Wednesday, April 23, 2008

"பாரதி" -- சில காட்சிகள்! -- 3

"பாரதி" -- சில காட்சிகள்! -- 3


2-ம் பதிவு இங்கே


"இத்தனை எளிய வழியிருந்தும், எதனால் இவர்களால் இதைச் செய்ய முடியவில்லை?

யார் இதற்குக் காரணமாம்? எது தடுக்கிறது இவர்களை?

அதையும் சொல்கிறான் பாரதி!

அடுத்த பதிவில்!!"


ஏன் எழுதினேன் இதை என யோசித்தேன்!

நான் யார்? எனச் சிந்தித்தேன்!

'சொல்லத் தெரியவில்லை~!
சூழ்ச்சியே செய்பவனாயிருக்கிறேன்!'

எனக்கு யார் ஆதாரம்?

பாரதியைப் புரட்டினேன்!


'சொல்லுக்கரியனாய் சூழ்ச்சிக்கரியனாய்
பல்லுறுவாகிப் படர்ந்த வான்பொருளை,
உள்ளுயிராகி உலகம் காக்கும் சக்தியே தானாம்
தனிச் சுடர்ப் பொருளை
சக்திகுமாரனை, சந்திரமௌளியைப் பணிந்து
அவன் உருவிலே பாவனை நாட்டி,
ஓம் எனும் பொருளை உளத்திலே நிறுத்தி,
சக்தியைக் காக்கும் தந்திரம் பயின்று,
யார்க்கும் எளியவனாய்,
யார்க்கும் வலியவனாய்,
யார்க்கும் அன்பனாய்,
யார்க்கும் இனியனாய்,
வாழ்த்திட விரும்பினேன்!
மனமே!
நீ இதை ஆழ்ந்து கருதி, ஆய்ந்து ஆய்ந்து பலமுறை சூழ்ந்து, தெளிந்து,
பின், சூழ்ந்தார்க்கேல்லாம் தேறித் தேறி,
நான் சித்தி பெற்றிடவே,
நின்னால் இயன்ற துணை புரிவாயேல்,
பொன்னால் உனக்கு ஒரு கோயில் புனைவேன்!
மனமே!
எனை நீ வாழ்த்திடுவாய்!
வீணே உழலுதல் வேண்டா!
சக்தி குமாரன் சரண் புகழ்வாயே!'

என்னை இப்படிப் பலவாறாக மாற்றி அலைக்கழிப்பது என் மனமே என்றுணர்ந்தேன்!

இந்த மனத்தை எப்படி வசப்படுத்துவது!??

மற்றவர் சொல்லுகின்ற பொய்யையெல்லாம் உண்மை என நம்பி, அலைகின்ற இந்தப் பொல்லா மனத்தை எப்படி அடக்குவது?

'வல்லப கணபதி பொற்கழலை தினந்தோறும் புகழ்ந்து' பாடினால் அவன் ஒரு வரம் தருவானாம்!

என்ன வரம்?

'கவலையும், வஞ்சனையும், கரவும், புலைமை விருப்பமும், ஐயமும் காய்ந்து எறிந்து,
என் தலை மீது என்னுடைய கணபதி தாள்மலரை சேர்த்து வானவர்க்கு ஈடான தரத்தினை எமக்கு அவன் தருவான்!'


என்பதே அந்த வரம்!

இந்த வரத்தை ஏற்று, அவன் பாதத்தை சார்ந்து நிற்க வேண்டும்!

அப்படி இருந்தால்.......?

'நிழலினும், வெயிலினும், நேர்ந்த நற்றுணையாய்
தழலினும் புனலினும் அபாயம் தவிர்த்து
மண்னிலும் காற்றிலும் வானிலும்
எனக்குப் பகைமை ஒன்றின்றிப் பயம் தவிர்த்து ஆள்வான்!'

பிறகு??...

'உணர்விலே நிற்பான்!'

சரி..!!?

'ஓம் எனும் நிலையில் ஒளியாய்த் திகழ்வான்!'

அப்புறம்...?

'முக்திநிலைக்கு மூல வித்தாவான்!'

அடேடே! அவ்ளோதானா?!!

'சத்தெனத் தத்தெனச் சதுர்மறையாளர் நித்தமும் போற்றும் நிர்மலக் கடவுள்;
ஏழையர்க்கெல்லாம் இரங்கும் பிள்ளை;
வாழும் பிள்ளை; மணக்குளப் பிள்ளை;
வெள்ளாடை தரித்த விட்டுணு என்று செப்பிய மந்திரத் தேவனை
முப்பொழுது ஏத்திப் பணிவது முறையே!'

என்று முடிக்கிறான் பாரதி!

அத்தோடு விட்டானா?!!!!!!!!!

'முறையே' என முடித்தான் முந்தைய பாடலை!

அதையே தொடங்கி அடுத்த பாடல் வைக்கிறான்!

எதுதான் முறையாம்?!!

[இப்படித்தான் இதுவரை வந்த 17 பாடல்களிலும், கடைசி சொல்லை வைத்தே அடுத்த பாடலைத் தொடங்கினான், இனியும் அடுத்து வரும் 23 பாடல்களிலும் செய்கிறான் என்பதை இந்த இடத்தில் சொல்வது பொருத்தமானது!]

[தொடரும்]

4 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) Friday, April 25, 2008 10:36:00 PM  

ஆமாம் எஸ்.கே. விநாயகர் நான்மணிமாலை நான்கு வகைப்பாக்களுடன் அந்தாதியாகவும் இருக்கிறது. நானும் அவதானித்திருக்கிறேன்.

Anonymous,  Sunday, April 27, 2008 11:15:00 AM  

VSK SIR,

"பிச்சைக்காரப் பயலடா பார்ப்பான் - அவன் ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பான்"

இந்த பாடலை எந்த தொகுப்பின் கீழ் பாரதி எழுதி இருக்கிறான் ?

VSK Sunday, April 27, 2008 11:03:00 PM  

உங்கள் பதிவைய்யும் படித்தே எழுதுகிறேன், குமரன்!!

நன்றி!!

VSK Sunday, April 27, 2008 11:12:00 PM  

தவறாக எழுதியிருக்கிறீர்கள் சின்னப்பயல் அவர்களே!

பார்ரதி காலத்தில், காவல் துறையில் பெரும்பாலும் பார்ப்பனர்களே பெரிய பதவியில் இருந்து வந்த காலத்தில், வீர மறாவ்வனாக வாழ்ந்தவர்கள், பணமில்லாஅமல், கொள்ளையில் ஈஇடூபட்ட காலத்தில், இதில் ஈடுபடாமல் இருந்த பல நல்ல நேர்மையான அறவர்களும் பாதிக்கப் பட்டார்கள் என்ற உண்மையினைப் புரிந்த பாஆரதி, தன்னை ஒரு மறவனாக வைத்து எழுதிய பாடல் "மறவன் பாட்டு".
இது "பல்வகைப் பாடல்கள்" என்னும் தலைப்பில் இதைஇ எழுதி இருக்கிறார்!

ஆனால், நீங்கள் சொல்லிய வரிகளில் இல்லை.

"பேராசைக் காரனடா பார்ப்பான்- ஆனால்
பெரியதுரை என்னில் உடல் வேர்ப்பான்"

என வருகிறது!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP