"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி!" [3]
"தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி!" [3]
"பாதி தண்ணிதான் பூண்டிக்கு வந்துதுன்னு சொன்னேனா" என்றவாறு ஒரு டீயை உறிஞ்சிக்கொண்டே தொடர்ந்தான் மயிலை மன்னர்.
"ஏண்டா தண்ணி வரலை! என்ன ஆச்சுன்னு பாக்கப் போனாங்க நம்ம ஆளுங்க.
நல்லவேளை, போன தபா மாரி, ஆரும் தண்ணியைத் திருடலை.
சிமிண்ட்டுகரை வளியா தண்ணி ஊறி, வெளியே போவுது.
ஆஹா! சிமிட்டு [] வளியாக் கூட தண்ணி கசியுமேன்னு யோசிக்கலியேன்னு தெகைச்சாங்க.
இப்ப இன்னா பண்றது! இதுக்கு இன்னா வளின்னு ஆலோசனை பண்ணினாங்க.
சிமிண்டுக்கு பின்னாடி, கரை வலுவா இருந்தா தண்ணி போவலை; ஆனா, கரை 'பொத-பொத'ன்னு இருந்தா, தண்ணி கசியுது ரொம்ப-ன்னு தெரிஞ்சுது.
அந்த எடத்துல மட்டும் ஒரு கெமிக்கல் கலந்த பாலிமர் ஷீட்டை போட்டா அது சிமிண்டோட ஒட்டிகிட்டு இன்னும் வலுவாயிரும்னு புரிஞ்சுது.
ஆனா, இன்னும் அதிக செலவாகும்.
இன்னா, அதிகம் இல்ல.
ஒரு 90 கோடி ரூபா மேல!
ஏற்கெனவே 150 கோடி ஆயிப் போச்சு.
ட்ரஸ்டு ஆளுங்க நேரா சாமியப் போய் பார்த்தாங்க!
"செலவப் பாத்தா ஆவாது! இன்னா செய்யணுமோ செய்யுங்க"ன்னு சாமி சொல்லிட்டாரு.
அவ்ளோதான்!
எல்லாம் மளமளன்னு நடந்துது.
ஜூன் மாசம், 3-ந்தேதி, 2005-ம் வருசம்!
நாயுடு போயி, ராஜசேகர ரெட்டி வந்துட்டாரு சீஃப் மினிஷ்டரா!
அவரை வெச்சு ஒரு விளா வெச்சு ஷீட்டு போடற வேலய ஆரம்பிச்சாங்க!
அதே வருசம், நவம்பர் மாசம் சாமி பொறந்த நாளன்னிக்கு[23] தண்ணிய தொறந்து வுட்டாங்க!
"கிருஸ்னாம்மா" சும்மா கலகலன்னு சிரிச்சுகிட்டு குலுங்கி, தளுக்கிகிட்டு ஒரு ராசபாட்டையில வர்ற மாரி ஓடி வருது!
29-ந்தேதி பூண்டிக்கு வருது!
அல்லாருக்கும் சந்தோசம்!
12 டிஎம்சி தண்ணி வருது!
2005லியே தண்ணி வந்திருச்சின்னா இப்ப எதுக்கு விளா எடுத்தாங்கன்னு கேக்கறியா?
தண்ணி வந்தவொடனியே, ஒரு விளா எடுக்கணும்னு நெனச்சாங்க!
ஆனா, அப்ப இங்க இருந்த அம்மா அது முக்கியம்னு நினைக்கலை!
ஆட்சி மாறிச்சு!
கருணாநிதி வந்தாரு!
பத்து வருசம் களிச்சு சாமியும் இப்பதான் சென்னைக்கு வந்தாரு.
68லிருந்து எப்பிடியாவுது சென்னைக்கு குடிதண்ணி கொண்டு வரணும்னு இத்தயே நெனைச்சுகிட்டு இருந்த நம்ம மொதலமைச்சரும், நம்ம தமிள்நாட்டு மக்களோட நன்னியக் காட்ட இதுதான் சமயம்;
அது மட்டுமில்ல, மத்த 3 மொதலமைச்சருங்களையும் இதுக்கு ஒத்துக்க வைக்கவும் இதுதான் சமயம்னு முடிவு பண்ணி ஒரு விளாவுக்கு ஏற்பாடு பண்ணினாரு.
சாமியும் ஒத்துகிட்டாரு.
மத்ததெல்லாம் ஒனக்கு தெரியும்!:)
தமிளனோட நன்றியறிதலக் காட்டின நம்ம மொதலமைச்சருக்கு நெசமாவே ஒரு பெரிய்ய்ய 'ஓ' தான் போடணும்!
ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்.
நல்லபடியா நமக்கு தண்ணி கெடைக்கணும்னு நெனச்ச ஆளு சாமிக்கு சமம்.
அவரு சாமியோ இல்லியோ அத அவங்கவங்க நெனப்புக்கு வுட்டுருவோம்.
ஒருத்தரைக் கூப்புட்டு ஒத்த பைசா கொடுன்னு கேக்காம,
ஒருத்தர் வந்து இத்த எங்களுக்கு செஞ்சு கொடுங்கன்னு தன்கிட்ட கேக்காம, ஒரு ஆளு, தானே வந்து ஒரு காரியத்த இன்னொருத்தருக்காவ செஞ்சார்னா, அவர்தான் சாமிக்கும் மேல!
இத்தப் பத்தி நா சொல்றத வுட, நம்ம ஐயன் இன்னா சொல்லிருக்காருன்னு சொல்லிட்டு முடிச்சுக்கறேன்.
ஐயனப் பாத்து ஒர்த்தன் கேக்கறான்!
"மலய வுடப் பெருசு எது?
ஒலகத்த வுடப் பெருசு எது?
கடல வுடப் பெருசு எது?"
அப்படீன்னு.
வள்ளுவன் சொல்றான்.....
"நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது." [124]
"காலத் தினாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது." [102]
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது." [103]
அர்த்தம் தெரியலைன்னா கேளு, நாளைக்கு சொல்றேன்!
"மக்கள் சேவையே மகேசன் சேவை"
"அனைவரிடமும் அன்பு செய்; அனைவருக்கும் சேவை செய்"
சரி , ரொம்ப நேரமாச்சு! போயி அல்லாருக்கும் இத்த சொல்லு!
"மொதல்ல மனுசனா இருக்க கத்துக்க! அடுத்தவனப் பத்தி ஒண்ணு சொல்றதுக்கு முன்ன, அத்த தீர விசாரி! ஒன் நம்பிக்கையோட ஒத்துப் போவுதுன்ற ஒண்ணுத்துக்காவே ஒனக்கு சரியா தெரியாதத தூக்கி நிறுத்த தொணை போவாதே!"
தொடர்ந்து படித்த அனைவருக்கும் எனது நன்றி!
வணக்கம்!
சாய்ராம்.
15 பின்னூட்டங்கள்:
இலவசக்கொத்தனார் has left a new comment on your post ""தவிச்ச வாய்க்கு தண்ணி தந்த சாமி!" [3]":
நல்ல வேளையா தண்ணி வந்தது. இதை மராமத்து பண்ணி பாதுகாக்கற வேலையையாவது அரசாங்கம் பண்ணுமா? இல்லை அதுவும் இந்த சாமிதானா?
இப்போ இருக்கிற மக்கட்தொகைக்கு இந்த தண்ணி போதுமா? இது அதிகம் வர நாட்களில் சேமிக்க எதாவது திட்டமிருக்கா? கொஞ்சம் மன்னாரைக் கேட்டுச் சொல்லுங்க சாமி!
இல்லீங்க! இந்தத் திட்டத்துக்கு உதவி செஞ்சதோட கடமை முடிஞ்சுது சாமிக்கு!
தண்னி கொடுக்கரதோ, இதை மராமத்து பண்றதோ, அல்லாமே அரசாங்கத்தோட வேலைதான்!
இவ்வளவு நடந்திருக்கா?
சாமி மனசு மனசுத்தான்.அவரை போய் 2 ரூபாய் ஷோவுக்கு கூப்பிட்டாங்களே!!
அதான் இவருக்கு என்றால் ஞாயிற்றுக்கிழமை கூட பேங்க் திறக்கிறது.
நடந்ததை மறைக்காமல் சொன்ன மன்னாருக்கு ரொம்ப நன்றிங்க.
தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுத்தவன் சாமிக்கும் மேலதான்!
//தண்னி கொடுக்கரதோ, இதை மராமத்து பண்றதோ, அல்லாமே அரசாங்கத்தோட வேலைதான்!
//
பின்னே! இதுலயெல்லாம் அவரு எப்படி தலையிட முடியும்?
இது புரிந்து கொள்ள விழைபவருக்காக மட்டும் இட்ட பதிவுங்க.
நடந்தது என்னவென சிறிதும் மிகைப்படுத்தாமல் எழுதியது.
உங்களுக்குப் புரிந்தது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி, குமார்!
அப்படி பதிவு எழுத வைத்து அவர்களையும் தன் பெயரைச் சொல்ல வைத்ததும் அவன் கருணையே!
வைதாரையும் வாழ வைப்பவன் இல்லையா!
சாய்ராம்.
குமரன்,
மன்னாரிடம் உங்கள் நன்றியைச் சொல்லிவிட்டேன்!
:))
அது கொத்ஸ் கேட்ட கேள்விக்கான பதில் கவிஞரே!
கால்வாயைக் கட்டித் தந்ததுடன் தீர்ந்தது சாமியின் பணி.
15 டிஎம்சி தண்ணியைத் தருவது மூன்று மாநிலங்களின் பொறுப்பு.
அதைச் சென்னைவாசிகளுக்கு முறையாக விநியோகிப்பது தமிழக அரசின் பொறுப்பு!
சாய்ராம்!
//வள்ளுவன் சொல்றான்.....
"நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது." [124]
"காலத் தினாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மானப் பெரிது." [102]
"பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலிற் பெரிது." [103]
அர்த்தம் தெரியலைன்னா கேளு, நாளைக்கு சொல்றேன்!
"மக்கள் சேவையே மகேசன் சேவை"//
எஸ்கே ஐயா,
மன்னாரும் நான் முதல் பகுதியில் போட்ட பின்னூட்டத்தைப் போலவே சொல்கிறாரே "மக்கள் சேவையே மகேசன் சேவை"
ஒன் நம்பிக்கையோட ஒத்துப் போவுதுன்ற ஒண்ணுத்துக்காவே ஒனக்கு சரியா தெரியாதத தூக்கி நிறுத்த தொணை போவாதே!"
இது.... சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்.....எப்பவும் நானும் சொல்வது !!
வளர்க பாபாவின் மக்கள் சேவை !
நன்றி
பாராட்டுகிறேன்.
ரொம்ப தெளிவா சொல்லியிருக்காரு மன்னாரு. அதை தெளிவா எழுதுனதுக்கு நன்றி எஸ்.கே.
அவஜானந்தி மாம் மூடா மானுசீம் தனும் ஆஸ்ரிதம்
பரம் பாவம் அஜானந்தோ மம பூத மஹேஸ்வரம்
உலகங்களை எல்லாம் ஆளுபவன் நான் என்னும் என்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறியாமல் மானுட உருவில் நான் இருப்பதை மட்டுமே பார்த்து என்னை மூடர்கள் அவமதிப்பார்கள்.
- கீதையில் கண்ணன்.
புரிந்து பாராட்டியதற்கு நன்றி, கோவியாரே!
ஏதோ, நீங்களாவது, நம்மா மன்னார் மறக்காம இதுலியும் குறள் விளக்கம் சொன்னதை கவனிச்சீங்களே!!!:))
ஒருவகையில் பார்க்கப் போனால், நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும், குமரன்.
புரியாதவர்கள் என்ன இன்று நேற்றா இருக்கிறார்கள்?
எல்லாக் காலங்களிலும் இருந்திருக்கிறார்கள்!
நன்றி.
சாய்ராம்.
'சிநேகிதன்' எனப் பெயர் வைத்துக்கொண்டு வெறுப்பைக் கக்கும் நண்பரே!
உங்கள் பின்னூட்டத்தைப் போடலாமா, வேண்டாமா என நினைத்தேன்.
ஏனெனில், நான் பலமுறை இந்த 3 பதிவுகளில் சொன்னது போல, இது உண்மை நிலை என்னவெனத் தெரிய முயல்வாருக்கே அன்றி, உங்களைப் போல கண்ணை மூடிக்கொண்டு தூற்றுபர்க்கு அல்ல!
இந்தப் பதிவுகளின் மூலம் உங்களுக்கு ஏதாவது புரிந்தால் மகிழ்ச்சி.
இல்லைய, உங்கள் கருத்துகளைப் போற்ற பல பதிவர்கள் பதிவிட்டிருக்கிறார்கள்.
அங்கு போய் சொல்லுங்கள்.
இது போன்ற பின்னூட்டங்கள் இனிமேல் மட்டுறுத்தப்படும் எனப் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே சமயம், நியாயமான சந்தேகங்களுக்கு என்னால் இயன்ற அளவில் பதிலளிப்பேன்.
நன்றி, வருகைக்கு.
அருமையான தொடர் SK ஐயா!
தண்ணீர்ப் பந்தல் வைத்து மானுட சேவை புரிந்தார் அப்பூதி அடிகள்!
அது போல் இந்த மக்கள் சேவை.
கொள்கை எதுவாயினும் குடிக்கும் தண்ணீர் ஒன்று தானே!
ஒரு காலத்தில் முன் பின் தெரியாதவர்கள் கூட, வீட்டுக்கு வெளியே தண்ணீர் கேட்டால், இல்லை என்று சொல்லவும் அஞ்சுவார்களாம்!
அப்படியான நீராதாரத்தை மூலாதாராமாகத் தந்ததை, கொள்கையும் கடந்து பாராட்ட, மனப் பக்குவம் வேண்டுமே!
அது இன்னும் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசியலில் இருப்பது சற்று ஆறுதலான விடயம் தான்!
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு தானே என்று அறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதை நடைமுறையிலும் காண்பது நல்ல விடயம் தான்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
மனித சேவையே மாதவன் சேவை எனச் சொல்லுவார் பாபா.
அப்படி இந்த ஒரு நல்ல செய்கைக்கு , சேவைக்கு மனமாரப் பாராட்டுவது ஒவ்வொரு தமிழனின், மானுடனின் கடமை.
இது பற்றி உண்மை நிலை என்னவெனத் தெரிய வேண்டும் என்பதற்காகவே எழுதினேன் இதை, ரவி.
மிக்க நன்றி!
சீக்கிரம் பதிவு போடத் தொடங்குங்க!:))
Post a Comment