Monday, July 28, 2008

"எவரால்?" "கேன உபநிஷத்" -- 4

"எவரால்?" " "கேன உபநிஷத்" -- 4


முந்தையப் பதிவு இங்கே!

நான்காம் பகுதி:
1.
'அதுவே ப்ரஹ்மன் என்றே அறிக' என்றாள் உமையாள்
'ப்ரஹ்மன் செய்த உதவியால்தான் நினக்கு வெற்றியும் பெருமையும் வந்தது என்பதை அறிவாய் நீயும்!'
அதன்பின் இந்திரன் தானும் அறிந்தான் வந்தது ப்ரஹ்மன் என்னும் உண்மையை.

2.
ப்ரஹ்மனின் அருகில் சென்றடைந்தமையாலும்,
இவரே ப்ரஹ்மன் என்றுணர்ந்த முதன்மையினாலும்
அக்கினி, காற்று, இந்திரன் மூவரும்
மற்றோரை விடவும் மேலோராயினர்

3.
மிகவே அருகினில் சென்றதினாலே
முதலில் இவரை அறிந்ததினாலே
இவருளும் இந்திரன் முதன்மையாயினான்

4.
இதுவே அவர்கள் பிற கடவுளர்க்கு ப்ரஹ்மனைப் பற்றி சொல்லிய கருத்து:
'மின்னலைப் போலும் தன்மையது "இது";
கண் இமைப்பதுபோலும் அரியது "இது"'.

5.
'தான்'எனும் தன்மைக்கு ப்ரஹ்மனைப் பற்றிச் சொல்லிய அறிவுரை இது:
'மனம்'எனும் ஒன்று இயல்பாய்த் தானே ப்ரஹ்மனைச் சென்று அடைகிறது
அறிந்திட விரும்பும் பயிற்சியாளர் மனதின் வழியே ப்ரஹ்மனை நெருங்கி
அதனுடன் அடிக்கடி பேசிட முடியும்
மனதின் ஒப்புதல் இருந்தால் மட்டுமே இதுவும் நிகழும்.

6.
அப்படி மனதால் உணரும் 'ப்ரஹ்மன்' "தத்வனன்' என்று அழைக்கப்படுவார்
'போற்றப்படும் அனைத்துக்கும் மேலாய்ப் போற்றப்படுவது' என்பது இதனின் பொருளாம்
'தத்வனன்' என்னும் பெயரால் இதனைப் போற்றிட வேண்டும்
மண்ணில் இருக்கும் எவரும் ப்ரஹ்மனைப் போற்றுதல், இப்படியே நிகழ்ந்திட வேண்டும்.

7.
சீடன் கேட்டான்:
'உபநிடதப் பொருளை எனக்கு உபதேசிக்க வேண்டும்'
ஆசிரியர் அவனைப் பார்த்து இப்படிச் சொன்னார்:
'ஏற்கெனவே நான் உனக்கு உபநிடதம் சொல்லிவிட்டேன்
ப்ரஹ்மனைப் பற்றிச் சொன்னதே 'அது'வென உணர்வாய் நீயும்'.

8.
எளிமை, சுயக் கட்டுப்பாடு, மற்றும் தியாகச் செயல்கள்
இவையே ப்ரஹ்மனின் கால்கள் ஆகும்,
மறைகள் எல்லாம் கைகள் ஆகும்
உண்மை அதனின் உறைவிடம் ஆகும்.

9.
இதுவரை இந்த உபநிடதம் சொல்லிய உண்மையை
உணர்ந்தவர் பாவம் களையப்படுமே
மேலும் அவர்கள் எல்லையில்லாப் பேரானந்தத்தில்
உறுதியுடனே நிலைபெறுவாரே.
ஆம்... மிகவும் உயரிய பேரானந்தம்!


10.
ப்ரஹ்மன் நம்மை [ஆசிரியர், சீடன்] பாதுகாக்கட்டும்!
அறிவின் பொருளை அந்தப் ப்ரஹ்மன் நமக்கு அருளட்டும்!
அறிவை அடையும் திறனை நாமிருவரும் பெறுவோமாக!
நீயும் நானும் படித்ததின் பயனாய் உண்மை எமக்குப் புலப்படட்டும்!
ஒருவருக்கொருவர் தீய உணர்வுகள் எமக்குள் இங்கே வாராதிருக்கட்டும்!
ஓம்! அமைதி, அமைதி, அமைதி!

கேன உபநிடதம் முற்றிற்று.
************************************
[அடுத்து "தனியே.....தன்னந்தனியே!" [கைவல்ய உபநிடதம்] விரைவில்!]

6 பின்னூட்டங்கள்:

Unknown Thursday, July 31, 2008 6:49:00 PM  

படிப்பதற்கே மிக நன்றாக இருக்கிறது.... அருமை, அருமை. ஒரே மூச்சில் நான்கு பாகங்களையும் படித்தேன். ஜாதவேதன் பொருள் இதுவரை அறியாதது. மதரிச்வன் இதை எப்படி பகுப்பது?

கேனோபநிஷத் ஆங்கிலத்தில் படித்திருக்கிறேன்... தங்கத் தமிழில் படிக்க இன்னும் அருமை.

//அறிந்திட விரும்பும் பயிற்சியாளர் மனதின் வழியே ப்ரஹ்மனை நெருங்கி// அதனால் தானே இந்திரன் சிறப்படைந்தான், நாணம் விட்டு, தன்னடக்கத்தோடு உமையாளிடம் கேட்டதால் தானே!

நன்றி.

VSK Thursday, July 31, 2008 7:16:00 PM  

மிக்க நன்றி,, ஐயா!

மதரிச்வன்ன் என்பத்ஹு தட்டச்சுப் பிழை.

அது 'மாதரிஷ்வன்' என வந்திரூக்க வேண்டும்.

தீ எரிவதற்கு தூண்டுகோல் காஅற்ற்று.

அந்தப் பொருளில் வந்தது.
முதலில் தீ வந்தது.

பிறகுதான் காற்று வருகிறது.

இரண்டாவதாக வந்தாலும், தான் ஒன்றும் குற்றைந்தவன் இல்லை எனக் காட்டுவதாக, அக்னியையே எரியச் செய்பவன் தான்தான் எனக் காட்டுகிறானாம்! :))

17 mAtarizvan m. (%{mAtari4-} ; prob. , `" growing in the m�mother "' i.e. in the fire-stick , fr. %{zvi}) N. of Agni or of a divine being closely connected with him (the messenger of Vivasvat , who brings down the hidden Fire to the Bhr2igus , and is identified by Sa1y. on RV. i , 93 , 6 with Va1yu , the Wind) RV. AV. [807,3] ; (doubtful for RV.) air , wind , breeze AV. &c. &c. (cf. Nir. vii , 26) ; N. of S3iva S3ivag. ; of a son of Garud2a MBh. ; of a R2ishi RV.

Unknown Thursday, July 31, 2008 7:28:00 PM  

ஐயா, இல்லை. சகோதரி!

இன்னிக்கு மீ த ஃபர்ஷ்ட்டு. எவரால், நான் தான்!

விளக்கத்துக்கு மிக்க நன்றி!

Kavinaya Thursday, July 31, 2008 9:38:00 PM  

//அறிவின் பொருளை அந்தப் ப்ரஹ்மன் நமக்கு அருளட்டும்!//

ததாஸ்து. நன்றி அண்ணா.

VSK Thursday, July 31, 2008 11:26:00 PM  

அப்படியா! மிக்க மகிழ்ச்சி!

VSK Friday, August 01, 2008 12:35:00 AM  

அப்படியே ஆகட்டும்! கவிநயா!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP