"கொலையும் செய்வாள் பத்தினி??" [2]
"கொலையும் செய்வாள் பத்தினி??" [2]
முதல் பதிவு இங்கே!
2.
தொழில் வளர்ச்சி, குடும்ப நிலைமை காரணமாக, இருவரும் சந்தித்துக் கொள்வதே அரிதாயிற்று.
குழந்தைகளும், பெற்றோர் இல்லாவிடினும், தாத்தா, பாட்டி அன்பில் நன்றாகவே வளர்ந்ததால், அந்தக் கவலையும் இல்லை!
இந்த நேரத்தில்தான், இவர்களது ஒரு சிகிச்சை மையத்தில் வரவேற்பாளராகச் சேர்ந்த லோரா, டேவிட்டின் கவனத்தைக் கவர்ந்தாள்.
அவளது திறந்த பார்வையும், பழகும் விதமும், சிரிக்கும் அழகும் டேவிட்டுக்கு ஒரு புத்துணர்ச்சியைக் கொடுத்தது!
இருவரும் பழகத் தொடங்கினர்.
வெளியே உணவருந்தச் செல்வது, சினிமா, மற்றும் கேளிக்கை நிகழ்ச்சிகளுக்குச் செல்வது எனத் தொடங்கி, உடலுறவு வரைக்கும் வந்துவிட்டது.
இவர்கள் பழக்கம் க்ளாராவுக்குத் தெரிய வாய்ப்பில்லாதபடி அவளது தொழிலில் அவள் மூழ்கி இருந்தாள்.
ஆனால், க்ளாரா மூலம் வேலையில் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை.
டேவிட்டிடம் சென்று, 'நீ சொல்லுகிறாயா? இல்லை நானே சொல்லிவிடட்டுமா?' என எச்சரிக்கை விடுத்தாள்.
டேவிட்டுக்கு அப்போதுதான் தான் செய்து வந்த தவறின் தீவிரம் தெரிய வந்தது.
சாதாரண வேடிக்கையாகவும், ஒரு மாறுதலாகவும் தொடங்கிய ஒரு விஷயம் இவ்வளவு தீவிரமானதை உணர்ந்து வருந்தினான்.
மறுநாள், க்ளாரா குளியலறையில் இருந்தபோது, அவளிடம் நிகழ்ந்ததை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்கிறான்.
ஆனால்,...........
க்ளாராவுக்கு இது ஒரு மிகப் பெரிய அதிர்ச்சி!
தனது கனவுக்கோட்டை தகர்ந்ததாக உணர்கிறாள்.
டேவிட்டுடன் மிகப் பெரிய சண்டை போடுகிறாள்.
எனக்கும் அந்த லோராவுக்கும் என்ன வித்தியாங்கள் கண்டாய்? என ஒரு பட்டியல் போட்டுத் தர வற்புறுத்துகிறாள்!
டேவிட்டுக்கு இது ஒரு பெரிய அதிர்ச்சி!
இருந்தாலும், எழுதித் தருகிறான்.
கனிவு, அன்பு, பரிவு, பாசம், பழகும் தன்மை, கவரும் சிரிப்பு, பொறுமையாகக் கேட்கும் தன்மை..... லோராவிடம்!
அன்பு, ...... ஆளுமை, தனது துணைக்கென நேரம் ஒதுக்க முடியாமல் தொழிலில் ஈடுபடுதல், குழந்தைகளைக் கூட கவனிக்கமுடியாமல் போதல்..... க்ளாராவிடம்!
க்ளாராவுக்கும் தனது குறைகள் புரிய.... ஒப்புக் கொள்ள முடியாமல் ஒரு அதிர்ச்சி!
இன்னும் ஒரு சில வாரங்களுக்குள், லோராவினுடைய உறவை முறித்துக் கொள்ள வேண்டுமென்றும், அதற்குள், தான் டேவிட்டுக்கு ஏற்றமாதிரி ஆகி விடுவதாகவும் சொல்லிவிட்டு,
அவன் பதிலுக்குக் கூட காத்திராமல், உடனடியாக ஒரு அழகு நிலையம், உடற்பயிற்சி நிலையம் எனச் சேர்ந்து தன்னை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொள்கிறாள்.
இடையில், ஒரு துப்பறியும் நிறுவனத்தை நாடி, டேவிட்டைக் கண்காணிக்குமாறும் ஏற்பாடு செய்கிறாள்.
அவர்கள், இவர்கள் இருவரும் சந்திக்கவே இல்லை என்னும் ஒரு தகவலைச் சொல்கிறார்கள்.
குடும்ப வாழ்க்கை, தொழில், இவையெல்லாம் இன்னும் அதிகமாகக் குலைவதைக் கவனித்த டேவிட், குழந்தைகளை இப்போது அதிகமாகக் கவனிக்கத் தொடங்குகிறான்.
குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழித்து, வீட்டிலேயே இருக்கிறான்!
இன்னுமா நீ லோராவுடனான உறவை முறிக்கவில்லை? என்ற க்ளாராவின் கேள்வி அவனை உலுக்க, தான் இதுவரை லோராவைச் சந்திக்கவே இல்லை என்றும்,
நாளை மாலை அவளைச் சந்தித்துச் சொல்ல அவளுக்கும் சொல்லியிருப்பதாகவும் சொல்லுகிறான் டேவிட்!
க்ளாரா நம்பவில்லை.
தன்னை ஏமாற்றுகிறான் டேவிட் என உறுதியாக நம்பினாள்.
மறுநாள் மாலை!
[தொடரும்]
10 பின்னூட்டங்கள்:
நாளை மாலை வருகிறேன்... மீதியை தெரிந்துகொள்ள.
/////கனிவு, அன்பு, பரிவு, பாசம், பழகும் தன்மை, கவரும் சிரிப்பு, பொறுமையாகக் கேட்கும் தன்மை..... லோராவிடம்!
அன்பு, ...... ஆளுமை, தனது துணைக்கென நேரம் ஒதுக்க முடியாமல் தொழிலில் ஈடுபடுதல், குழந்தைகளைக் கூட கவனிக்கமுடியாமல் போதல்..... க்ளாராவிடம்!
க்ளாரவுக்கும் தனது குறைகள் புரிய.... ஒப்புக் கொள்ள முடியாமல் ஒரு அதிர்ச்சி!////
இந்தக் குறைபாடுகள்தான் பல தம்பதிகளின் மண/மன முறிவிற்குக் காரணம்.கதை என்பதையும் தாண்டி இதைப் பொதுக் குறைபாடாகவே எடுத்துக் கொள்ளல் நல்லது
சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள் அய்யா!
தவறாமல் வருவீர்கள் எனத் தெரியும், திரு.குமார்!
மிக்க நன்றி!
இது....இது....இதுக்குத்தான் ஒரு ஆசான் வேணும் என்பது!
அன்னப்பறவை மாதிரி எப்படி ஒரு முக்கியமான கருத்தை எடுத்து, தெளிவாகச் சொல்லி இருக்கிறீர்கள்!!
மிக்க நன்றி ஆசானே!
//தன்னை ஏமாற்றுகிறான் டேவிட் என உறுதியாக நம்பினாள்.
மறுநாள் மாலை!
.//
சந்தேகப்பேய் பிடித்தால் சந்தோச தேவதை ஓடிவிடும்.
மிகவும் சரியாகச் சொன்னீர்கள், கோவியாரே!
புரிபவர்க்குப் புரிந்தால் சரி!
:))
படத்தில் சாலை பிரிவது போல் கதையை கோடிட்டு காட்டி இருக்கிறீர்கள் !
:)
//VSK said...
மிகவும் சரியாகச் சொன்னீர்கள், கோவியாரே!
புரிபவர்க்குப் புரிந்தால் சரி!
:))
//
புரிபவர், புரியாதவர் யார் என்று புரியும் படி சொல்லுங்களேன்.
:)
இந்த கதை ஓடற வேகத்துல நானும் படிச்சேன். :-))
படிக்கற வேகத்துல நீங்க வ்வந்ததில் நானும் மகிழ்ந்தேன் குமரன்!
மிச்சம் இரண்டையும் சீக்கிரம் படித்து சொல்லுங்கள்!
:))
Post a Comment