"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 24
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 24
முந்தைய பதிவு இங்கே!
22.
"நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்." [1093]
துணிச்சலாக அந்தப் பெண் கேட்டவுடன், திடுக்கிட்ட கந்தன் 'ஒண்ணுமில்லே! ஒண்ணுமில்லே!' என்று வெட்கத்துடன் சிரித்தான் .
'கொல்லி மலைல என்ன விசேஷம்? அங்கே சித்தருங்கள்லாம் நடமாடறதா சொல்றாங்களே. அது உண்மையா? அப்படி யாரையாச்சும் நீங்க
பாத்திருக்கீங்களா? அப்படி பாத்திருந்தா, அவர்கிட்ட எங்களை கூட்டிப் போகமுடியுமா?' எனக் கேள்விகளை அடுக்கி, தான் அவளை வைத்த கண்
வாங்காமல் பார்த்த நிகழ்வை மறைக்க முயன்றான்.
'காட்டுக்குள்ளே ரொம்ப தூரம் போவணும் அதுக்கு! அங்கே ஒரு சிவலிங்கம் இருக்கு. பவுர்ணமிக்குப் பவுர்ணமி அங்கே ஆளுங்க வருவாங்க.
நிறைய சித்தருங்க இருக்கறதாச் சொல்றாங்க. ஆனா, நான் பாத்ததில்லேன்னு நினைக்கறேன்' என்றாள் பொன்னி.
'அப்படீன்னா?' என ஒன்றும் புரியாமல் கேட்டான் ராபர்ட்.
'அதில்ல. ஒரு தடவை ஒருத்தரு நான் போயிட்டிருக்கும் போது என் வழியில வந்தாரு. "நீ ரொம்ப நல்ல பொண்ணு. உனக்கு நல்லதே நடக்கும்!"னு
சொல்லிட்டு என்னைக் கடந்து போனாரு.திரும்பிப் பாத்தா ஆளைக் காணும்! ஒருவேளை அவருதான் நீங்க சொல்ற சித்தரோ என்னமோ! அதான்
பாத்தேனா இல்லியான்னு தெரியலை; இருக்கலாமோன்னு நினைக்கறேன்னு சொன்னேன்' என்றாள் பொன்னி.
ராபர்ட் சற்று நிலை கொள்ளாமல் தவித்தான். விட்டால் இப்பவே அவரைத் தேடிக்கொண்டு ஓடிவிடுவான் போலத் தோன்றியது.
'அவர் எப்படி இருந்தாரு? எந்தப் பக்கமாப் போனா அவரைப் பார்க்கலாம்?' என ஆவலுடன் கேட்டான்.
'அப்படியெல்லாம் சுலபமா நம்ம பார்வையில பட மாட்டாங்களாம். நானே இவரு ஒருத்தரைத்தான் பார்த்திருக்கேன். கொல்லிமலை போற வழியிலதான் பார்த்தேன்.இப்ப இருட்டிடுச்சு. நாளைக்குக் வழி காட்டறேன்.' என்றபடி உள்ளே சென்றாள் பொன்னி.
போகுமுன் ஒரு பார்வையை கந்தன் பக்கமாய் வீசிவிட்டு !!!
'சரிங்க தம்பிங்களா! நீங்க போய் கைகாலைக் கழுவிட்டு வாங்க. சாப்பிடலாம். வாங்க, உங்க எடத்தைக் காட்டறேன்' என்று, பக்கத்தில் இருந்த ஒரு
குடிசைப் பக்கமாக அவர்களை அழைத்துச் சென்றான் காத்தான்.
நாலு பக்கங்களிலும் வளைவாகத் தட்டியால் மறைத்து, சில மரங்களால் ஒரு கூடாரம் போல் சிறிதாக, அழகாக இருந்தது அந்த இடம்.
'படலைச் சாத்திகிட்டு படுக்கணும். எல்லாம் ஒரு சாக்கறதைக்குத்தான்! ரெண்டு கம்பிளி வைச்சிருக்கேன். குளிருச்சின்னா அதயே போத்திக்கலாம்' , 'சரி! சீக்கிரமா வந்திருங்க. களைப்பா இருப்பீங்க! எனச் சொல்லிவிட்டுச் சென்றான்.
கொண்டுவந்த பைகளை ஒரு மூலையில் வைத்துவிட்டு, முகம் கழுவிய பின்னர் காத்தனின் குடிசையை நோக்கி நடந்தனர் இருவரும்.
'நாளைக்கு முதல் வேலையா அந்த சித்தரை எப்படியாவது சந்திச்சுறணும்' என்றான் ராபர்ட்.
'அதான் அந்தப் பொண்ணு வழி சொல்றேன்னு சொல்லியிருக்கே. கொஞ்சம் பொறுக்கலாமே' என்றான் கந்தன்.
அவனுக்கு இந்த ராபர்ட் சற்று வேகமாக நடந்தால் என்ன எனத் தோன்றியது!
'நீ வேணுமின்னா, அந்தப் பொண்ணு சொல்ற வரைக்கும் காத்திரு. எனக்கு இது மாதிரி இடங்கள்லாம் பழக்கம்தான். காலையில நான்
போகப் போறேன்' என்றான் ராபர்ட்.
'உன் இஷ்டம்' எனச் சொல்லிவிட்டு, கந்தன் நடந்தான்.
அரை நிலா வெளிச்சத்தில், குடிசைக்கு வெளியே ஒரு தட்டி விரித்து, அதில் உட்கார்ந்தபடியே இவர்களுக்காகக் காத்திருந்தான் காத்தான்.
அவன் அருகில் ஒரு சிறுவன்... பத்து வயதிருக்கலாம்.. குத்த்க்காலிட்டு உட்கார்ந்தபடியே இவர்களை அண்ணாந்து பார்த்தான்..
'வாங்க, இப்படியே உக்காருங்க' என்று சொல்லியபின், 'பொன்னி, அவங்கள்லாம் வந்திட்டாங்க. சாப்பாடு எடுத்து வையி' என ஒரு குரல்
கொடுத்தான்.
'எல்லா வேலையும் அந்தப் பொண்ணுதான் செய்யுமா?' என விசாரித்தான் கந்தன்.
'தாயில்லாப் பொண்ணுங்க. இதோ இவன் பொறந்ததுமே எம்பொஞ்சாதி செத்துப் போயிருச்சு. நாந்தான் அதுக்கபுறம் இன்னொரு கண்ணாலம்
வேண்டாமின்னு இதுங்க ரெண்டையும் வளத்தேன். பொன்னிதான் எல்லா ஒத்தாசையும் செய்யுது. தங்கமான பொண்னு. அதுக்கும் சீக்கிரமே ஒரு
கண்ணாலத்தைப் பண்ணிறணும்.....'
'இப்ப என்ன பேச்சு என்னைப் பத்தி? என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? நான் உன்னைக் கேட்டேனா? சும்மா யார் வந்தாலும் இதைச் சொல்றதே
உன் வேலையாப் போச்சு' என்று செல்லமாகக் கடிந்தபடி பொன்னி வெளியே வந்தாள்.
அவள் கையில் ஒரு கலயமும், ஒரு தட்டும் இருந்தது.
இவள் வந்ததும், சிறுவன் எழுந்து உள்ளே போய், சில மண்பாண்டங்களைக் கொண்டுவந்தான்.
அந்தப் பாண்டங்களில், கலயத்தில் இருந்த கேப்பைக் கஞ்சியை ஊற்றி அவர்கள் முன் வைத்தாள்.
தட்டில் இருந்து வேகவைத்த, வள்ளிக் கிழங்குகளை ஆளுக்கொன்றாக வைத்தவள், கந்தனுக்கு மட்டும் ஏனோ கூடுதலாக ஒன்றை வைத்தாள்.
கந்தனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.
பொன்னி அவனைப் பார்த்து புன்னகைத்தது போலத் தோன்றியது.
அவளைப் பார்க்க தைரியமில்லாமல், அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தான்.
சரியாகச் சாப்பிட்டு இரண்டு நாட்கள் ஆனதும் ஒரு காரணம்.
மலையேறி வந்ததுல களைப்பா இருப்பீங்க. போயிப் படுங்க.காலைல பார்க்கலாம்' என விடை கொடுத்தான் காத்தான்.
'கொல்லிமலைக்கு எந்தப் பக்கமாப் போகணும்?' என ராபர்ட் விசாரித்து வைத்துக் கொண்டான்.
குடிசைக்குள் நுழைந்ததும், 'நான் படுக்கப் போறேன்'எனச் சொல்லி, ராபர்ட் ஒரு மூலையில் துண்டை விரித்துப் படுத்தான்.
கந்தனுக்கும் அசதி கண்ணைச் சுழட்ட, சற்று நேரத்தில் அசந்து தூங்கிப் போனான்.
பறவைகளின் சத்தத்தில் காலையில் கண்விழித்த கந்தன் எழுந்தான்.
இருள் பிரிந்து, மெலிதாக வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது.
திரும்பிப் பார்த்தான்.
ராபர்ட் படுத்த இடம் காலியாக இருந்தது!
[தொடரும்]
********************************
அடுத்த அத்தியாயம்
30 பின்னூட்டங்கள்:
Present
//கந்தனுக்கு மட்டும் ஏனோ கூடுதலாக ஒன்றை வைத்தாள்.//
நடக்கட்டும் நடக்கட்டும் :))
நான் நினைச்சேன். இந்த ராபர்ட் ஒரு ரிஷிப் பிண்டம்,ராத்தங்கமாட்டான்னு.
அதேபோல எழுந்து ஓடியிருக்கான் பாருங்க.
ராபர்ட் படுத்த இடம் காலியாக இருந்தது
இடம் தானே காலி, இல்லை ஆளுமா?
//Present//
இன்னிக்கு முதல் ஆஜரே நீங்கதானா!
கொஞ்சம் முகத்தைக் காட்டுங்க சாமீ!
உங்க மேல ஒரு தனிப் பாசமே வந்திருச்சு.. இப்பல்லாம்!
:))
//ராபர்ட் படுத்த இடம் காலியாக இருந்தது//
இடம் விற்பனைக்கு கிடைக்குமா ?
:)
//நடக்கட்டும் நடக்கட்டும் :))//
நீங்க சொன்னா சரிதான் கொத்ஸ்!
//நான் நினைச்சேன். இந்த ராபர்ட் ஒரு ரிஷிப் பிண்டம்,ராத்தங்கமாட்டான்னு.
அதேபோல எழுந்து ஓடியிருக்கான் பாருங்க.//
என்னமா நினைக்கறீங்க டீச்சர்!
ரிஷிப்பிண்டம்!
ரொம்பவே சரியான வார்த்தைப் பிரயோகம்!
:))
//இடம் தானே காலி, இல்லை ஆளுமா?//
அவன் மேல என்ன கோபம் உங்களுக்கு திரு.குமார்!
:))
நாளைக்குப் பாருங்க!
//இடம் விற்பனைக்கு கிடைக்குமா ?//
எப்படியெல்லாம் யோசிக்கறீங்க சென்னை பசங்களா!:))
கிடைச்சா சொல்றேன்! சரியா!
:))
//ரிஷிப்பிண்டம்!
ரொம்பவே சரியான வார்த்தைப் பிரயோகம்!
:))//
அப்படின்னா என்ன? அதையும் சொல்லிடுங்க.
//துளசி கோபால் said...
நான் நினைச்சேன். இந்த ராபர்ட் ஒரு ரிஷிப் பிண்டம்,ராத்தங்கமாட்டான்னு.
அதேபோல எழுந்து ஓடியிருக்கான் பாருங்க.//
ரிப்பீட்டே!
//கேப்பைக் கஞ்சியை ஊற்றி அவர்கள் முன் வைத்தாள்.
தட்டில் இருந்து வேகவைத்த, வள்ளிக் கிழங்குகளை ஆளுக்கொன்றாக வைத்தவள்//
ஆகா...சுடுகஞ்சியும் மரவல்லிக் கிழங்கும் சாப்புட்டு எம்புட்டு நாளாச்சி? SK கதையோட கூட ஆவலும் தூண்டி வுடறீங்க.
பொன்னி ஒரு திட்டத்துக்கு வந்துட்டா. ராபர்ட் கிளம்பியாச்சு. அப்புறம் கந்தனுக்கு என்ன பாதையோ...
ரிஷி கர்ப்பமா துளசி:)))
//அப்படின்னா என்ன? அதையும் சொல்லிடுங்க.//
டீச்சர் வந்து உங்க கேள்விக்கு ஒரு விளக்கம் கொடுப்பாங்கன்னு எதிர்பார்க்கிறேன், கொத்ஸ்!
அவங்கதான் இதைச் சுளுவா சொல்லிப் போடுவாங்க!
:))
//ரிப்பீட்டே!
ஆகா...சுடுகஞ்சியும் மரவல்லிக் கிழங்கும் சாப்புட்டு எம்புட்டு நாளாச்சி? SK கதையோட கூட ஆவலும் தூண்டி வுடறீங்க.//
இப்ப டீச்சர் வந்து சொல்லலைன்னா, நீங்கதான் கொத்ஸுக்கு பதில் சொல்லணும் ரவி! ரிஷிப்பிண்டம் ராத்தங்காததைப் பத்தி!
:))
எனக்கு மட்டும் அதையெல்லாம் சாப்பிட ஆசை இல்லையா என்ன?
அதன் டிசம்பரில் இந்தியா போறேன்!
:))
உங்களுக்கும் வாங்கிட்டு வரேன்!:))
//ரிஷி கர்ப்பமா துளசி:)))//
ஆஹா! விஷயம் ரொம்பப் பெருசாப் போகுது போலிருக்கே!
:))
//விஷயம் ரொம்பப் பெருசாப் //
கர்பமாக இருந்தா பத்து மாசம் ஆகிற வரை பெருசாதான் போகும்.
:)
Thanx. :-)
//போகுமுன் ஒரு பார்வையை கந்தன் பக்கமாய் வீசிவிட்டு !!!//
வசந்தமாக வீச போகுதோ.. இல்லை புயலாக வீச போகுதோ...
ராபர்ட் தேடலைத் தொடங்கிட்டான் போல!
அது சரி! கந்தனுக்கு வேற வேலை இருக்கே!
//Present//
இது நான் இல்லே!
உங்க தொடர் படிக்க ஆரம்பிச்ச நேரம் தீபாவளிக்கு மறுநாள் மலையேறிப் போய் மாதேஸ்வரனைத் தரிசிக்கத் திட்டமிட்டிருக்கேன்!
ஆனா ஒண்ணுங்கன்னா!
கடந்த சில நாட்களுக்கு முன்னே கடவுள் இருக்காரான்னு கேக்கத் தோணின எனக்கு உங்க தொடர் மூலமா விடை கிடைச்சிகிட்டிருக்கு!
//போகுமுன் ஒரு பார்வையை கந்தன் பக்கமாய் வீசிவிட்டு !!!//
//கந்தனுக்கு மட்டும் ஏனோ கூடுதலாக ஒன்றை வைத்தாள்.//
கதை எந்த ரூட்ல போகப்போகுதுன்னு தெரியலையே??
//கதை எந்த ரூட்ல போகப்போகுதுன்னு தெரியலையே??
//
சேலம் - கள்ளக் குறிச்சி - விழுப்புரம் -திண்டிவனம் - காஞ்சிபுரம் - மகாபலிபுரம்
'கொல்லிமலைக்கு எந்தப் பக்கமாப் போகணும்?' என ராபர்ட் விசாரித்து வைத்துக் கொண்டான்.
நினைச்சேன் இது வரும்போதே சீட்டு காலியாகும்ன்னு.
இன்னிக்கு எங்கே 25வது பகுதிய இன்னமும் காணோம்!
சித்தர்களைக் காக்க வைக்கக் கூடாது!
/கடந்த சில நாட்களுக்கு முன்னே கடவுள் இருக்காரான்னு கேக்கத் தோணின எனக்கு உங்க தொடர் மூலமா விடை கிடைச்சிகிட்டிருக்கு!/
Repeat. The same Anonymous
ராபர்ட் சென்று விடுவான் என்பது அறிந்த செய்தி தான்.கதை ஒட்டத்திற்கு உதவும் உப நாயகர்கள் வருவார்கள் - போவார்கள். திரும்பவும் ராபர்ட் கதையில் வருவான் என நம்புகிறேன்.
ஒரு வள்ளிக் கிழங்கு அதிகம் வைத்த பொன்னி தான் இனி கந்தனுக்குத் துணை. வாழ்க்கைத் துணையா?? ஆண்டவனுக்கே வெளிச்சம். (முதல் கதாநாயகியின் நிலை ??)
மீண்டும் மிகச் சரியாக கதையோட்டத்தைப் புரிந்திட்ட பின்னூட்டம் திரு.சீனா! பாராட்டுகளும், நன்றியும்!
செல்லி மேல் ஒரு ஈர்ப்பு இருந்ததாகச் சொல்லவே இல்லையே!
விவரம் தெரியாத வயதில் கிடைத்த ஒரு நட்பு.
அவ்வளவே!
செல்வி மேல் ஒரு ஈர்ப்பு இருந்ததாகச் சொல்லவில்லைதான். ஆனாலும் ஒரு நட்புத் தோழி என்ற முறையில் கூட - அவள் கதையின் பிற்பகுதியில் வரலாமே
Post a Comment