Saturday, June 28, 2008

"இதுதாண்டா தமிழ்நாடு-2"

"இதுதாண்டா தமிழ்நாடு-2"

இந்தப் பதிவைப் போடுவேன் எனக் கனவிலும் நான் எண்ணவில்லை.

எல்லாம் சரியாகப் பதித்து விட்டேன் என நான் நினைத்து அந்தப் பதிவைப் பதிந்தேன்.

இன்று மீண்டும் அது என் பார்வையில் வந்தது.

நான் சொல்ல மறந்த ஒன்று என் பார்வையில் பதிந்தது.

15 இடம்தான் என் கல்லூரியில் எனச் சொல்லிய அந்த முதல்வரைப் பார்த்து, அன்றைய தமிழக ஆளும் முதல்வர் கேட்ட ஒரு செய்தியை அதில் பதிய விட்டுவிட்டேன்!

'உங்க வீட்டுல 15 பேருக்குத்தான் சாப்பாடு சமைச்சிருக்கீங்க! ஆனா, ஒரு 20 பேரு சாப்பிட வந்திட்டாங்க! சாப்பாடு இல்லை! போடான்னு அவங்களைத் திருப்பி அனுப்பிடுவீங்களா?' என்றாராம் காமராசர்!

கல்லூரி முதல்வர் திகைத்தார்!

'அவங்களுக்கு எப்படி நாம பசியாத்தலாம்னு நினைக்கணும். அதான் நம்ம பண்பு' எனச் சொல்லி, கல்வியமைச்சரைக் கலந்து ஆலோசித்து, அதன் பின்னே மாலை நேரக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்ததாகச் செய்தி.

இதைத் தொடர்ந்து இன்னொரு நிகழ்வை நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயமான தமிழ்மணப் பதிவர், தமிழ்க்கடல் திரு. நெல்லை கண்ணன் அவர்கள் சொன்னார்கள்.

விளாத்திகுளம் எம்.எல்.ஏ.வின் மகன் மருத்துவ சீட் கிடைக்க விண்ணப்பிக்கிறான்.

கூடவே, தேசபக்தரும் தமிழக முதல்வரின் நண்பருமான, தன் தாத்தாவைப் போய் கேட்கிறான் பேரன்.

தாத்தாவும் பாசத்தின் காரணமாய்ப் பேரனைக் கூட்டிக் கொண்டு காமராசரைப் பார்க்கப் போகிறார்.

ஒரு அரை மணி நேரம் பேசிய பின், ரெட்டியார் கிளம்புகிறார்.

காமராசர் சிரித்தபடியே, 'என்ன ரெட்டியார், வந்த விஷயத்தைப் பேசாமலியே கிளம்பறீங்க போல!' என்கிறார்.

'அடக்களுதை! அதென்னங்க பெரிய விஷயம்! எம்பேரனுக்கு மெடிக்கல் சீட் வாங்கறதுக்காகவா நாம சுதந்திரப் போராட்டம் பண்ணினோம். திறமை இருந்தா அவனுக்குக் கிடைக்கப் போகுது. நான் வரட்டுமா' என விடை பெற்றார்.

அப்படி இருந்ததாம் அந்தக் காலத்தில்.!!!

22 பின்னூட்டங்கள்:

SP.VR. SUBBIAH Sunday, June 29, 2008 12:36:00 AM  

என்ன இதயமடா சாமி!
இந்த மாதிரி ஒரு மனிதனையாவது இன்று காணமுடியுமா?

கோவி.கண்ணன் Sunday, June 29, 2008 12:37:00 AM  

//'அவங்களுக்கு எப்படி நாம பசியாத்தலாம்னு நினைக்கணும். அதான் நம்ம பண்பு' //

'தகுதி' அடிப்படையில் தான் இடம் கொடுக்க வேண்டும் என்று பினாத்தும் ஜன்மங்களுக்கு சரியான செருப்படி. இதுபோன்றவற்றை அடிக்கடி எழுதுங்கள் !

SP.VR. SUBBIAH Sunday, June 29, 2008 12:39:00 AM  

/////'அடக்களுதை! அதென்னங்க பெரிய விஷயம்!
எம்பேரனுக்கு மெடிக்கல் சீட் வாங்கறதுக்காகவா
நாம சுதந்திரப் போராட்டம் பண்ணினோம்.
திறமை இருந்தா அவனுக்குக் கிடைக்கப் போகுது.
நான் வரட்டுமா' என விடை பெற்றார்.////

என்ன இதயமடா சாமி!
இந்த மாதிரி ஒரு மனிதனையாவது
இன்று காணமுடியுமா?

VSK Sunday, June 29, 2008 12:54:00 AM  

//இந்த மாதிரி ஒரு மனிதனையாவது இன்று காணமுடியுமா?//

தேடுகிறேன் ஐயா!

VSK Sunday, June 29, 2008 12:56:00 AM  

//இதுபோன்றவற்றை அடிக்கடி எழுதுங்கள் !//

கண்ணில் படும்போது கண்டிப்பாய் எழுதுவேன் கோவியாரே!

"மேல" பார்த்தீங்கள்ல்ல!:))

VSK Sunday, June 29, 2008 1:01:00 AM  

///நான் வரட்டுமா' என விடை பெற்றார்.////

என்ன இதயமடா சாமி!
இந்த மாதிரி ஒரு மனிதனையாவது
இன்று காணமுடியுமா?///

எழுதும் போது வராத நெகிழ்ச்சி நீங்கள் எடுத்துக் காட்டிய போது வந்தது ஆசானே!

கோவி.கண்ணன் Sunday, June 29, 2008 1:08:00 AM  

//SP.VR. SUBBIAH said...
என்ன இதயமடா சாமி!
இந்த மாதிரி ஒரு மனிதனையாவது இன்று காணமுடியுமா?
//

வேற ஒண்ணும் இல்லை. கலி முத்திவிட்டது. தெய்வபக்தி குறைந்து போனதால் நல்ல மனிதர்களே உருவாகுவதில்லை. :)

குடும்பமும் குடும்பம்/ சாதி பற்றும் இல்லை என்றால் எந்த அரசியல் வாதியும் நல்லவனாக இருப்பான். புரட்சித்தலைவி அப்படி இருப்பார் என்று நினைத்துதான் தமிழக மக்களில் 50 விழுக்காட்டினர் ஏமாந்து போனார்கள்.

கோவி.கண்ணன் Sunday, June 29, 2008 1:10:00 AM  

//VSK said...
//இந்த மாதிரி ஒரு மனிதனையாவது இன்று காணமுடியுமா?//

தேடுகிறேன் ஐயா!
//

நல்லா தேடுங்க...'இதோ எந்தன் தெய்வம் முன்னாலே' என்று யாராவது எதிரிலே கூட நிற்பார்கள்.

உங்க ஊரில் கூடவா அதுபோன்ற அரசியல் வாதிகள் இல்லை ?

கோவி.கண்ணன் Sunday, June 29, 2008 1:11:00 AM  

// VSK said...


கண்ணில் படும்போது கண்டிப்பாய் எழுதுவேன் கோவியாரே!

"மேல" பார்த்தீங்கள்ல்ல!:))
//

ஐயா,

காமராஜர் மீண்டும் பிறந்து வந்து தமிழ்நாட்டை ஆளனும், நம்ம பாரதியார் பிறந்து வந்து தமிழக அரசுகவிஞராக ஆகவேண்டும். எனக்கும் ஆசைதான். இதெல்லாம் நடக்குமா ?

கோவி.கண்ணன் Sunday, June 29, 2008 1:18:00 AM  

//'அடக்களுதை! அதென்னங்க பெரிய விஷயம்! எம்பேரனுக்கு மெடிக்கல் சீட் வாங்கறதுக்காகவா நாம சுதந்திரப் போராட்டம் பண்ணினோம். திறமை இருந்தா அவனுக்குக் கிடைக்கப் போகுது. நான் வரட்டுமா' என விடை பெற்றார்.//

ஆக நெகிழ்ச்சியான விடயம்.

நம்ம வாத்தியார் ஐயா கூட அந்த காலத்தில் தகுதியும் / திறமையும் உள்ளவர்களுக்கு படிப்பதற்கு "கோட்டா தொந்தரவு இல்லை" என்று எவ்வளவு நகைச்சுவை கதையாக எழுதி இருக்கிறார் பாருங்கள்.

VSK Sunday, June 29, 2008 1:36:00 AM  

//புரட்சித்தலைவி அப்படி இருப்பார் என்று நினைத்துதான் தமிழக மக்களில் 50 விழுக்காட்டினர் ஏமாந்து போனார்கள்.//

கலைஞருக்கு ஒரு ரெண்டுன்னா, ஜெக்கு ஒரு பெண்டு!
என்ன பண்றது!

VSK Sunday, June 29, 2008 1:37:00 AM  

//உங்க ஊரில் கூடவா அதுபோன்ற அரசியல் வாதிகள் இல்லை ?//

ஹைய்யோ ஹைய்யோ கோவியாரே!
நாம பேசறது தமிழ்நாட்டைப் பத்தின்னு தலைப்பைப் பார்த்த பின்னுமா புரியலை!
:)))

VSK Sunday, June 29, 2008 1:38:00 AM  

//இதெல்லாம் நடக்குமா ?//

நம்புங்க சாமி! நிச்சயம் நடக்கும்!

VSK Sunday, June 29, 2008 1:40:00 AM  

//நம்ம வாத்தியார் ஐயா கூட அந்த காலத்தில் தகுதியும் / திறமையும் உள்ளவர்களுக்கு படிப்பதற்கு "கோட்டா தொந்தரவு இல்லை" என்று எவ்வளவு நகைச்சுவை கதையாக எழுதி இருக்கிறார் பாருங்கள்.//

ரொம்ப நல்லாவே எழுதியிருக்காரு இல்லை!
நன்றி கோவியாரே.. அதை இங்கே தொடுத்ததுக்கு!

Anonymous,  Sunday, June 29, 2008 2:27:00 AM  

விக்ரமாதித்தன் அமர்ந்த சிம்மாசனத்தில் போஜ ராஜன் உட்கார முயன்றபோது அந்த ஆசனத்தில் இருந்த 32 பதுமைகளும் விக்ரமாதித்தனின் சாதனைகளை சொல்லி "இப்பேர்ப்பட்ட சாதனைகளை செய்த விக்ரமாதித்த மன்னன் அமர்ந்த நாற்காலியில் அமர உனக்கு அருகதை இருக்கிறதா?" என்று போஜராஜனை கேட்குமாம்.தலைகுனிந்துகொண்டு போஜராஜன் திரும்பிப் போவானாம்.

அந்த மாதிரி தமிழ்நாட்டில் முதல்வராக பதவியேற்கும் ஒவ்வொருவரிடம் "இது காமராஜர் உட்கார்ந்த நாற்காலி.அவர் இப்படி எல்லாம் ஆட்சி செய்திருக்கிறார்.அந்த நாற்காலியின் ஓரத்திலாவது உட்கார உனக்கு கொஞ்சமாவது அருகதை இருக்கிறதா?" என்று கேட்க வேண்டும்.

பெரிய மனிதர்கள் அமர்ந்த நாற்காலிகளில் சிறிய மனிதர்கள் அமர நேர்ந்ததுதானே தமிழ்நாட்டின் தலைவிதி?

Subbiah Veerappan Sunday, June 29, 2008 3:15:00 AM  

////எழுதும் போது வராத நெகிழ்ச்சி நீங்கள் எடுத்துக் காட்டிய போது வந்தது ஆசானே!///

படிக்கும்போதே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதால் ‍ அதுவும் எ‍ந்த‌ அளவிற்கு ‍ ‍ என்ன இதயமடா சாமி! என்று நம் மனசு சொல்லும் அளவிற்கு!

அதனால்தான் அதைக் குறிப்பிட்டேன் வி.எஸ்.கே சார்!

King... Sunday, June 29, 2008 3:38:00 PM  

நல்ல விசயம்..
ஆனா தலைப்புதான் இந்தக்காலம்போல இருக்கு...

Thamizhan Sunday, June 29, 2008 9:53:00 PM  

ஒரு பையன் வந்து எனக்கு இடந்தர
மாட்டேன் என்கிறார்கள் என்று குறை சொல்கிறார்.
ஏன்? என்று கேட்கிறார்.
நான் பார்ப்பனப் பையன் என்பதால்!

உடனே மேலாளரைக் கூப்பிட்டுக் கேட்டு விட்டு,அவர்களுக்கு மூன்று விழுக்காடு கொடுத்து விடுங்கள் என்கிறார்,பெரியார்.

VSK Sunday, June 29, 2008 10:09:00 PM  

நல்லதொரு நிகழ்வு சொல்லி இருக்கீங்க தமிழன் அவர்களே!

தந்தை பெரியார், மற்றும் ராஜாஜி அவர்களைப் பற்றிய இதுபோன்ற பல நிகழ்வுகளை நானும் கேட்டிருக்கிறேன்.

நெல்லை கண்ணன் Tuesday, August 03, 2010 11:46:00 PM  

காமராஜர் என்ற ஒரு மாமனிதர்
கன்னித்தமிழ் நாட்டினிலே பிறந்தார் வாழ்ந்தார்

ஆம் அதனைச் சொல்லிச் சொல்லி
அனைவருமே ஆற்றாமை கொண்டவராய்ப் புலம்புகின்றோம்

ஏன் இன்று அவர் சிலைக்கு மாலையிடும் எத்தர்கள் தான் அவர் வீழ்த்த வழி வகுத்தார்

தேன் போல பேசி நின்றார் சொல்லுக்குள்ளே
தேளின் விஷம் இருப்பதனை
அறியார் தோற்றார்

கூன் மனத்தார் வெற்றியெல்லாம்
குடும்பம் காக்க
குடும்பம் என்றால் மக்கள் என்ற
குலவான் தோற்றார்

நான் நீங்கள் அனைவருமே
புலம்பி ஒய
நாயகனாம் இறைவன் அவன்
காக்க வேண்டும்

தங்கள் நெல்லைக்கண்ணன்

VSK Wednesday, August 04, 2010 6:05:00 PM  

தாங்கள் சொல்லிய ஒரு நிகழ்வினைச் சுட்டி எழுதிய இப்பதிவுக்கு நீங்களே வருகை தந்து சிறப்பித்திருப்பது மனமகிழ்வூட்டுகிறது. வணங்குகிறேன் ஐயா!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP