தசாவதாரம் - விமரிசனம்
தசாவதாரம் - விமரிசனம்
அதென்னமோ, சின்னவயசுலேர்ந்தே முதல் நாள் முதல் காட்சி பார்த்துப் பார்த்து பழக்கப்பட்ட அனுபவம் நேத்தும் புடிச்சு தள்ளிரிச்சு, அரங்கத்துக்கு.
இரவு எட்டேகாலுக்குப் படம்னு சொன்னாங்க. எட்டேமுக்காலுக்குத்தான் ஆரம்பிச்சாங்க.
சுமார் 300 பேர் அமரக்கூடிய அரங்கத்தில், ஒரு 30 - 40 சீட்தான் காலியாயிருந்திருக்கும்.
டிக்கட் விலை வழக்கமான 15 டாலர்தான்!
ஏத்திவிட்டு, ஏத்திவிட்டு, வரிசையா ஊத்திகிட்ட கமல் படங்களைப் பார்த்து ஏமாந்து போனதால, இந்தப் படத்துக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமத்தான் போனேன்.
சொல்லப்போனா, இது வெற்றியடையணும்னு கூட நினைச்சேன் .
படம் தொடங்கி, கமல் பேரு வந்ததும் வழக்கம்போல விசில் சத்தம்!
மொத சீனே, ஒரு ஏரியல் ஷாட்! அப்படியே சென்னையை, ஒரு விமானம் தரையிறங்கறப்போ எப்படி இருக்கும்னு காட்டறாங்க! ரொம்ப நல்லா இருந்திச்சு
தொடர்ந்து நேரு அரங்கத்துல, கலைஞர், பிரதமர், அமெரிக்க அதிபர் இவங்களுக்கு மத்தியில, உலகநாயகன், இந்த உலகத்தையே ஒரு பெரிய ஆபத்துலேர்ந்து காப்பாத்தினதுக்காக விருது வாங்கறாரு.
அப்படியே ஒரு ஃப்ளாஷ் பேக்!
சோழர் காலத்துக்கு.....
வேறு மதங்கள் இல்லாததுனால, எப்படியும் சண்டை போட்டே ஆவணும்னு இருக்கற மனுசன், சிவனா, பெருமாளான்னு சண்டை போட்டுகிட்டு இருந்தாங்களாம். சிதம்பரத்துல இருந்த ரங்கநாதர் சிலையை, சோழ மன்னன் தூக்கிக் கடல்ல போட ஆளனுப்பறான்.
ராமானுஜதாசன்ற ஒரு வைஷ்ணவர் [க- 1]இதைத் தடுக்க முயற்சி பண்ணி, தோத்துப் போயி, அவரும் பெருமாளோட கடலுக்குள்ள போயிடறாரு. அவ்ளோதான். இதெல்லாம் ஒரு பத்து நிமிஷத்துல முடிஞ்சுருது.
ஆனா, காட்சியோட பிரம்மாண்டம் அப்படியே ஆளை உலுக்கிடுது. சரி, ஒரு நல்ல வேட்டை இருக்குன்னு நிமிர்ந்து உட்கார்ந்தேன்!
அப்படியே நேரா 2004 அமெரிக்காவுக்கு வர்றோம்.
கமல் இப்ப ஒரு உயிரியல் நுட்பொருள் விஞ்ஞானி. கோவிந்தராஜன்னு பேரு [க- 2] உலகத்தையே அழிக்கக்கூடிய ஒரு வைரஸ் கிருமியை ஒரு இத்துனூண்டு டப்பால போட்டு அடைச்சு வைச்சிருக்காரு. இவருக்கு ஒரு பாஸ்... திருட்டாளு அவரு. இதை வேற எவனுக்கோ வித்துறணும்னு திட்டம் போடறாரு.
அப்போத்தான், நம்ம புஷ்ஷு.. அதாங்க அமெரிக்க அதிபரு.. [க- 3] அவரு டிவியில வந்து, அமெரிக்காவைக் காப்பாத்த நாமளும் இதுபோல ஆயுதம் வைச்சுக்கணும்னு சொல்றாரு. திருட்டு பாஸ் ஒரு ப்ளான் போட, நம்ம கோவிந்தராசு அதை முறியடிச்சு, வைரஸை லவுட்டிகிட்டு, தன்னோட நண்பன் வீட்டுல வந்து ஒளிஞ்சுக்கிறாரு.......
இப்ப கதையை எதுக்கு சொல்றே? படத்தைப் பத்திச் சொல்லுன்னு தானே அடிக்க வர்றீங்க! இதோ பிடிங்க.
முதல் 15 நிமிஷம் ஒரு மாபெரும் சரித்திரப்படத்தைப் பார்க்கற மாதிரி இருக்கு. கொஞ்சம் கொஞ்சம் ஹே ராம் வாசனை அடிச்சாலும் கூட.
கமலோட 10 அவதாரத்துல,[ரங்கராஜன் நம்பி, கோவிந்தராஜன், புஷ், அமெரிக்க ஆர்னால்ட், ஜப்பானிய அண்ணன், அவ்தார் சிங்,பாட்டி, பல்ராம் நாயுடு, பூவராகன், காலிஃபுல்லா] மனசுல நிக்கறது ரெண்டே ரெண்டு பேர்தான்.
பல்ராம் நாயுடு, பூவராகன்.
இத்தனை ரோலையும் இவரே செஞ்சிருக்கணுமான்னு மனசுல பட்டுகிட்டே இருந்திச்சு.
இதைப் பிரகாஷ்ராஜ் நல்லாப் பண்ணியிருப்பாரே, இதை நாஸர் பிச்சு ஒதறியிருப்பாரே, ஒரு லக்ஷ்மியோ, சுகுமாரியோ இதைப் பண்ணியிருக்கலாமேன்னு தோணிச்சு.
இவ்வளவு கஷ்டப்பட்டு, என்ன பிரமாதமாகச் செய்துவிட்டார்னு பார்த்தா, மனசுல ஒரு வெறுமைதான் மிஞ்சியது.
செங்கல்பட்டு தாண்டி இருக்கும் மக்களைப் பற்றி இவர் கவலைப் படவே இல்லையோ எனத் தோன்றுகிறது.
முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு, அடுத்து ஒரு அரை மணிக்கு வரும் காட்சிகள் தெளிவாகப் புரியவைக்க இயக்குநர் தவறிவிட்டார்.
அதைத் தொடர்ந்து வருகின்ற துரத்தல் காட்சிகள், ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு இருப்பதை ஒத்துக் கொண்டாலும், இதை அவர்களே இன்னமும் நல்லாச் செய்வாங்களே என்ற எண்ணமே மிஞ்சுகிறது.
ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுப்பது என்றால், அவர்களைக் காப்பி அடிப்பதல்ல. நம்மவர் கதையை அந்தத் தொழில்நுட்பத் தரத்தில் சொல்லுவது என்பதைக் கமலும் கூட உணர்ந்துகொள்ளாதது நம் துரதிர்ஷ்டமே!
ஒரு 'சேஸ்' கதையில் இத்தனை பாத்திரங்கள் வருகிறார்கள். இவை அத்தனையையும் ஒருவரே செய்திருக்க வேண்டுமா, என்ற கேள்விக்கு கமல் பதில் சொல்லித்தான் தீர வேண்டும்.
பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தால் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும் எனவே நான் கருதுகிறேன்.
நவராத்திரியில் நடிகர் திலகம் நடித்ததற்கும், தசாவதாரத்தில் கமலின் பத்து வேடங்களுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.
அசினின் பாத்திரம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. கொஞ்ச நேரத்திற்குப் பின் அவர் 'பெருமாளே' எனச் சொல்லும்போதெல்லாம் ஓங்கி அறையலாமா என எரிச்சலே வருகிறது.
பலராம் நாயுடு பாத்திரத்தில் கமல் கலக்கியிருக்கிறார். அதுகூட கொஞ்ச நேரத்துக்குப் பிறகு பாலையாவை நினைவூட்டுகிறது. இருந்தாலும் சுகமாக ரசிக்கலாம்.
பூவராகன் பாத்திரம், நன்றாகவே செய்திருந்தாலும், கதைக்குத் தேவையே இல்லாத ஒன்றாக ஒட்டாமல், தனிக்கதையாகப் போய்விடுவது பெரிய சோகம். கபிலனின் கவிதை வரிகள் இதம்!
இசை மிகப் பெரிய ஏமாற்றம். மல்லிகா ஷெராவத் பாடும் பாடலின் ஒரு குறிப்பிட்ட வரிகளைக் கேட்கும் போதெல்லாம்,
"எந்தத் தொழில் செய்தாலென்ன, செய்யும் தொழில் தெய்வம் என்று பட்டுக்கோட்டை பாட்டில் சொன்னாரே" என்னும் 'தேவுடா தேவுடா' பாடல் நினைவில் வந்து தொலைக்கிறது.
பின்னணி இசை தேவி பிரசாத். காட்சிகளுக்குத் தக்கவாறு ஒலியெழுப்பி விறுவிறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறார். அசத்தி இருக்க்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
கமல் மிகவும் உழைத்திருக்கிறார்; கஷ்டப்பட்டிருக்கிறார்; கடைசியில் வரும், 'உலக்க நாயகனே' பாடலின் போது இதை வேறு காட்டி நம்மையும் கஷ்டப்படுத்துகிறார் ரவிக்குமார்! இவ்வளவு தடிமனான தோலை முகத்தில் மறைத்தபின் என்ன முகபாவம் அதிலிருந்து கமலால் காட்டமுடியும்? ஏதோ வெளுத்த பிரேதத்தைப் பார்ப்பது போலத்தான் இருந்தது.[கமல் ரசிகர்கள் மன்னிக்க!]
காமிரா பிரமாதம். ஒவ்வொரு கோணமும் மனுஷன் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கிறார். சுனாமி சம்பந்தப்பட்ட காட்சிகள் மிக நன்றாக வந்திருக்கின்றன.
கதை, திரைக்கதை, வசனம் "கமல்" எனப் போட்டிருக்கிறது. பல இடங்களில் கிரேஸி மோஹனின் கைவண்ணம் தெரிகிறது.
அந்தக் கடைசி வசனம், 'நான் எப்ப கடவுள் இல்லைன்னு சொன்னேன்' எனச் சொல்லி நிறுத்திவிட்டு, '.... இருந்தா நல்லா இருக்கும்னு தானே சொல்றேன்' என முகத்தைத் திருப்பிக் கொண்டு சொல்வது தூள்!
பெருமாள் சிலையைப் பந்தாடியிருப்பது ஒருசிலருக்கு உவப்பாயிருக்கலாம்.
தவிர்த்திருக்கலாம். ஆனால், அது அவரது கொள்கை வெளிப்பாடு என்பதால் கண்டுக்காம விட்டுறலாம். புஷ் பாத்திரத்தைக் கோமாளியாகச் சித்தரிப்பதும் அவ்வகைப் பட்டதே!
தனக்காகப் படம் எடுக்கட்டும் கமல்! அது அவரது உரிமை! அதற்காக நம்மையெல்லாம் இப்படி கஷ்டப்படுத்த வேண்டாம் என ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுக்கிறேன்.
அவர் மீது எனக்கிருக்கும் நல்லெண்ணத்தினால், கைப்பணத்தை இப்படிக் கரியாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.
அவரிடம் இருக்கும் திறமைக்கு, அவர் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்.
நல்ல கதையம்சம் உள்ளஒரு எளிமையான படம்!
சொன்னாலும் சொல்லலைன்னாலும் இதுதான் அவரது தீவிர ரசிகர்கள் அவரிடமிருந்து விரும்புவது.
இடைவேளைக்குப் பின் தியேட்டரில் இருந்த நிசப்தம் இதைத்தான் சொல்லியது.
வெளியே வரும்போது ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை!
68 பின்னூட்டங்கள்:
test
விமர்சனம் சூப்பருங்கோ!
முதுகில வளையத்தை சொருகி தொங்கவிட்டு சிலையுடனே எடுத்து சென்று கடலில் விடும் காட்சி மொத 15 நிமிசம் புல்லரிச்சது!.
கடைசிவரைக்கும் அந்த 'டெம்போ'ல படம் போகலை :(
செங்கல்பட்டு தாண்டி இருக்கும் மக்களைப் பற்றி இவர் கவலைப் படவே இல்லையோ எனத் தோன்றுகிறது.
இதையே தான் என் மனைவியும் சொன்னார்.
சந்தான பாரதியோட நல்ல வாய்ப்பை !?!? (எல்லாம் படம் பாத்து தெரிஞ்சிக்கங்கப்பா) ஒரு ட்ராமா கும்பல் வந்து கெடுத்து சின்னாபின்னமாக்கீடுது.
நம்ம எல்லாருக்கும் ஒரே சோகமா போயிடுது
:)))))))))
பெருமாள் பெருமாள்-னு ராமாயணம் பாடறப்பல்லாம் மகராசி மல்லிகா செராவத் இவளை (அசினை) போட்டுத்தள்ளாம போய் சேந்துட்டாளேன்னு எரிச்சலோ எரிச்சல்
:((
பெருமாள் பெருமாள்னு அக்ரஹாரத்து அசின் மாமி கூடவே வந்திருவான்னா சயிண்டிஸ்ட் கோவிந்தராஜன்கூடவும் அந்த அமெரிக்க வில்லன் பேரு என்ன ப்ளட்சரோ என்னமோ அவன்கூட சண்டை போட்டு நானே கடத்திகிட்டு வந்திருக்கலாம்.
:)))
படம் முதல் 15 நிமிடங்கள் சூப்பர்.
////செங்கல்பட்டு தாண்டி இருக்கும் மக்களைப் பற்றி இவர் கவலைப் படவே இல்லையோ எனத் தோன்றுகிறது.////
செங்கல்பட்டு தாண்டி என்று இல்லை, சென்னையிலேயே நமது
மன்னாரு போன்ற எண்ணற்ற மக்கள் இருக்கிறார்களே - நீங்கள் சொல்வதுபோல கமல் இவர்களுக்காக ஒரு எளிமையான - நல்ல கதையம்சத்துடன் கூடிய படம் எடுத்துச் சாதனை புரிந்தால் நல்லது!
படம் பார்க்கும் ஆவலில் உங்கள் கதை படிக்கவில்லை,கடைசி வரிகளை மட்டுமே படித்தேன். முடிவாக என்ன கூறுகிறீர்கள்? கொஞ்சம் தெளிவாக கூறுங்கள் படம் எப்படி இருக்கிறது?
நிறையா மேட்டர் நான் சொல்ல வெச்சிருந்தது. நீங்க சொல்லிட்டீங்க. போகட்டும். அடுத்த படம் நல்ல காமெடிப் படமா தந்தா இதை மன்னிச்சு விட்டுடலாம்.
ஒவ்வொண்ணா தனித்தனியா சொல்லியிருக்கீங்க திரு.மங்களூர் சிவா !
ரவிக்குமாரா, கமலா?
அசினின் கதாபாத்திரத்தின் சொதப்பலுக்கு?
நிஜமாவே கோபம் வந்தது திரு.குமார்.
தன்னை வளர்த்த ரசிகர்களை நினைக்கணும் இவரு.
நீங்க சொல்ல்றதும் கூடச் சரிதான் ஆசானே!
இவரால் முடியக்கூடியதுதான் இது.
செய்வார் என நம்புவோம்.
கொடுப்பார்னு நம்புவோம் கொத்ஸ்!
rasanai vedum iya vendum
rasanai vendum iya vendum
kurai ondrum illai govinda
மிகவும் ஏமாற்றமளிக்கும் பார்வை.
//ஹாலிவுட் தரத்துக்கு படம் எடுப்பது என்றால், அவர்களைக் காப்பி அடிப்பதல்ல. நம்மவர் கதையை அந்தத் தொழில்நுட்பத் தரத்தில் சொல்லுவது என்பதைக் கமலும் கூட உணர்ந்துகொள்ளாதது நம் துரதிர்ஷ்டமே!//
chaos theory முன்வைத்து கட்டமைக்கப்பட்ட நல்லதொரு கதை. விறுவிறுப்பான திரைக்கதை. இன்னமும் இந்த காப்பி ஜல்லியை எத்தனை நாளுக்குதான் சொல்லிக் கொண்டிருப்போமோ?
//நவராத்திரியில் நடிகர் திலகம் நடித்ததற்கும், தசாவதாரத்தில் கமலின் பத்து வேடங்களுக்கும் நிறையவே வேறுபாடு உண்டு.//
நவராத்திரி புதுமையான கதைதான். ஆனால் இப்பொழுது அதைப் பார்த்தால், நாகையா, ரங்காராவ், அசோகன் போன்றோரை விட சிவாஜி என்ன பெரிதாக செய்து விட்டார் என்று தோணலாம். தோணாவிட்டாலும் பரவாயில்லை.
//அசினின் பாத்திரம் வீணடிக்கபட்டிருக்கிறது//
பல இடங்களில் நகைச்சுவை அள்ளிக் கொண்டு போகிறது. கூர்ந்து பார்த்தீர்களானால் அவர்தான் பண்ணிரண்டாம் நூற்றாண்டுக்கும் இருபதோராம் நூற்றாண்டுக்கும் இருக்கும் லிங்க்.
//ஏத்திவிட்டு, ஏத்திவிட்டு, வரிசையா ஊத்திகிட்ட கமல் படங்களைப் பார்த்து ஏமாந்து போனதால,//
சரி விடுங்கள். முன் முடிவுகளோடு படங்களைப் பார்க்கும் பொழுது இதுதான் பிரச்சினை. எங்கோ படித்த நினைவு. 'நீங்கள் அசைவமாக இருப்பதில் பிரச்சினையில்லை. ஆனால் எலும்பு மாலையோடு திரியாதீர்கள்' :-)
குணா,குருதிப்புனல்,வேட்டையாடு விளையாடு னு ஆரம்பிச்சு இப்பெல்லாம் கமல் படங்கள் பல நேரம் B & C ஏரியாவுக்குப் புரியாத புதிராகவே போயிட்டிருக்கு.
கூர்ந்து கவனித்தால் மட்டுமே[ஆங்கில கலப்பு] வசனங்கள் புரியக்கூடிய நிலைமை.[அவ்வை சண்முகி தப்பிச்சிடுச்சி.]
மீண்டும் ஒரு உன்னால் முடியும் தம்பி போல் கமலால் முடியுமா எளிமையாக நடிக்க?
மூளை இருக்கற்வங்களுக்கு தான் படம் புடிக்கும்னு யாரோ விமர்சனம் எழுதி இருந்தாங்க
//rasanai vedum iya vendum//
அதேதாங்க நான் சொல்றதும்!
கமல் சார் கிட்ட அது குறைஞ்சு போச்சுன்னு சொன்னதுக்கு நன்றி.
//மூளை இருக்கற்வங்களுக்கு தான் படம் புடிக்கும்னு யாரோ விமர்சனம் எழுதி இருந்தாங்க//
ஆஹா! இதோ... செங்கல்பட்டுக்கு இந்தப் பக்கத்துலேர்ந்து ஒரு அனானி ஆஜர்!
/
Anonymous said...
மூளை இருக்கற்வங்களுக்கு தான் படம் புடிக்கும்னு யாரோ விமர்சனம் எழுதி இருந்தாங்க
/
படம் பிடிக்க, மூளை எங்க இருக்கணும் முதுகுலயா???
///ஆஹா! இதோ... செங்கல்பட்டுக்கு இந்தப் பக்கத்துலேர்ந்து ஒரு அனானி ஆஜர்!///
ஆமா இவரு மட்டும் செங்கல்பட்டுக்கு அந்த பக்கம் இருக்காரு.
பட்டி தொட்டியெல்லாம் ஹிட்டான படத்துக்கு இவரு ஒரு வயித்தெரிச்சல் விமர்சனம் எழுதினா அதை எல்லா பயலும் ஒத்துக்கிட்டு போயிடணுமா? கமல் பார்ப்பனீயத்துக்கு அடிவருடிகிட்டு இருந்தா இதே வீஎஸ்கே ஆஹா ஓஹோன்னு எழுதியிருப்பாரு. ரஜினி பார்ப்பன அடிவருடியா மாறிட்டதாலே ரஜினியோட குப்பை படம்னா கூட பார்ப்பனர்களுக்கு பாயாசமா இனிக்குது. கமலோட சிறந்த படம்னா கூட சிரப்பு மாதிரி கசக்குது. என்ன ஜென்மங்களோ இதுகள்?
தமிழ்செல்வன்
//அதற்காக நம்மையெல்லாம் இப்படி கஷ்டப்படுத்த வேண்டாம் என ஒரு தாழ்மையான வேண்டுகோளை விடுக்கிறேன்.//
//செங்கல்பட்டு தாண்டி இருக்கும் மக்களைப் பற்றி இவர் கவலைப் படவே இல்லையோ எனத் தோன்றுகிறது.//
//தன்னை வளர்த்த ரசிகர்களை நினைக்கணும் இவரு//
அடேங்கப்பா! புல்லரிக்குது!
வரிக்கு வரி செம்மையாக எழுதப்பட்ட விமர்ச்சனம் ... நானும் இதை தான் நினைத்தேன்.. நானும் கூட ஒரு விமர்ச்சனம் போட்டேன் http://manvettiyan.blogspot.com/2008/06/2.html
படித்தேன் களப்பிரர் ஐயா!
வருத்தமாகத்தான் இருந்தது இதை எழுதும்போது.
நன்றி.
ஒப்பனை தவிர மற்ற தொழில்நுட்பங்களில் படம் சிறப்பாக வந்திருக்கிறது. பொழுதுபோக்கும் படமும் கூட. இசைதான் இசைவாக இல்லை. நானும் எதிர்பார்ப்பில்லாமல்தான் சென்றேன். படம் ஒருமுறை பார்த்தாயிற்று. இன்னொரு முறை கண்டிப்பாக பார்ப்பேன். ஆனால் இங்கு இரண்டு மூன்று நாட்கள்தான் படம் ஓடும்.
ஆளவந்தான் வரிசையில் இதை சேர்க்க முடியாது.. நம்பர் ஒன் அதற்க்கு தான்.. நம்பர் டூ இந்த படத்தை இல்லாத தகுதி வேறு எதற்க்கு..
படத்துல சூப்பர் சீன் எது வென்றால் அந்த பூச்சி பாமை விலைக்கு வாங்க நினைத்த ஆளு எதுக்கு சென்னைக்கு வராரு ஏன் வரணும் எதுக்கு அரஸ்ட் ஆகனும்??
படத்தை இப்ப கூட காப்பதலாம்..
1. சிங்கு
2. புழ்
3. நெட்டை மனிதன்
4.ஜப்பான்
வேடங்களை தூக்கி கடாசி விட்டு அந்த அமெரிக்கா முனனாள் ஏஜண்ட் காரெக்டரில் சத்யராஜை நடிக்கவைத்து எடுத்தால் படம் தேறும்..
//ஒப்பனை தவிர மற்ற தொழில்நுட்பங்களில் படம் சிறப்பாக வந்திருக்கிறது. பொழுதுபோக்கும் படமும் கூட. இசைதான் இசைவாக இல்லை. நானும் எதிர்பார்ப்பில்லாமல்தான் சென்றேன். படம் ஒருமுறை பார்த்தாயிற்று. இன்னொரு முறை கண்டிப்பாக பார்ப்பேன். ஆனால் இங்கு இரண்டு மூன்று நாட்கள்தான் படம் ஓடும்.//
ஒப்பனைதாங்க படத்தையே ரசிக்க விடாம பண்ணினது, ஜி.ரா..
பாருங்க!
விதி யாரை விட்டது!:))
ஆளவந்தானுக்கு இது எவ்வளவோ தேவலை, அனானி..
அதேதாங்க அனானி.
சத்யராஜ், நாஸர், ப்ரகாஷ்ராஜ், லக்ஷ்மி, போல பல திறமையான நடிகர்களை வைச்சு, இதே தொழில் நுட்பத்துடன் தயாரிச்சிருந்தா, இது செம ஹிட்டாயிருக்கும்!
பத்து அவதாரத்துக்கான கதை இல்லை இது.
excellent !!!!!!!!
:) இன்னும் பதிவை படிக்கல...படம் பார்கல...சாயங்காலம் தான் படிப்பேன்.
படம் பார்க்க வேணாம்னு சொன்னதுக்கு நன்றி அண்ணா! :)
அட!!!!!! நம்ம செந்தழலார்!!!
ரொம்ப நாளாச்சுங்க நீங்க வந்து!
கருத்துக்கு நன்றிங்க!
பார்க்க வேணாம்னு சொல்லலை கவிநயா!
ரொம்பவே உழைச்சிருக்காரு கமல்.
அதுக்காகவே ஒரு தடவை பார்த்திருங்க......டிவிடியிலாவது!!! :))
படிங்க! முடிஞ்சாப் பாருங்க!கோவியாரே!:)
குறிஞ்சியில்(ஊட்டியில்)'மூன்றாம்பிறை'கண்டு
முல்லை நிலத்தில் 'வேட்டையாடி விளையாடி'
'மருத(நாயக)மாய்' vial சார்ந்த 'தசாவதாரம்'
எடுத்தவன்,நெய்தலில்'கடல்மீன்கள்'பிடித்தவன்
பாலையில்,பெய்த மழையாய் உலக நாயகன்
உழைப்பும்,ஆவியான கதை VSK விமர்சனம்!
ஆத்திகத்துக்கு வழிகாட்டிய ஆசானுக்கு நன்றி..
குறிஞ்சி,முல்லை, மருதம் நெய்தல், பாலை என ஐவகை நிலமும் கண்டவன், இன்று ஆவியான கதையிங்கு நன்றுரைத்தீர் பாலா!
என்ன சொல்வது?
மீண்டும் குறிஞ்சி வரும்!
நம்பிக்கைதானே வாழ்க்கை!
v-விமர்சனம்
s-சமன்செய்து
k-கொடுத்துள்ளீர்கள்
பாரட்டுக்கள்
நன்றி, திரு. அனானி!
இத்தனையையும் தாண்டி அசல் தேறினால் அதற்காக மகிழ்பவர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.
நல்ல கலைஞன் இவர்!
//இத்தனையையும் தாண்டி அசல் தேறினால் அதற்காக மகிழ்பவர்களில் நானும் ஒருவனாய் இருப்பேன் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.
நல்ல கலைஞன் இவர்//
திரைஅரங்கு எல்லாம் திருவிழாக் கூட்டம்.
திரும்பிய இடமெல்லாம் கமலின் ரசிகர்கள்.
வியாபர ரீதியாக வெற்றி பெறும் வாய்பு உள்ளதாக ஊடங்களில் வரும் செய்தி வருகிறது.
நல்ல கலைஞர்கள் தோற்கக் கூடாது
இதெல்லாம் முதல் வாரக் கூத்து!
செங்கல்பட்டைத் தாண்டி நிலவரம் வரட்டும்!
அய்யா பெரியவுகளே! செங்கல்பட்டு தாண்டி ரிசல்ட் பாத்தீகளா? உம்ம நிலையை நெனைச்சாத்தான் பாவமா இருக்கு. படம் பட்டையை கெளப்புதும், ஒய்!
நல்ல விரிவான விமர்சனம்!
//மீண்டும் ஒரு உன்னால் முடியும் தம்பி போல் கமலால் முடியுமா எளிமையாக நடிக்க?//
கண்மணி டீச்சர் சொன்ன
இதனை நானும் வழிமொழிகிறேன்!
படத்துல பொழுது போக்கு அம்சங்களுக்கு குறையொன்றும் வைத்திருக்க மாட்டார் என்று தோன்றுகிறது!
படம் பார்த்துட்டு வந்து சொல்றேன்!
இந்தப் படம் இப்போது மக்களால் நல்ல முறையில் தீர்ப்பளிக்கப்பட்டு, காட்சிகள் ஈயோடுவதாக செய்திகள் வருவதால், பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதை நண்பர்கள் பொறுத்தருளுமாறு பணிவோடு வேண்டிக் கொள்கிறேன்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!!
எனக்கு வயத்தெரிச்ச்சல் எல்லாம் ஒன்றுமில்லை.
ஒரு நண்பர் சொன்னதுபோல முன் முடிவோடும் இதை அணுகவில்லை.
கமல் இதில் அசல் பார்க்க வேண்டும்.... அடுத்த படம் எடுக்க!
[அவர் அதைப் பார்த்துவிட்டார்! ஒரே நாளில் 48 காட்சிகள் வீதம் முதல் வாரத்தில் நடத்தி,..... மக்கள் கவனம் மாறுவதற்கு முன்னரே! வெளிநாடுகளுக்கு அதிக விலைக்கு விற்று!]
லாபம் கூடாது.... திமிர் ஏறி இது போன்ற படங்அள் பண்ண!
இதுவே என் ஆசை.
அவர் ஒரு மாபெரும் கலைஞர்.
நான் மதிக்கும் கலைஞர்.
நல்ல, எளிமையான படங்கள் அவர் இன்னமும் கொடுக்க வேண்டும்!
மனசாட்சி உள்ள எவரும் இதை ஒப்புக் கொள்வார்கள்.
நன்றி.
//காட்சிகள் ஈயோடுவதாக செய்திகள் வருவதால்//
:))))))))))))))))))
ஜூன் 15-க்குப் பிறகு இதன் வசூல் பற்றிய செய்திகளை இன்னமும் [25] வெளியிடாததின் மர்மம் என்னவெனச் சொல்லுங்களேன் ஜோ!
இன்னுமா பார்க்கலை சிபியாரே!
ஒருதரம் பார்த்திருங்க!
அசல் தேறட்டும்!
அடுத்த படம் நல்லா வரப் பிரார்த்திப்போம்!
பார்வைகள், பயணங்கள்,பாதைகள்னு பொதிகை சானலில் ஒரு பாட்டு வரும்.
அது போல இதுவும் பரி ..... சோதனை:(
போட்ட பணத்தையாவது எடுப்பாரா.:)
//ஜூன் 15-க்குப் பிறகு இதன் வசூல் பற்றிய செய்திகளை இன்னமும் [25] வெளியிடாததின் மர்மம் என்னவெனச் சொல்லுங்களேன் ஜோ!//
VSK,
ஒரேயடியாக உங்கள் வயித்தெரிச்சலை கொட்டிக்க விரும்பவில்லையென்பதில் கொஞ்சமாக தருகிறேன் ..மேலும் தேவையென்றால் கேட்டு வாங்கவும்
http://tamil.galatta.com/entertainment/livewire/id/Dasavathaaram_ruling_the_box_office_16398.html
http://www.behindwoods.com/tamil-movies-slide-shows/movie-2/top-ten-movies/tamil-cinema-topten-movie-dasavatharam.html
http://www.boxofficemojo.com/intl/malaysia/?yr=2008&wk=25&p=.htm
//போட்ட பணத்தையாவது எடுப்பாரா.:)//
எடுக்கட்டும்!
எடுக்கணும் வல்லியம்மா!
இந்தக் கலைஞன் தோற்கக் கூடாது.
அதே சமயம் ஆணவம் கொள்ளவும் கூடாது!
VSK ஐயா!
என்னோட முந்தைய பின்னூட்டத்தை பதுக்கிட்டீங்களா ? :)))))))))))))))))))))))))))))
VSK ஐயா,
http://www.boxofficemojo.com/intl/weekend/?yr=2008&wk=25&p=.htm
Overseas collection for dasavatharam nearing Rs 50 Crores.
இனி மேலாவது செங்கல்பட்டு ,சாந்து பொட்டுண்ணு உளறாமல் இருக்கவும்.
தமிழ்நாட்டுக்கும், வெளிநாட்டுக்கும் வேறுபாடு தெரியாதவர்களை வைச்சுகிட்டு மாரடிச்சா இப்படித்தான் ஆகும் நண்பரே!
இந்தப் படத்தின் வெற்றி, வசூல் எல்லம் நீங்களே வைச்சுக்கோங்க! படம் சொதப்பல் என்பது கமலின் "டீவிர" ரசிகர்களைத் தவைர மற்ற அனைவரின் ஒட்டுமொத்த தீர்ப்பு.
இதுக்கெல்லாம் போயி ரென்சனாவாதீங்க.
இந்த சுட்டிங்களை எல்லாம் நீங்களே படிச்சுப் பெருமைப் பட்டுக்கங்க!
இந்த, நீங்க சொன்ன 50 கோடி கமலுக்கா?
அவர் எவ்வளவுக்கு இதை வித்தார்னு தெரியுமா உங்களுக்கு.
சரி விடுங்க.
அட இன்னுமா நீங்க அடங்கலை!!
இலவசக்கொத்தனார் said...
அட இன்னுமா நீங்க அடங்கலை!!//
இது சதாவதாரம் போல. அதான் இன்னும் அடங்கல்லை!!!
:)))))))))))
VSK,
படம் உமக்கு பிடிக்கல்லின்னா பிடிக்கல்லன்னு சொல்லிட்டு போங்க ..அதை விட்டு செங்கல்பட்டுக்கு அந்த பக்கம் ஓடாது..பாவம் தயாரிப்பாளர்..அப்படி இப்படினெல்லாம் என்னதுக்கு பினாத்தாதேயும்..அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி எதுக்கு உமக்கு ?
இப்போ உண்மை சொன்னா உனக்கு எரியுதா ? இனிமேலாவது பொத்திகிட்டி இரூம் ..இல்லைன்னா ஜெலுசில் வாங்கி சாப்பிடவும்.
//இந்தப் படத்தின் வெற்றி, வசூல் எல்லம் நீங்களே வைச்சுக்கோங்க! படம் சொதப்பல் என்பது கமலின் "டீவிர" ரசிகர்களைத் தவைர மற்ற அனைவரின் ஒட்டுமொத்த தீர்ப்பு.//
கமலின் தீவிர ரசிகர்களுக்கு மட்டும் பிடிச்ச படம் எல்லா வசூல் சாதனையும் முறியடிக்குதுண்ணா ...மூளைய கொஞ்சம் உபயோகப்படுத்தவும் .
அட சை!
//VSK,
படம் உமக்கு பிடிக்கல்லின்னா பிடிக்கல்லன்னு சொல்லிட்டு போங்க ..அதை விட்டு செங்கல்பட்டுக்கு அந்த பக்கம் ஓடாது..பாவம் தயாரிப்பாளர்..அப்படி இப்படினெல்லாம் என்னதுக்கு பினாத்தாதேயும்..அப்பட்டமான காழ்ப்புணர்ச்சி எதுக்கு உமக்கு ?
இப்போ உண்மை சொன்னா உனக்கு எரியுதா ? இனிமேலாவது பொத்திகிட்டி இரூம் ..இல்லைன்னா ஜெலுசில் வாங்கி சாப்பிடவும்.//
இதில் நீர் சொன்ன எதுவும் நான் சொன்னதில்லா.
செங்கல்பட்டுக்கு அந்தப்பக்கம் இருக்கும் மக்களை இவர் நினைக்கவே இல்லையா என மட்டுமே கேட்டேன்.
மற்றதெல்லாம் உம் கற்பனை!
ஜெலுசில் உமக்குத்தான் வேண்டும் ஜோ!
இந்தப் படத்தில் அசலாவது கமலுக்குத் தேற வேண்டும்... ஏனென்றால் அவர் ஒரு உண்மையான கலைஞனென்றே நான் சொல்லி இருக்கிறேன்.
சும்மா வயத்தெரிச்சல் படாதீங்க ஜோ!
விமரிசனங்களை எல்லாம் படிங்க சாமி!
:)))))))))))))))))
//...மூளைய கொஞ்சம் உபயோகப்படுத்தவும் .
அட சை!
//
ஒரு தீவிரவெறி எப்படி எல்லாம் பேச வைக்கும் என்பதற்கு இப்படி ஒரு முன்னுதாரணமா இருக்கீங்களே !ஜோ!
அட சை!
அமக்களமான விமர்சனத்துக்கு, அமக்களமான பின்னூட்டங்கள்.
சில தீவிரரசிகர்களின் தொல்லை தாங்கல :)
இவங்களாலதான் நம்மவர் இன்னும் ஆகாசத்துலயே படம் புடிக்கறாரு.
//சில தீவிரரசிகர்களின் தொல்லை தாங்கல :)
இவங்களாலதான் நம்மவர் இன்னும் ஆகாசத்துலயே படம் புடிக்கறாரு.//
என்னத்தைச் சொல்றது!
ஆக மொத்தம் 'ஜோ'ரா இருக்கு!@
aiya saami VSK..umaku ennachu? en kamal film hittunna eriyuthu? please check the success of Dasavatharam.. international hit..
it has collected more than wat Sivaji collected in a whole month..
onnum theriyatha vengaayama irukatheer.. thanippatta vishayangalai bloggil puhutthatheer..
muhatthil umakku kari...
இன்னைக்குத்தான் படம் பார்த்தேன்.
ஹூம்.............
அசினுக்கு ஏற்கெனவே அழுமூஞ்சி முகம். இதுலே ஆரம்பக் காட்சிகளில் 'சொல்லிடுங்கோ'ன்னு கதறும்(??) போது எரிச்சலா இருந்துச்சு.
புன்னகை மன்னன் வந்துருக்கு. அதை பார்த்து மனசைத் தேத்திக்கப்போறென்.
இதைச் சொன்னதுக்குத்தான் அல்லாரும் திட்றாங்க!
வாங்க நாம புன்னகை மன்னன் பார்ப்போம் டீச்சர்!:))
Post a Comment