Sunday, December 23, 2007

குருவாய்! வருவாய்! அருள்வாய்!


குருவாய்! வருவாய்! அருள்வாய்!


ஒருவினை வந்து உணர்வினை அழுத்தும்!

ஒருவினை நகர்ந்து உள்ளத்தை வதைக்கும்!

ஒருவினை ஒளிந்து புறவழி செல்லும்!

மறுவினை அங்கே வாசலில் நிற்கும்!

சிறுவினை கண்டு பெருவினை நகைக்கும்!

பெருவினை கண்டு சிறுவினை அஞ்சும்!

தீவினை அங்கே பல்லை இளிக்கும்!

நல்வினை செய்திடல் எதுவெனத் திகைக்கும்!

ஊழ்வினை வந்து உயிரினை உருத்தும்!

எவ்வினை எதுவினை எதுவென இருந்தும்

இறைவனின் உறுதுணை அனைத்தையும் தடுக்கும்!

நிகழ்வினை நடத்தும் ஒருவனை நம்பி,

செயல்வினை யாவும் அவனது எனவே,

பொதுவினில் வைத்து புகழ்வினைக் கூட்டி,

உருவினை ஒளித்த இறைவனை வேண்டி,

உருவினில் பெருத்த முதல்வனை நம்பி,

குருவின் குருவாம் வேலனைப் பணிந்து,

உருவினைப் பெருத்து சாகரம் மேவிய

அனுமனைக் கொண்டு வல்வினை வென்று,

ஒருவினை அடக்கி உள்ளில் அமர்ந்த

திருவினைச் சரணெனத் தாள் அடைந்தாலே,

அருவினை யாவும் அறுந்தோடிடுமே!

ஸ்வாமி சரணம்!

*************************************************


[தாயகம் செல்கிறேன்! ஒரு மாதம் கழித்து வருகிறேன்! முருகனருள் முன்னிற்கும்!]

9 பின்னூட்டங்கள்:

jeevagv Sunday, December 23, 2007 9:59:00 AM  

மிக்க நன்று.
தாயகப் பயணமும் நிகழ்வுகளும் இனிதாய் அமைய முருகனருள் முன்னிற்கும்.

கோவி.கண்ணன் Sunday, December 23, 2007 10:11:00 AM  

வீஎஸ்கே ஐயா,

இறைவனின் , பொதுவினில், உருவினில், அனுமனைக் என்று தொடங்கும் வரிகள் தவிர மற்றதெல்லாம் வினையாக இருக்கிறது
இதனையும் அப்படி ஆக்கி இருக்கலாமே... அந்த வரிகளுக்கு வினை வேலை செய்துவிட்டதோ...அல்லது செயல்படாமல் போய்விட்டதோ ?

:)

நீங்கள் மேற்கொண்டிருக்கும் நற்பயணம் நல்ல முறையில் அமைந்து உங்கள் அனைவருக்கும் மனமகிழ்ச்சியை கொடுக்க வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் Sunday, December 23, 2007 10:12:00 AM  

மேலே போட்டிருக்கும் படம் ஏற்கனவே சித்தரில் போட்டது தானே ?
:)

Unknown Sunday, December 23, 2007 10:16:00 AM  

உலகோர் கண்களில் 'உருவினை ஒளித்த இறைவனை வேண்டி'.
தங்களின் பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள்.

cheena (சீனா) Sunday, December 23, 2007 10:19:00 AM  

தாயகம் சென்று இன்பமாக விடுமுறையைக் கழித்து மீண்டும் ஆன்மீகப் பணியில் ஈடுபட நல்வாழ்த்துகள்.

SP.VR. SUBBIAH Sunday, December 23, 2007 11:09:00 AM  

வருவினை எல்லாம் விலகிச்செல்லும் வழிதனை
அருள்மொழியாய்ச் சொன்ன அன்பரே - முருகன்
அடியார் உமக்கு இங்கில்லையொரு மறுமொழி ;
கொடியோன் துணை கொண்டீர்!

குமரன் (Kumaran) Sunday, December 23, 2007 11:15:00 AM  

விடுமுறை நன்கு அமைய வாழ்த்துகள் எஸ்.கே. இந்த முறை யாரைப் பார்க்கப் போகிறீர்கள்? தாயகப் பயணம் மட்டும் தானா அல்லது கிழக்காசிய நாடுகளுக்கும் பயணம் உண்டா? :-)

VSK Sunday, December 23, 2007 12:00:00 PM  

Thanks for the wishes!
Will write once I reach India!
Mu Mu

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, December 24, 2007 2:11:00 PM  

//குமரன் (Kumaran) said...
விடுமுறை நன்கு அமைய வாழ்த்துகள் எஸ்.கே. இந்த முறை யாரைப் பார்க்கப் போகிறீர்கள்?
//

சாமியே சரணம் ஐயப்பா!

நல்லபடியா போய் வாங்க SK! நண்பர்களை எல்லாம் கேட்டதாகச் சொல்லுங்க!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP