Friday, June 05, 2009

"நானே நானாகி....!!"

"நானே நானாகி....!!"


நானாகி நிற்கிறேன் நான்!
எல்லாம் கடந்த
நிலையில்!
முழுமையான நான்!

முற்றும் மலர்ந்த நிலையில்!


பதியத்தில் துளிர்த்து, பருவத்தில் வளர்ந்து

உதயத்தின் ஒளியெல்லாம் உள்ளத்தில் வாங்கி

மொட்டென முளைத்து நின்றிருந்த காலமெல்லாம்

செடியொன்றே சிறப்பாக அனைவருமே பார்த்திருந்தார்!


உள்ளிருந்து ஓரொளி என்னுள் திளைத்தது

உன்னையே நீயறிவாயென என்னிடத்தில் சொல்லியது

என்னுள்ளே விளைந்திட்ட மாற்றத்தை நானுணர

மெல்லமெல்ல ஓரிதழாய் நான்விரிந்து மலரானேன்!


கதிரவன் எழுந்து காலையில் வந்தான்

அதிசய மலராய்ச் சோலையில் மலர்ந்தேன்

முழுமையி
ன் பூரணம் நானாய் நின்றேன்
எழுமின் விழிமின் எல்லாம் கடமின்!


செடியில்லை கிளையில்லை நானொன்றே அங்கே!

பிடிமானம் விடுத்தங்கே நானங்கே தனியே!

பூவென்னும் பெயர்மட்டும் எனக்கிங்கே உண்டு!

ஏதுமிலா நிலையினிலே நானிங்கே ஒளிர்வேன்!


நானாகி நிற்கிறேன் நான்!
எல்லாம் கடந்த நிலையில்!

முழுமையான நான்!

முற்றும் மலர்ந்த நிலையில்!
*********************************


4 பின்னூட்டங்கள்:

தமிழ் Friday, June 05, 2009 8:46:00 PM  

/நானாகி நிற்கிறேன் நான்!
எல்லாம் கடந்த நிலையில்!
முழுமையான நான்!
முற்றும் மலர்ந்த நிலையில்!/

அருமை

VSK Friday, June 05, 2009 9:56:00 PM  

///நானாகி நிற்கிறேன் நான்!
எல்லாம் கடந்த நிலையில்!
முழுமையான நான்!
முற்றும் மலர்ந்த நிலையில்!/

அருமை//

நன்ரி, திகழ்மிளிர்!!

வடுவூர் குமார் Tuesday, June 30, 2009 9:54:00 AM  

தனியாக நின்றாலும் “வேர்” மட்டும் அகப்படமாட்டேன் என்கிறதே!!

VSK Tuesday, June 30, 2009 8:18:00 PM  

வேரே நீயாக அதையெங்கே கையில் பிடிப்பது?

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP