"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 31
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 31
முந்தைய பதிவு இங்கே!
29.
"அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின் இருந்து வாழ்வார் பலர்." [1160]
'வா, போகலாம்' எனச் சொன்னவர், திரும்பி வந்த வழியே தான் இருந்த குகைக்குத் திரும்பினார்.
'செல்லும் முன் சில ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எனக்கு சில வேலைகள் இருக்கின்றன. நல்லா சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடு. இனிமேல் நாம் போகும் தூரம் மிகவும் அதிகம். நடைதான்! அநேகமா இதுவே நீ எடுக்கப் போகும் கடைசி ஓய்வா இருக்கும் கொஞ்ச நாளைக்குன்னு நினக்கறேன்'
எனச் சொல்லிவிட்டு வெளியில் சென்றார்.
கந்தனுக்குத் தூக்கம் வரவில்லை.
பொன்னியை இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பார்க்க முடியாது என்ற எண்ணம் அவனை வாட்டியது. போகும் முன் அவளை ஒருமுறை சந்திக்கணும் எனத் தோன்றியது.
எழுந்து அவள் வீடு நோக்கி நடந்தான்.
பொன்னியின் தம்பி கண்னில் பட்டான்.
'உங்க அக்கா வீட்டுல இருக்கா?' எனக் கேட்டான்.
'உள்ளேதான் இருக்கு. அப்பா வெளியில போயிருக்காரு. எங்க போயிருந்தீங்க இம்மாந்நேரம்? நீங்க இன்னும் சாப்பிட வரலியேன்னு சொல்லிகிட்டு இருந்தாரு. கொஞ்சம் இருங்க. 'எனச் சொல்லி உள்ளே சென்றான்.
பொன்னி வெளியில் வந்தாள்.
'நான் சித்தரைப் பார்த்துட்டேன்! அவர் என்னைக் கூட்டிகிட்டு போறேன்னு சொல்லியிருக்காரு. காலையில கிளம்பறோம். போறதுக்கு முன்னாடி உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். வர்றதுக்கு எவ்வளவு நாளாகும்னு தெரியாது. நான் உன்னை விரும்பறது மட்டும் உறுதின்னு உன்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னு...' என சொல்ல ஆரம்பித்த கந்தனை 'பேச வேண்டாம்' என்பது போல் சைகை செய்துவிட்டு,
'ஒண்ணும் சொல்லாதீங்க. ஒருத்தரை விரும்பறதுக்குக் காரணமே நாம அவங்க மேல வைச்ச அன்பாலதான். அதுக்கு வேற எந்தக் காரணமும் சொல்லத் தேவையே இல்லை. ' எனப் பொன்னி தலை குனிந்தவாறே தழுதழுத்த குரலில் சொன்னாள்.
'அப்படியும் சொல்ல முடியாது! நான் பாட்டுக்கு ஆடு மேச்சுகிட்டு என் ஊருல இருந்தேன். எனக்கு ஒரு கனவு வந்திச்சு. அதை ஒரு கிழவி புதையல் பத்தியதுன்னு சொல்லி ஊக்கப் படுத்தினா. அதைத்தான் நீ தொடர்ந்து போகணும்னு தங்கமாலை போட்ட ஒரு பெரியவர் வந்து என்னை அனுப்பினாரு.நடுவுல கொஞ்ச நாளு ஒரு ஓட்டலை நிர்வாகம் பண்ணினேன். அது போதும்னு அலுத்துப் போயி, அங்கேருந்து கிளம்பினேன். நடுவுல இப்படி ஒரு கலவரம் வந்ததால இந்த மலைக்கு ஒரு
சித்தரைத் தேடிகிட்டு வந்து, வந்ததுல உன்னைப் பார்த்தேன். பார்த்ததோட மட்டும் இல்லாம, இப்ப உன்னை விரும்பவும் ஆரம்பிச்சு, அதை உன்கிட்ட
சொல்லவும் சொல்லிட்டேன்! இதெல்லாம் எப்படி நடந்திருக்குன்னு நினைக்கறே? இந்த உலக ஆத்மாவே இதுதான் நடக்கணும்னு நினைச்சதால மட்டும்தான். இதை நீ புரிஞ்சுக்கனும் என் அன்பே!' எனச் சொல்லியவாறே அவளை அணைத்தான்.
பொன்னி முதல் முறையாக அவன் அணைப்பை மறுக்காமல், விலக்காமல் தன் கைகளால் அவனுடன் இணைந்தாள்.
இருவரும் ஒருவரை ஒருவர் தீண்டியது இதுவே முதல் தடவை. இன்பமாயிருந்தது இருவருக்கும். ஒரு சில கணங்கள் அப்படியே ஒன்றும் பேசாமல் இருவரும் அந்த அணைப்பின் சுகத்திலேயே இருந்தார்கள்.
சட்டென விலகினாள் பொன்னி.
'விரைவில் திரும்பிடுவேன்' என்றான் கந்தன்.
'இதுவரைக்கும் இந்த மலைக்காட்டை நேசிக்கற ஒரு சாதாரனப் பொண்ணாத்தான் திரிஞ்சுகிட்டு இருந்தேன். ஆனா, இப்ப... இந்த நொடியிலேர்ந்து, இந்தக் காட்டை ஒரு நம்பிக்கையோட எதிர்பார்த்துத் தவிக்கப் போற ஒரு பொண்ணா இருக்கப் போறேன். எங்க அப்பா கூட இப்படி ஒரு நாளைக்குப் போனவருதான்! கொஞ்ச நாளு கழிச்சு திரும்பி வந்தாரு. அது போலவே, நீயும் ஒரு நாளு வருவேன்னு நம்பறேன்.' என்றாள் பொன்னி.
பேசிக்கொண்டே நடந்தவர்கள் வீடு வரை வந்து விட்டார்கள்.
அவள் கைகளைப் பிடித்துக் கொண்ட கந்தன், அவள் கண்களை நோக்கிய வண்ணம் உறுதியாகச் சொன்னான், ' கண்டிப்பா உங்க அப்பா திரும்பி வந்த மாதிரி, நானும் வருவேன். கவலைப் படாதே!'என்றான்.
பொன்னியின் கண்கள் குளமாயின.
'என்ன அழுவறியா? எதுக்கு?' எனப் பரிவுடன் கேட்டான் கந்தன்.
'நான் ஒரு மலைஜாதிப் பொண்ணுதான். ரொம்ப தைரியசாலின்னு பேர் வாங்கினவ! இருந்தாலும், நானும் ஒரு பொண்ணுதானே! போயிட்டு நல்லபடியா வாங்க!' என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டே சிரிக்க முயன்றாள் பொன்னி.
அவன் கைகளை ஒரு அழுத்து அழுத்திவிட்டு, அவைகளை விடுத்து, திரும்பிப் பார்க்காமல் வீட்டுக்குள் நுழைந்தாள்.
கதவு சாத்தப்பட்டது.
தனக்காக ஒரு உள்ளமும், உயிரும் உள்ளே காத்திருக்கும் என்ற நம்பிக்கையோடு, கந்தன் திரும்பி நடந்தான்.
'இனி அவள் வாழ்க்கை முழுதுமாக மாறிப் போகும். நேற்று வரை சுதந்திரமாகத் திரிந்தவள், நாளை முதல், வழி மேலே விழி வைத்து தான் வரும் நாளுக்காய் காத்து நிற்கப் போகிறாள். காற்றில் தனது அன்பினை அவனுக்கு தூது அனுப்பி வைத்துக் கொண்டிருப்பாள்..... அது அவனைச் சேருமோ சேராதோ என்பதைத் தெரியாமலேயே ' என்ற எண்ணம் அவன் மனதை அழுத்தியது. அதே சமயம் ஒரு உற்சாகத்தையும் கொடுத்தது.... அவள் இருக்கிறாள் என்ற உண்மை புரிந்து போனதில்! ஒருநாள் திரும்பவும் வருவான் என்ற அவள் நம்பிக்கை பொய்த்துப் போகாமல் இருப்பதில் தன் பங்கும் இருப்பது ஒரு பதட்டத்தையும், அதே சமயம் ஒரு புதுத் தெம்பையும் கொடுத்தது.
ராபர்ட் இருக்கிறானோ எனப் பார்த்தான். எங்கும் தென்படவில்லை. அதுவும் நல்லதுக்குத்தான் என எண்ணியவாறே, அவள் குடிசை கண்ணிலிருந்து மறையும் வரைக்கும், திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
சற்று நேரத்தில் அவன் நடை வேகமாகியது!
******************************
அடுத்த அத்தியாயம்
21 பின்னூட்டங்கள்:
சித்தர் ரெஸ்ட் எடுக்கச் சொன்னா இவரு பாட்டு வேலையைப் பார்க்கப் போயிட்டானே. சரி மொத முறை அதனால மன்னிச்சு விடறோம்.
ஆனா இனிமே சொன்னபடி கேட்கணும். சொல்லிட்டேன்.
ச்சின்னக்குழப்பமா? குகை குடிசைன்னு இருக்கே?
சொன்னபடி கேட்டுட்டாலும்.............:-)
பொன்னியைக் கந்தன் அணைக்கும் போது உணமைக் காதலின் உணர்வுகள் வெளிப்படும் இடம் அருமை. காத்திருப்பதே தனது வேலை - மலைச் சாதிப் பெண்களின் தலை விதி என்பதைப் பொன்னி உணர்ந்து விட்டாள். காத்திருப்பேன் என்ற உறுதிமொழியைக் கொடுத்து கந்தனின் மனதில் ஒரு நம்பிக்கையை விதைத்து விட்டாள்.
கந்தன் புறப்பட்டு விட்டான்.
//ச்சின்னக்குழப்பமா? குகை குடிசைன்னு இருக்கே?//
என்ன டீச்சர்!
சித்தர் இருக்கற இடம் "குகை".
கந்தன் அங்கேருந்து கிளம்பி, பொன்னி "குடிசைக்கு" வரான்!
திரும்பி "குகைக்கு" போறான்!
"குகை"க்குத் திரும்பிப் போகும்போது "குடிசை"யைத் திரும்பிப் பார்த்துகிட்டே போறான்!
சரிதானே!
//சரி மொத முறை அதனால மன்னிச்சு விடறோம்.
ஆனா இனிமே சொன்னபடி கேட்கணும். சொல்லிட்டேன்.//
சின்னப்பய கந்தனை ஆளாளுக்கு மிரட்டறாங்கப்பா!
:))
சரிங்க சாமி! இனிமே எங்இயும் போக மாட்டான்... சித்தரை விட்டு1
:)0
//கந்தன் புறப்பட்டு விட்டான்.//
ஒவ்வொரு பதிவிலும் உங்களுடைய சம்மரி மிக அருமை, திரு.சீனா!
உங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !
//பேசிக்கொண்டே நடந்தவர்கள் வீடு வரை வந்து விட்டார்கள்.//
?????
Present
//கோவி.கண்ணன் said...
உங்கள் இல்லத்தினர் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !
முதல் பதிவுக்குப்பின் மீண்டும் வந்து வாழ்த்து சொன்ன கோவியாருக்கு நன்றி!
இப்படி ஒவ்வொரு பதிவிலும் எதிர்பார்த்தேன்!
எப்போது நிகழ்ந்தாலும், அது மகிழ்ச்சியே!
நன்றி நண்பரே!
////பேசிக்கொண்டே நடந்தவர்கள் வீடு வரை வந்து விட்டார்கள்.//
?????//
"குகை'யிலிருந்து '"குடிசை"க்கு வந்தார்கள். அங்கிருந்து "பேசிக்கொண்டே நடந்தவர்கள்" திரும்பவும் " வீடு வரை வந்து விட்டார்கள்"!!
:))))
சரியா டீச்சர்!
marked'
'இனி அவள் வாழ்க்கை முழுதுமாக மாறிப் போகும். நேற்று வரை சுதந்திரமாகத் திரிந்தவள், நாளை முதல், வழி மேலே விழி வைத்து தான் வரும் நாளுக்காய் காத்து நிற்கப் போகிறாள். காற்றில் தனது அன்பினை அவனுக்கு தூது அனுப்பி வைத்துக் கொண்டிருப்பாள்..... அது அவனைச் சேருமோ சேராதோ என்பதைத் தெரியாமலேயே '
உண்மையான அன்பு உள்ளங்களின்
எண்ணங்களை அவர்கள் எவ்வளவு தூரம்
இருந்தாலும் அவர்களால் உணர முடியும்
வீடு வரை வந்தார்களோ குடிசை வரை வந்தார்களோ, ஆகக்கூடி
கிளம்பியாச்சு,.
இன்னும் சுரசை, லங்கிணி னு யாராவது தடுகாமல் கந்தன் பயணம் இந்தே அமைய வாழ்த்துகள்.
விஎஸ்கே சாருக்கும் ,அவங்க தங்கமணிக்கும்,குழந்தைகளுக்கும் தீபாவளி நல் வாழ்த்துஅள்.
கந்தனுக்கு தீபாவளி எங்க காட்டிலா இல்ல மகாபலிபுரத்திலா ;)
டீச்சருக்கு ஏற்பட்ட சந்தேகம் எனக்கு வந்துச்சு.. உங்க பதில் பாத்து தெளிவாயிடுச்சு.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)
வல்லியம்மாவுக்கும், நாகை சிவாவுக்கும், அனைவருக்கும் என் உளம் கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
நாளை சித்தர் வருவார்!
விடுன்னு சித்தர் சொன்னாரு
இந்தப் பயலோ பொன்னி கிட்ட
தொடுன்னு போயி நிக்கிறானே
சரி...அதான் விடுவிடுன்னு திரும்பி நடந்துட்டானே.
தீபாவளிக்குப் பின் சித்தரும் கந்தனும் தங்கள் பயணத்த்தைத் தொடர்வார்கள்
அனைவருக்கும் என் தீபாவளி வாழ்த்துகள்!
இது போங்கு ஆட்டம்! நாளை காலை போட வேண்டியதை சொல்லாம கொல்லாம சாயங்காலமே போட்டா எப்படி?
தீபாவளி (தீப ஒளி)
வாழ்த்துக்கள்
Post a Comment