" பாம்புகளின் கூடல்"
" பாம்புகளின் கூடல்"
நாகப்பாம்பும், சாரைப்பாம்பும் பிணையும், இணையும் எனப் பலவிதக் கருத்துகள் நிலவி வருகின்றன! இதில் உண்மை ஏதாவது இருக்கிறதா என ஆராய்ந்தபோது கிடைத்த சில உண்மைகளை இங்கு உங்கள் முன் வைக்கிறேன்!
உயிர்வாழும் எந்தவொரு இனத்துக்கும் இரு அத்தியாவசியமான தேவைகள், முதல் உணர்வுகள் [Primal instincts] இருக்கின்றன.
உயிர்வாழும் எந்தவொரு இனத்துக்கும் இரு அத்தியாவசியமான தேவைகள், முதல் உணர்வுகள் [Primal instincts] இருக்கின்றன.
'தான் உயிர் வாழ்வது'[ survival of the self] ; 'இனப்பெருக்கம் செய்வது'[survival of the species as awhole]
'தான் உயிர் வாழ்வது' என்னும் முதல் உணர்வில், தன் உணவுக்கு அலைவது, இருப்பிடம் தேடிக் கொள்வது, எதிர்ப்பு சக்திகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வது, எதிர்ப்பது என்பவை அடங்கும்.
'இனப்பெருக்கம் செய்வது' என்பதில், வருடாந்திர நிகழ்வுகளான, 'தனக்கான ஒரு துணையைத் தேடுவது, அதனுடன் புணர்வது, தன் இனத்தைப் பெருக்கிக் கொள்வது' இவை அடங்கும்.
பாம்புகளின் வாழ்க்கையில், முதலாவது பெருமளவிலும், இரண்டாவது சற்று குறுகிய அளவிலும் நிகழ்கின்றன.
தான் எப்படி உயிரோடு பத்திரமாக இருப்பது என்பதில்தான் பாம்புகள் பெரும் கவனம் செலுத்துகின்றன.... பெரும்பாலும்.
தானுண்டு தன் தேவைகள் உண்டு என்பது மட்டுமே இவைகளுக்கு முக்கியமாகிப் போகிறது.
மற்ற பாம்புகளைப் பற்றி இதற்குக் கவலை இல்லை!
அடுத்த பாம்போடு சேர்ந்தால், தன் உணவில் பங்கு போட வருமே என்ற மனப்பான்மையில் வாழும் இனம் இது!
அதற்காக நாய்கள் மாதிரியோ, காகங்கள் மாதிரியோ, தன் இனத்தோடு சண்டை போட்டுத் துரத்துவதுமில்லை!
எப்போதாவது சந்தித்தால், ஒரு 'ஹலோ' சொல்லிவிட்டு நகர்ந்துவிடும்!!
பாம்புகள் நாமெல்லாம் கற்பனை செய்து போற்றிவரும் தாய்களும் அல்ல!
பெற்றவுடன் விட்டு விலகிவிடும்!
பெற்றவுடன் விட்டு விலகிவிடும்!
குட்டிகள் தம்மைத் தாமேதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்!
"எப்படி உடலுறவு கொள்கின்றன?"
வெயில் காலத்தில் வாலிப வயது வந்த கிளர்ந்தெழும் பாம்புகள் [sexually active snakes] தன் கண்ணில் தென்படும் எந்தவொரு பாம்பையும் அணுகும்!
ஆம்!
"எப்படி உடலுறவு கொள்கின்றன?"
வெயில் காலத்தில் வாலிப வயது வந்த கிளர்ந்தெழும் பாம்புகள் [sexually active snakes] தன் கண்ணில் தென்படும் எந்தவொரு பாம்பையும் அணுகும்!
ஆம்!
"எந்தவொரு பாம்பையும்!" அது எந்த ஜாதி எனப் பார்க்காமலேயே!
தான் எதிர்கொண்ட பாம்பின் வரவேற்பைப் பொறுத்து இதன் அடுத்த நடப்பு[encounter] இருக்கும்!
இது எதிர்கொண்ட பாம்பு ஒரு ஆணாக இருந்தால்... ஆம்... பாம்புகளுக்கு இது ஆண் இது பெண் எனக்கூடத் தெரியாது!... உடனடியாக ஒரு சண்டை நிகழும்! இந்தச் சண்டை இனத்துக்கு இனம் வேறுபடும்.
சிலவகைப் பாம்புகள் [Elapids and Vipers]கடிக்காமலும், சில வகைகள் [Colubrids] பயங்கரமாகக் கடித்துக் கொண்டும் சண்டையிடும்!
இப்படி ஏதும் நிகழவில்லையெனில், ஆண் பாம்பு உடலுறவு கொள்ள முன்னேற்பாடுகளைச் செய்யத் துவங்கும்.
தன் நாக்கில் இருக்கும் ஒரு உணர்வலைகளின் மூலம், தன் இணையவிருக்கும் பாம்பு எந்த ஜாதி, ஆணா, பெண்ணா, என அறிகிறது.
இது தனக்கு ஒவ்வாத ஒன்று என அறிந்தவுடன், உடனே அவ்விடத்தை விட்டு அகன்றுவிடும்!....
அடுத்த இணையைத் தேடி!!
தனக்கு இணையென உணர்ந்தவுடன், ஆண்பாம்பு அதனுடன் கூட விழையும்.
தன் தலையை அதன் உடல் மீது வைக்கிறது.
வாலால் உடலைப் பிணைக்கிறது.
தனது உறுப்பை அதன் உறுப்புடன் இணைக்க முயல்கிறது.
இப்படி எளிதாக இது நிகழ, பெண் பாம்பு அனுமதிப்பதில்லை!
வழுக்கிக் கொண்டு விலகி ஓடும்.
ஆண்பாம்பு துரத்தி, மீண்டும் பிணைய முயலும்.
இது சில மணி நேரமோ.... அல்லது சில நாட்களோ கூட ஆகலாம்!
ஆண் பாம்புக்கு இரு ஆணுறுப்புகள்! [hemepenes] என இது அழைக்கப்படும்.
அடுத்த இணையைத் தேடி!!
தனக்கு இணையென உணர்ந்தவுடன், ஆண்பாம்பு அதனுடன் கூட விழையும்.
தன் தலையை அதன் உடல் மீது வைக்கிறது.
வாலால் உடலைப் பிணைக்கிறது.
தனது உறுப்பை அதன் உறுப்புடன் இணைக்க முயல்கிறது.
இப்படி எளிதாக இது நிகழ, பெண் பாம்பு அனுமதிப்பதில்லை!
வழுக்கிக் கொண்டு விலகி ஓடும்.
ஆண்பாம்பு துரத்தி, மீண்டும் பிணைய முயலும்.
இது சில மணி நேரமோ.... அல்லது சில நாட்களோ கூட ஆகலாம்!
ஆண் பாம்புக்கு இரு ஆணுறுப்புகள்! [hemepenes] என இது அழைக்கப்படும்.
வளையக்கூடிய எலும்புகளைக்[flexible spines] கொண்டது இது!
பெண்ணுறுப்புக்குள் நுழைந்தவுடன், தன் இரு எலும்புகளால் இறுகப் பிடித்துக் கொள்கிறது......
ஒரு மணி.. இரண்டு மணி... சிலசமயம் ஒரு சில நிமிடங்களில் கூட இது முடியும்!
இரு பாம்புகளும் ஒரு அசைவும் இல்லாது, அப்படியே இந்த நிகழ்வின் போது இருக்கும்.
சில சமயம், பெண்பாம்பு தன் மீது கவிந்த ஆணை இழுத்துக் கொண்டு நகரும்.
சில நேரம், ஆண்பாம்பு தன் துணையுடன் சில நாட்கள் கூடவே இருந்து, மீண்டும் கூடும் நிகழ்வும் நடக்கலாம்.
சரி... இப்படி நிகழ்ந்ததும்........
எது முதலில் வரும்?
முட்டையா? பாம்பா?
கேட்டால் சொல்கிறேன்!
ஆனால், இதன் மூலம் புரிவது என்னவெனில்,....
பாம்பு சாரையுடன் பிணையும்!
ஆனால்,....
இணையாது!
:))))))))))))))))
முட்டையா? பாம்பா?
கேட்டால் சொல்கிறேன்!
ஆனால், இதன் மூலம் புரிவது என்னவெனில்,....
பாம்பு சாரையுடன் பிணையும்!
ஆனால்,....
இணையாது!
:))))))))))))))))
*****************
5 பின்னூட்டங்கள்:
//எது முதலில் வரும்?
முட்டையா? பாம்பா?//
முட்டையை வைத்தால் பாம்பு வரும்...பக்கதில் கீரி இருந்தால் அதுவும் வரும் !
பாம்பு முட்டை உடையும் போது வெளியே வரும் குட்டிகளை தாய் பாம்பு லபக்கிவிடுமாம், ஒன்றிரண்டு தப்புவது தான் பாம்பு இனம் அழியாமல் இருக்கிறது என்கிறார்கள். ?
பதிவைப் பற்றி ஒன்றும் சொல்லாமல், பின்னூட்டங்கள் இட உங்களால் மட்டுமே முடியும் கோவியாரே!
சும்மாவா உங்களை ஜாம்பவான் எனச் சொல்கிறார்கள்!!!!
:))))
எந்தப் பாம்பும் தன் முட்டையை விழுங்குவதில்லை!
முன்னுக்குக் கொண்டுவர உதவியமைக்கு நன்றி, கோவியாரே!@
உங்கள் நல்ல நோக்கம் புரிகிறது!:)))
Interesting! :))
Post a Comment