"நான் கடவுள்!"
"நான் கடவுள்!"மலர்கண்டு மகிழ்கின்ற மனமிங்கு கொண்டால்
மலர்கின்ற மனத்துள்ளே இறையங்கே தெரியும்!
மேகங்கள் கருத்திங்கு மழைபெய்யும் போது
விழுகின்ற துளியாவும் நதியோடு கலக்கும்!
துளியங்கு இல்லாது நீரொன்றே தெரியும்
கலந்தோடும் நீரினிலே இறையங்கே புரியும்!
மழைநின்றபின்னாலே மேகங்கள் இல்லை
வலிதீர்ந்த பின்னாலே சோகங்கள் இல்லை!
வழிந்தோடும் நீர்பாய பயிரங்கு செழிக்கும்
வசந்தத்தின் வீச்சினிலே மலரிங்கு பூக்கும்!
ஒன்றோடு ஒன்றாக இணைசேர்ந்தபின்னே
உயிர்யாவும் ஒன்றென்னும் மெய்யிங்கு புரியும்!
துளியில்லை மழையில்லை மேகங்களுமில்லை
பயிரில்லை உயிரில்லை இறைவெளியே எல்லாம்!
ஒருதுளியில் உயிர்நிறைத்து உள்ளின்றெழுந்து
பூக்கின்ற மலர்கண்டு மனமிங்கு மகிழும்!
மலர்கண்டு மகிழ்கின்ற மனமிங்கு கொண்டால்
மலர்கின்ற மனத்துள்ளே இறையங்கே தெரியும்!***************************************
8 பின்னூட்டங்கள்:
இப்படி எழுதவெல்லாம் நம்மால முடியாது..
நல்லாருக்கு
ஒண்ணும் புரியல, திடிரென்று ஏன் ?
//இப்படி எழுதவெல்லாம் நம்மால முடியாது..
நல்லாருக்கு//
நன்றி மயாதி அவர்ககளே!
என்ன புரியல, கோவியாரே!
கவிதையா? இல்லை, என்னையா?
:)))
சொல்ல வார்த்தை இல்லை
அருமையாக
அழகாக
ஆண்டவனுக்கு விளக்கம்
நன்றி, திகழ்மிளிர் அவர்களே!
\\துளியில்லை மழையில்லை மேகங்களுமில்லை
பயிரில்லை உயிரில்லை இறைவெளியே எல்லாம்!\\
இருவரியில் இறைத் தத்துவம்
வாழ்த்துக்கள்
தொடருங்கள்
நன்றாயிருக்கிறது.
இது நான் கடவுளானவன்
http://nnaan.blogspot.com/2008/11/blog-post_14.html
Post a Comment