"கொலையும் செய்வாள் பத்தினி??" [1]
"கொலையும் செய்வாள் பத்தினி??" [1]
அமெரிக்கத் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு கதை என்னை மிகவும் பாதித்தது! இது ஒரு உண்மைக் கதை. 'ட்ரூ டிவி'[Tru TV] இதை நேற்று ஒளிபரப்பியது! மறந்துவிடாமல் இருக்க உடனே இதைப் பதிவு செய்கிறேன்! படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்கள்! 4 பதிவுகள் வரை வரும்!
அமெரிக்கத் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு கதை என்னை மிகவும் பாதித்தது! இது ஒரு உண்மைக் கதை. 'ட்ரூ டிவி'[Tru TV] இதை நேற்று ஒளிபரப்பியது! மறந்துவிடாமல் இருக்க உடனே இதைப் பதிவு செய்கிறேன்! படித்துவிட்டுக் கருத்து சொல்லுங்கள்! 4 பதிவுகள் வரை வரும்!
1.
க்ளாரா ஒரு துணிச்சலான பெண்!
வாழ்க்கையில் எதையேனும் சாதித்துக் காட்ட வேண்டும் என்னும் அவா நிரம்பியவள்!
நினைத்தபடியே பல் மருத்துவம் படித்து ஒரு முன்னணி பல் மருத்துவராகவும் ஆனாள்.
தொழில் தொடங்குவதற்கு குடும்ப வாழ்க்கை அவசியம் ஆனால், அது பிக்கல் இல்லாத ஒன்றாகவும் இருக்க வேண்டும் எனவும் விரும்பினாள்.
அப்போதுதான் அவள் கண்ணில் பட்டான் டேவிட்.
அவனும் ஒரு பல் மருத்துவர் தான்.
திருமணம் ஆகி, ஒரு பெண் குழந்தையும் பிறந்தபின் மனைவியை இழந்தவன்.
க்ளாராவின் பார்வை டேவிட் மேல் பட்டது.
பார்வைக்கு அழகாகவும் இருந்தான் டேவிட்.
துணைக்குத் துணையும் ஆயிற்று; உடனே பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை; தொழிலுக்கும் உதவியாய் இருப்பான்!
தன் வளர்ச்சிக்கு வேண்டிய அனைத்துத் தேவைகளும் இருந்ததைக் கண்டு மனதுக்குள் மகிழ்ந்து, டேவிட்டுடன் நெருக்கமானாள்.
டேவிட் குடும்பத்தினருக்கும் க்ளாராவைப் பிடித்துப் போயிற்று.
திருமணமும் நடந்தது.
டேவிட்டின் பெண் லிண்டா க்ளாராவை அம்மாவாக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டாள்.
குடும்ப வாழ்க்கை இனிமையாக அமைந்தது.
ஒரே ஊரில், இரு வேறு இடங்களில் தனித்தனி சிகிச்சை நிலையங்களும் தொடங்கப் பெற்றன.
க்ளாராவின் கைராசியால் அவளது தொழில் விரைவில் பிரபலம் அடைந்தது.
ஆனால், டேவிட்டின் நிலைமை அப்படி ஆகவில்லை.
தொழில் மந்தம்!
க்ளாரா இப்போது, குடும்பத்தை மட்டுமல்லாமல், டேவிட்டின் தொழிலுக்கு சேர்த்தே உதவி செய்ய வேண்டிய நிலைமை.
க்ளாரா இதை எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும், மனம் தளரவில்லை.
தனது தொழிலில் வந்த நபர்களுக்குத் தேவையான பல் மருத்துவ சிகிச்சையில் டேவிட்டுக்கும் பங்கு வருமாறு செய்து, தனது சில வாடிக்கையாளர்களையும் அவனுக்கு அனுப்பி வைத்தாள்.
வாரத்திற்கு 3 முறை டேவிட்டையே தனது 'க்ளினிக்'கிற்கே வரவழைத்து சில சிகிச்சைகளை அவனையே செய்ய வைத்தாள்.
இப்போது டேவிட்டின் தொழிலும் சூடு பிடிக்கத் தொடங்கியது.
விரைவிலேயே, வரும் நோயாளிகளைச் சமாளிக்க முடியாமல், இன்னும் சில இடங்களில் நிலையங்களைத் தொடங்கி, மெலும் சில மருத்துவர்களை நியமித்து, கவனிக்க வேண்டிய அளவிற்கு, வளர்ந்து விட்டது!
5,000 சதுர அடி பரப்பில் பெரிய வீடு, 'பென்ஸ்' கார், வசதியான வாழ்க்கை, அள்வான குடும்பம்!
க்ளாராவுக்கு இப்போது குடும்ப ஆசை!
தனக்கும் குழந்தைகள் வேண்டுமென விரும்பினாள்.
டேவிட்டுக்கும் இதில் சம்மதமே!
சீக்கிரமே கர்ப்பமானாள்!
அதுவும் இரட்டைக் குழந்தைகள்!
க்ளாரா, டேவிட்டின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை!
லிண்டாவும் இப்போது 14 வயதுப் பெண்!
தனது இரு தம்பிகளின் மேல் அளவிலாப் பாசம் கொண்டவள்!
டேவிட்டின் பெற்றோர்களும் தங்கள் பேரக் குழந்தைகளை அடிக்கடி வந்து கவனித்துக் கொண்டிருந்தனர்.
தொழிலும் சிறப்பாக வளர்ந்து கொண்டிருந்தது.
இப்போதுதான், விதி சிரித்தது!
[தொடரும்]
13 பின்னூட்டங்கள்:
கதையிலும் மருத்துவரா!:-)
:))
நன்றி திரு.ஜீவா!
முகப்புக்கு கொண்டு வந்ததுக்கு!
//இப்போதுதான், விதி சிரித்தது!//
தம்பதிகள் விரைவில் மீண்டும் சேரட்டும்.
:)
/////இப்போதுதான், விதி சிரித்தது!////
வி.எஸ்.கே சார் - முக்கியமான இடத்தில தொடரும்னு போட்டுட்டீங்களே!
அடுத்த இடுகை எப்பொழுது சார்?
விதி என்று எழுதிய உடனே “வாத்தியார்” வந்திட்டார் பாருங்க.:-)
//தம்பதிகள் விரைவில் மீண்டும் சேரட்டும்.//
சேர்ந்தார்களா?
விரைவில் கணினித் திரையில் காண்க!
:)
//அடுத்த இடுகை எப்பொழுது சார்?//
இதோ! இன்னும் சற்று நேரத்தில் ஆசானே!
:))
//விதி என்று எழுதிய உடனே “வாத்தியார்” வந்திட்டார் பாருங்க.:-)//
என்ன சொல்றீங்க குமார்!
வாத்தியர் வந்தது விதியா இல்லை விதி வத்தியாரைக் கொண்டு வந்ததா!
எப்படியோ... ஆசான் வந்தது நன்று!
:))
கதை அருமையாகச் சென்று கொண்டிருக்கைஇயில் விதி சடாரெனச் சிரித்துவிட்டது. காத்திருப்போம்
////Blogger VSK said...
//விதி என்று எழுதிய உடனே “வாத்தியார்” வந்திட்டார் பாருங்க.:-)//
என்ன சொல்றீங்க குமார்!
வாத்தியர் வந்தது விதியா இல்லை விதி வத்தியாரைக் கொண்டு வந்ததா!
எப்படியோ... ஆசான் வந்தது நன்று!
:))////
வி.எஸ்.கே சார் பதிவென்றால் வாத்தியார் வருவார் - அது விதி!
வினைச் சொல்லாகவும் பொருள் கொள்ளலாம் அல்லது பெயர்ச் சொல்லாகவும் பொருள் கொள்ளலாம் வடுவூராரே!
//வி.எஸ்.கே சார் பதிவென்றால் வாத்தியார் வருவார் - அது விதி! //
ரொம்பவுமே பெருமைப் படுத்தி மகிழ்த்துகிறீர்கள் ஆசானே!
மிகவும் கடமைப் பட்டுள்ளேன்.. இப்படி ஒரு நட்புக்கு!
நன்றி!
கதையை கடகடவென்று சொல்லிச் செல்கிறீர்கள். :-)
இது ஒரு மினி தொடர்,திரு.குமரன்!
அதனால் தான்!:)
முடிவில் நிகழும் கருத்தை ஒட்டி ஒரு [ஆரோக்கியமான] விவாதம் வரும் என எதிர்பார்க்கிறேன்!
Post a Comment