"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 9
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 9
முந்தைய பதிவு இங்கே!
7. "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின். [666]
"ஓ! இவர் நிஜமாவே ராஜாதான்! திருடரிடமிருந்து தப்பவே இவர் இதையெல்லாம் மறைத்திருக்கிறார்! " என்று எண்ணினான் கந்தன்.
சிரித்துக் கொண்டே அவனைப் பார்த்தார் அந்தப் பெரியவர்.
"இந்தா! இதை வெச்சுக்கோ!" என இரண்டு கற்களை அவனிடம் தந்தார்.
ஒரு வெள்ளைக் கல், ஒரு கருப்புக் கல்!
"கருப்பு, 'சரி' வெள்ளை, 'சரி இல்லை'! எப்பல்லாம் உனக்கு சந்தேகம் வருதோ, அடையாளத்தை புரிஞ்சுக்க முடியலியோ, அப்போ,
இந்தக் கல்லுங்க உதவும்.
கேக்கறதைச் சரியாக் கேளு.
ஆனா, அதுக்கு முன்னாடி, நீயே ஒரு முடிவு எடுக்கப் பாரு. புதையல் இருக்கறது மஹாபலிபுரத்துல. அது உனக்கு முந்தியே தெரியும்.
இருந்தாலும், நான் உனக்கு அதுல உதவி செஞ்சேன். அதுக்குத்தான் 3 ஆடு கேட்டேன்.
இப்போ ஒரு 3 விஷயம் சொல்றேன். கவனமாக் கேட்டுக்கோ!
ஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணு. பலதையும் போட்டு குழப்பிக்காதே!
கண்ணு முன்னால தெரியுற சகுனங்களைக் கவனிக்காம விட்டுறாதே!
எந்த ஒரு காரியம் தொடங்கினாலும், முடிக்காம விடாதே!
இப்போ கிளம்பு!
அதுக்கு முன்னால ஒரு கதை சொல்றேன், கேளு.
ஒரு ஊர்ல, ஒரு அப்பா, மகன்.
ஒருநாளைக்கு, அப்பா, மகனைப் பாத்து, ' சந்தோஷத்துகான ரகசியம் என்னன்னு சில அறிவாளிங்களைப் பாத்து கேட்டு வான்னு
பையனை அனுப்பி வெச்சான்.
பையனும் ஊரு ஊரா சுத்தினான்.
எவனுக்கும் தெரியலை!
கடைசியில, ஒரு பெரிய மாளிகைக்கு வந்து சேர்ந்தான்.
இங்கேயும், அங்கேயுமா, ஆளுங்க விறுவிறுன்னு அலையறாங்க.
அந்த வீட்டோட முதலாளியைப் பாக்க வரிசையா ஆளுங்க நிக்கறாங்க.
ரெண்டு மணி நேரம் ஆச்சு இவனுக்கு அந்த ஆளைப் பார்க்க.
என்னா விசயமா வந்தேன்னு அவன் கேட்டான்.
சந்தோசத்துக்கான ரகசியம் என்னன்னு இவன் கேக்கறான்.
அந்தாளு சிரிக்கறான்.
'அது கிடக்கட்டும்! அப்புறமாச் சொல்றேன். இப்ப நீ போயி இந்த மாளிகையைச் சுத்திப் பாத்துட்டு வா! அதுக்கு முன்னாடி, இந்தா!
இந்தக் கரண்டியில இருக்கற எண்னை சிந்தாம, கையில வெச்சுகிட்டே போ" என அனுப்பி வைத்தான்.
அப்படியே கவனமா, எண்ணை கொஞ்சம் கூட சிந்தாம, இந்தப் பையனும் மாளிகை முழுக்க சுத்திப் பாத்து வந்தான்!
"என்ன? எல்லாம் பார்த்தியா? சலவைக்கல்லு ராமரைப் பார்த்தியா? மேலே தொங்கின விளக்கைப் பார்த்தியா? தங்க மீனெல்லாம் பார்த்தியா?"
என அடுக்கிக் கொண்டே போனான் முதலாளி!
பையனுக்கோ ஒரே வெட்கம்!
'இல்லீங்க! எண்ணை சிந்தாமப் பாத்துகிட்டே வந்ததுல, அதையெல்லாம் கவனிக்கலை!' என அசடு வழிந்தான்.
இந்த வீட்டுல என்ன இருக்குன்னு தெரியாம இருக்கறவனோட நான் பேச முடியாது! நீ போயி, மறுபடியும் எல்லாத்தையும் பார்த்திட்டு வா!'
என மீண்டும் அனுப்பி வைத்தான்!
இப்போ, அந்தப் பையன், நின்னு நிதானமா, வீடு முழுக்க ஒழுங்கா சுத்திப் பார்த்துவிட்டு வந்தான், கையில் கரண்டியோடுதான்!
'எல்லாம் பாத்துட்டேங்க!' என்றான்.
'நான் கொடுத்த எண்ணை எங்கே?' என்றான் முதலாளி!
அப்போத்தான் கவனிச்சான் பையன்... எண்ணையெல்லாம் கொட்டிப் போனதை!
'சந்தோஷத்துக்கான ரகசியம் என்னன்னு கேட்டேல்ல? இப்போ சொல்றேன் கேளு!உலகத்துல இருக்கற எல்லா அதிசயத்தையும் பாக்கணும்!
அதே சமயம் கையில இருக்கற எண்ணையும் சிந்தாமப் பாத்துக்கணும்! அவ்ளோதான்!'
கந்தனுக்குப் புரிந்தது!
புதையலைத் தேடி பயணம் செய்யவும் வேண்டும்.
அதே சமயம், தான் ஆடு மேய்ப்பவன் என்பதையும் மறந்துவிடக் கூடாது!
கிழவர் எழுந்தார்!கந்தனின் தலைக்கு மேல் தன் கைகளால் ஏதோ சில சைகைகள் செய்தார்.
அவன் தலை மீது கை வைத்து ஆசீர்வதித்தார்!
ஆடுகளை ஓட்டிக்கொண்டு சென்றார்!
*************************
'கூஊஊஊஉ' எனக் கத்தியவாறே ரயில் அந்த ஸ்டேஷனில் நின்றது.
ஒரு பெஞ்சில் உட்கார்ந்தபடி கிழவர் அந்த ரயிலைப் பார்த்தார்.
அதோ! அந்த இரண்டாம் பெட்டியில் ஜன்னலோரமாகக் கந்தன்.
'இனிமே நான் உன்னைப் பாக்க மாட்டேன். எங்கே இருந்தாலும் நல்லா இரு! என் ஆசீர்வாதம் எப்பவும் உன் கூட இருக்கும்!' கிழவரின் வாய் முணுமுணுத்தது!
ரயில் கிளம்பியது.
தன் இரு கைகளையும் தூக்கி ஆசீர்வதித்தார் கிழவர்.
'அடுத்தாப்பல, செல்லிகிட்ட போயி இவன் நெனைப்பை மறக்கடிக்கணும்' என நடந்தார், ஒரு புன்னகையுடன்!
*******************
[தொடரும்]
அடுத்த அத்தியாயம்
24 பின்னூட்டங்கள்:
:-)
சந்தோஷத்துக்கான ரகசியம் - இது தானா?
எளிமையான விளக்கம்.
கணக்கைத் துவக்கி வைத்தமைக்கு நன்றி, திரு. சத்தியா!
:))
//எளிமையான விளக்கம்.//
செய்யறதுலதான் கோட்டை விட்டுடறோம்.
நன்றி, திரு. குமார்.
Ippo Attendance Mattum.
Evening Innoru thaba nithanama padichittu varen!
சந்தோஷத்துக்கான டெஃபினிஷன் சரியா?
கூழும் வேணும்,, மீசையும் வேணும்னா எங்கேருந்து வரும் சந்தோஷம்?
நடப்பவை நன்மைக்கேன்னு நெனச்ச்சுட்டு, கடமையைச் செய்வதுதானே சந்தோஷம்? ;)
வாங்க வாங்க சிபியாரே!
நிதானமாப் படிச்சிட்டே வாங்க!
:)
//சந்தோஷத்துக்கான டெஃபினிஷன் சரியா?
கூழும் வேணும்,, மீசையும் வேணும்னா எங்கேருந்து வரும் சந்தோஷம்?
நடப்பவை நன்மைக்கேன்னு நெனச்ச்சுட்டு, கடமையைச் செய்வதுதானே சந்தோஷம்? ;)//
கடமையைச் செய்வது ஒரு திருப்தியை அளிக்கும்.... சந்தேகமே இன்றி, சர்வேசன்!
ஆனால், இதில் சொல்ல வந்தது, கடமையைச் செய்யும் வேளையில்,
தனது நல்லறத்தையும் கைவிடாமல் பார்த்துக் கொள்ளணும் என்பதே!
அப்போதுதான் அதில் சந்தோஷம் வரும் என எண்ணுகிறேன்.
இல்லையேல், உறுத்தல் கூடவே தொக்கி வரும்.
உலக இன்பங்கள் இதில் சொல்லப் பட்டிருக்கும் காட்சிகள்.
எண்ணெய் தான் கொண்ட நல்லறம்.
இரண்டிலும் கவனமக இருக்க வேண்டும்.
ஒன்றா விடாமல் மற்றதை அனுபவிக்க வேண்டும்... மகிழ்சிக்கு!
வணக்கம், நல்ல முயற்ச்சி, The Alchemist by Paulo Coelho வின் தாக்கம் அதிகமாகவே இறுப்பதுபோல் தோன்றுகிறது. என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் ஒன்று.முழுமையாக எழுதி முடித்ததும் புத்தக வடிவில் வெளியிடலாம். அதற்கு என்னால் உதவ முடிந்தால் மகிழ்வேன்.
///'சந்தோஷத்துக்கான ரகசியம் என்னன்னு கேட்டேல்ல? இப்போ சொல்றேன் கேளு!உலகத்துல இருக்கற எல்லா அதிசயத்தையும் பாக்கணும்!
அதே சமயம் கையில இருக்கற எண்ணையும் சிந்தாமப் பாத்துக்கணும்! அவ்ளோதான்!'///
ரசித்த வரிகள் நன்றி!
கடமையையும் செய்ய வேண்டும்
கண்ணைத் திறந்து மற்றவற்றையும
ரசிக்க வேண்டும.
ஆஹா... செல்லிக்கு முற்றுப்புள்ளி விழ போகுதா?
//whoami has left a new comment on your post ""சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 9":
வணக்கம், நல்ல முயற்ச்சி, **************** வின் தாக்கம் அதிகமாகவே இறுப்பதுபோல் தோன்றுகிறது. என்னை மிகவும் பாதித்த புத்தகங்களில் ஒன்று.முழுமையாக எழுதி முடித்ததும் புத்தக வடிவில் வெளியிடலாம். அதற்கு என்னால் உதவ முடிந்தால் மகிழ்வேன்.//
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே நண்பரே!
முதல் பதிவிலேயே இது பற்றி கோடி காட்டிருக்கிறேன். இறுதியில் கண்டிப்பாகச் சொல்வேன்.
மிக்க நன்றி.
எண்ணையை நினைச்சு உலகை விட்டுடறோம். உலகைப் பார்க்கறேன் பேர்வழின்னு எண்ணையை விட்டுடறோம். எப்படி இரண்டையும் பார்ப்பது? அதையும் சொல்வீங்களா?
முழுமையான வரிகளுக்கு முத்தாய்ப்பான உங்கள் விளக்கங்கள் மிகவும் நன்று, ஆசானே!
ஆமாங்க, சிவா.
பயணம் செல்லுகையில், சில விஷயங்களில் இழப்பை ஏற்றுக்கொள்ளவே வேண்டும்.
// எப்படி இரண்டையும் பார்ப்பது? அதையும் சொல்வீங்களா?//
தனது தனிமனித ஒழுக்கங்களை விட்டுவிடாமல், அழகை ரசிப்பது போல்தான் இதுவும், கொத்ஸ்!
அலுவலில் இருக்கையிலேயே, செய்ய வேண்டிய வேலையைச் செய்துகொண்டே, அப்பப்ப விடாமல் தமிழ்மணத்தையும் ரசிக்கிறோம் இல்லையா, அது போலதான்!
:))
அததைச் செய்ய வேண்டிய நேரத்தில் செய்யக் கற்றுக் கொண்டால், சிலர் போல கண்ணை மூடிக் கொண்டும் தட்டச்ச முடியும்! ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டையும் முடிக்க முடியும்.
எண்ணெயும் சிந்தாமல், காட்சிகளையும் காண முடியும்.
சிறிது பயிற்சியும் கட்டுப்பாடும் தேவை!
:))
சிறிது பயிற்சியும் கட்டுப்பாடும் தேவை!//
கொஞ்சமா!!!!!!!
நிறையா வேணும்.
கந்தன் அடைய வேண்டியதை அடைய வாழ்த்துக்கள்.
இதமான சொற்கள் குறியிடப்பட்டு வருவது சௌகர்யம்.
அவைகளைத் தனியாகவே (சேர்த்தும் ) வைத்துப் படித்தால் கூடச் சிறிதேனும் தெளிவு கிடைக்கும். நன்றி, வி.எஸ்கே சார்.
உங்களைப் போன்றவர்களின் ஆசீர்வாதம் அவனுக்கு மிகவும் தேவை, வல்லியம்மா!
நன்றி!
இந்த எண்ணெய் பத்தி நெறையப் பேரு சொல்லீட்டாங்க. அதுக்குப் பயிற்சியெல்லாம் ஒன்னும் வேண்டாம். எண்ணெய ஏன் சிந்தாமக் கொண்டு வரனும்னு தெரிஞ்சாப் போதும். வீட்டையும் பாத்து எண்ணெயையும் கொண்டாந்துரலாம்.
சரி. ரெயிலுக்கு டிக்கெட் யார் எடுத்தா?
//சரி. ரெயிலுக்கு டிக்கெட் யார் எடுத்தா?//
புதிய கோணத்தில் இந்த எண்ணைக்கு ஒரு விளக்கம்!
ஜி.ரா. டச்!
டிக்கட்டுக்குத்தான் ஆடு வித்த பணம் இருக்கே!
நன்றி, ஜி.ரா.
நல்ல தத்துவங்கள் ஒவ்வொன்றாக வருகின்றன. நன்று. கையில் இருக்கும் எண்ணை சிந்தாமல் மாளிகையைச் சுற்றிப் பாரத்து ரசிக்க வேண்டும். செய்ய வேண்டும். செய்ய முயலவேண்டும். செய்து வெற்றி பெற வேண்டும். முயற்சிகள் தவறினாலும் முயல்வது தவறக்கூடாது. பயிற்சி பெற வேண்டும். கருமமே கண்ணாயிருந்தாலும் இருப்பதை இழக்கக் கூடாது.
பின்னூட்டங்களில் ஐயங்களைப் போக்கும் பதில்களும் பாராட்டத்தக்கவை தான்.
செல்லிக்கு துன்பமா - ம்ம்ம்ம் - பார்ப்போம்
//பின்னூட்டங்களில் ஐயங்களைப் போக்கும் பதில்களும் பாராட்டத்தக்கவை தான்.//
அதுதான் எனக்கும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்.
திசை திருப்பாமல், அனைவரும் அளிக்கும் பின்னுட்டங்கள் கதைக்கு வலுவூட்டுவதாக அமைந்தது ஒரு திருப்தியே!
//
இப்போ ஒரு 3 விஷயம் சொல்றேன். கவனமாக் கேட்டுக்கோ!
ஒரே ஒரு காரியம் மட்டும் பண்ணு. பலதையும் போட்டு குழப்பிக்காதே!
கண்ணு முன்னால தெரியுற சகுனங்களைக் கவனிக்காம விட்டுறாதே!
எந்த ஒரு காரியம் தொடங்கினாலும், முடிக்காம விடாதே!
//
//
'சந்தோஷத்துக்கான ரகசியம் என்னன்னு கேட்டேல்ல? இப்போ சொல்றேன் கேளு!உலகத்துல இருக்கற எல்லா அதிசயத்தையும் பாக்கணும்!
அதே சமயம் கையில இருக்கற எண்ணையும் சிந்தாமப் பாத்துக்கணும்! அவ்ளோதான்!'
//
நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டிய வரிகள் எஸ்.கே. முயல்கிறேன்.
காலம் தாழ்த்தி வருவதற்கு மன்னிக்கவும். ஒவ்வொன்றாக இப்போது தான் படித்துக் கொண்டு வருகிறேன்.
தாமதமாக வந்தாலும், அதுவும் பதிவை மீண்டும் முகப்பிற்கு கொண்டுவர உதவியதமைக்கு நன்றி, திரு. குமரன்!
நல்ல கருத்துகளைத் தொகுத்திருக்கிறீர்கள்!
Post a Comment