Wednesday, January 21, 2009

”ஆனந்த ராமாயணம்” -- 2

”ஆனந்த ராமாயணம்” -- 2

"கிஷ்கிந்தா காண்டம்"


அனுமான் எதிரில்வர ராமா ராமா

அவரால் சுக்ரீவனை ராமா ராமா


நேசம்கொண்டு யோசனைகள் ராமா ராமா

நீ நிலத்தில் செய்து கொண்டீர் ராமா ராமா


சீதையின் நகைகளை ராமா ராமா

கண்டு மனம் கசிந்தீர் ராமா ராமா


சுக்ரீவன் தேற்றிடவே ராமா ராமா

துளைத்து விட்டீர் மராமரத்தை ராமா ராமா


வாலியை வதைத்தவனை ராமா ராமா

வைகுண்டம் போகச் செய்தீர் ராமா ராமா


சீதையைத் தேடும்படி ராமா ராமா

சேதி சொல்லி விடுத்தீர் ராமா ராமா


நான்கு திசைகளிலும் ராமா ராமா

நலமுடன் தேடலுற்றார் ராமா ராமா

காடுமலை வனமெல்லாம் ராமா ராமா

கண்கூடாய்த் தேடுகின்றார் ராமா ராமா

*****************************************


"சுந்தர காண்டம்"


சீதை இருப்பிடத்தை ராமா ராமா

சம்பாதி உரைத்திடவே ராமா ராமா


மயேந்திரம் ஏறியே ராமா ராமா

பாய்ந்தானே அனுமானும் ராமா ராமா


இலங்கிணி தன்னையே ராமா ராமா

கலங்கிட அடித்தானே ராமா ராமா


சீதையைத் தேடிக்கண்டானே ராமா ராமா

சேதி அடையாளம் தந்தான் ராமா ராமா


அசோகவனம் அழித்தான் ராமா ராமா

அசுரர்களைத் தான் வதைத்தான் ராமா ராமா


இலங்கைக்குக் கொள்ளி வைத்து ராமா ராமா

கலங்கடித்தான் ராவணனை ராமா ராமா


சீதை தந்த சூடாமணி ராமா ராமா

அனுமானும் வாங்கி வந்தான் ராமா ராமா


இந்திரஜித்தன் அஸ்திரத்தால் ராமா ராமா

பந்தித்த அனுமானும் ராமா ராமா


ராவணனைக் கண்டு அனுமான் ராமா ராமா

சாவாமைக்கு புத்தி சொன்னான் ராமா ராமா


விதியை வெல்வாரில்லை ராமா ராமா

மதுவனம் அழித்தவர்கள் ராமா ராமா

**************************************


"யுத்த காண்டம்"


சேதுவை அணைகட்ட ராமா ராமா

சேனையுடன் போய்ச் சேர்ந்தீர் ராமா ராமா


சரணமடைந்த விபீஷணர்க்கு ராமா ராமா

சிரஞ்சீவிப் பட்டம் தந்தாய் ராமா ராமா


ராவணாதி அசுரரைக் கொன்றாய் ராமா ராமா

ராக்ஷஸர் வேரற்றுப் போக ராமா ராமா


சீதையைச் சிறை நீக்கிவிட்டாய் ராமா ராமா

விபீஷணர்க்கு முடிதரித்தாய் ராமா ராமா


அயோத்திக்குத் திரும்பிவர ராமா ராமா

சேதுவிற்கு உரை செய்தாய் ராமா ராமா


புஷ்பக விமானத்தில் ராமா ராமா

புண்ணிய முனிவரிடம் ராமா ராமா


போஜனம் அருந்தச் சென்றீர் ராமா ராமா

போக விடுத்து அனுமானை ராமா ராமா


பரதன் உயிர் காப்பாற்றிய ராமா ராமா

அயோத்திநகர் வந்து சேர்ந்தீர் ராமா ராமா


மகுடாபிஷேகம் கொண்ட ராமா ராமா

மகிழ்ச்சியுற வாழ்ந்திட்ட ராமா ராமா


குவலயத்தை ரக்ஷிக்கும் ராமா ராமா

குறைகள் ஒன்றும் வாராது ராமா ராமா


ராமா ராமா ராமா ராமா

ராமா ராமா ராமா ராமா

ராமா ராமா ராமா ராமா

ராமா ராமா ராமா ராமா

*********************************

ஆனந்த ராமாயணம் நிறைவுற்றது!

9 பின்னூட்டங்கள்:

VSK Thursday, January 22, 2009 12:20:00 AM  

ஸ்ரீ ராமஜெயம் ஜீவா ஐயா!

கோவி.கண்ணன் Thursday, January 22, 2009 12:34:00 AM  

வாத்தியாரைக் காணும், இராமயணம் படிச்சது போதும்னு முடிவு பண்ணிட்டாரா ?

:)

VSK Thursday, January 22, 2009 8:42:00 AM  

புள்ளைங்க ஒழுங்க படிக்க வந்து அமைதியாகப் பாடம் கேட்கும்போது ஆசான் பிரம்பு எடுக்கத் தேவையில்லையே கோவியாரே! :)

VSK Thursday, January 22, 2009 8:43:00 AM  

பின்னூட்டத்துக்கு நன்றி!!

Anonymous,  Friday, January 23, 2009 5:24:00 AM  

குலசேகர ஆழ்வார் இராமயணத்தை பத்து பாடல்களில் பாடி அருளினார், அது போல மிகவும் சுருக்கமாகவும் நல்லாவும் இருக்கு , நன்றி நண்பரே, இதை நிச்சியம் பாராயணத்திற்கு பயன்படுத்தி கொள்வேன்

Mani Pandi

VSK Friday, January 23, 2009 8:55:00 AM  

நன்றி, திரு. மணி பாண்டி ஐயா.

கபீரன்பன் Saturday, January 24, 2009 10:33:00 PM  

மிக எளிமையான வரிகளிலே ராமாயணம். பதிந்ததற்கு மிக்க நன்றி. இசையமைப்புடன் கூடிய ஒலிக்கோப்பு ஏதேனும் உள்ளதா? ராமாயணத்தை படத் தொகுப்பாக செய்துவரும் ஒரு slide-show விற்காக தேடிக் கொண்டிருக்கிறேன்.

//வாலியை வதைத்தவனை ராமா ராமா

வைகுண்டம் போகச் செய்தீர் ராமா ராமா //

”வாலியை வதைத்தவன் நீ” என்று வரவேண்டும் என்று நினக்கிறேன்.

தொடரட்டும் உங்கள் பணி

VSK Saturday, January 24, 2009 11:16:00 PM  

ஒலிக்கோப்பு இருக்கிறது நண்பரே! அனுப்பி வைக்கிறேன்.

வாலியை என்ற சொல்லுக்குப் பக்கத்தில் ஒரு கமா [,] விட்டுப் போய் விட்டது.

வாலியை, வதைத்தவனை எனப் படித்தால் புரியும்.

வாலியை, [சுற்றத்தை] வதைத்தவனை எனப் பொருள் அந்த வரிக்கு.

நன்றி.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP