Sunday, September 30, 2007

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 7

"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!" -- 7

முந்தைய பகுதி இங்கே!5. "ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இனிஒருவற்கு

அஃதிறந்து வாழ்தும் எனல்" [971]


சட்டென நிமிர்ந்தான் கந்தன்!

இவருக்கு எப்படி நான் ஆடு மேய்க்கறவன்னு தெரிஞ்சுது?

ஒரு விதமான பயத்துடன் அவரைப் பார்த்து,
"ஏதோ, தேவையானது இருக்கு."
எனச் சொன்னான்.

"அப்போ பிரயோசனமில்லை. இது கொஞ்சம் கஷ்டம். ஒனக்குத் தேவையானது ஒன்கிட்ட இருக்குன்னா, என்னால ஒண்ணும் பண்ண முடியாது"
என்றவரைப் பார்த்து,

'நான் இவர்கிட்ட எதுவும் உதவின்னு கேக்கலியே. இவரா வந்து ஏன் இப்படிச் சொல்றார்'னு சற்றுக் கோபமானான் கந்தன்.

"தோ! நீயா வந்தே, சோறு கேட்டே. குடுத்தேன். புத்தகத்தைப் பாத்தே. இப்போ எதெதையோ சொல்றே! எனக்கு ஒண்ணும் புரியலை.
என் புஸ்தகத்தைக் கொடுங்க! நான் போவணும்" என்றான்.

'ஒங்கிட்ட இருக்கற ஆடுங்கள்ல பத்துல ஒரு பாகம் எனக்கு குடு. புதையல் எங்கே இருக்குன்னு நான் ஒனக்கு சொல்றேன்"
என்றான் கிழவன் அமைதியாக!

உறைந்து போனான் கந்தன்!

'அந்தக் கிழவியாவது ஒண்ணுமே வாங்கிக்கலை என்கிட்ட! இவரு அதை ஒட்டுக் கேட்டிருப்பாரு போல. அதை வெச்சு என்னோட ஆட்டை வாங்கப்
பாக்கறாரு. சீக்கிரமாக் கிளம்பிறணும் இந்த இடத்தை விட்டு' என எண்ணியவாறே, எழ முயற்சித்தவன்,

கிழவன் இவனை லட்சியமே செய்யாது, பக்கத்தில் கிடந்த ஒரு குச்சியை எடுத்து தரையில் ஏதோ வரைவதைக் கவனித்தான்.

கிழவன் மார்பில் இருந்த துணி சற்றே விலகி இருந்தது.

மார்பில் ஒரு தங்க ஒளி!

இலைகளால் கோத்த ஒரு தங்கமாலை போல ஏதோ ஒன்று சூரிய ஒளியில் மின்னியது.

சரேலென்று, தன் துணியை மூடினான் கிழவன்!

கந்தன் அவன் என்ன எழுதுகிறான் எனப் பார்வையைத் திருப்பினான்.

அங்கே.....

கந்தனின் தாய் தந்தையர் பெயர்களும், செல்லி என ஒரு பெயரும் எழுதப் பட்டிருந்தன!

"எனக்கு எப்பிடி இதெல்லாம் தெரியும்னு அதிசயப் படறியா? நாந்தான் சொன்னேனில்ல சிதம்பரத்துக்கு ராசா நானுன்னு!" எனச் சிரித்தான் கிழவன்!

'ஒரு ராசா வந்து எதுக்கு என்னியப் போல ஒரு ஆடு மேய்க்கறவனோட பேசணும்?' என தயக்கத்துடன் கேட்டான், கந்தன்.

'அதுக்கு எத்தினியோ காரணம் இருக்கும். இப்போதைக்கு, நான் சொல்றதை மட்டும் கேளு! நீ ஒன்னோட லட்சியம் எதுன்னு தெரிஞ்சுகிட்டே; அதுக்காவத்தான் நான் இப்பிடில்லாம் பேசறேன்னு
வெச்சுப்போமே! சின்ன வயசுல ஒவ்வொருத்தனுக்கும் தான் இன்னா பண்ணனும்னு ஒரு நெனப்பு வரும். அந்த வயசுல எல்லாமே
தெளிவா இருக்கும். இதான்,.... இன்ன வளியிலதான் பண்ணனும்னு ! தான் இன்னாவா ஆவணும்,
அதுக்கு என்னல்லாம் பண்ணனும்னு கூடத் தெளிவாத் தெரியும். ஆனா, நாளாவ, நாளாவ, அவனுக்கே தெரியாம,
ஒரு அவநம்பிக்கை அவன் மனசுல வர ஆரம்பிக்கும். இது நம்மால முடியாது. இதுக்கு யாரும் ஒதவ மாட்டாங்கன்னு
அவனே இப்ப முடிவு பண்ண ஆரம்பிச்சிடுவான்.'

கந்தன் ஒன்றுமே புரியாமல் அவரைப் பார்த்தான். கிழவன் பேசிக்கொண்டே போனான்.

'தொவக்கத்துல பாத்தியானா, இது ஒன்னோட லட்சியத்துக்கு நேர்மாறா இருக்கற மாரித்தான் தோணும். ஆனா, கவனமாப் பாத்தியானா,
இந்த லட்சியத்தை நீ அடையறதுக்கான தடைங்களைத்தான் இது பட்டியல் போட்டுக் காட்டுதுன்னு புரியும். ரொம்பப் பேருக்கு இது புரியறதுல்ல.
ஆகா!இத்தினி கஷ்டம் இதுல இருக்கான்னு மலைச்சிப் போயி, சரி, நம்ம விதி அவ்ளோதான்னு அப்பிடியே விட்டுருவானுக!கொஞ்சப் பேருங்கதான், இந்த சூட்சுமத்தைப் புரிஞ்சுகிட்டு, இதான் நமக்கு இந்த ஆண்டவன் செய்யணும்னு விதிச்சிருக்காரு. இது என்னோட
ஆத்மா சொல்ற விசயம். இந்தத் தடையை எல்லாம் அதுதான் எனக்கு காட்டுது. அதைத் தாண்டி உடைச்சுகிட்டு நான் இதை செஞ்சு முடிப்பேன்னு
கிளம்புவானுங்க! இப்ப அதான் உனக்கும் புரிஞ்சு இருக்கு!"

இன்னமும் விளங்காமல், கந்தன், அவரைப் பார்த்து,"பல ஊருக்கும் போவணும். செல்லியோட பேசணும். ஆடு வளக்கணும்.
இதான் என் லட்சியம்னு இருக்கற எனக்குமா?" என அவநம்பிக்கையோடு கேட்டான்.

'ஆமா! அது மட்டுமில்ல! கனவுல கண்ட புதையலை அடையணும்னு ஒரு வெறி இப்ப ஒனக்கு வந்திருக்கு. ஒனக்கு இருக்கற மாதிரியே
இந்த ஒலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு.அதுக்கு இந்த ஒலகத்துல இருக்கற மனுஷங்களோட சந்தோசம்தான் முக்கியம்.கூடவே துக்கம், பொறாமை, வெறுப்பு இதெல்லாமும் அதுக்கு இருக்கு. ஆனா, இதெல்லாமே அதுக்கு ஒண்ணுதான். வேறுபாடே இல்லை அந்த ஆத்மாவுக்கு!
நீ இதுல எதுனாச்சும் ஒண்ணை... அது சந்தோசமோ, துக்கமோ, இல்லை பொறமையோ எதுன்னாலும் சரி,... தீர்மானமா விரும்பினியானா
அந்த ஆத்மா உன்கூடவே இருந்துகிட்டு, அதை உனக்கு கிடைக்க ஒதவும். இதான் சூட்சுமம்."

இருவரும் சற்று நேரம் மௌனமாக இருந்தனர். கிழவன் கந்தன் முகத்தையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.
கந்தன் கிழவர் சொன்னதை மனதில் உள்வாங்கி யோசித்துக் கொண்டிருந்தான்.

"இன்னமும் எம்மேல நம்பிக்கை வரலைல்ல ஒனக்கு? சரி!....உங்க வாத்தியாரு என்ன சொன்னாரு உனக்கு?" எனத் திடீரெனக் கேட்டார் கிழவர்!

திகைத்துப் போனான் கந்தன்!

......."கந்தா! உலகம் இந்த ஊரோட நின்னு போகலை. இதுக்கு மேலேயும் இருக்கு. உன்னைச் சுத்தி நடக்கற ஒவ்வொண்ணுத்தையும்
கவனமாப் பாரு.எதையும் மறக்காதே! எல்லாமே ஒருநாளைக்கு உனக்கு உதவும்.பல இடத்துக்கும் போகப் பாரு.
எங்கே இருந்தாலும் நீ நல்லா இருப்பே"...........


வாத்தியார் சொன்னதை அப்படியே ஒப்பித்தான் கந்தன்.

'அதெப்படி ஒங்களுக்குத் தெரிஞ்சுது?' அவன் குரலில் ஒரு மரியாதை தானாக வந்தது!

"அதை விடு! அதோ அங்கே கடை போட்டிருக்கான் பாரு! அவனும் ஒன்னிய மாரித்தான். பல ஊரும் பாக்கணும்னு நினைச்சான். ஆனா, அதுக்குப் பணம்
வேணுமேன்னு நினச்சு, அந்தக் கடையைப் போட்டு, கொஞ்சம் கொஞ்சமா பணம் சேத்துகிட்டு வரான்!
வயசானதும் ஒருநாளைக்கு, பட்டணம்லாம் போவணும்னு முடிவு பண்ணியிருக்கான்! நெனைச்சிருந்தா, எப்போ வேணும்னாலும் போயிருக்கலாம்.
ஆனா, அதுக்கு முந்தி, தான் ஒரு பணக்காரன் ஆவணும், பணம் சேக்கணும்னு ரூட்டை மாத்திகிட்டான். நெனச்ச மாரி, அப்பவே
கிளம்பியிருந்தான்னா, இந்நேரம் பல ஊருங்களைப் பாத்திருப்பான். ஆனா செய்யலை." என நிறுத்தினான்.


"ஆமா. இப்ப எனக்கு ஏன் இதையெல்லாம் சொல்றீங்க?" எனக் கேட்டான் கந்தன்.


"ஏன்னா, இப்ப நீ என்ன செய்யணும் நாமன்னு ஒரு முடிவு எடுக்கற எடத்துல நிக்கறே! அதையெல்லாம் விட்டுட்டு, திரும்பவும்ஆடு மேய்க்கவே போயிறலாமான்னும் யோசிக்கறே! அதான்!" என்றான் கிழவன்.


'ஓ! அப்ப இது மாரி இருக்கறப்பத்தான் நீங்க ஒவ்வொர்த்தர்கிட்டேயும் வருவீங்களோ?' எனச் சற்று ஏளனமாக வினவினான் கந்தன்.


அவனது ஏளனத்தைச் சட்டை செய்யாமல், "இதே மாரி வருவேன்னு சொல்ல முடியாது. ஆனாக்க, எதுனாச்சும் ஒரு வளியில நான் வருவேன்!என்ன பண்றதுன்னு பம்மிகிட்டு இருக்கறப்ப ஒரு தீர்மானமா, இல்லேன்னா, யார் மூலமாச்சும் ஒரு ஆலோசனையா, வருவேன். சில சமயம், கடைசி நிமிஷத்துல வந்து பிரச்சினையை சுளுவா தீத்து வைப்பேன்.இதையெல்லாம் லட்சியம் பண்ணாம அவன் போறானா, அதையும் சிரிச்சுகிட்டே பாப்பேன்! ரொம்ப நேரத்துல நாந்தான் வந்தேன்னே தெரியாது. தானே சமாளிச்சிட்டதா நெனைச்சிக்குவான். சர்த்தான் போடான்னு விட்டிருவேன்!


இப்பிடித்தான் ஒர்த்தன், எதுவானாலும் சரி, முட்டம் கடலாண்டை கிளிஞ்சல் பொறுக்கியே பெரிய ஆளாயிடுவேன்னு சதா சர்வகாலமும் அதையே செஞ்சுகிட்டு இருந்தான்.ஒருநாளு, அவனுக்கும் பொறுமை போயிடுச்சி.இன்னிக்குத்தான் கடைசி நாளு. இன்னிக்கும் ஒண்ணும் கிடைக்கலைன்னா, சர்த்தான் போடான்னு விவசாயம் பண்ணப் போயிடலாம்னு முடிவுபண்ணிட்டான்.அன்னிக்கும் ஒண்ணும் கிடைக்கலை.கிளம்பற நேரம்.அப்பவும் அவனுக்கு இந்த லட்சியத்தை விட மனசில்ல.கடைசி கடைசியா ஒரு தடவை பார்த்துறலாம்னு சல்லடையைப் போட்டான்.அவனோட விடாமுயற்சியப் பாத்த நான், ஒரு பெரிய சிப்பியா என்னை மாத்திகிட்டு, அந்த சல்லடையில போயி விளுந்தேன்.அவனுக்கா ஒரே கோவம்!வெறுப்புல என்னைத் தூக்கி ஒரு கல்லு மேல எறிஞ்சான்.சிப்பி உடைஞ்சுது.உள்ளேருந்து இம்மாம் சைசுல ஒரு பெரிய நல்முத்து!இன்னிக்கு அவன் பெரிய பணக்காரன்!இன்னமும் சல்லடை போடறான்.... ஆளுங்களை வெச்சு!" என்றார் கிழவர்.


'அதெல்லாம் சரி! என்னோட புதையலைப் பத்தி ஒண்ணுமே சொல்லலியே?"


"அது தெரியணும்னா, எனக்கு நீ பத்துல ஒரு பங்கு ஆட்டைக் கொடுக்கணும்!"
கிழவி நினைவு சட்டென வர, 'கிடைக்கற புதையல்ல பத்துல ஒரு பங்குன்னு வெச்சுப்போமே' என்ற கந்தனை ஏமாற்றத்துடன் பார்த்தார் கிழவர்.


"இல்லாத ஒண்ணுல எனக்கு பங்கு தர நீ ஆரம்பிச்சேன்னா, அதை அடையறதுக்கான ஆசை ஒனக்கு இல்லாமப் போயிடும்" என்றார்.


'இல்லே! அதுதான் அந்த சோசியக்கார கிளவிக்கு தர்றதா சொல்லியிருக்கேன். அதான்...." என இழுத்தான் கந்தன்.


'அது அந்தக் கிளவியோட! எனக்கு என்ன வந்திச்சு அதுல? பரவாயில்லை! அந்த மட்டுக்கும் எதுவும் சும்மாக் கிடைக்காதுன்னு புரிய வெச்சாளே கெளவி. அந்த மட்டுக்கு அது உத்தமம்தான்" எனச் சொல்லியவாறே, புத்தகத்தைத் திருப்பி கந்தனிடம் கொடுத்துவிட்டு எழுந்தார் கிழவர்!


"நாளைக்கு இதே நேரம், இதே எடம்! உன்கிட்ட இருக்கற ஆடுங்கள்ல பத்துல ஒரு பங்கை ஓட்டிகிட்டு வா! நான் ஒனக்கு புதையல் எங்கே இருக்குன்னு சொல்றேன்" எனச் சொல்லிவிட்டு, விறுவிறுவென நடந்த கிழவர் கடையைத் தாண்டி திரும்பியதும் மறைந்து போனார்!


[தொடரும்]


*******************************

அடுத்த அத்தியாயம்

28 பின்னூட்டங்கள்:

வடுவூர் குமார் Wednesday, October 03, 2007 8:25:00 PM  

புதையல் தேடல் ஆரம்பித்துவிட்டது.இனி சுவாரஸ்யம் தான்.

VSK Wednesday, October 03, 2007 8:48:00 PM  

ஆமாம், திரு. குமார்!

இனி ஸ்வாரஸ்யம்தான்!

இலவசக்கொத்தனார் Wednesday, October 03, 2007 9:39:00 PM  

கொஞ்சம் அப்ஸ்ட்ராக்ட் விஷயங்கள் சொல்ல ஆரம்பிச்சாச்சோ? ரொம்ப தத்துவம் எல்லாம் வரப்போகுதுன்னா ஒரு வார்னிங் குடுத்துடுங்க தல!

SP.VR. SUBBIAH Wednesday, October 03, 2007 9:56:00 PM  

//அதுக்கு முந்தி, தான் ஒரு பணக்காரன் ஆவணும், பணம் சேக்கணும்னு ரூட்டை மாத்திகிட்டான். நெனச்ச மாரி, அப்பவே கிளம்பியிருந்தான்னா, இந்நேரம் பல ஊருங்களைப் பாத்திருப்பான். ஆனா செய்யலை///

ரூட்டை மாற்றியவன் எவனுடைய பயணமுமே,
மகிழ்ச்சியாக இருந்ததில்லை!

வேட்டையில் ஆரம்பித்து,(பணத்)
தேட்டையில் படுத்தெழுந்து, இறுதியில் (மரணக்)
கோட்டையில் முடிந்துவிடும்!

நடு நடுவே மனிதனின் மன ரூட்டை
இப்படித் தொடரில் சொல்லிக் கொண்டு
வாருங்கள் வி.எஸ்.கே சார்!

MSATHIA Wednesday, October 03, 2007 11:12:00 PM  

கர்ம யோகம் ஆத்ம விசாரம்னு அகப்பயணம் போகும் கந்தனின் புதையல் கட்டாயம் புறப்பொருளாய் இருக்க வாய்ப்பேயில்லை

VSK Wednesday, October 03, 2007 11:23:00 PM  

//தத்துவம் எல்லாம் வரப்போகுதுன்னா ஒரு வார்னிங் குடுத்துடுங்க தல!//

நடு நடுவே இதுபோல நிறையவே வரும்.

கதையும் உண்டு.

வார்னிங்கைத்தான் அங்கங்கே கன எழுத்துகளில் கொடுத்து வருகிறேனே, கொத்ஸ்!

ஒன்று சொல்லிவிடுகிறேன்.

மதங்கள், தத்துவம், ஆன்மீகம் என மூன்று விஷயங்கள் இருக்கு.

மூன்றும் வெவ்வேறு.

இங்கு சொல்லப் படுவது ஆன்மீகம் மட்டுமே.

இது ஒன்றே தனிமனிதனுக்கு உதவும் செய்தி.

இதை மனதில் கொண்டு படிக்கவும்!

அப்பப்ப இது மாதிரி கேட்டுகிட்டே இருங்க!

எனக்கும் உதவியா இருக்கும்!
:))

VSK Wednesday, October 03, 2007 11:25:00 PM  

கதையின் போக்கில் இது போல நிறையவே வரும் ஆசானே!

இது ஒரு தனி மனிதனின் தான் பற்றிய தேடல்!

வேட்டை, தேட்டை, கோட்டை என அழகுறச் சொல்லியிருக்கிறீர்கள்!

நன்றி.

VSK Wednesday, October 03, 2007 11:26:00 PM  

கந்தன் நம்மைப் போலவே ஒரு சாதாரண மனிதன் தான்,திரு. சத்யா!

பார்க்கலாம் உங்கள் அனுமானம் சரியாவென!
:)

SurveySan Wednesday, October 03, 2007 11:27:00 PM  

'தடி'எழுத்து அட்வைஸ் நெறைய தென்படுதே ;)

இருக்கட்டும் இருக்கட்டும். அன்னப் பறவ மாதிரி, கதைய மட்டும் உரிஞ்சு எடுத்துக்கறேன் :)

Anonymous,  Thursday, October 04, 2007 12:09:00 AM  

Dear VSK,
I am a reader of your blogs,I dont blog myself.Been reading your story,its very good and at the same time reminds me of The alchemist by paolo coelho ..,hope it brings about the change in attitude among those who read it
regards
krishna

நாமக்கல் சிபி Thursday, October 04, 2007 6:11:00 AM  

என் மனசுல ஓடிகிட்டிருக்குற சமீபத்திய(நேற்றைய) கேள்விக்கான விடையா இந்த தொடர் போகுது போல இருக்கே!

இந்த தொடரின் ஒவ்வொரு பாகத்துலயும் எனக்குன்னே ஏதோ பஞ்ச் மெசேஜ் இருக்கு போல!

:)

VSK Thursday, October 04, 2007 10:47:00 AM  

//Dear VSK,
I am a reader of your blogs,I dont blog myself.Been reading your story,its very good ..,hope it brings about the change in attitude among those who read it
regards
krishna //

அன்பு நண்பர் திரு. கிருஷ்ணா,
தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

எனது முன்னுரையை மீண்டும் படியுங்கள். உங்கள் கேள்விக்கான விளக்கம் கிடைக்கும்.


நான் நம்பும் நல்ல கருத்துகள் நாலு பேருக்குச் சென்றடைய வேண்டும் என்பதே என் விருப்பம்.

நன்றி.

VSK Thursday, October 04, 2007 10:48:00 AM  

உதாரணம் இடிக்குதே சர்வேசன்!

அன்னப்பறவை,அல்லதை விட்டுட்டு, நல்லதை மட்டுமே எடுத்துக்கும்னு நினைக்கறேன்.
:))))

VSK Thursday, October 04, 2007 10:51:00 AM  

தனி மனிதத் தேடல் என்பது இன்றைய உலகில் மிகவும் தேவையான ஒன்று, சிபியாரே!

நம்மில் ரொம்பப் பேர், அதைச் எய்யாம, சமூகத்தைத் திருத்துவதில் குறியாக இருக்கிறார்கள்.
தவறெனச் சொல்லவில்லை.

ஆனால், அதே சமயம், தன்னையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே என் அவா.

நன்றி.

VSK Thursday, October 04, 2007 10:51:00 AM  

தனி மனிதத் தேடல் என்பது இன்றைய உலகில் மிகவும் தேவையான ஒன்று, சிபியாரே!

நம்மில் ரொம்பப் பேர், அதைச் எய்யாம, சமூகத்தைத் திருத்துவதில் குறியாக இருக்கிறார்கள்.
தவறெனச் சொல்லவில்லை.

ஆனால், அதே சமயம், தன்னையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே என் அவா.

நன்றி.

G.Ragavan Thursday, October 04, 2007 5:10:00 PM  

புதையல்....புதைப்பது புதையல். அன்பு கூடப் புதையல்தான். உள்ளத்தில் புதைந்து கிடப்பதால்.

கந்தனுக்கான புதையல் என்ன மாதிரி என்பது விரைவில் தெரிந்து விடும். யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். இந்த பத்து ஆட்ட வெச்சி ராசா என்ன செய்யப் போறாருன்னு பொருத்திருந்து பாப்போம்.

தங்க ஒளி...அதுவும் என்னன்னு பின்னாடிதான் தெரியும் போல. காத்திருப்போம்.

VSK Thursday, October 04, 2007 6:44:00 PM  

'நீ எதைத் தேடுகிறாயோ, அது கிடைக்கும்' என்பது ஆன்றோர் வாக்கு.

நீங்க சொன்னதுபோல பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

நாமக்கல் சிபி Thursday, October 04, 2007 11:35:00 PM  

//தனி மனிதத் தேடல் என்பது இன்றைய உலகில் மிகவும் தேவையான ஒன்று, சிபியாரே!//

தனி மனிதத் தேடலா?

மணி தேடலே இப்போ பெரும் நோக்கமா இருக்கே தற்போதைய கால கட்டத்திலே!

இதிலே மனிதத்தை எங்கே தேடுவது?

:)

எப்படியோ "தனி மனிதத் தேடல்" என்பதும் கொஞ்சம் பொறுத்தமாத்தான் இருக்கு!

நாமக்கல் சிபி Thursday, October 04, 2007 11:36:00 PM  

//நம்மில் ரொம்பப் பேர், அதைச் எய்யாம, சமூகத்தைத் திருத்துவதில் குறியாக இருக்கிறார்கள்.
//

ஹிஹி! நோ கமெண்ட்ஸ்!

:)

VSK Thursday, October 04, 2007 11:58:00 PM  

உற்சாகமளிக்கும் பின்னூட்டங்கள் அளிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி, சிபியாரே!

Anonymous,  Friday, October 05, 2007 7:39:00 AM  

//இந்த ஒலகத்துக்கும் ஒரு ஆத்மா இருக்கு.//

உண்மைதான். எனக்கும் இந்த நினைப்பு அடிக்கடி வரும். அனைத்து உயிரினங்களும் பூமித்தாயின் உடலில் ஒட்டியுள்ள ஒட்டுண்ணிகள் தானே.

பூமித்தாய்க்கும் நமக்கும் உள்ள தொடர்பை சூவைப்போட்டுக்கொண்டு துண்டித்துக் கொள்கிறோமே வருத்தமாகவும் இருக்கும்.

போதாதற்கு எமது வசதிக்காக கொங்கிறீட்கற்கள், செங்கற்கள், பளிங்குகற்கள் என்று வேறு மூடி அன்னையை விட்டு விலகுகிறோம்.

VSK Friday, October 05, 2007 9:06:00 AM  

//பூமித்தாய்க்கும் நமக்கும் உள்ள தொடர்பை சூவைப்போட்டுக்கொண்டு துண்டித்துக் கொள்கிறோமே வருத்தமாகவும் இருக்கும்.//


மிக அருமையாக, நாமெல்லாம் மறந்துபோன ஒரு உண்மையை இதயத்தைத் தொடும் வகையில் சொல்லியிருக்கீங்க, திரு.அனானி.

அன்னையை விட்டு விலகுதலை அறியாமலேயே செய்வதுதான் இன்னமும் சோகம்.

நன்றி.

நாகை சிவா Sunday, October 07, 2007 1:52:00 AM  

உள்ளேன் ஐயா... போட்டுட்டு அடுத்த பதிவுக்கு போறேன்.

VSK Sunday, October 07, 2007 10:07:00 AM  

வருகையைப் பதிஞ்சாச்சு, திரு. நாகை சிவா. :))

ACE !! Friday, October 12, 2007 1:12:00 AM  

//இவருக்கு எப்படி நான் ஆடு மேய்க்கறவன்னு தெரிஞ்சுது?//

அதை தான் போன அத்தியாயத்தில் கந்தனே சொல்லிடறானே. :D :D :D

// அத்தியாயம் 6ல் இருந்து

'நல்லவேளையா அப்படில்லாம் எதுவும் எனக்கு ஆவலை! படிக்கணும்னு நினைச்சேன், இப்போ ஆடு மேய்க்கறேன்" என்றபடி சிரித்தான் கந்தன் //

cheena (சீனா) Saturday, October 20, 2007 3:12:00 AM  

கதை கதையின் உட்கருத்தை நோக்கி நகரத் துவங்கி விட்டது. இனிமேல் அசுர வேகத்தில் செல்லுமென எதிர் பார்க்கிறேன். கந்தனின் தனி மனிதச் தேடல் தொடரட்டும். அது அறிவுத் தேடலா, ஆன்மாவின் தேடலா, இறைத் தேடலா, ஈன்றவளின் தேடலா, உணர்ச்சித் தேடலா, ஊழின் தேடலா, எண்ணத் தேடலா, ஏற்பதின் தேடலா, ஐயம் போக்கும் தேடலா, ஒன்றின் தேடலா, ஓங்காரத் தேடலா, ஒளவை மொழித் தேடலா - பார்ப்போம் வரும் பகுதிகளில்

VSK Saturday, October 20, 2007 5:12:00 PM  

அகரவரிசையில் அள்ளித்தெளித்திருக்கிறீர்கள், கந்தனின் தேடலை, திரு.சீனா!

மிகவும் அருமை!

Never give up Thursday, December 06, 2007 4:37:00 AM  

Romba nallairuku. But niraya thadavai padikanum pola iruku, romba kashtamaana vishayatha romba theliva solreenga. Superb

Geetha

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP