த பிறகு தான் சீடனாகவே ஏத்துகிறாரா அந்த சித்தர்...
நானானி, நாகை.சிவா, ரவி இவர்களுக்கெல்லாம் படம் பற்றிய கேள்விக்கு இதோ பதில்!
:))
இரண்டாவதாகப் போட்ட படம்தான் முதலில் தலைப்பில் போட்டிருந்தேன்.
நம்ப மாட்டீர்கள்!
இன்று காலை எனது சாயி நண்பர் ஒருவர், இத்தொடரைப் பற்றி சற்றும் அறியாதவர், பாபா பிறந்த நாளை ஒட்டி சாயி நண்பர்கள் எல்லாருக்கும் அனுப்பிய படம் இது!
உடனே, இது இன்றையப் பதிவுக்குப் பொருத்தமான படம் என்று சுட்டுவிட்டேன்.
நன்றி.
மனத்தைப் பற்றி கவலைப்படாமல், அன்பு ஒன்று மட்டுமே செய்து பாருங்கள், வல்லியம்மா.:))
காற்று வந்தால் தலை சாயும் நாணல்
கந்தன் தலை சாய்ந்தான் காற்று வந்தது
கடவுள் விளையாட்டா ம்ம்ம்ம்ம்ம்ம்
//போன ஜன்மத்துல இருந்ததைவிட, இன்னும் கொஞ்சம் மேல் நிலைக்கு வர தொடர்ந்து முயற்சிக்கணும். //
மனதை தொட்ட வரிகள்!
போன ஜென்மத்தில என்ன நிலையில் இருந்தோம்ன்னு தெரியாது. அதனால், இதுக்கு மேலும் ஒரு நிலைன்னு இல்லாத ஒரு நிலையை அடஞ்சா, அது போன ஜென்ம நிலையைவிட betterஆ இருக்கும் அல்லவா!
present.
காத்தா மாறியாச்சா கந்தன்.
நடக்கட்டும் நடக்கட்டும்.
Post a Comment