Monday, December 11, 2006

"குறும்பெல்லாம் குறும்பா?" [தேன்கூடு]

குறும்பென்னும் தலைப்பளித்து
விரும்பும்படி எழுதெனவே
சிறிலும் ஆணையிட்டார்!
நானும் முயலுகிறேன்!

அறியாத வயதினிலே
பெற்றவர்க்குப் போக்கு காட்டி
உண்ணாமல் உறங்காமல்
பண்ணியது ஒரு குறும்பா?

வாய்நிறைய சோறூட்டி
காய்நிலாவைத் தான் காட்டி
தாயங்கு ஊட்டியதை
தூவெனவே துப்புவேனாம்!

குறும்பைப் பாரெனவே
விருப்புடனே தாயவளும்
சோறூட்டி மகிழ்ந்திடுவாள்
என்பசியைப் போக்கிடுவாள்.

பள்ளியிலே படிக்கையிலே
பக்கத்து மாணவனை
நச்சென்று கிள்ளிடுவேன்
ஓவெனவே அவன் அழுவான்!

குறும்பா செய்கிறாய் எனவே
ஆசானும் அடித்திடுவார்
பெஞ்சின் மேல் ஏற்றிடுவார்
கொஞ்சம் நான் சிரித்திருப்பேன்!

குறும்புகள் செய்த காலம் முடிந்து
அரும்பெனவே மீசை முளைத்திட
அடுத்தொரு ஆசை வளர்ந்தது
அடுத்தவளைப் பார்க்கச் சொன்னது!

கல்லூரி செல்லுகையில்
கவினாக முடி ஒதுக்கி
கன்னியர்பால் பார்வை செலுத்தி
கட்டாக நின்றிடுவேன்!

பேருந்தில் பயணிக்க
அவளங்கு வந்திருக்க
அளவோடு பார்வையிட்டு
அரைக்கண்ணால் பார்த்திடுவேன்!

தெரியாமல் பக்கம் சென்று
அறியாமல் அவளை உரசி
கோபத்தில் அவள் முறைக்க
அரைக்குறும்பாய்ச் சிரித்திடுவேன்!

மருத்துவமும் பயிலுகையில்
ஒருத்தருமே அறியாமல்
அசைன்மெண்டை மாற்றி வைத்து
அடுத்தவனை விழிக்க வைப்பேன்!

காதலித்த பெண்ணவளும்
எனக்கெனவே காத்திருப்பாள்
என்பதனைத் தானுணர்ந்து
தவிக்க விட்டேன் சில காலம்!

இந்தியாவில் சில வருடம்
ஜாம்பியாவில் சில வருடம்-மீண்டும்
இந்தியாவில் சில வருடம் -பின்னர்
அமெரிக்காவில் சில வருடம்

இப்படியே குறும்பாக
மனம் போன போக்கினிலே
தினம் இங்கு கழித்த பின்னர்
கேள்வியொன்று எழுகிறது!

குறும்பென நான் நினைத்ததெல்லாம்
உண்மையிலே குறும்பாமோ?
வெறும் போக்காய் வாழ்ந்ததன்றோ!
வீணாளைக் கழித்ததன்றோ?

அப்போது பொறியொன்று தட்டிற்று!
தப்பல்ல! நிஜமென்று சொல்லிற்று!
வாழ்நாளைக் களிப்பாகக் கழித்ததெல்லாம்
வீணாளல்ல! வாழ்ந்த நாளே!

இருக்கும்வரை இனிப்பாக வாழ்ந்திடு!
அடுத்தவரை அன்பாக வைத்திரு!
தொடுக்கின்ற செயலை முடித்திடு!
படுக்கும் வேளையில் பாங்காய்ச் சென்றிடு!

குறும்பென நீ நினைப்பதெல்லாம் குறும்பல்ல!
வெறுப்பின்றிச் செய்திடலே குறும்பு!
அடுத்தவரை அழச்செய்தல் குறும்பல்ல!
தொடுத்தவரும் சிரித்திடலே குறும்பு!

80 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் [GK] Tuesday, December 12, 2006 12:01:00 AM  

எஸ்கே ஐயா,
இனிய கவிதை !

அசைப்போட்டு பார்த்து அழகாக சொல்லி இருக்கிறீர்கள். எண்ணங்கள் இளமையாக இருந்தால் குறும்புக்கு ஏது பஞ்சமென்று சொல்லுகிறது கவிதை !

அடுத்தவரை எள்ளி பெரும் குறும்'புகழைவிட அணைத்துமகிழும் குறும்புகளே நெகிழ்விக்கும் என்று இக் கவிதை மூலம் புரிந்து கொள்கிறேன்.

போட்டியில் உங்கள் குறும்புகள் துள்ளிவர வாழ்த்துக்கள் !
:)

VSK Tuesday, December 12, 2006 12:06:00 AM  

நான் சொல்ல வந்ததின் மூலக் கருத்தை அப்படியே ஒரு சில வரிகளில் அழகுறச் சொல்லி முதல் கணக்கைத் துவக்கி வைத்த உங்களுக்கு மிக்க நன்றி, கோவியாரே!

இது ஒன்று போதும் எனக்கு!

Anonymous,  Tuesday, December 12, 2006 12:10:00 AM  

//கல்லூரி செல்லுகையில்
கவினாக முடி ஒதுக்கி
கன்னியர்பால் பார்வை செலுத்தி
கட்டாக நின்றிடுவேன்!

பேருந்தில் பயணிக்க
அவளங்கு வந்திருக்க
அளவோடு பார்வையிட்டு
அரைக்கண்ணால் பார்த்திடுவேன்!//

வெறுப்பின்றி செய்ததுதான் - அவள்
மறுப்பொன்றும் கூறவில்லை...
செருப்பெதுவும் காட்டவில்லை...

ஹி..ஹி... இப்படீனா குறும்புன்னு ஒத்துக் கொள்வீரா?

முன் வாழ்த்துக்கள்...

VSK Tuesday, December 12, 2006 12:19:00 AM  

விழித்துப் பார்த்ததுமே அரைக்கண்னால் சிரித்துவிட்டு ஓடிவிட்டேன் ஜி!

செருப்பு காட்றதுக்கெல்லாம் டைம் கொடுக்கலை!
ஹிஹிஹி!

உங்கள் வரிகளும் மிக நன்றாக இருக்கிறது!

முன்னரே தெரிந்திருந்தால் இதையும் சேர்த்திருப்பேன்!

நன்றி!

சாத்வீகன் Tuesday, December 12, 2006 12:46:00 AM  

குறும்புகள் இருந்தால் வா(ழ்)ணாளெல்லாம் வீ(ண்)ணாளல்ல..

கவிதை நன்று எஸ்.கே. அவர்களே.

சாத்வீகன்.

நாமக்கல் சிபி Tuesday, December 12, 2006 1:30:00 AM  

//விழித்துப் பார்த்ததுமே அரைக்கண்னால் சிரித்துவிட்டு ஓடிவிட்டேன் ஜி!

செருப்பு காட்றதுக்கெல்லாம் டைம் கொடுக்கலை!
ஹிஹிஹி!
//


விழித்துப் பார்த்ததுமே
அரைக்கண்னால் சிரித்துவிட்டு
அகன்றுவிட்டேன் அங்கிருந்து!

செருப்பைக் காட்டவெல்லாம்
நேரம் கொடுக்கவில்லை!

:))

Unknown Tuesday, December 12, 2006 5:24:00 AM  

//தொடுத்தவரும் சிரித்திடலே குறும்பு//
குறும்புக்கு சிறப்பான இலக்கணம். மிக நன்று.
அந்தக் காலத்தில் என்னைப் போல் நீங்களும் தலை கொள்ளா முடியுடன் அலைந்தவர்தானோ.

VSK Tuesday, December 12, 2006 8:45:00 AM  

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி,திரு. சாத்வீகன் !

நீங்களும் இதன் மையக் கருத்தைப் புரிந்து எழுதியதில் மகிழ்ச்சி!

ENNAR Tuesday, December 12, 2006 8:49:00 AM  

நற்கவி சாற்றிய நல்லவரே வாழ்க நீ

VSK Tuesday, December 12, 2006 8:52:00 AM  

ம்ம்ம்! இதையும் கவிதையாகவே வடித்து விட்டீர்களா, கவிஞர் கோமேதகரே!

இப்படி ஆளாளுக்கு சாத்துறீங்களே!

அந்த வரிகள் பழைய நினைவுகளைத் தூண்டி விட்டு விட்டதோ!
:))

VSK Tuesday, December 12, 2006 8:56:00 AM  

"சிரித்து வாழ வேண்டும் -- பிறர்
சிரிக்க வாழ்ந்திடாதே!"

வாலியின் வரிகள்!

"எல்லாரும் இன்புற்றிருக்க எண்ணாது
யாமொன்றறியோம் பராபரமே!"

வள்ளலார் வாக்கு!

மிக்க நன்றி, திரு. சுல்தான்!

//அந்தக் காலத்தில் என்னைப் போல் நீங்களும் தலை கொள்ளா முடியுடன் அலைந்தவர்தானோ.//

அதை ஏன் கேக்கறீங்க நண்பரே!

பழைய படங்களைப் பார்த்தால் பெருமூச்சுதான் வருது!!

:((

VSK Tuesday, December 12, 2006 9:04:00 AM  

வந்து வாழ்த்தியமைக்கு நன்றி, என்னார் ஐயா!

நாமக்கல் சிபி Tuesday, December 12, 2006 10:09:00 AM  

//இது ஒன்று போதும் எனக்கு!//

Total Number Of Comments : 13

:))))

VSK Tuesday, December 12, 2006 10:14:00 AM  

வெவகாரம் பண்ணணும்னே கங்கணம் கட்டிகிட்டு இருக்கீங்களா, சிபியாரே!

நான் போதும் என்று சொன்னது அவர் புரிதலைப் பாராட்டி!
பின்னூட்டங்களை அல்ல!

பின்னூட்டம் போதுமென்று சொல்வேனா நான்!!
:)))

இன்னும் ரெண்டு மூணு நல்லதா அனுப்புங்க!

கோவி.கண்ணன் [GK] Tuesday, December 12, 2006 10:43:00 AM  

//இன்னும் ரெண்டு மூணு நல்லதா அனுப்புங்க!//

சிபியாரே வார்த்தையை கவனியுங்கள் *நல்லதாக* அப்ப நீங்க போட்டதெல்லாம் நல்லது இல்லை என்று நான் சொல்லவில்லை !

:)

VSK Tuesday, December 12, 2006 10:51:00 AM  

அடடா! கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்க!

நான் வரலீங்க இந்த ஆட்டத்துக்கு!

'இன்னும்' நல்லதா போடுங்கன்னுதான் நான் சொன்னேன்!

கோவியார் பிரச்சினை பண்றாரே!

:))

இது என்ன குறும்'பா'!

கோவி.கண்ணன் [GK] Tuesday, December 12, 2006 10:53:00 AM  

//கோவியார் பிரச்சினை பண்றாரே!//

எஸ்கே ஐயா !

ஆகா என்னை *நாரதர்* என்று சொன்னதை மென்மையாக கண்டிக்கிறேன் !

:)

VSK Tuesday, December 12, 2006 10:55:00 AM  

ஆஹா! ஒரு முடிவோடதான் வந்திருக்காங்கய்யா!

வேணாம்! நான் சொல்லாததை எல்லாம் சொல்லாதீங்க!
வலிக்குது.....
அப்புறம் அளுதுருவேன்!

கோவி.கண்ணன் [GK] Tuesday, December 12, 2006 10:59:00 AM  

// SK said...
ஆஹா! ஒரு முடிவோடதான் வந்திருக்காங்கய்யா!

வேணாம்! நான் சொல்லாததை எல்லாம் சொல்லாதீங்க!
வலிக்குது.....
அப்புறம் அளுதுருவேன்!
//

எஸ்கே ஐயா !
அப்ப நான் பொய் சொல்கிறேனா ?

நாரதர் என்று மறைமுகமாக சொன்னதே பரவாயில்லை. இப்ப புதுசா பித்தலாட்டக்காரன் என்று வேறு சொல்றிங்க ! அடுக்குமா ?
:)

VSK Tuesday, December 12, 2006 11:03:00 AM  

இப்படி ஆளாளுக்கு ரவுண்டு கட்டி அடிக்கறாஅங்களே!

நா என்னாத்தை பண்ணுவேன்!

செய்யுங்க சாமி; செய்யுங்க!

இன்னிக்கு என் உசிரு என்னுதில்லேன்னு ஆயிப் போச்சு!

இப்படியே வாட்டமா படுத்துறேன்.

நீங்க என்ன குமுறணுமோ, குமுறுங்க சாமி!

நான் ஒண்........ணும் சொல்லலை!

கோவி.கண்ணன் [GK] Tuesday, December 12, 2006 11:05:00 AM  

// SK said...
இப்படி ஆளாளுக்கு ரவுண்டு கட்டி அடிக்கறாஅங்களே!

நா என்னாத்தை பண்ணுவேன்!

செய்யுங்க சாமி; செய்யுங்க!

இன்னிக்கு என் உசிரு என்னுதில்லேன்னு ஆயிப் போச்சு!

இப்படியே வாட்டமா படுத்துறேன்.

நீங்க என்ன குமுறணுமோ, குமுறுங்க சாமி!

நான் ஒண்........ணும் சொல்லலை!
//

ஒண்ணுக்கு பத்தாக சொல்லிட்டு
*நான் ஒண்........ணும் சொல்லலை* ன்னு நல்லபிள்ளையாக பழியை சுமத்துகிறீர்கள் !

ஈஸ்வரா! சங்கரா !

VSK Tuesday, December 12, 2006 11:11:00 AM  

ம்ஹூம்! இது ஒண்ணும் எனக்கு சரியாப் படலை!
இப்படி எது சொன்னாலும் தப்பாவே பாக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா நா என்னாத்தை செய்யறது!
நடக்கறதுநடக்கட்டும்!

இன்னிக்கு 'குறும்பு' கண்ணன் அவதாரமா?

பரவாயில்லை!
இதுவும் 'குறும்பு' பதிவுன்றதால இதையும் அனுமதிச்சிரலாம்!
:))

கோவி.கண்ணன் [GK] Tuesday, December 12, 2006 11:16:00 AM  

//SK said...
ம்ஹூம்! இது ஒண்ணும் எனக்கு சரியாப் படலை!
இப்படி எது சொன்னாலும் தப்பாவே பாக்கறதுன்னு முடிவு பண்ணிட்டா நா என்னாத்தை செய்யறது!
நடக்கறதுநடக்கட்டும்!

//
எஸ்கே ஐயா இப்படி போட்டு தாக்குகிறாரே ! இதுதான் மாபெரும் அபாண்டம் தப்பாக பார்க்கிறேன் என்கிறார் அதாவது *பார்வையே சரியில்லையாம்* கேளுங்க மக்களே ! கண்ணுதெரியலை என்று சொல்லிட்டு அதுவும் நடக்கறது நடக்கனுமாம்.

VSK Tuesday, December 12, 2006 11:22:00 AM  

ஏம்ப்பா! நீ வூடு கட்டி அடிக்கறது போதாதுன்னா, இப்ப ஊர்சனம் மொத்தத்தையும் கூப்புடறே!

ஏன் கை வலிக்குதா?

ம்ம்ம்... இன்னும் ஆராரெல்லாம் வந்து என்ன பண்ணப் போறாங்களோ!

அப்படியே ஒரு ஆம்புலன்ஸுக்கும் சொல்லிடுங்கப்பா!

கோவி.கண்ணன் [GK] Tuesday, December 12, 2006 11:30:00 AM  

//SK said...
ம்ம்ம்... இன்னும் ஆராரெல்லாம் வந்து என்ன பண்ணப் போறாங்களோ!

அப்படியே ஒரு ஆம்புலன்ஸுக்கும் சொல்லிடுங்கப்பா! //

என்னை மட்டும் தான் வம்புவளர்கிறார் என்று நினைத்தேன் யார் யாரெல்லாம் வந்து என்ன பண்ணப் போறாங்களோன்னு எல்லோர் மேலேயும் பழிசுமத்துகிறார் ! இது ஞாயாமா ? எதுக்கும் இன்சுரன்ஸ் பண்ணிட்டு வாங்க ! ஆம்புலன்ஸ்க்கு வேற சொல்லச் சொல்கிறார் !

சிறில் அலெக்ஸ் Tuesday, December 12, 2006 11:34:00 AM  

அட இத்தன குறும்புபிடிச்ச ஆளா நீங்க.

நல்ல கவிதை. வெற்றி பெற வாழ்த்துக்கள்சார்.

:)

SP.VR. SUBBIAH Tuesday, December 12, 2006 2:00:00 PM  

கொண்டபுகழ் மறந்து தன்
குறும்பைப் பதிவிட்டார்!
கோடி நமஸ்காரம் தலைப்பைக் கொடுத்தோர்க்கு!

SP.VR.SUBBIAH

VSK Tuesday, December 12, 2006 2:13:00 PM  

//கொண்டபுகழ் மறந்து தன்
குறும்பைப் பதிவிட்டார்!
கோடி நமஸ்காரம் தலைப்பைக் கொடுத்தோர்க்கு!//


இது வாழ்த்தா? இல்லை வசவா? ஆசானே!

கொண்ட புகழ் -- [என்] வினைத்தொகையா இது?

:))

VSK Tuesday, December 12, 2006 2:17:00 PM  

//அட இத்தன குறும்புபிடிச்ச ஆளா நீங்க.//

ஆரை/..... என்னையா கேக்கறீங்க சிறில்?

நான் ஒரு அப்பாவிங்க!

பொன்ஸைக் கேளுங்க, [இல்லைன்னு] சொல்வாங்க!

:)

வாழ்த்துக்கு நன்றி!

SP.VR. SUBBIAH Tuesday, December 12, 2006 2:38:00 PM  

// இது வாழ்த்தா? இல்லை வசவா? ஆசானே! //

வாழ்த்தை அறிவேன்
வ்ணங்கவும் அறிவேன்
வசவை அறியேன் - எனை
வளர்த்தார் தவறது!

VSK Tuesday, December 12, 2006 4:03:00 PM  

வளர்த்தவர் தவறன்று!
கொடுத்தவர் பண்பது!
"கொண்ட புகழ்" மறந்ததென்றதால்
கொஞ்சம் அஞ்சினேன்!

அவ்வளவே!

தவறாக எண்ண வேன்டாம்!
:))

ஜெயஸ்ரீ Tuesday, December 12, 2006 5:31:00 PM  

-))))

வெற்றி பெற வாழ்த்துக்கள்

VSK Tuesday, December 12, 2006 8:03:00 PM  

_/\_ ஜெயஸ்ரீ !

நன்றி!

நாமக்கல் சிபி Wednesday, December 13, 2006 1:15:00 PM  

//சிபியாரே வார்த்தையை கவனியுங்கள் *நல்லதாக* அப்ப நீங்க போட்டதெல்லாம் நல்லது இல்லை என்று நான் சொல்லவில்லை !
//

அதானே! இதோ வந்துட்டேன்!

:-x

நாமக்கல் சிபி Wednesday, December 13, 2006 1:17:00 PM  

//தப்பாக பார்க்கிறேன் என்கிறார் அதாவது *பார்வையே சரியில்லையாம்* கேளுங்க மக்களே !//

கண்ணியமான கோவியார் கெட்ட பார்வை பார்க்கிறார் என்று சொன்ன எஸ்.கே அவர்களை மென்மையாகக் கண்டிக்கிறோம்!

:))

(அந்த கோவி கண்ணனோடு இந்த கோவி கண்ணனையும் ஒப்பிட்டு விட்டார் போலிருக்கிறது)

VSK Wednesday, December 13, 2006 2:20:00 PM  

அநேகமாக இப்போது கோவியார் சிங்கையில் ஆழ்நித்திரையில் இருப்பார் என எண்ணுகிறேன்!

பு பதிவு எழுதிய களைப்பு வேறு!:)

அவர் வந்து உங்களுக்கு பதில் சொல்லட்டும்!

"மென்மையான கண்டித்தலுக்கு" நன்றி, சிபியாரே!

நேத்து வாங்கின அடியே இன்னும் வலிக்குது!

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, December 13, 2006 2:33:00 PM  

//நல்லபிள்ளையாக பழியை சுமத்துகிறீர்கள் !
ஈஸ்வரா! சங்கரா !//

அடியேனைக் கூப்பிட்டீர்களா GK ஐயா?
சங்கரா என்று காதில் விழுந்ததே! :-)
ரவி என்னும் சங்கரரையா? இல்லை
குமார சங்கரரையா??

இது குறும்பதிவு என்று எண்ணி
உள்ளே வந்தால்
குறும்புப் பதிவாக அல்லவா இருக்கிறது!

Kannabiran, Ravi Shankar (KRS) Wednesday, December 13, 2006 2:35:00 PM  

//இன்னிக்கு 'குறும்பு' கண்ணன் அவதாரமா? பரவாயில்லை!
இதுவும் 'குறும்பு' பதிவுன்றதால இதையும் அனுமதிச்சிரலாம்!//

GK ஐயா, இதைக் கண்டீர்களா? //'குறும்பு' பதிவுன்றதால இதையும் அனுமதிச்சிரலாம்//

அப்பிடின்னா என்ன அர்த்தம்?
மத்த பதிவுகளில் அனுமதிக்க மாட்டாராமா?
மூவுலகையும் முன்னரே அளந்து, ஏழுலகைச் சிறு வாயில் காட்டிய கோவியாத கண்ணனுக்கு "அனுமதி" என்ற ஒன்றும் உண்டோ?

சிங்கையின் சிங்கமே! சீறி வா! சிரிப்புடன் வா! ஆத்திக அனப்ருக்கு "அருள்" செய்ய வா!:-))

VSK Wednesday, December 13, 2006 2:48:00 PM  

ஆஹா! கெளம்பிட்டாங்கய்யா! கெளம்பிட்டாங்க!

இப்பத்தான் சிபியாரை கொஞ்சம் தாஜா பண்ணி ராசா! நீ என் ரூட்டுல வராதேப்பா! கோவியாரைப் போய் பாத்துக்கன்னு சொல்லி அனுப்பி வெச்சேன்.
இப்ப நீங்க வந்திருக்கீகளா, ரவி!
நான் உங்களுக்கு அப்பிடி என்னய்யா கெடுதி பண்ணிட்டேன்!
பதிவு தவறாம வந்து பின்னூட்டம் போட்டது ஒரு தப்பாய்யா?
இப்பிடி நீங்களும் சேர்ந்து கும்மி அடிக்கக் கிளம்பினா நா என்னய்யா பண்ணுவேன்.

சும்மா இருக்கறது போறாதுன்னு.... இப்ப கூட கோவியாரையும் வேற துணைக்கு கூப்பிட்டுகிட்டு வரணுமாய்யா?

'அருள்' பண்ணனுனாமில்ல அருளு!

கெடச்ச அருளு பாத்தாதுன்னா சாமி இம்பூ..ட்டும் பண்றிங்க?

பண்னுங்க சாமி... பண்ணுங்க!

ஒரு வளி பண்ணாம வுடறதில்லேன்னு முடிவோடதான் வர்றீங்க போலிருக்கு!
:))

VSK Wednesday, December 13, 2006 2:52:00 PM  

////'குறும்பு' பதிவுன்றதால இதையும் அனுமதிச்சிரலாம்//

அப்பிடின்னா என்ன அர்த்தம்?
மத்த பதிவுகளில் அனுமதிக்க மாட்டாராமா?//

இப்பிடி வார்த்தைக்கு வார்த்தை உள்ளர்த்தம் கண்டு புடிச்சு கும்மி அடிக்கறீங்களே சாமி!

________________________________

இந்த கோட்டைத் தாண்டி ஆரும் வரப்படாது!
நானும் வர மாட்டேன்!

பேச்சு பேச்சா மட்டும் இருக்கணும்.

ஆமா! சொல்லிபுட்டேன்!

கோவி.கண்ணன் [GK] Wednesday, December 13, 2006 8:43:00 PM  

//சிங்கையின் சிங்கமே! சீறி வா! சிரிப்புடன் வா! ஆத்திக அனப்ருக்கு "அருள்" செய்ய வா!:-)) //

ரவி,

எங்கே தனியாளாக பந்துவீசி களைத்துவிடுவேனோ என்று நினைத்தேன். தோள் கொடுத்ததற்கு நன்றி !

அடுத்த ஓவரை போடுபவர் நாமக்கல் சிபி !
:)

Anonymous,  Friday, December 15, 2006 8:33:00 PM  

//இருக்கும்வரை இனிப்பாக வாழ்ந்திடு!
அடுத்தவரை அன்பாக வைத்திரு!
தொடுக்கின்ற செயலை முடித்திடு!
படுக்கும் வேளையில் பாங்காய்ச் சென்றிடு!
//

repeattuu..

nalla kavidhai.
vetri pera vazhthukkal!

VSK Saturday, December 16, 2006 12:03:00 AM  

தலவர் ஸ்டைலில் வந்து ரிப்பீட்டு சொல்லி வாழ்த்தியிருக்கிறீர்கள்!

இரட்டிப்பு மகிழ்ச்சி, திரு."சர்வே"சன்!

நாமக்கல் சிபி Saturday, December 16, 2006 12:13:00 AM  

அடுத்த ஓவர் ஆரம்பம்! :))

நாங்கள் கோட்டைத் தாண்ட மாட்டோம்! அழித்துவிட்டு வருவோம்!

நாமக்கல் சிபி Saturday, December 16, 2006 12:14:00 AM  

குறும்பா? என்று கேட்டுவிட்டு பெரும்பா ஒன்றை எழுதியிருக்கிறீர்களே?

நாமக்கல் சிபி Saturday, December 16, 2006 12:17:00 AM  

//இப்பிடி வார்த்தைக்கு வார்த்தை உள்ளர்த்தம் கண்டு புடிச்சு கும்மி அடிக்கறீங்களே சாமி!
//

அப்ப நாங்கள்ளாம் உள்குத்து ஆசாமிங்கன்னு சொல்ல வர்றீங்க! அப்படித்தானே!

கோவீ, கேஆர்எஸ், எல்லாரும் ஓடியாங்க!

நாமக்கல் சிபி Saturday, December 16, 2006 12:18:00 AM  

//பேச்சு பேச்சா மட்டும் இருக்கணும்.//

அப்போ நாங்கள்ளாம் பேசிகிட்டிருக்கும்போதே கை நீட்டுற ஆளுகளா?

நாமக்கல் சிபி Saturday, December 16, 2006 12:21:00 AM  

//அப்படியே ஒரு ஆம்புலன்ஸுக்கும் சொல்லிடுங்கப்பா!
//

இந்தப் பதிவைப் படிக்க வரும் சனங்களுக்கு ஆம்புலன்ஸா?

அப்போ எல்லாரையும் அடிப்பீங்களா?
:))

நாமக்கல் சிபி Saturday, December 16, 2006 12:22:00 AM  

அம்பயர்! ஓவர் முடிஞ்சுதா?

நாமக்கல் சிபி Saturday, December 16, 2006 12:22:00 AM  

அடுத்த ஓவருக்கு கே.ஆர்.எஸ் அவர்களை அழைக்கிறேன்!

நாமக்கல் சிபி Saturday, December 16, 2006 8:46:00 AM  

குறும்பாவெனச் சொல்லி
பெரும்பா வடித்தவரே!
குறும்பாய் நான் போட்ட
ஓவர் முழுவதையும்
இருட்டடிப்புச் செய்ததென்ன?
பெரும்பாடாகிவிடும் என்றா?

கோவி.கண்ணன் [GK] Saturday, December 16, 2006 10:19:00 AM  

//குறும்பாய் நான் போட்ட
ஓவர் முழுவதையும்
இருட்டடிப்புச் செய்ததென்ன?
பெரும்பாடாகிவிடும் என்றா? //

எஸ்கே ஐயாவின் இச்செயலுக்கு !
கண்டனம் ! கண்டனம் !

உடனடியாக வருத்தம் தெரிவிக்காவிட்டால்...

சாயும் வரை புலிப்பால் குடிப்பு போராட்டம் நடத்தப்படும் !

VSK Saturday, December 16, 2006 10:19:00 AM  

//அடுத்த ஓவர் ஆரம்பம்! :))

நாங்கள் கோட்டைத் தாண்ட மாட்டோம்! அழித்துவிட்டு வருவோம்! //

ஆஹா! இப்பத்தான் ஒருத்தர் ஃபாஸ்டு பாலாப் போட்டு பின்னி பின்னி எடுத்தாரு.

அடுத்தாப்பல சுழல் பந்து சிபி வராரே!

சுழட்டி எடுத்துருவாரே சாமி!

வரும் போதே சவுண்டு வேற விட்டுகிட்டு வராரு!

ஆண்டாவா! நா எப்பிடி ஆடறது!

கோவி.கண்ணன் [GK] Saturday, December 16, 2006 10:20:00 AM  

// நாமக்கல் சிபி said...
அம்பயர்! ஓவர் முடிஞ்சுதா?
//

அருமையான ஓவர்,
ஆட்டக்காரரால் ஒரு பந்தைக் கூட தொட முடியல. பிரமாதம்

வெல்டன் சிபி.

VSK Saturday, December 16, 2006 10:21:00 AM  

//குறும்பா? என்று கேட்டுவிட்டு பெரும்பா ஒன்றை எழுதியிருக்கிறீர்களே?//

இதான் ஒன் மொதப் பந்தா?
பரவாயில்லை!
சமாளிச்சிரலாம்.

ம்ம்ம்...அதையெல்லாம் பிரிச்சி பிரிச்சி படிக்கக் கூடாது!
மொத்தமா படிக்கணும்.
ஆமா!

ஸ்ஸ்ஸ்..சமாளிச்சாச்சு!

கோவி.கண்ணன் [GK] Saturday, December 16, 2006 10:21:00 AM  

//நாமக்கல் சிபி said...
//பேச்சு பேச்சா மட்டும் இருக்கணும்.//

அப்போ நாங்கள்ளாம் பேசிகிட்டிருக்கும்போதே கை நீட்டுற ஆளுகளா?
//

சிபி,

என்னது நம்ம மூனுபேரையும் ரவுடின்னு சொல்லிட்டாரா !

சும்மாவா விட்டிங்க ?

VSK Saturday, December 16, 2006 10:24:00 AM  

//அப்ப நாங்கள்ளாம் உள்குத்து ஆசாமிங்கன்னு சொல்ல வர்றீங்க! அப்படித்தானே!//

என்ன சூடு ஏறுது!

யோவ்! உள்குத்து போடறது ஆரு?
நீதானே பந்து போடறே?

நீங்கதான் கையை இப்படி வளைச்சிட்டு அப்படி போடறீங்க!
நாங்கள்ல்லம் அடறதா வேண்டாமா!

[இதுவும் ஓக்கே!]
:)

VSK Saturday, December 16, 2006 10:25:00 AM  

//அப்போ நாங்கள்ளாம் பேசிகிட்டிருக்கும்போதே கை நீட்டுற ஆளுகளா? //

இப்ப உங்களையெல்லாம் ஆரு சொன்னாங்க சாமி!
எதுக்கு சத்தம் போட்டு ஊரை கூட்ரீஹ?

நான் என்னிய சொல்லிக்கக்கூட உரிமை இல்லியா சாமி!

[2 ரன் எடுத்தாச்சு!]

VSK Saturday, December 16, 2006 10:29:00 AM  

//இந்தப் பதிவைப் படிக்க வரும் சனங்களுக்கு ஆம்புலன்ஸா?

அப்போ எல்லாரையும் அடிப்பீங்களா?//

ஆமா! யாரு பந்து போட்டாலும் அடிக்கறதுக்குத்தானேய்யா நான் இந்தக் கோட்டுக்குள்ளெ நின்னுகிட்டு நாயா அவஸ்தைப்படறேன்.
அடிப்பீங்களான்னு கேள்வி வேற!

சுத்த வெவரங்கெட்ட தனமால்லா இருக்கு!

[இது சிக்ஸர்!]

VSK Saturday, December 16, 2006 10:31:00 AM  

//அம்பயர்! ஓவர் முடிஞ்சுதா?//
இதெனய்யா இது?

அதிசயமா இருக்கு?

4 பந்தைப் போட்டுட்டு ஓவர் முடிஞ்சுதான்னு கேக்கறாரு!

சரி, நமக்கென்ன போச்சு!

அம்பயர் பாடு அவர் பாடு!

நல்லபடியா போயிட்டு வாங்க சாமி!

VSK Saturday, December 16, 2006 10:34:00 AM  

//அடுத்த ஓவருக்கு கே.ஆர்.எஸ் அவர்களை அழைக்கிறேன்!//

ஓஹோ! இவர்தான் காப்டனா இந்த டீமுக்கு?
இது தெரியாமப் போச்சே!

கே.ஆர்.எஸ்ஸைக் கூப்பிடறாரே, இவருக்கு புத்தி கித்தி பெசகிப் போச்சா ?

அவருதன் பாஸ்டன் பெவிலியன்ல ஜாலியா போண்டா தின்னுகிட்டு இருக்காரே!

அவரைக் கூப்பிட்டு பந்து போடச் சொல்றாரே!
ஹையோ ஹையோ!

VSK Saturday, December 16, 2006 10:36:00 AM  

//ஓவர் முழுவதையும்
இருட்டடிப்புச் செய்ததென்ன?//

என்னா இருட்டடிப்பு?
பெரிய இருட்டடிப்பு?

அதன் வெளாசித் தள்ளிட்டோம்ல!

கொஞ்சம் 'அசந்த' நேரத்துல பந்து போட்டீங்க!

அதான் வந்து ரீப்ளேயில அடிச்சிருக்கோம்ல!

:))

VSK Saturday, December 16, 2006 4:28:00 PM  

//சாயும் வரை புலிப்பால் குடிப்பு போராட்டம் நடத்தப்படும் !//

சாயுங்க; சாயாமப் போங்க!
எனக்கென்ன வந்தது!

VSK Saturday, December 16, 2006 4:30:00 PM  

//அருமையான ஓவர்,
ஆட்டக்காரரால் ஒரு பந்தைக் கூட தொட முடியல. பிரமாதம்

வெல்டன் சிபி. //

என்ன இந்தியா ஆட்டத்தைப் பாத்துட்டு வர்றீங்களா, கோவியாரே!

இங்கே அடிச்சி விளாசித் தள்ளியிருக்கோம், பாத்தீகளா!

VSK Saturday, December 16, 2006 4:32:00 PM  

//சும்மாவா விட்டிங்க ?//

சிபியார் சொத்தையா பந்து போட்டாருன்னு இப்பிடி சொல்லிக் காட்ட வேணாம் கோவியாரே!

அவர் சும்மா விட்டாருன்னு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா!

கோவி.கண்ணன் [GK] Sunday, December 17, 2006 9:11:00 AM  

//இங்கே அடிச்சி விளாசித் தள்ளியிருக்கோம், பாத்தீகளா! //

இருங்க புலிப்பால் அருந்திய அசதியில் கொஞ்சம் ஓய்வெடுக்கிறாங்க ...
அப்பறம் வந்து இரண்டே பந்து கிளீன் போல்ட் ? இல்லை மட்டை உடையும் !
:)

VSK Sunday, December 17, 2006 9:17:00 AM  

//அப்பறம் வந்து இரண்டே பந்து கிளீன் போல்ட் ? இல்லை மட்டை உடையும் !//

கனவு காணாதீங்க கோவியாரே!

சிபியார் இந்தியா கங்குலியின் தயவால் வெற்றி முகத்தில் இருக்கிறது தென்னாப்பிரிக்காவில்!

இன்னும் 8 விக்கெட்தான் விழணும்!
350 ரன் நமக்கு இருக்கு!

அதுக்கு அப்புறம்தான் அவரை இங்கே பார்க்கலம்!
அதுக்குள்ளே நான் செஞ்சுரி அடிச்சிருவேன்!
ஹஹ்ஹஹஹ்ஹா!

ஆவி அண்ணாச்சி Sunday, December 17, 2006 9:19:00 AM  

நாங்களும் விளையாட்டுக்கு வரலாமா?

VSK Sunday, December 17, 2006 9:32:00 AM  

நான் சீக்கிரமா செஞ்சுரி அடிக்க வசதியா லூஸ் பந்தா போடறதுன்னா, யார் வேணும்னாலும் வரலாம்!

ஆனா, நீங்க ஆவியாச்சே!
உங்க பௌலிங் ஆக்சனை என்னால பார்க்க முடியாதே!

எப்பிடி ஆடறது?

:))

கோவி.கண்ணன் [GK] Sunday, December 17, 2006 9:33:00 AM  

//ஆன்லைன் ஆவிகள் said...
நாங்களும் விளையாட்டுக்கு வரலாமா?
//

வாங்க அண்ணாச்சி !
ஒரு கை குறையுதுன்னு நினைச்சிகிட்டு இருந்தேன் நல்ல வேலை வந்திங்க !

நீங்க போட்டாதான் பந்து கண்ணுக்கே தெரியாது !

Anonymous,  Thursday, December 21, 2006 9:44:00 PM  

உங்கள் கவிதை நன்றாக இருந்தது. ஆன்மீகம் பற்றி நிறைய எழுதியிருக்கிறீர்கள். உங்கள் வலைப்பூவை முழுவதும் மேய்ந்துவிட்டு என் பின்னூட்டம் அளிக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

மெலட்டூர்.இரா.நடராஜன்

என் வலைப்பூவிலும் நகைச்சுவைக்கு இடம் உண்டு.

சிறில் அலெக்ஸ் Sunday, December 31, 2006 8:03:00 AM  

SK,
Congrats on comming third this month.
A nice poem indeed.
This time two poems have won.

:)

VSK Sunday, December 31, 2006 10:12:00 AM  

சிறிலாரில் தொடங்கி, சிறிலாரில் முடிகிறது இப்பதிவு 2006-ல்!

இப்ப போட்ட மயில்தான் பெரிய குறும்பு!

சரிதானே சிறிலாரே?

:))

நன்றி.

VSK Sunday, December 31, 2006 6:00:00 PM  

அட! இது உண்மையாகி விட்டதே!

எனக்கு மூன்றாம் பரிசு!

என்னையே நான் கிள்ளிப் பார்த்துக்கிறேன்!

ஆமாம்! எனக்குத்தான்... இந்தப் பாட்டுக்க்குத்தான் மூன்றாம் பரிசாம்!

வாக்களித்த, நடுவு செய்த அனைவருக்கும் நன்றி!

படிப்படியாய் முன்னேறி, மூன்றாம் பரிசு அடைந்தபின், இத்தோடு இந்த ஆட்டம் க்ளோஸ் என ஒரு அறிவிப்பு!!
அனைவருக்கும் மீண்டும் நன்றி!

திருவெம்பாவையைத் தொடர்ந்து எழுத எண்ணியிருப்பதால், ஆத்திகத்தை விடுத்து, "காலத்தில்" சந்திக்கலாமே நண்பர்களே!

Anonymous,  Sunday, December 31, 2006 7:38:00 PM  

வாழ்த்துக்கள் SK...

அரை பிளேடு Sunday, December 31, 2006 10:30:00 PM  

எஸ்.கே. அவர்களுக்கு

வாழ்த்துக்கள்.

குறும்பின்றி குவலயமில்லை.

இருக்கும் வரை இனிப்பாய் வாழ்ந்திடச் சொன்ன தங்கள் கவிதை மனதில் நின்றது. வென்றது.

தங்கட்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

VSK Monday, January 01, 2007 12:31:00 AM  

முதன்முதலாய் வந்து வாழ்த்தியதிற்கு மிக்க நன்றி, திரு ஜி!

புத்தாண்டு வாழ்த்துகள்!

VSK Monday, January 01, 2007 12:33:00 AM  

வாழ்த்துகளுக்கு நன்றி, சேதுக்கரசி அவர்களே!

VSK Monday, January 01, 2007 12:36:00 AM  

முதல் பரிசு பெற்றவரே முகமலர்ந்து
வந்து வாழ்த்துவது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது திரு. அ.பி.!

உங்களுக்கும் எனது மனமார்ந்ட்fஹ வாழ்த்துகள்!

புத்தாண்டு வாழ்த்தும் கூட!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP