"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 1
"தனியே... தன்னந்தனியே!"

[உபநிடதங்களைப் பற்றிய இரண்டாவது பதிவு இது! முதல் பதிவான "கேனோபநிடதத்தை" மீண்டும் ஒருமுறை படித்துவிட்டு இதைப் படித்தால், இன்னும் நன்றாகப் புரியுமென நம்புகிறேன்! நான்கு பதிவுகளாக இது வரும்! இதன் மூலநூலை இறுதியில் அளிக்கிறேன்.]
"தன்னை எழுப்பும் துதி"
எனது கைகால் உறுப்புகள் வலிமை பொருந்தியதாகட்டும்!
எனது சொற்கள் வலிமை மிகுந்து சக்தியுடன் வெளிவரட்டும்!
எனது நாசி, கண்கள், செவிகள் மற்றும் இதர அவயவங்களும்
சக்தியடைந்து வலிமை பெற்றதாகட்டும்!
உபநிடதங்கள் யாவும் ப்ரஹ்மனைப் போன்றதே
அளப்பரிய உண்மை!
ப்ரஹ்மனை நான் மறவாதிருப்பேனாக!
ப்ரஹ்மன் என்னை மறக்காதிருக்கட்டும்!
நான் என்றுமே மறக்கப்படாதவனாகக் கடவன்!
ப்ரஹ்மனில் உறைந்து, உபநிடதங்களில் மிகவும் உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கும், இயற்கையானதும், இவ்வுலகின் அழியாக்கட்டளையாகிய அறத்தை நான் உணரக் கடவேனாக!
ஓம்! அமைதி! அமைதி! அமைதி!
*************************************
நூல்
1.
முனிவரில் பெருந்தகை அஷ்வலாயனன்
அடக்கத்துடன் நெருங்கி மிகப்பெரும் தேவனாம்
பிரமனைக் கேட்கலானார்:
"மிகப்பெருந்தேவனே! பிரமனே!
மிகவும் உயரியதும், மறைபொருளாய் இருப்பதும்,
அறிவிற் பெரியோரால் எப்போதும் பின்பற்றப்படுவதும்,
எந்த ஒன்றால் தங்களது பாவங்களைக் கழுவி
உயர் நிலையை அடைகிறார்களோ அந்த
ப்ரஹ்மனைப் பற்றிய அறிவை எனக்கு உபதேசிக்க வேண்டும்!
2.
அவரைப் பார்த்து மிகப்பெரும் தந்தையான
பிரமன் சொல்லலானார்:
உயரிய உண்மையை உணர்ந்திட
நம்பிக்கை, ஈடுபாடு, தியானம், யோகம்
இவற்றின் தேவை வேண்டும்.
செயல்களோ, பிள்ளைகளோ, பணமோ உதவாது
இவைகளைத் துறப்பதன் மூலமே
அழியாநிலை அடையக்கூடும்!
3.
சுவர்க்கத்தையும் விட உயர்ந்தது
ஒரு குகையில் மறைந்திருப்பது
மறைந்தும், ஒளிர் வீசி இருப்பது
அதிக முயற்சி எடுப்பவரே
இதனில் நுழைவார்!
4.
அனைத்தையும் துறந்தவர் எவரோ
உண்மை அறிவைத் தேடுபவர் எவரோ
அவரே விடுதலை என்னும் உயரிய நிலையை
துறத்தல், யோகம் என்பதன் மூலம்
அழியாநிலையினை அடைகின்றார்.
"5.
யாருமில்லா தனித்தொரு இடத்தில்
உடலினைத் தளர்த்தி எளிமையுடனே
வசதியாய் அங்கே அமர்ந்தபடி,
தூய்மை ஒன்றைத் துணைக்கொண்டு,
சிரசு, கழுத்து, உடல் மூன்றும்
ஒருநிலைப்பாடாய் வைத்தபடி,
அனைத்தையும் துறந்த இறுதிநிலையிலே,
புலன்கள் யாவையும் ஒருநிலைகொண்டு,
நம்பிக்கை, உறுதி கொண்டமனத்துடன்
குருவைவணங்கி, தனிநிலை கொள்வாய்.
6.
இதய நடுவினில் மலரும் கமலம்
அதனைத் தேடி அதனுள் ஆழ்ந்தால்
தூய்மையானதும், ஆசையற்றதும்,
துன்பமற்றதும், எண்ணமுடியாததும்,
படைப்பையும் தாண்டிய பரம்பொருள் ஒன்றை,
முடிவேயிலாது வடிவுமிலாது
புனிதமானதும், அமைதியானதும்
என்றுமிருப்பதும் எங்குமிருப்பதும்
அனைத்துக்கும் காரணமான
ப்ரஹ்மனை உள்ளில் இருத்திடுவாயே.
************************************
“கைவல்ய உபநிஷத்”
‘ப்ரத2ம க2ண்ட3:’
‘ப்ரத2ம க2ண்ட3:’
ஓம் ப4த்3ரம் கர்ணேபி4: ஷ்ருணுயாம தே3வா:
ப4த்3ரம் பஷ்யேமா க்ஷபி4ர் யஜத்ரா:
ஸ்தி2ரைர் ரங்கை3ர் துஷ்ட்டுவாக்3ம் ஸஸ்தனூபி:4
வ்யஷேம தே3வஹிதம் யதா3யு:
ஸ்வஸ்தி ந இந்த்3ரோ வ்ருத்3த4ஷ்ரவா:
ஸ்வஸ்தி ந பூஷா விஷ்வவேதா3:
ஸ்வஸ்தி நஸ்தார்க்ஷ்யோ அரிஷ்டநேமி:
ஸ்வஸ்தி நோ ப்3ருஹஸ்பதிர் த3தா4து:
ஓம் சாந்தி:சாந்தி: சாந்தி:
ஓம் அதா2ஷ்வலாயனோ ப4க3வந்தம் பரமேஷ்டினம் உபஸமேத்ய உவாச --
அதீ4ஹி ப4க3வன் ப்3ரஹ்மவித்3யாம் வரிஷ்ட்டா2ம்
ஸதா3 ஸத்3பி4: ஸேவ்யமானாம் நிகூ3டா4ம்
யயாசிராத் ஸர்வபாபம் வ்யபோஹ்ய
பராத்பரம் புருஷம் யாதி வித்3வான் [1]
தஸ்மை ஸ ஹோவாச பிதாமஹஸ்ச
ஷ்ரத்3தா4 ப4க்தி த்4யான யோகா3த3வைஹி
ந கர்மணா ந ப்ரஜயா த4னேன
த்யாகே3னைகே அம்ருதத்வ மானஷு: [2]
பரேண நாகம் நிஹிதம் கு3ஹாயாம்
விப்4ராஜதே யத்3யதயோ விஷந்தி
வேதா3ந்த விஞ்ஞான ஸுநிஷ்சிதார்தா2:
ஸந்யாஸ யோகா3த்3யதய: ஷுத்3த4ஸத்வா: [3]
தே ப்3ரஹ்மலோகேஷு பரான்தகாலே
பராம்ருதாத் பரிமுச்யந்தி ஸர்வே
விவிக்த தே3ஷே ச ஸுகா2ஸனஸ்த2:
ஷுசி: ஸமக்ரீவஷிர: ஷரீர: [4]
அத்யாஷ்ரமஸ்த2: ஸகலேந்த்3ரியானி
நிருத்4ய ப4க்த்யா ஸ்வகு3ரும் ப்ரணம்ய
ஹ்ருத்புண்டரீகம் விரஜம் விஷுத்3த4ம்
விசிந்த்ய மத்4யே விஷத3ம் விஷோகம் [5]
அசிந்த்யம் அவ்யக்தம் அனந்தரூபம்
ஷிவம் ப்ரஷாந்தம் அம்ருதம் ப்3ரஹ்மயோனிம்
ததா2தி3 மத்3யாந்த விஹீனமேகம்
விபு4ம் சிதா3னந்த3ரூபம் அத்3பு4தம் [6]
*********************************
[தொடரும்]
10 பின்னூட்டங்கள்:
ம்ம்ம்ம்ம்ம்ம்
//எனது கைகால் உறுப்புகள் வலிமை பொருந்தியதாகட்டும்!
எனது சொற்கள் வலிமை மிகுந்து சக்தியுடன் வெளிவரட்டும்!
எனது நாசி, கண்கள், செவிகள் மற்றும் இதர அவயவங்களும்
சக்தியடைந்து வலிமை பெற்றதாகட்டும்!
உபநிடதங்கள் யாவும் ப்ரஹ்மனைப் போன்றதே
அளப்பரிய உண்மை!//
ரிக் வேத வரிகளைப் போல இருக்கிறது !
உபநிடதங்கள் எல்லாமே வேதத்தின் சாரம் தானே!
அதன் சாயல் இருக்கும் கோவியாரே!
வருகைக்கு நன்றி!
//""தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 1"//
கைவல்ய உபநிசத் ஓகே !
வல்(லி)யகை உபநிசத் என்று எதும் இருக்கிறதா ?
//உபநிடதங்கள் யாவும் ப்ரஹ்மனைப் போன்றதே
அளப்பரிய உண்மை!//
எல்லா உபநிடதங்களும் திரும்பத் திரும்ப ஒன்றைப் பற்றியே சொல்வதின் நோக்கம், அந்த ஒன்றை என்றும் நினைவில் நிறுத்தி, அந்த ஒன்றையே ஒன்றாக உணர்வதல்லவா!
அடியேனின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்தற்கு நன்றி எஸ்.கே. மூலத்தையும் பொருளையும் சேர்த்துப் படிக்கும் போது மிகவும் சுவையாக இருக்கிறது. நன்கு மனத்திலும் பதிகிறது.
ந கர்மணா ந ப்ரஜயா தனேன
த்யாகேனைகே அம்ருதத்வ மானஷு:
என்ற பகுதியைப் பல இடங்களில் படித்த நினைவிருக்கிறது. செயல்களாலும், மக்களாலும், செல்வத்தாலும் அழியாமை கிடைக்காது; தியாகத்தால் மட்டுமே கிடைக்கும் என்பதை உலக வழக்கிலும் காண முடிகிறது. மகாத்மா காந்தி, அன்னை தெரசா போன்றவர்கள் அழியாப் பெரும்புகழ் பெற்று விளங்கி வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவதைப் பார்க்கிறோமே. அவர்கள் அந்நிலை பெற்றது தியாகத்தால் தானே.
செயல்கள், மக்கள் (குடும்பம்), செல்வம் இவற்றைத் துறக்கவேண்டும் என்று இந்த வாக்கியம் சொல்வதாகப் பொருள் சொல்வதுண்டு. நீங்களும் அப்படியே சொல்லியிருக்கிறீர்கள். அவ்வாறின்றி சாத்வீகத் தியாகம் எனப்படும் பற்றுதலை மட்டும் நீக்கிவிட்டு வாழுவதையே இந்த வாக்கியம் சொல்வதாகவும் படித்த நினைவு. அந்த விளக்கம் கீதையின் குரலுக்கும் ஒத்து போவதாக நினைக்கிறேன்.
ஐந்தாவது சுலோகத்திற்குப் பொருள் சொல்லும் போது கீதையின் தியான யோகத்தில் சொல்லப்படுவதைச் சொல்லியிருக்கிறீர்கள் போல.
ஆறாவது சுலோகத்தை வழிபடு சுலோகமாக நினைவில் கொள்ளலாம் போலிருக்கிறதே. மனப்பாடம் செய்ய முயல்கிறேன். தனிமையில் இருக்கும் போது சிந்தித்து அனுபவிக்க நல்லதொரு சுலோகம்.
//அடியேனின் வேண்டுதலுக்குச் செவி சாய்த்தற்கு நன்றி எஸ்.கே. மூலத்தையும் பொருளையும் சேர்த்துப் படிக்கும் போது மிகவும் சுவையாக இருக்கிறது. நன்கு மனத்திலும் பதிகிறது.//
அதைச்சுட்டியதும் தாங்கள் தானே குமரன்!
நன்றி உங்களுக்குத்தான்!
//ந கர்மணா ந ப்ரஜயா தனேன
த்யாகேனைகே அம்ருதத்வ மானஷு:
என்ற பகுதியைப் பல இடங்களில் படித்த நினைவிருக்கிறது. //
எந்தவொரு துறவியையும் பூர்ண கும்பத்துடன் வரவேற்கும் போது இந்த ஸ்லோகத்தைச் சொல்லித்தான் வரவேற்பார்கள்!
//அவ்வாறின்றி சாத்வீகத் தியாகம் எனப்படும் பற்றுதலை மட்டும் நீக்கிவிட்டு வாழுவதையே இந்த வாக்கியம் சொல்வதாகவும் படித்த நினைவு. அந்த விளக்கம் கீதையின் குரலுக்கும் ஒத்து போவதாக நினைக்கிறேன்.//
ஒருஸ்லோகத்துக்குப் பல பொருள் கிடைக்கும் வண்ணம்தானே நம் பெரியோர்கள் எழுதிச் சென்றிருக்கிறார்கள்!
நீங்கள் சொல்வதும் சரிதான் குமரன்!
//ஐந்தாவது சுலோகத்திற்குப் பொருள் சொல்லும் போது கீதையின் தியான யோகத்தில் சொல்லப்படுவதைச் சொல்லியிருக்கிறீர்கள் போல.
ஆறாவது சுலோகத்தை வழிபடு சுலோகமாக நினைவில் கொள்ளலாம் போலிருக்கிறதே. மனப்பாடம் செய்ய முயல்கிறேன். தனிமையில் இருக்கும் போது சிந்தித்து அனுபவிக்க நல்லதொரு சுலோகம்.//
மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள் குமரன்!
Post a Comment