இதோ வந்துவிட்டேன்!
"இதோ வந்துவிட்டேன்!"
'எங்கே உங்களைக் காணோம்? என்ன ஆயிற்று?' எனப் பல மடல்கள், தொலைபேசிகள்!
ஆம்! நான் காணாமல்தான் போயிருந்தேன்!
கடந்த 45 நாட்களாக ஒரு தவம்!
ஒரு நாவல் எழுத ஒரு உந்தல்!
அப்படி ஒன்றும் பெரிய எழுத்தாளனல்ல நான்.
என் மனதில் தோன்றியவற்றை கவிதைகள் மூலம்[கொத்ஸ் அதைக் கவுஜ என்பார்!] அவ்வப்போதும், திருக்குறள், திருப்புகழ் பாடல்களில் சிலவற்றையும் எனக்குத் தெரிந்தவரையில் எழுதியது தவிர, பெரிதாக ஒன்றும் எழுதியதில்லை.
ஆனால், ஒரு சில ஆன்மீகப் புத்தகங்களைப் படித்து வருகையில், இவற்றையொட்டி ஒரு கதையைச் சொல்லவேண்டும் என ஒரு எண்ணம் இருந்து கொண்டே இருந்தது.
அதை உறுதிப் படுத்தும் விதமாக ஒரு சகுனம் எனக்குத் தெரிந்தது.
பொதுவாகவே இந்த சகுனங்களில் நம்பிக்கை உள்ளவன் நான்.
நடந்த நிகழ்வுகள் இதை உறுதிப் படுத்தின.
எழுதத் தொடங்கினேன்!
என்னால் முடியுமா என்ற ஒரு அவநம்பிக்கையோடே!
ஆனால், இது உருவான விதம் எனக்குள்ளேயே ஒரு பிரமிப்பை உண்டுபண்ணியது என்றால், அது மிகையில்லை.
இதை எழுத எனக்கு ஊக்கம் அளித்த ஒரே நபர் என் மனைவி!
[உற்சாகமூட்டியவர் எனது இனிய நண்பர் திரு.கோவி.கண்ணன், இதன் களம் என்னவென்று தெரியாமலேயே!]
ஒவ்வொரு அத்தியாயமும் எழுதிய பின்னர் அதைப் படித்து, அப்படியே இதை ஒரு திருத்தமுமின்றி என் மனைவி அங்கீகரித்தபோதுதான் எனக்கு ஒரு உண்மை புலப்பட்டது.
இந்தக் கதையில் வருவது போல, இதெல்லாம் நம் மனித முயற்சியால் நிகழ்வதல்ல!
ஏதோவொரு சக்தி மேலிருந்து தூண்டுவதால் நிகழ்வதென்!
இந்தக் கதை சொல்லப்பட வேண்டிய ஒரு கதை!
நான் அதற்கொரு கருவி!
அவ்வளவே!
இதைப் படிப்பவர்க்கும் அவ்வாறே!
செல்ல வேண்டியவர்க்கே இது செல்லும்!
இதை ஏதாவது ஒரு பத்திரிகைக்கு அனுப்பலாமே என ஒரு எண்ணம் வந்தது, முதலில்!
நம்மை அங்கீகரிப்பவர்களே..... அவர்கள் எவ்வளவு பேராயினும் சரி.... அவர்கள் பார்வைக்கே இது போய்ச் சேரட்டும் என ஒரு ஆணை மனதில் உதித்தது!
எனவே இது இங்கு... உங்கள் பார்வைக்கு!
படித்தவர்கள் தயவு செய்து எங்காவது ஒருமுறை தங்கள் முகத்தைக் காட்டினால் மகிழ்வேன். அது உங்கள் விருப்பம்! கட்டாயமில்லை.
இத்தனை பீடிகைக்குப் பின்னர், இனி அதிகம் சொல்ல ஒன்றுமில்லை.
நிச்சயம் இது உங்களுக்குப் பிடிக்கும்.
இனி வருவது.....
"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்!"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அடுத்த அத்தியாயம்
45 பின்னூட்டங்கள்:
//"இதோ வந்துவிட்டேன்!"//
விஎஸ்கே ஐயா,
மீள்வருகையை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.
உங்கள் ஆக்கம் வெற்றிகரமாகும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
//இந்தக் கதையில் வருவது போல, இதெல்லாம் நம் மனித முயற்சியால் நிகழ்வதல்ல!//
முன்கூட்டியே சொல்லிவிட்டதால் எனது விமர்சனங்கள் எதுவும் வந்து தொந்தரவு படுத்தாது
:)
இவ்ளோ பில்ட்-அப்பா?
கத எங்கே கத எங்கே?
ஆவலுடன்,
-சர்வேசன் ;)
சார்,
பதிப்பிக்கும் எண்ணமில்லாவிட்டால் தயயைகூர்ந்து PDFஆகவும் தரவும்.
நன்றி.
எழுதுகிறீர்கள் என்று தெரிந்ததால் தான் "தெரியும்" போது கூட அழைக்கவில்லை.
படிக்க காத்திருக்கிறேன்.
//விஎஸ்கே ஐயா,
மீள்வருகையை இருகரம் கூப்பி வரவேற்கிறேன்.
உங்கள் ஆக்கம் வெற்றிகரமாகும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.//
மிகவும் ராசியான கரங்களால் வாழ்த்து பெறுவதை மன மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்.
அடுத்த பின்னூட்டத்தில் சொல்லியது போல், விமரிசனம் செய்யாமல் இருக்க வேண்டாம்!
விமரிசனங்கள் வரவேற்கப் படுகின்றன!!
:))
சீக்கிரம் போடுங்க.தலைப்பைப் பார்த்தால் சுவாரசியமாய் இருக்கும்போல !
-usha
//கத எங்கே கத எங்கே?//
கதை எழுதி முடித்த திருப்தியில், தமிழ்மணத்தை நுகர்வதற்காக, அவசரமாக வெளியிட்டபதிவு இது!
இன்னுமொரு பில்ட்-அப்பும் இருக்கிறது!
அதன் பிறகுதான் கதை வரும்!
நன்றி, சர்வேசன்
:))
கதை ஆரமிப்பதர்குள் PDF செய்வது எப்படி எனக் கற்றுக் கொண்டு விடுகிறேன்!
நன்றி, திரு அனானி, தங்கள் ஆலோசனைக்கு.
என்னாலும் கூட காத்திருக்க இயலாமல்தான் அவ்வ்சர அவசரமாகப் பதிந்திருக்கிறேன், திரு. குமார்.
உங்களையெல்லாம் பார்க்காமல், எனக்கும் பைத்தியமே பிடித்தது போல இருந்தது.
மிக்க நன்றி.
நிச்சயம் உங்கள் ஆவல் பொய்யாகாது என நம்புகிறேன்.
முருகனருள் முன்னிற்கும்!
//சீக்கிரம் போடுங்க.தலைப்பைப் பார்த்தால் சுவாரசியமாய் இருக்கும்போல !
-usha//
அதான் வந்திட்டோம்ல!
இனிமே கலக்கல்தான்!
:))
நாளை முதல் தொடர்ந்து வரும்.
நான் சித்தர் இலக்கியங்களில் ஈடுபாடு உள்ளவன். காவிக் கூட்டங்கள், மூட நம்பிக்கைகளைஎதிர்த்தவர்கள் திராவிட இயக்கம் வருவதற்கே முன்பே சாதனைகள் செய்தவர்கள் நம்மூரு சித்தர்கள். அவர்கள் பற்றிய கதை என்பதால் நானும் ஆர்வமாக உள்ளேன்.எங்கூரு(பழனி!) கடவுள் முகம் தாங்கி வரும் தங்கள் வலைப்பூவில் சித்தர்கள் கதை வருவது சாலப்பொருத்தமே! முதலில் உங்கள் நாவலுக்கு வாழ்த்துக்களைப் பிடிங்க.. அப்புறம் படிக்கலாம்!
ஆஹா தவமாய் தவமிருந்து வரும் கதையா இது. வரட்டும் பார்த்துக்கொள்கிறோம்
நீங்கள் வருவதற்கு அறிவிப் பெதற்கு?
------------------------------------------------------
தென்றல் சொல்லிவிட்டா தழுவ வருகிறது?
தேன்தமிழ் கேட்டுவிட்டா தித்திப்பைத் தருகிறது?
மல்லிகை பார்த்துவிட்டா மணத்தைத் தருகிறது?
காலம் சொல்லிவிட்டா இதயங்களை இணைக்கிறது?
நட்புடன்
SP.VR. சுப்பையா
வாங்க எஸ்.கே.. வாங்க...
புது தொடரா எழுதுங்கள்.. தொடந்து வந்துடுவோம்....
முடிஞ்சுதா! சபாஷ். அதுனாலதான் உங்களை மின்னரட்டையில் கூட ரொம்ப தொந்தரவு செய்யலை.
கதையைக் கட்டாயம் படிக்க ஆவலாய் இருக்கிறது. பில்ட் அப் எல்லாம் படிச்சுட்டு கதைக்குள் போனால்தான் சுவாரசியம். காத்திருக்கிறேன்.
மேலே தமிழ்மணப்பட்டையில் PDF என்ற இடத்தில் சொடுக்கினால் பதிவுகளைப் PDF கோப்புக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.
சத்தமில்லாமல் ஒரு சாதனை! காத்திருக்கிறோம்!
///இந்தக் கதையில் வருவது போல, இதெல்லாம் நம் மனித முயற்சியால் நிகழ்வதல்ல!
ஏதோவொரு சக்தி மேலிருந்து தூண்டுவதால் நிகழ்வதென்!
இந்தக் கதை சொல்லப்பட வேண்டிய ஒரு கதை!
நான் அதற்கொரு கருவி!
அவ்வளவே!
இதைப் படிப்பவர்க்கும் அவ்வாறே!
செல்ல வேண்டியவர்க்கே இது செல்லும்!///
நிதர்சனமான உண்மை!
கவியரசர் கண்ணதாசன் சொல்லுவார் - கடவுள் இரண்டுமுறை சிரிப்பாராம்
ஒரு காரியத்தை முடித்து விட்டு அல்லது ஒரு சாதனையை
நிகழ்த்திவிட்டு - இதை நான் செய்தேன்/சாதித்தேன் என்று ஒரு மானிடன்
சொல்லும்போது ஒருமுறையும், ஒரு மருத்துவர் - இவரை நான் காப்பாற்றுகிறேன் அல்லது காப்பாற்றினேன் என்று சொல்லும்போது ஒருமுறையும் கடவுள் சிரிப்பாராம்!
இறைவனின் சக்தியை எவ்வளவு எளிமையாகச் சொன்னார் பாருங்கள்
எல்லாம் அவன் சித்தம்!
அந்தப் பழநி தண்டாயுதத்தான் உங்களை எழுதவைக்கின்றான்
எழுதுங்கள்; துணை வருவான்
துவக்கம்தான் இது!
அவன் துணையென்றால் ஒன்றென்ன - பத்து நாவல்கள் நாவல்கள்
எழுதலாம். அத்தனையும் எழுத்துலகில் ஏற்றம் பெரும்
அருணகிரியாருக்கு - அவன் கொடுத்தது ஒரு சொல்தான்
'முத்து' என்ற ஒரு சொல்தான்
எத்தனை பாடல்களை அவர் இயற்றினார்
அவர் பாடலுக்கு ஈடாக அவன் புகழை இன்றுவரை
எந்தக் கவிஞனும் பாடவில்லை!
இருகரம்குவித்து வணங்கிறேன் -
அதுவே, உங்களுடைய புதிய தொடருக்கு
இந்த எளியவனின் வாழ்த்தாகவும் இருக்கட்டும்!
அன்புடன், நட்புடன்
SP.VR.சுப்பையா
வி.எஸ்.கே சார்,
உண்மையாகவே என்ன ஆச்சு என்றூ யோசித்துக்கொண்டிருந்தேன்.
சித்தர் வருகிறாரா.
கட்டாயம் இப்போது இவர்கள் தேவை.
ஆன்மீகம் வளரட்டும்.
நல்வரவு.
வாழ்த்துக்கும், உற்சாகமூட்டும் மொழிகளுக்கும் மிக்க நன்றி, திரு. ஓசை செல்லா!
அன்பு மிரட்டலான வாழ்த்துக்கு என் பணிவான நன்றி, தி.ரா.ச. ஐயா!
பார்த்துக் கொள்கிறோம் எனச் சொல்வதே தெம்பாக இருக்கிறது.
அன்பு சொல்லிக்கொண்டா வாழ்த்த வருகிறது?
இதயம் தடுப்பதாலா வெளிக்காட்டாமல் போகிறது?
மாணவன் கேட்டா ஆசான் பாடம் நடத்த வருகிறார்?
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் ஆசானே!
தங்களது வழமையான வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றி.
தொடக்கத்தினின்றே என்னுடன் வருபவர் நீங்கள், திரு.சிவா.
வரலேன்னா விட்டுருவோமா?
அதுவும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரங்க வேற!
இன்னும் பழைய பாக்கி வேற அப்படியே நிக்குது!
:))
உங்களுக்கு நான் தனியா ஒரு நன்றி சொல்லணும்.
அதை அப்புறமா வைச்சுக்கறேன், கொத்ஸ்!
PDF செய்வது எப்படி எனச் சொன்னதற்கு நன்றி.
புரியலைன்னா திரும்பவும் வந்து தொந்திரவுவேன்!
:))
சாதனை எல்லாம் ஒண்ணுமில்லை தலைவி.
படித்துவிட்டு சொல்லுங்க!
நன்றி.
தங்களது சொற்கள் மிகப் பெரிய உற்சாகத்தைத் தருகிறது, ஆசானே!
தங்களது நட்பு எனக்கு "அவன்" அளித்த கொடை எனவே கருதுகிறேன்.
மீண்டும் நன்றி.
சித்திர ராமயணம் போன்ற பதிவுகளில் நீங்கள் செய்திருப்பதைவிட இது ஒன்றும் பெரிதல்ல எனவே கருதுகிறேன், வல்லியம்மா.
ஆனாலும், அவசியம் படித்துவிட்டு கருத்து சொல்லுங்க!
நன்றி
வாங்க வாங்க..எங்ககிட்ட டூ விட்டுட்டீங்கன்னு நினச்சேன்...
இப்படியெல்லாம் சொல்லி என்னை விரட்ட முடியாது, மங்கை அவர்களே!
நன்றி!
:))
SK
லப்டப் தெரியும்! அது என்ன பில்டப்? :-)
வாழ்த்துக்கள் SK! சித்தரைப் படிக்கச் சித்தமாய் இருக்கோம்!
//இலவசக்கொத்தனார் said...
மேலே தமிழ்மணப்பட்டையில் PDF என்ற இடத்தில் சொடுக்கினால் பதிவுகளைப் PDF கோப்புக்களாக மாற்றிக் கொள்ள முடியும்//
அது வேலை செய்யலை போல இருக்கே!
வாங்க அய்யா!
காத்திருக்கிறேன்... ஆவலுடன்!!
வந்துட்டம்ல!
பீடிகை பலமா இருக்கு!
அதனால ஆவலோட இருக்கிறேன்!
சித்தர்கள் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை அவர்களின் பாடல்களையோ வாழ்க்கையையோ வாசித்ததில்லை.
உங்களின் நாவல் மூலம் சித்தர்களைப் பற்றி அறியக் கூடியதாக இருக்குமென நம்புகிறேன்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். காத்திருக்கிறோம் விருந்திற்கு. மருத்துவரிடம் மருந்து மட்டுமல்ல விருந்தும் கிடைக்கும் என்று தெரிகிறதே! முன்பு திருப்புகழ் விருந்து. இப்பொழுது சித்த வி(ம)ருந்து :)
என்னங்க ரவி, இப்படி ஒரு குண்டை தூக்கிப் போடறீங்க?
சரி, இருங்க, கூப்பிடறேன்!
:))
மிக்க நன்றி, திரு. தென்றல்
இது எந்த ஒரு குறிப்பிட்ட சித்தரைப் பற்றிய பதிவில்லை திரு. வெற்றி!
நம்மைப் போன்ற ஒரு சாதாரண மனிதனின் கதை.
அதில் சித்தருக்கு ஒரு பெரும் பங்கு இருக்கிறது.
படித்துவிட்டுச் சொல்லுங்கள்!
நன்றி.
விருந்தும் மருந்தும் மூன்று வேளை எனச் சொல்வார்கள் ஜி.ரா.!
இது மூன்று மாதம் என ஒரு எச்சரிக்கையை மட்டும் இப்போதைக்குச் சொல்லித் தப்பித்துக் கொள்கிறேன்!
:))
சிபியாரே!
பில்டப் எல்லாம் ஒன்றுமில்லை.
படிச்சிட்டு சொல்லுங்க!
அய்யா (வி).எஸ்.கே,
என்ன எல்லாம் மீண்டும் வந்து விட்டேன்னு பதிவு போடுறாங்க!
நீங்க காணாமல் போனதே எனக்கு தெரியாது, ஆனால் வர வேண்டிய நேரத்துக்கு வந்துட்டிங்க போல!
கொஞ்சகாலத்திற்கு முன்னர் குமரன் அவர்கள் ஒரு சித்தர் கதைய விட்டுக்கிட்டு இருந்தாங்க , இப்போ அடுத்த சித்தர நீங்க வெளியிடுங்க!
பிதாமகன்ல வந்த சித்தன் போல இருக்கதே? :-))
//பிதாமகன்ல வந்த சித்தன் போல இருக்கதே? :-))//
அதை நீங்களே படிச்சிட்டு சொல்லுங்க, திரு. வவ்வால்!
:))
//இதை எழுத எனக்கு ஊக்கம் அளித்த ஒரே நபர் என் மனைவி!//
விஎஸ்கே ஐயா,
முன்பே குறிப்பிட்டு பாராட்ட தவறிவிட்டேன். இந்த ஆக்கத்தில் உறுதுணை புரிந்த அம்மாவுக்கும் பாராட்டுக்கள் !
வி.எஸ்.கே !!
இந்தச் சித்தர் என்ற கனவு மெய்ப்படும் எனற பதிவுகளின் பின்னூட்ட அறிவிப்பினை பல நாட்களாக தமிழ் மணத்தில் கண்டு வருகிறேன். ஒவ்வொரு முறையும் இப்பதிவிற்கு வர வேண்டுமென நினைப்பேன் - வர மாட்டேன். ஏனெனத் தெரியாது. ஆனால் இன்று அந்த அறிவிப்பினைப் படித்த உடனேயே ஏதோ ஒன்று மனதை மயக்கி இங்கு அழைத்து வந்து விட்டது. சூடான இடுகைகளையே பொதுவாகப் படிக்கும் நான் இன்று இங்கு வந்தேன். வந்து பார்த்தால் நண்பர்கள் சுப்பையா, குமரன், கேயாரெஸ், வல்லி போன்ற ஆத்திக அன்பர்களும் மற்ற நண்பர்களூம் பின்னூட்டம் இட்டிருக்கின்றனர். மனதில் ஒரே மூச்சில் அனைத்துப் பதிவுகளையும் படிக்க வேண்டும் என ஒரு ஆசை வந்து விட்டது. தொடங்குகிறேன்
வாங்க திரு. சீனா!
உங்க கருத்துகள் வரவேற்கப் படுகின்றன!
நன்றி.
"சித்தர்" [என்கிற] "கனவு மெய்ப்படும்!" this article is has all the ingredients of "Alchmeist" by paul cohelo .. If possible please read that
thanks
AJ
Post a Comment