Thursday, May 21, 2009

"முக"வின் வழக்கமான நாடகம், இந்த முறையும்!

"முக"வின் வழக்கமான நாடகம், இந்த முறையும்!

சென்ற தேர்தலில், திமுகவின் உதவி இல்லாது காங்கிரஸ் அரசு அமைய முடியாது் என்னும் நிலையில் இருந்தபோது, தனது பிடிவாதத்தை வைத்து வேண்டிய பதவிகளைப் பெற்று திமுக மகிழ்ந்தது.
அதே முறையை இந்தத் தடவையும் நடத்த நினைத்த திமுக ஒரு மாறுபட்ட அதிர்ச்சியைச் சந்தித்து,
மீண்டும் அதே நாடகத்தை அரங்கேற்ற முனைந்திருக்கிறது.

ஆனால், காங்கிரஸ் இந்த முறை ஏமாறத் தயாராயில்லை!
போட்டதைப் பொறுக்கிகிட்டுப் போ! இல்லையா! இந்தப் பிச்சையை ஏத்துக்க மத்த பிச்சைக்காரங்க தயாரா இருக்காங்கன்னு சொல்லி கரியைப் பூசி விட்டது!

உண்மையாக இருந்த தோழைமைக் கட்சிக்கா இந்த நிலை எனப் பொருமிய திமுகவால், கடந்த நான்கு ஆண்டுகளாக தனக்கு உண்மையாக மாநிலத்தில் இருந்த காங்கிரஸுக்கு என்ன மரியாதை கொடுத்தது எனத் திருப்பிக் கேட்கப்பட்டபோது, மு,க.வால் பதில் சொல்ல முடியவில்லையாம்!

தங்களை ஆதரிக்க நிபந்தனையின்றி பல கட்சிகள் தயாராக இருக்கும் இந்த நேரத்தில், காங்கிரஸ் இவருக்கு அடி பணியப் போவதில்லை என்பதே நிதரிசனம்!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்!

ஈழத் தமிழரைக் காக்க தனக்குக் கிடைத்த ஒரு ஒப்பற்ற வாய்ப்பை பயன்படுத்த மு.க. தவறி அவர்களின் அழிவிற்குத் துணை போனார் என்பதே இதிலிருந்து கிடைக்கும் பாடம்!

அதிமுக இதனைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, அரசில் புகுந்துவிட்டால், தனது அரசு அடுத்த நொடியே கவிழ்ந்துவிடுமே என்பதால், கிடைத்த பிச்சையை ஏற்று, தன் மீசையில் மண் ஒட்டவில்லை என திமுக நடத்தப்போகும் அடுத்த 'கண்துடைப்பு' நாடகத்தை இன்னும் அடுத்த சில மணி நேரங்களில் காணலாம்!

"அரசியல்ல இதெல்லாம் சஹஜமப்பா!" என மக்களும் தங்களது அடுத்த வேளை சோற்றைப் பற்றிக் கவலைபட்டு, சும்மா இருப்பார்கள்!

தோற்பது, வழக்கம்போல் மக்களும், ஜனநாயகமும்தான்!
வாழ்க இந்தியா!

4 பின்னூட்டங்கள்:

குறும்பன் Thursday, May 21, 2009 9:21:00 PM  

நல்லா சொன்னிங்க.

மகனுக்கும், மகளுக்கும், பேரனுக்கும் நினைத்த அமைச்சர் பதவி வாங்கி தர முடியலையே அப்படிங்கிற ஏக்கம் இருக்கும்.

VSK Thursday, May 21, 2009 9:42:00 PM  

தமிழனை நினைக்காம தன்னை மட்டுமே இப்பவும் நினைக்கும் இவரைப் ப ற்றி என்ன தான் சொல்வது!
நன்றி ஐயா!

bala Thursday, May 21, 2009 10:49:00 PM  

வி எஸ் கே அய்யா,

பேராசை பிடித்த தி மு க வை கழட்டி விட காங்கிரசுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம்.ஆனால் தொடை நடுங்கியான காங்கிரசுக்கு தில் இருக்குமென்று தோணவில்லை.

சொல்லப் போனால் போன மந்திரி சபையில் மிகவும் கீழ்த்தரமான மந்திரிகள் என்ற பெயரை தட்டிச் சென்று சாதனை படைத்தது நம்ம டி ஆர் பாலுவும்,ராஜாவும் தான்.பலே கில்லாடியான ஷிபு சோரேன் கூட இந்த கழக மூஞ்சிகளின் முன்னால் நிறக முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு ஜார்கண்டுக்கு ஓடிப் போனார்.

ஆனால் தமிழர்களுக்குத் தான் தெரியுமே.நிர்வாகத் திறமையின்மையிலும்,ஊழலிலும் கழகக் கண்மணிகளை மிஞ்சுவதற்கு இனிமேல் இன்னொரு மஞ்ச துண்டு தான் பிறந்து வரணும்.வாழ்க தமிழனுக்கு பெருமை சேர்க்கும் கழகம்.

பாலா

VSK Friday, May 22, 2009 8:04:00 AM  

தமிழகத்தை வைத்து காங்கிரஸை எடை போட வேண்டாம். இங்குதான் அவர்கள் தொடை நடுங்கிகளாகிப் போக வேண்டிய நிலை, இரு கழக ஆதிக்கத்தால்.
மற்ற மாநிலங்களில் அப்படி இல்லை.
திமுகவை கழற்றி விடுவார்கள் எனத் தோன்றவில்லை.
2+4 அல்லது 3+3 என்பதில் உறுதியாக இருப்பதாக தற்போதைய செய்தி சொல்கிறது.
நன்றி திரு.பாலா

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP