Monday, September 04, 2006

உன்னால் முடியுமா?

"உன்னால் முடியுமா?"


திரு. ஸ்ரீதரன் அவர்கள் ஒரு விளையாட்டை, விளையாட்டாய் ஆரம்பிக்க, நானும் அதில் உள்ளே புகுந்து மற்றவர்கள் வந்து கை கொடுப்பார்கள் என எண்ணித் தொடர, யாரும் வராததால், வேறு வழியின்றி, முழு ஆட்டத்தையும் நான் ஒருவனே ஆடி முடிக்கும் பேறு பெற்றேன்!

அதற்காக ஸ்ரீதரனுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும்!

இது திருக்குறளின் 133 அதிகாரங்களையும் தெரிந்து, மனனம் செய்து, தெரிந்தவருடன் ஆடக் கூடிய ஒரு விளையாட்டு!

இதனைக் கற்க உங்களுக்குப் பொழுதில்லாவிடினும், உங்கள் குழந்தைகளுக்கு இதைக் கற்றுக் கொடுங்கள்!

நினைவாற்றல் அதிகம் உள்ள அவர்கள் இதனைச் சீக்கிரமே மனனம் செய்து விடுவார்கள்!

தமிழுக்கும், வள்ளுவனுக்கும், உங்கள் குடும்பத்தில் தமிழ் வளர்ப்பதற்கும் நீங்கள் ஆற்றிய தொண்டாக இது இருக்கும்.

இதனைக் காணும், மனம் படைத்த சக வலைப் பதிவாளர்கள், சிரமம் கருதாது, தங்கள் வலைப் பூவில் இதையும் ஒரு பதிவாக ஏற்றி, அவர்களுக்கு வரும் நண்பர்கள் நடுவில் இதைப் பரப்ப உதவினால், மிகவும் மனமகிழ்வேன்!

கட்டாயமில்லை.

நன்றி!
***********************************************************

ஆட்டத்தின் 14 - ஆம் ஓவரை வீச பந்து வீச்சாளர் தயாராகிக் கொண்டிருக்கிறார்!

இதோ முதல் பந்து!

சற்று அளவு குறைந்த பந்து!131. புலவி

இதையும் அடிக்க ஆளில்லை!

அடுத்த பந்து! சற்றே வேகமான பந்து!132. புலவி நுணுக்கம்.

ம்ஹூம்! இதுவும் அப்படியே!

அடுத்த பந்து!133. ஊடலுவகை.

சுழல் பந்தான இது விக்கெட்டின் மேல் படுகிறது!
விக்கெட் கீழே விழுகிறது!
மகிழ்ச்சியால் 'ஹௌஈஸ்ஸட்' எனக் கூவுகிறார் பந்து வீச்சாளர்!
ஆனால், .... அம்பையர் இருந்தால் தானே அவுட் கொடுப்பதற்கு!

மறுபடியும் பந்து வீசத் தயாராகும்போது....

ஆ! இதென்ன! ஆட்டம் முடிந்து விட்டதாக ஒரு அறிவிப்பு!

பந்தையும், வீழ்த்திய விக்கெட்டையும் கையில் எடுத்துக் கொண்டு, தனி ஆளாக வீரநடை போட்டு பெவிலியன் நோக்கித் திரும்பி நடக்கிறார் பந்து வீச்சாளர்!

இவ்வாட்டத்தை இதுவரை திறம்பட நடத்திய ஸ்ரீதரனுக்கும், கடைசி பார்வையாளராக வந்த கொத்தனாருக்கும் நன்றி!

இந்த வரலாற்றுப் புகழ் படைத்த ஆட்டத்தை இதுவரை காணாத அனைவருக்கும் இதோ ஆட்டத்தின் ஒரு குறுகிய 'ரீ-ப்ளே!

'1. கடவுள்வாழ்த்து, 2.வான் சிறப்பு, 3. நீத்தார் பெருமை, 4.அறன் வலியுறுத்தல், 5. இல்வாழ்க்கை, 6. வாழ்க்கைத் துணைநலம், 7. மக்கட்பேறு, 8. அன்புடைமை, 9. விருந்தோம்பல், 10. இனியவை கூறல்

11. செய்ந்நன்றி அறிதல், 12. நடுவு நிலைமை, 13. அடக்கமுடைமை, 14. ஒழுக்கமுடைமை, 15. பிறனில் விழையாமை, 16. பொறையுடைமை, 17. அழுக்காறாமை, 18. வெஃகாமை 19. புறங்கூறாமை, 20. பயனில சொல்லாமை

21. தீவினையச்சம், 22. ஒப்புரவறிதல், 23. ஈகை, 24. புகழ், 25. அருளுடைமை, 26. புலால் மறுத்தல், 27. தவம், 28. கூடா ஒழுக்கம், 29. கள்ளாமை, 30. வாய்மை.

31. வெகுளாமை, 32. இன்னா செய்யாமை, 33. கொல்லாமை, 34. நிலையாமை, 35. துறவு, 36. மெய்யுணர்தல், 37. அவா அறுத்தல், 38. ஊழ், [இதுவரை சொன்னது 'அறத்துப்பால். இனி வருவது, "பொருட்பால்".] 39. இறைமாட்சி, 40. கல்வி.

41.கல்லாமை, 42. கேள்வி, 43. அறிவுடைமை, 44. குற்றங்கடிதல், 45. பெரியாரைத் துணைக்கோடல், 46. சிற்றினம் சேராமை, 47. தெரிந்து செயல்வகை, 48. வலியறிதல், 49. காலம் அறிதல், 50. இடன் அறிதல்.

51. தெரிந்து தெளிதல், 52. தெரிந்து வினையாடல், 53. சுற்றந் தழால், 54. பொச்சாவாமை, 55. செங்கோன்மை, 56. கொடுங்கோன்மை, 57. வெருவந்த செய்யாமை, 58. கண்ணோட்டம், 59.ஒற்றாடல், 60. ஊக்கம் உடைமை.

61. மடி இன்மை, 62. ஆள்வினை உடைமை, 63. இடுக்கண் அழியாமை, 64. அமைச்சு, 65. சொல்வன்மை, 66. வினைத்தூய்மை, 67. வினைத்திட்பம், 68. வினை செயல்வகை 69. தூது, 70. மன்னரைச் சேர்ந்தொழுகல்.

71. குறிப்பறிதல், 72. அவை அறிதல், 73. அவை அஞ்சாமை, 74. நாடு, 75. அரண், 76. பொருள் செயல்வகை, 77. படை மாட்சி, 78. படைச் செருக்கு, 79. நட்பு. 80. நட்பாராய்தல்.

81. பழைமை, 82. தீ நட்பு, 83. கூடா நட்பு, 84. பேதைமை, 85. புல்லறிவாண்மை, 86. இகல், 87. பகை மாட்சி, 88. பகைத் திறந்தெரிதல், 89. உட்பகை, 90. பெரியாரைப் பிழையாமை.

91. பெண்வழிச் சேறல், 92. வரைவின் மகளிர், 93. கள்ளுண்ணாமை, 94. சூது, 95. மருந்து, 96. குடிமை, 97. மானம், 98. பெருமை, 99. சான்றாண்மை, 100. பண்புடைமை.

101. நன்றியில் செல்வம், 102. நாணுடைமை, 103. குடிசெயல் வகை, 104. உழவு, 105. நல்குரவு, 106. இரவு, 107. இரவச்சம், 108. கயமை,இனி, "இன்பத்துப்பால்" முனையில் இருந்து மீதி பந்துகள் வீசப்படும்!109. தகையணங்குறுதல், 110. குறிப்பறிதல்.

111. புணர்ச்சி மகிழ்தல், 112. நலம் புனைந்துரைத்தல், 113. காதற் சிறப்புரைத்தல், 114. நாணுந் துறவுரைத்தல், 115. அலர் அறிவுறுத்தல், 116. பிரிவாற்றாமை, 117. படர் மெலிந் திரங்கல், 118. கண் விதுப்பழிதல், 119. பசப்புறு பருவரல், 120. தனிப்படர் மிகுதி.

121. நினந்தவர் புலம்பல், 122. கனவு நிலை உரைத்தல், 123. பொழுது கண்டு இரங்கல், 124. உறுப்புநலன் அழிதல் [இதைப் பிரித்து உறுப்பு நலன் அழிதல் என்று போட்டால், அர்த்தம் அனர்த்தமாகி விடும்! ஐயன் வாழ்க!] 125. நெஞ்சொடு கிளைத்தல், 126. நிறையழிதல், 127. அவர்வயின் விதும்பல், 128. குறிப்பறிவுறுத்தல், 129. புணர்ச்சி விதும்பல், 130. நெஞ்சொடு புலத்தல்.

131. புலவி, 132. புலவி நுணுக்கம், 133. ஊடலுவகை.

****இந்த ஆட்டத்தால் என்ன பயன் எனக் கேட்பவருக்கு ஒரு வார்த்தை!

உங்களால் முடியாவிட்டாலும், உங்கள் குழந்தைகளுக்கு, வாரம் ஒரு பத்து என்ற கணக்கில் சொல்லிக் கொடுங்கள்!

உங்களை விட நினைவாற்றல் அதிகம் உள்ள வயதானதால் சீக்கிரம் பிடித்துக் கொள்வார்கள்!

இன்றில்லாவிடினும் நாளை நிச்சயம் உங்களைப் போற்றுவார்கள் இதற்காக!

தமிழுக்கும், வள்ளுவனுக்கும் நீங்கள் செய்யும் சிறு தொண்டாக இது இருந்து விட்டுப் போகட்டும்!

நன்றி!****

9 பின்னூட்டங்கள்:

இலவசக்கொத்தனார் Monday, September 04, 2006 7:23:00 PM  

இங்கேயும் வந்து உள்ளேன் ஐயா சொல்லிடறேன். ஆனா இப்பவும் பார்வையாளனாத்தான்.

வெற்றி Monday, September 04, 2006 7:46:00 PM  

SK ஐயா,

//இது திருக்குறளின் 133 அதிகாரங்களையும் தெரிந்து, மனனம் செய்து, தெரிந்தவருடன் ஆடக் கூடிய ஒரு விளையாட்டு!//

இக் காரணத்தினால்தான் நான் ஆட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள முடியவில்லை. எனக்கு குறள் அதிகாரங்கள் தெரியாது. ஆனால் சிறீதரனின் பதிவைப் பார்த்ததும் குறள் படிக்கத் தொடங்கியாச்சு.

//இதனைக் கற்க உங்களுக்குப் பொழுதில்லாவிடினும், உங்கள் குழந்தைகளுக்கு இதைக் கற்றுக் கொடுங்கள்!//

கற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது அய்யன் வள்ளுவனின் குறள் வழி வாழப் பழக்க வேண்டும்.

கோவி.கண்ணன் [GK] Monday, September 04, 2006 8:57:00 PM  

எஸ்கே...!
இந்த ஆட்டம் எனக்கு பிடிச்சிருக்கு, ஆனாலும் விளையாடத் தெரியலை. அப்படியே கோட்டுக்கு வெளியே உட்கார்ந்து பவுன்டிரி லைனுக்கு அப்பால வர்ற பந்தை எடுத்து வீசி உதவி செய்கிறேன் !
:))

VSK Monday, September 04, 2006 8:57:00 PM  

என்னமோ பண்ணுங்க, கொத்தனாரே!

உங்களுக்கும் ஒரு சின்னப் பையன் இருக்கான்!

அவனை நினைச்சுக்கோங்க!

ஆனா, கூடவே இருக்கறதுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக்கிறேன்!

VSK Monday, September 04, 2006 8:58:00 PM  

குறள் படிக்கத் துவங்கியது ஒரு நல்ல முயற்சி, வெற்றி!

முதலில் கற்றுக் கொள்வோம்!

பிறகு நடக்க முயற்சிப்போம்!

சரியா?!

VSK Monday, September 04, 2006 9:01:00 PM  

அடிக்கறதுகே ஆள் இல்லியேன்னு சொல்றேன்; நீங்க என்னடான்னா, பந்தை எடுத்துப் போடறேன்னு சொல்றீங்க, கோவியாரே!

பரவாயில்லை, இப்படியாவது ஆள் சேருதே; அதுவரை மகிழ்ச்சியே!


அதுக்காகவாவது ஆடக் கத்துக்கோங்க!

:))

பொன்ஸ்~~Poorna Monday, September 04, 2006 9:13:00 PM  

கோவியாரின் பிரச்சனை தான் எனக்கும். தானே ஆட்டம், பந்து, அடிக்க ஆள் இல்லைன்னு சொல்லமல், ஒரு முறை பந்து போட்டு அடித்துக் காட்டுங்கள். அப்போது தான் விளையாட்டு என்ன என்று புரியும்..

VSK Monday, September 04, 2006 10:55:00 PM  

இது ரொம்ப சுலபம் பொன்ஸ்!

அதுக்கு முன்னாடி, நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லணும்!
நீங்க சொன்னதை நான் பயபக்தியா ப்ரிண்ட் எடுத்து வெச்சிருக்கேன்!
ஆனா, இன்னும் அப்ளை பண்ணலை!:(


அதனால, கனக்ஸ் பதிவோட சுட்டி கொடுக்க மறந்துட்டேன்!
ஸாரி!

இது கொஞ்சம் சுவையான தமிழ் விளையாட்டு!

133 அதிகாரத்தையும் மனப்பாடம் பண்ணிட்டீங்கன்னா,
அது மாதிரி, மத்தவங்களும் பண்ணினா,
அவங்களோட பேசும் போது,
இந்த அதிகாரங்களோட தலைப்பை வெச்சே சங்கேதமா பேசலாம்னு, நம்ம ஸ்ரீதரன் சொல்றாரு.

உதாரணத்துக்கு,

"159 வேணுமின்னா,
161 பண்ணி,
165 எது, 167 எதுன்னு பார்த்து,
95 பண்ணனும்.
அப்படிப் பண்ணினா, 179 வராது.
35 வராது.
189-ம் வராம தவிர்க்கலாம்.
49, 197 எல்லாம் கிடைக்கும்.
நம்ம 195 போகாது.
61-ஆ வாழலாம்.
63 தேவையில்லை.
217 கிட்டவே வராது.
நமக்கு இந்த 159, ஒரு 149-ஆ இருக்கும்.
11 நல்லா இருக்கும்.
89 பண்ணினாக்கூட 159 கோவிக்காது.
இதாங்க பெரிய 55!

புரிந்ததா?!!

:))

பொன்ஸ்~~Poorna Wednesday, September 06, 2006 12:36:00 AM  

எஸ்.கே,
133 அதிகாரங்களையும் ஒரே மாதத்தில் மனப்பாடம் செய்து பேசுவதென்பது (அதையே தொழிலாகக் கொண்டிருந்தால் ஒழிய) நடவாது. ஆனால், நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரப் பெயர்களைச் சொன்ன போது படித்துக் கொண்டிருந்தேன்..

விளையாட்டில் பந்து பந்து என்று சொல்லி வெறும் தலைப்புகளை மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தால் எப்படி? இப்போது கொடுத்தது போன்றதொரு வாக்கியத்தை தினமும் கொடுத்து மக்கள் கண்டு பிடிப்பது போல் வைத்திருக்கலாம்..

இல்லையேல், பத்து அதிகாரப் பெயர்களைச் சொல்லி விட்டு, அதில் ஒரே ஒரு அதிகாரத்தை எடுத்தாண்டு ஒரு வாக்கியம் அமைத்து, அதற்கு அடுத்த பின்னூட்டம் போடுபவர் வேறு ஒரு அதிகாரத்தின் பெயரைப் பயன்படுத்தி ஒரு வரி (கேள்வியாகவோ, பதிலாகவோ) போட வேண்டும் எனலாம்..

எனக்கென்னவோ, விளையாட்டில் வெறும் ஸ்கோர் போர்டும், பந்தும் மட்டும் தான் கண்ணில் பட்டது.. அதை யாரும் எடுத்துப் போடவே இல்லை, அதனால் தான் அடிக்கவும் ஆள் இல்லாமல் போய்விட்டது..

இப்போது கூட நீங்கள் இதைத் தொடங்கலாம்.. ஆனால், தொடங்கினால் நிச்சயம் வந்து கலந்து கொள்வதான வாக்குறுதியாக இதைக் கருத வேண்டாம்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP