Wednesday, April 30, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 4

"பாரதி" -- சில காட்சிகள்! -- 4
"'முறையே' என முடித்தான் முந்தைய பாடலை!
அதையே தொடங்கி அடுத்த பாடல் வைக்கிறான்!
எதுதான் முறையாம்?!!"


ஏ! முழு மூட நெஞ்சே! நீதான் முறையாக நடக்கணும்~!
அப்படி நீ நடந்தால் கொஞ்சம் கூட வாட வேண்டாம்!
கறையுண்ட கண்டன் மகன், வேத காரணன், சக்திமகன்
இவரைப் பணிந்தால் அவருக்கெல்லாம் துணையாக அவன் வருவான்!

என்ன மாதிரியான துணை?

உயிரின் உள்ளே இருந்து சுடர் விடுக்கும் மணி இவன்!
எனதுயிர் மன்னவன்!
என் வாழ்வினுக்கு ஒரு அணி!
என் உள்ளத்தின் ஆரமுது!
எனது அற்புதம்!
கடைவானில் எழுகின்ற இந்தச் சுடருக்கு இணையே கிடையாது
என்கிறான் பாரதி!

சரி! சுடரை எவ்வாறு போற்றுவது?

கணத் தேவர் துரையே போற்றி!
எனக்கு ஒரு இடரும் இன்றிக் காத்திடுவாய்!
உன்னிடம் எத்தனையோ தடவை சொல்லியாச்சு!
உனது ஒரு சுடராலேதான்,
இந்த அண்டவெளியிலே பலகோடி, கோடி, கோடி, பலகோடி அண்டங்கள் நீ படைத்தாய்!
நீ வாழ்க இறையவனே!
என!

வாழ்த்திய இறைவனை எப்படிப் போற்றுவது? என்னதான் வேண்டுவது?


தாயாய், தந்தையாய், சக்தியும், சிவனுமாய், இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகி,
உள்ளொளியாகி, உலகெலாம் திகழும் பரம் பொருளா இவன்?
ஒருவேளை அன்று எனைக் காக்க வா என முதலை அலறியபோது உடனே எழுந்துவந்த ஆதிமூலமா இவன்?
தேவதேவா! சிவனே! கண்ணா! வேலா! சாத்தா! விநாயகா! மாடா! இருளா! சூரியா! சந்திரா!
சக்தியே! வாணீ! காளீ! மாமகளே!
ஆணாய், பெண்ணாய் அலியாய், உள்ளது யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே!
வேதச்சுடரே! மெய்யாகிய கடவுளே!

எனப் போற்றி, வேண்டுகிறான் !

இவ்வளவு பேரையும் கூப்பிட்டு என்னதான் வேண்டுமாம் இவனுக்கு?

'அபயம் அபயம் அபயம் நான் கேட்டேன்!
நோவு வேண்டேன்! அச்சம் வேண்டேன்! உடைமை வேண்டேன்!'


சரிப்பா! என்ன வேண்டும் உனக்கு?

நூறாண்டு வேண்டும்!
அமைதி வேண்டும்!
உன் துணை வேண்டும்!

இது போதுமா?

போதாதாம்!


வேண்டாது அனைத்தையும் நீக்கி, வேண்டியது அனைத்தையும் அருள்வதும் உன் கடனே! என்கிறான்!

ஏன் தெரியுமா?

செய்கின்ற கடமைதான் எது கரிமுகனே?
எங்களுக்கென்று என்ன விட்டு வைத்திருக்கிறாய்?
இந்த வையத்திடம் அருள் செய்து இந்த உலகைப் படைத்து, எங்களையும் படைத்து விட்டாய்!
அது மட்டுமா?
எங்களுக்கென உடமைகளும், இன்பங்களும் நீயே தந்தாய்!
உனக்கு என்ன கைம்மாறு புரிவோம் என்று இயம்பு'
எனக் கதறுகிறான்!

அப்படி இயம்பினால் என்ன ஆகும்?
அதையும் அவனே சொல்கிறான்!

உன்னைப் புகழ்ந்து 'இயம்பினால்' அது புகழ் மறை ஆகும்.
எடுத்த வினை பயன்படும்.
தேவர்கள் எலாரும் இருபொழுதும்... ஆம்!.. பகலுக்கென சிலர்; இரவுக்கென சிலர்!..
இவர்கள் அனைவரும் வந்து அருள் செய்வர்.
கணபதி புகழ் பாடி அவன் அடி பணிந்தால் எல்லா மேன்மைகளும் வந்து எமை அடையும்
என இயம்புகிறான் பாரதி!

இப்படி வருகின்ற மேன்மை எத்தகையது?

அடுத்த பதிவில்!

3 பின்னூட்டங்கள்:

VSK Thursday, May 01, 2008 12:30:00 AM  

பார் அதி சின்னப் பயல்!!

jeevagv Thursday, May 01, 2008 10:41:00 PM  

/உயிரின் உள்ளே இருந்து சுடர் விடுக்கும் மணி இவன்!//
ஆதாரத்திலே தோதாக நிற்பான்.
பாதார விந்தம் பணி நிஜபக்தனுக்கு

ஓம்கார ஓசை மணி, சுடர்மணி!

//கணபதி புகழ் பாடி அவன் அடி பணிந்தால் எல்லா மேன்மைகளும் வந்து எமை அடையும் என இயம்புகிறான் பாரதி!//
இல்லாமலா பின்னே

ஞானரதத்தில் பவனி செய்தவன்

சொன்னால் சும்மா இருக்குமா என்னே?
பாரதிக்கு முன்னாலும்
தமிழ் கூறும்
நல்லுலகமே

பறை சாற்றியுள்ளதல்லவா!

VSK Friday, May 02, 2008 12:10:00 AM  

மெய் சிலிர்க்க வைக்கும் பல்வேறு பாடல்களைப் பார்த்து, படித்து, மகிழ்ந்தேன் ஜீவா!

மிக்க நன்றி!

முன்பு மாதிரி, அடிக்கடி தமிழ்மணத்துக்கு வராதது எவ்வளவு பெரிய தவறு என்பதை உங்கள் பின்னூட்டம் எனக்குக் காட்டியது.

இனி அடிக்கடி வருவேன்!
நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP