Wednesday, September 26, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"


"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" [2]


முந்தைய பதிவு இங்கே!


வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்து வரும்!


[இதுதான் நான் முதலில் எழுதிய முன்னுரை இக்கதைக்கு!

45 நாட்களாக வராததற்கு ஒரு விளக்கமாக முந்தைய பதிவு எழுதினேன்.

எனவே இதையும் படியுங்கள்!]

"ஆன்மிகம் கலங்கலின்றி தெளிவாய் ஆகிக் கொண்டே இருக்கிறது உம்முள்"!

சற்றும் எதிர்பாராமல், இப்படி ஒரு ஆசி ஒரு பெரியவரிடமிருந்து எனக்கு வந்தது சில நாட்களுக்கு முன்னர்.

படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது.

இதற்கு நான் அருகதையானவனா, இல்லையா என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும்.

இப்படி ஒரு ஆசி கிடைப்பதே பெரிய விஷயம்தானே!

எல்லாவிதமான ஆசாபாசங்களுக்கும் ஆட்பட்டு, ஈடுபட்டு, உள்ளுக்கும் வெளியிலுமாக அலைபடும் ஒரு சாதாரண மனிதன்.

ஆனால், ஒரு விஷயத்தில் மிகவும் தெளிவானவன்.

அன்பு செலுத்துவதில், அதை வெளிப்படுத்துவதில்.

செலுத்துவதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

வெளிக்காட்டுவதில்தான் !

அன்பு, அன்பாகவே பெரும்பாலான சமயங்களில் வரும்.
சிலசமயங்களில்.....
அதட்டலாக, கோபமாக, கெஞ்சலாக, ஆத்திரமாக...

இப்படி வெளிப்படும் நேரங்கள்தான் வாழ்க்கையில் பிரச்சினைகளை உண்டாக்கும் நேரங்களாகப் போய்விடுகிறது.

வெகுவாகக் குறைத்து வருகிறேன், இத்தருணங்களை.

இதுதான் கலங்கலின்றித் தெளிவாதலோ!

பார்க்கலாம்!

இப்படி எண்ணங்கள் என்னுள் வந்து கொண்டிருந்த போது, சில மாதங்களாக நான் எழுத நினைத்து,
ஒத்திப் போட்டுக் கொண்டே வரும் ஒரு கதையை இங்கு ஒரு தொடராக வெளியிட எண்ணுகிறேன்.

இது என் கற்பனைக் கதை அல்ல.

நான் படித்த சில புத்தகங்களினால் எனக்குள் எழுந்த ஒரு பாதிப்பு எனச் சொல்வதே சரியாகும்.

கருத்து அங்கிருந்து.

களம் நான் அமைப்பது.

இது எந்தவொரு சித்தரைப் பற்றிய கதையும் அல்ல.

ஒரு மிக மிகச் சாதாரணமான மனிதன், தனது கனவை விடாது பற்றிச் செல்லுகையில் எப்படி அது என்னவாகுகிறது என்பதைப் பற்றிய கதை!

அப்போது ஒரு சித்தர் இதில் வருகிறார்!

ஆன்மீகத் தேடலில் இருப்போர்க்கு விடையாக அமையுமா?

தெரியாது.

அவரவர் தேடலை, அதில் அவர்கள் அடைந்திருக்கும் சாதனை அளவை, வளர்ச்சியைப் பொறுத்தது.

திடீர் திருப்பங்கள் இருக்காது.

ஆனால், ஸ்வாரஸ்யமாக இருக்கும் என நம்புகிறேன்.

ஒரு நாள் விட்டு ஒருநாளாகப் பதிய எண்ணம். [திங்கள், புதன், வெள்ளி என]

என் முதல் முயற்சி இது.

நல்லபடியாக அமைய குருவருள் வேண்டி, இறையருள் நாடி, உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் கோருகிறேன்.

முருகனருள் முன்னிற்கும்!
**********************************

அடுத்த அத்தியாயம்

23 பின்னூட்டங்கள்:

SP.VR. SUBBIAH Wednesday, September 26, 2007 10:16:00 PM  

///ஆன்மீகத் தேடலில் இருப்போர்க்கு விடையாக அமையுமா?///
அமையும்!
அதை உங்கள் கதையில் வரும் சித்த்ர் பார்த்துக்கொள்வார்!

SurveySan Wednesday, September 26, 2007 10:33:00 PM  

ஒ.கே. ஸ்டில் ஆவலுடன்

-சர்வேசன்

;)

பி.கு: தனித் தளத்தில் பதியலாமே?

VSK Wednesday, September 26, 2007 10:44:00 PM  

பில்டப் அவ்ளோதான் கொத்ஸ்!
இனிமே நேரா கதைதான்!
:))

VSK Wednesday, September 26, 2007 10:46:00 PM  

//அமையும்!
அதை உங்கள் கதையில் வரும் சித்த்ர் பார்த்துக்கொள்வார்!//

என்னவொரு நம்பிக்கை!
உங்களை நினைத்தால் பெருமையாகவும், பிரமிப்பாகவும் இருக்கிறது ஆசானே!

:)

VSK Wednesday, September 26, 2007 10:47:00 PM  

//பி.கு: தனித் தளத்தில் பதியலாமே?//

புரியலியே!

சிவபாலன் Wednesday, September 26, 2007 10:57:00 PM  

VSK அய்யா,

உங்கள் இந்த முயற்சியடைய வாழ்த்துக்கள்!

வடுவூர் குமார் Wednesday, September 26, 2007 10:58:00 PM  

சித்தர் கதைகள் என்று சொல்லும் போது நான் படிக்கும் எழுத்தாளர்களில் திரு பாலகுமாரன் & திரு சௌரிராஜனும் தான் ஞாபகத்துக்கு வருவார்கள்.சித்தர்களைப்பற்றி பல விஷயங்கள் இவர்கள் நாவலில் இருக்கும்.
சமீபத்தில் கூட இந்திரா சௌரிராஜனின் நாவலில் ஒரு கதை அருமையாக "நடராஜரின்" படம் போட்டு வந்திருந்தது.மிக அருமையாக இருந்தது."சிவ மயம்" என்று நினைக்கிறேன்.
உங்கள் எழுத்தையும் ஆவலுடன் படிக்க காத்திருக்கிறேன்.

jeevagv Wednesday, September 26, 2007 11:18:00 PM  

பார்க்கலாம், வாழ்த்துக்கள்!

VSK Wednesday, September 26, 2007 11:27:00 PM  

அவர்கள் அளவுக்கு இருக்கிறதா என நீங்கள்தான் சொல்லணும், திரு.குமார்!

:))

VSK Wednesday, September 26, 2007 11:28:00 PM  

பாருங்க! பாருங்க்க! திரு.ஜீவா!

நல்லாவே இருக்கும்னு நம்பறேன்!

VSK Wednesday, September 26, 2007 11:28:00 PM  

அந்த லிங்க் வொர்க் ஆவலியே, சர்வேசன்!

SurveySan Wednesday, September 26, 2007 11:41:00 PM  

VSK, அந்த மாதிரி தனித்தளத்துல பதியுங்கன்னு சொல்றேன் டோட்டர் சாரே :)

sitharstory யாரும் எடுக்கல இன்னும். பெயர் புடிச்சிருந்தா டக்குனு புடிச்சுடுங்க.

VSK Wednesday, September 26, 2007 11:45:00 PM  

புரிஞ்சுது!
குமரன் மாதிரி தனி வலைப்பூன்னு சொல்லியிருந்தா இந்த மரமண்டையில ஏறியிருக்கும்!
::))

நன்றி!

வல்லிசிம்ஹன் Thursday, September 27, 2007 2:23:00 AM  

அன்பு, அன்பாகவே பெரும்பாலான சமயங்களில் வரும்.
சிலசமயங்களில்.....
அதட்டலாக, கோபமாக, கெஞ்சலாக, ஆத்திரமாக...
//
இந்த நிலை மாறினாலே நாம் வளர்கிறோம் என்றுதான் நினைக்கிறேன்.

இன்னும் பொறுமை,இன்னும் நிதானம் கிடைக்க தினமும் கடவுளை வேண்டுகிறேன்.
ஏனெனில் நாம் சொல்லும் வார்த்தைகளே சில சமயம்நமக்கு எதிராக்ப் போகிறது.
உங்களது தொடரால் இன்னும் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

G.Ragavan Saturday, September 29, 2007 10:01:00 AM  

அருமை. கதை அடுத்த பகுதியிலா... காத்திருக்கிறேன்.

நாமக்கல் சிபி Wednesday, October 03, 2007 1:10:00 PM  

முதல் பார்ட் ஓவர்!

ஆரம்ப வரிகளில் ஆர்வத்தைத் தூண்டும் அசத்தலான அறிமுகம்!

சோழன் Friday, October 05, 2007 1:13:00 AM  

அழகான ஆரம்பன்...
உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்...

மங்களூர் சிவா Sunday, October 07, 2007 1:43:00 AM  

முருகனருள்
கண்டிப்பாக
முன்னிற்கும்!

VSK Sunday, October 07, 2007 9:53:00 AM  

மிக்க நன்றி, திரு. மங்களூர் சிவா.

cheena (சீனா) Saturday, October 20, 2007 1:50:00 AM  

நண்பரே !!
//அன்பு, அன்பாகவே பெரும்பாலான சமயங்களில் வரும்.
சிலசமயங்களில்.....
அதட்டலாக, கோபமாக, கெஞ்சலாக, ஆத்திரமாக...//

உண்மை உண்மை. அன்பை வெளிப்படுத்தும் போது கூட சூழ்நிலைகள், மன அழுத்தங்கள், பழைய நிகழ்ச்சிகளின் நினைவுகளின் காரணமாக உள்ளத்தின் ஆழத்திலிருந்து வர வேண்டிய சொற்கள் உதட்டின் நுனியிலிருந்து வருகின்றன. அதன் பின் விளைவுகள் அன்பை வெளிப்படடுத்தியதன் விளைவுகளாக இல்லாமல் போகிறது. என் செய்வது

VSK Saturday, October 20, 2007 4:59:00 PM  

//அதன் பின் விளைவுகள் அன்பை வெளிப்படடுத்தியதன் விளைவுகளாக இல்லாமல் போகிறது. என் செய்வது?//

இது ஒரு தவிர்க்க இயலாத செயலாகவே பெரும்பாலும் நிகழ்கிறது.

கட்டுப் படுத்த முயலலாம்.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP