Thursday, November 02, 2006

இலவசம் மனக்கசப்பே!

"இலவசம் மனக்கசப்பே!"

இப்ப நீங்க சும்மா நீங்க உண்டு உங்க வேலை உண்டுண்ணு இருக்கீங்க!

உங்க போறாத நேரம், வேலை நேரத்துல பொழுது போகாம,

உங்களோட தமிழார்வம் உங்களுக்குள்ளே பீரிட்டுகிட்டு வருது!

அக்கம் பக்கம் கண்ணை வுடறீங்க!

ஸூபர்வைஸர் மதிய சாப்பாட்டுக்கு போயிருக்காங்க1

கை தன்னை அறியாம, தமிழ்னு டைப் அடிக்குது!

ஒரு 10-15 பக்கத்துக்கு சுட்டிங்க வருது1

சனி பலமா பிடிச்சிருக்கான் உங்களை!

மூணாவது தொடுப்பு தமிழ்மணம்னு இருக்கு!

என்னன்னு பாக்கலாம்னு சும்மா விளையாட்டா தட்டறீங்க!

போச்சு!

இனிமே நீங்க, நீங்க இல்லை!

ஒரு அந்தர்பல்டி அடிக்கப் போவுது உங்க வாழ்க்கை!

வீடு இல்லை!

மனைவி இல்லை!

இதுவரைக்கும் பழகின நண்பரில்லை!

புள்ளை குட்டி இல்லை!

இனி எல்லாம் தமிழ்மணமே!

இலவசமா வந்தது இது!

தேவையா இதுன்னு ஒவ்வொரு விநாடியும் உள்மனசு உதைச்சுகிட்டே இருக்கும்!

வூட்டுல கொடுக்கற ஒதை இந்த கணக்குல வராது!

அது தனி!

ஒரு மணி, ரெண்டு மணின்னு இதுல ஒக்காந்திட்டு வந்தா, லஞ்சம் கொடுத்துட்டு வர்றது கூட 'இலவசமா' கிடைக்காது!


இப்போ இன்னோரு இலவசத்தை பாப்போம்!

இதுவரைக்கும் உங்க வாழ்க்கைல வராத ஆளுங்க உங்களோட நெருங்கிய நண்பராவாங்க!

நீங்க நெனச்சே பாக்காத அளவுக்கு, அவங்க உங்க வாழ்க்கையிலோ, இல்லை நீங்க அவங்க வாழ்க்கையிலோ பூந்து புறப்படப் போறீங்க!

இது கூட இலவசந்தாங்க!

ஒத்தப் பைசா செலவில்லாம வர்றதுதாங்க இது!

ஆனா, இது உங்க வாழ்க்கைல இனிமே பண்ணப்போற எதையும் நீங்க கற்பனை கூட செஞ்சு பாக்க முடியாது!

ஆனா, இது நிஜம்னு மட்டும் நம்பி ஏமாந்துடாதீங்க!

ஒரு விலை கொடுத்து வாங்கற பொருளுக்குத்தாங்க மதிப்பு!

மத்தது எல்லாம்........ அதுலேயும் இந்த இலவசமா வருதே..... அதனால வர்றது எல்லாம் வெறும் கசப்பு மட்டும்தாங்க!

இவங்க உங்க சொந்தம்னு நீங்க நெனச்சு ஏமாந்து மட்டும் போயிடாதீங்க!

ஒரே ஒரு தடவை இவங்க மனசு கோணற மாதிரி நடக்கறதா அவங்க நினைச்சுட்டா போறும்!

நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம்!

அவங்க நினைச்சுட்டா போறும்!

அத்தோட உங்க ஆட்டம் க்ளோஸ்!

இலவசமா வருதா?

தல தெறிக்க ஓடுங்க!

இதுல மயங்கி ஏமாந்து போகாதீங்க!

அனுபவத்துல சொல்றேங்க!

ஏன் சார்? எங்கே இப்படி ஓடறீங்க?

இதுவும் இலவசம்னா?

சார்! சார்!...............


58 பின்னூட்டங்கள்:

குமரன் (Kumaran) Thursday, November 02, 2006 10:52:00 PM  

//இவங்க உங்க சொந்தம்னு நீங்க நெனச்சு ஏமாந்து மட்டும் போயிடாதீங்க!

ஒரே ஒரு தடவை இவங்க மனசு கோணற மாதிரி நடக்கறதா அவங்க நினைச்சுட்டா போறும்!

நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம்!

அவங்க நினைச்சுட்டா போறும்!

அத்தோட உங்க ஆட்டம் க்ளோஸ்!
//

Repeattuu...

VSK Thursday, November 02, 2006 10:56:00 PM  

மனம் நொந்து எழுதிய உண்மையான பதிவு அது, குமரன்!

உங்களுக்கும் ரிபீட்டா?

ஆழ்ந்த அனுதாபங்கள்!

:(

துளசி கோபால் Thursday, November 02, 2006 11:03:00 PM  

குமரன் சொன்னதை நானும் ரிப்பீட்டு.

அவுங்க மனத்தை கோணடிக்க வேணாம். அப்படின்னு அவுங்களே நினைச்சுக்கிட்டு ...... ஹூம்

VSK Thursday, November 02, 2006 11:10:00 PM  

இப்ப்டியெல்லாம் எழுதினாத்தான் நம்ம பதிவுல ஒரு பின்னூட்டம் போடுவீங்களாக்கும்!

:))

நீங்களும் அனுபவிச்சிருக்கீங்களா?

ம்ம்ம்ம்!

விதி வலியதுங்க, துளசி!

:))

ஜெயஸ்ரீ Thursday, November 02, 2006 11:21:00 PM  

//ஒரே ஒரு தடவை இவங்க மனசு கோணற மாதிரி நடக்கறதா அவங்க நினைச்சுட்டா போறும்!

நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம்!

அவங்க நினைச்சுட்டா போறும்!

அத்தோட உங்க ஆட்டம் க்ளோஸ் //


((-

VSK Thursday, November 02, 2006 11:24:00 PM  

யூ டூ ப்ரூட்டஸ்!!
:))

நாமக்கல் சிபி Thursday, November 02, 2006 11:32:00 PM  

//விதி வலியதுங்க//

ஆம்! விதி வலியதுதான்.

:))

VSK Thursday, November 02, 2006 11:39:00 PM  

ஐயோ! விதி வலியதுன்னு கலாய்க்கறவரே வந்து சொல்றாரே!

என்ன கொடுமை இது சரவணன்!

:))

நாமக்கல் சிபி Thursday, November 02, 2006 11:52:00 PM  

மன்னிக்கவும் மிதி வலியது என்பதைத்தான் தவறாக விதி வலியது என்று சொல்லி விட்டேன்.

:))

கோவி.கண்ணன் [GK] Friday, November 03, 2006 12:07:00 AM  

குளிர்தரும் நிலவு இலவசம்,
இதம் தரும் கதிரவன் இல்வசம்,
நிழல் தரும் மரம் இலவசம்,
மரம் தரும் குளிர்காற்று இல்வசம்,
மழை தரும் நீர் இலவசம்,
குயிலின் குரல் இலவசம்,
மயிலின் நடனம் இல்வசம்,
மூச்சுக் காற்றும் இலவசம்,
மலர் தரும் மணம் இலவசம்,

மோக மூச்சு இலவசம்,
அதில் சேரும்,
மனையின் நெருக்கம் இலவசம்,
சுகம் தரும்,
துணையின் பரிவும் இலவசம்,

நட்பின் உன்னதம் இலவசம்,
அதில்,
நம்பிக்கையின் புத்துணர்ச்சி இலவசம்,

மகிழ்வை தரும் மனசு இலவசம்,
மறைந்துள்ள கருமையை தேடுவதில்
மட்டுமே பலர் வசம் !

இன்சொல் தரும் அவரவர் நாக்கே இலவசம் என்று அறியதோருக்கு, நல்
இலவசம் என்றுமே இல்லை
அவர் வசம் !

நன்றி
கோவியார்

வல்லிசிம்ஹன் Friday, November 03, 2006 12:08:00 AM  

இலவசம்னா எல்லாமே இலவசமா.

நாம கொடுக்கிற, படுகிற கஷ்டம்
சில உண்டா இல்லையா.
அதுதான் விலை.
குடும்பத்துக்கும் மணத்திற்கும் வித்தியாசம் இல்லை.

பொன்ஸ்~~Poorna Friday, November 03, 2006 12:19:00 AM  

//ஒரு விலை கொடுத்து வாங்கற பொருளுக்குத்தாங்க மதிப்பு!//
எஸ்.கே, இந்தத் தமிழார்வத்துக்கு நாம் எதுவும் விலை கொடுக்கலைங்கிறீங்களா? உங்க பதிவுலயே இதுக்கான விலை இருக்கே..

//வீடு இல்லை!

மனைவி இல்லை!

இதுவரைக்கும் பழகின நண்பரில்லை!

புள்ளை குட்டி இல்லை!
//
இதெல்லாமே நாம் கொடுக்கும் விலை தானே? பணமாகவோ பொருளாகவோ இல்லாததால் நாம் இதைக் கொடுக்கிறோம்னே தெரியாம போகுதோ?!

எப்படியோ எனக்கு மனக் கசப்பெல்லாம் இல்லீங்க.. தமிழ்மணத்தாலயும் தமிழ்ப்பதிவுகளாலயும் தான் ஒரு மூணுமாசம் எனக்கு நல்ல சுவையான சாப்பாடே கிடைத்தது.. உங்களுக்கு பொழுதுபோகாத வேலை நேரத்தில் சாப்பிடப் போன அந்த சூப்பர்வைசர் வாழ்க.. :)))

Unknown Friday, November 03, 2006 12:25:00 AM  

எஸ்.கே நீங்கள் நான் பெரிது மதிக்கும் பதிவர்... ஆனால் உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவா..


என்னங்க ஆச்சு?
:(

VSK Friday, November 03, 2006 12:44:00 AM  

//மன்னிக்கவும் மிதி வலியது என்பதைத்தான் தவறாக விதி வலியது என்று சொல்லி விட்டேன்.//

ரொம்ப சரியா சொல்லிட்டிங்க சிபியாரே!

இந்த மிதி கூட இலவசம்தான்!

ஆனா, வலி....?

:))

VSK Friday, November 03, 2006 12:48:00 AM  

//மறைந்துள்ள கருமையை தேடுவதில்
மட்டுமே பலர் வசம் !//

அருமையானதொரு கவிதையை உங்களிடமிருந்து வரவழைக்க இப்பதி உதவியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, கோவியாரே!

இருப்பதை விட்டு, இப்படி கருமையைத் தேடியே, இந்தத் தேடலிலேயே அலைபவரை எனவென்று சொல்ல!

மீண்டும்....

விதி வலியது!!

VSK Friday, November 03, 2006 12:50:00 AM  

//அதுதான் விலை.
குடும்பத்துக்கும் மணத்திற்கும் வித்தியாசம் இல்லை.//

மணத்தை விட்டுற முடியும்ங்க, வல்லி!
குடும்பத்தை...??

அடுத்த பின்னூட்டத்தைப் பாருங்க!!

VSK Friday, November 03, 2006 12:52:00 AM  

என் கண்னைத் திறந்துட்டீங்க பொன்ஸ்!

ஆனா, ரொம்ப பெரிய விலைங்க அது!

சீக்கிரமே உங்களுக்கு மணமாக [தமிழ்மணமாக இல்லை!] வாழ்த்துகிறேன்!

:))

VSK Friday, November 03, 2006 12:56:00 AM  

அட நீங்க ஒண்ணுங்க, தேவ்!

தேன்கூடு போட்டிக்காக என் மனதின் இன்றைய நிலையை எழுதினேன்.

அவ்வளவுதாங்க!

உங்க தலைவரை சிறுமைப் படுத்தும் எண்ணமெல்லாம் இல்லீங்க!

என் மேல் வைத்திருக்கும் அன்புக்கு என் நன்றி!

திட்டறதுன்னா லக்கிலுக்கு சாரைத் திட்டுங்க!

அவர்தானே இந்த தலைப்பை கொடுத்தது!!

பொன்ஸ்~~Poorna Friday, November 03, 2006 1:01:00 AM  

இருந்தாலும் எஸ்கே, தேன் கூடு போட்டிக்காக நீங்க தமிழ்மணத்தைப் பத்தி எழுதினது அத்தனை சரியாக இல்லை..

தமிழ்வலைப் பதிவுகள்னு போடுங்களேன்.. இன்னும் பொருத்தமாக இருக்கும்..

வெட்டிப்பயல் Friday, November 03, 2006 1:08:00 AM  

தேவ்,

இன்று எஸ்.கே ஏனோ எஸ்.கே அவர்கள் நல்ல மூடில் இல்லை என்று நினைக்கிறேன்.

இதோ அவருக்காக!

VSK Friday, November 03, 2006 1:12:00 AM  

என்னங்க பொன்ஸ், நீங்க வேற புது பிரச்சினையைக் கிளப்பறீங்க!
:))

எனக்கு வேற எந்த வலைப்பதிவும் தெரியாது.

நான் வேற எங்கேயும் போனதில்லை.

எனக்குத் தெரிஞ்சதைத்தானே நான் சொல்ல முடியும்?

தலைப்புக்கு எழுதினதால, எனக்கு தமிழ்மணத்தின் மேலிருக்கும் மதிப்பையும், அதன் மூலம் கிடைத்த உங்களைப் போன்ற நல்ல நண்பர்களையும் குறிப்பிட முடிய வில்லை.

அடுத்த பதிவில், சரி செய்து விடுவோம்ல!

யார் மனமாவது இதன் மூலம் புண்பட்டிருந்தால் மன்னிக்கவும்!

VSK Friday, November 03, 2006 1:16:00 AM  

சுவாமி பித்தானந்தா அவர்களே!

முக்காலமும் உணர்ந்த ஞானி நீங்கள்!

உங்கள் உபதேசம் படித்தேன்!

மனம் ரொம்பவும் சாந்தியாக ஆகிவிட்டது!

உங்கள் சக்தியே சக்தி!!

சென்னை வரும் போது தரிசனம் கிட்ட அருள் புரிய வேண்டும்!

:))

நெல்லை சிவா Friday, November 03, 2006 1:27:00 AM  

கலக்கீட்டீங்க எஸ்கே அய்யா. இதுவரைக்கும் வந்திருக்கிற இலவசத்தில நீங்க முன்னாடி வந்துட்டீங்க. ரொம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துக்கள்.

ramachandranusha(உஷா) Friday, November 03, 2006 1:31:00 AM  

எஸ்.கே அருமையான கற்பனை, ஆனால் சில பதிவுகளைப் போடும்பொழுது சொ.கா.சூ வைத்துக்கொள்ளப் போகிறோம்
என்று தெரியாமலா போடுகிறோம் :-) ( இந்த சொற்சொடருக்கு உரிமையாளர் என்றைக்கு காப்பி ரைட் வாங்கப் போகிறாரோ தெரியவில்லை) இந்த ஜூஜூபிக்கு பயந்து ஓட முடியுமா என்ன? கொஞ்ச நாள் ஆன பழகிடும்.உதாரணமாய் கல்யாணம்
செஞ்சிக்கிறா மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன் :-)))))))))))))))))))

VSK Friday, November 03, 2006 1:43:00 AM  

வாழ்க்கையைத் தேட கறனையை நாடி ஓட வேண்டாம் என எனக்கு இன்று உணர்த்திய ஒரு நிகழ்வுதான் இது, உஷா!

இதுவும் விலகிப் போகும்!
[Even this shall pass!!]

எல்லாம் இன்ப மயமே!!

:))

VSK Friday, November 03, 2006 1:46:00 AM  

அனுபவங்கள் ஒரு நல்ல பாடம் என்பதை எனக்கு சொல்லிய ஒரு நிகழ்வு இது, திரு. நெல்லை சிவா!

வாழ்ஹ்த்துக்கு மிக்க நன்றி!~

வெட்டிப்பயல் Friday, November 03, 2006 1:47:00 AM  

//சென்னை வரும் போது தரிசனம் கிட்ட அருள் புரிய வேண்டும்!
//

நிச்சயமாய் எஸ்.கே அவர்களே!
அதுபற்றித்தான் யோசித்து வருகிறோம்.

:))

VSK Friday, November 03, 2006 1:52:00 AM  

:)))

பித்தானந்தரே துணை!

மதுமிதா Friday, November 03, 2006 2:06:00 AM  

சரி சரி
அமைதி அமைதி

இலவசமானாலும், இல்லைன்னாலும்
பின்னூட்டம் 30 வந்தாச்சு.

மனம் மகிழ்ச்சியா இருங்க எஸ் கே
எத்தனை பேரு ஓடி வந்தாச்சு இங்கே

பதிவு போட்ட பிறகு இப்ப மூட்
சரியாயாச்சா

தி. ரா. ச.(T.R.C.) Friday, November 03, 2006 6:34:00 AM  

என்ன சொல்லவறீங்க் ஸ்.கே. நம்ப இலவசம் கொத்ஸ் பதிவுக்கு போனமா வேண்டாமா?

யோகன் பாரிஸ்(Johan-Paris) Friday, November 03, 2006 8:52:00 AM  

எஸ்கே ஐயா!
எதிலாவது சலிப்பு ஏற்படும் போது; தெரியும் ஞானமெனக் கொள்ளலாமா???இதை!!!!
பலருடன் நானும் ஒத்துப் போகிறேன்; இது இலவசமல்ல!!! இதற்கு நேரம் எனும் விலையுண்டு.
யோகன் பாரிஸ்

ILA (a) இளா Friday, November 03, 2006 9:01:00 AM  

//மனம் நொந்து எழுதிய உண்மையான பதிவு அது, குமரன்!

உங்களுக்கும் ரிபீட்டா?
//
இன்னும் ஒரு ரிபீட்டு. ரிவிட்டு நிறைய பேர் இலவசமா வாங்கி இருப்பாங்க போல இருக்கே

VSK Friday, November 03, 2006 9:42:00 AM  

அதானே மதுமிதா!

மாங்கு மாங்குன்னு உட்கார்ந்து, 3 - 4 புஸ்தகத்தை எல்லாம் புரட்டி, புது மாதிரியா சொல்லலாம்னு ஒரு கவிதைச் சாயல்ல எழுதற பதிவுக்கெல்லாம் கிடைக்காத அன்பும், ஆறுதலும், சும்மா ஒரு அரை மணில எழுதின இதுக்கு கிடைச்சிருக்கு!

அதுவும் இலவசமா!:))

தமிழ்மணம் வாழ்க!
தமிழ்மண வலைப் பதிவர்கள் வாழ்க!

நிம்மதையை இழக்கலீங்க!
முருகனருளால!!

VSK Friday, November 03, 2006 9:43:00 AM  

பாக்கறேன், "சிந்தாநதி"!
நன்றி!!

VSK Friday, November 03, 2006 9:51:00 AM  

கொஞ்ச நேரம் முன்னாடிதான் பொன்ஸ் வந்து ஒரு பிரச்சினையை கிளப்பினாங்கன்னா[:))], இப்போ உங்க பங்குக்கு நீங்க ஒண்ணு சொல்றீங்களே, தி.ர.ச. அவர்களே!

அவர்தான் பேருலியே இலவசத்தை வெச்சிருக்காரே!

நான் சொன்னது, கருத்து மாறுபட்டாலும் நட்பு வேறுன்னு புரிஞ்சுக்காம தேடிகிட்டு இருக்கறவங்களைப் பத்தி!

எல்லாருக்கும் இது பொருந்தாது!

அது வேற ஒண்ணும் இல்லீங்க!
உங்க எல்லார்கிட்டயும் ஒரு உண்மையைச் சொல்லிடறேன்.

சில தினங்களுக்கு முன், என் அருமை அண்ணன் சென்னையில் காலமானார்.

அவரை நினைச்சுகிட்டு கொஞ்சம் வருத்தப் பட்டுகிட்டு இருந்தபோது, நடந்த இன்னொரு நிகழ்வு சற்று அதிகமாவே என்னை வருத்தியது.
அதுல எழுந்த எண்ணங்கள்தான் இந்தப் பதிவு!

சென்னைக்கு இன்று கிளம்புகிறேன்.
வர ஒரு 3 வாரம் ஆகும்!
அதுக்கு முன்னாடி ஒரு பதிவு போடலாம்னு இது!
ஹிஹிஹி!

VSK Friday, November 03, 2006 9:54:00 AM  

என்னக்க யோஹன் - பாரிஸ், ஞானம் கீனம்னு சொல்றீங்க!

அதெல்லாம் நமக்கு சுத்தமா கிடையாதுங்க!

அப்படிப் பார்த்தா, எதுதான் இலவசமா கிடைக்குது?

எல்லாத்துக்கும் ஒரு விலை சொல்லலாம்.

நான் இலவசம்னு இங்கே சொன்னது, சாதாரண அளவுல எல்லாராலும் புரிஞ்சுக்கற, காசில்லாம வர்றதைப் பத்தி மட்டும்தான்!

:))

நன்றி!

VSK Friday, November 03, 2006 10:22:00 AM  

சொ.செ.சூ. !!
[காப்பிரைட் "வரவனையான்"னு நினைக்கிறேன்!!]

:))

நன்றி இளா!!

ஓகை Friday, November 03, 2006 11:06:00 AM  

//நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம்!

அவங்க நினைச்சுட்டா போறும்!//

இது ரொம்ப கஷ்டம்தான் எஸ்கே. எனக்கு இன்னும் இணையத்துல ஏற்படலன்னு நினைக்கிறேன்.

ஆனா வாழ்க்கையில எற்பட்டிருக்கு.

என்னத்த கொண்டுவந்தோம் நாம விலையா கொடுக்கறத்துக்கு. பொறந்ததே எலவசம். அப்பறம் வருசா வருசம் கிடைக்கப் போற தெவச சாப்பாடு வரைக்கும் எல்லாம் எலவசந்தான்.

G.Ragavan Friday, November 03, 2006 12:01:00 PM  

இலகுவாய் வசமாகும் இலவசமோ! இல்லையில்லை. இலவசம் என்று எதுவுமே இல்லை. இந்தத் தமிழ்மணமும் வலைப்பூக்களுக்கும் கொண்டு வந்து தரும் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உங்களது நேரமும் நட்பும் உறவும். பண்டமாற்றுதான் எஸ்.கே. சண்டைகள் வரும். சச்சரவுகளும் வரும். நல்ல நட்பு மட்டும் நீண்டு நிலைக்கும். இதுதான் உண்மை. என்றைக்கும் முருகனருள் முன்னிற்கும்.

VSK Friday, November 03, 2006 12:16:00 PM  

மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள், ஜி.ரா.

இப்போது சென்னையிலா, இல்லை பெங்களூரிலா?

இன்று கிளம்பி சென்னைக்கு வருகிறேன்.

முடிந்தால் பார்க்கலாம்!!

மற்ற சென்னை நண்பர்களும் 65328595 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் மகிழ்வேன்!

நன்றி!

கைப்புள்ள Friday, November 03, 2006 12:43:00 PM  

//தல தெறிக்க ஓடுங்க!

இதுல மயங்கி ஏமாந்து போகாதீங்க!

அனுபவத்துல சொல்றேங்க!

ஏன் சார்? எங்கே இப்படி ஓடறீங்க?

இதுவும் இலவசம்னா?//

ஐயா! உங்களுக்கு என்னங்க மனக்கசப்பு? ஏன் இப்படி திடீர்னு?

VSK Friday, November 03, 2006 3:14:00 PM  

தி.ரா.ச. அவர்களுக்கு எழ்ஹுதிய பதிலில் சொன்னது போல ஒரு தாக்கத்தில் விளைந்த எண்ணக் கலவைதாங்க இது.

இப்ப எல்லாம் சரி ஆயிடிச்சு!

ராஜா சார்கிட்ட எதனாச்சும் கேக்கணுமா?

இம்முறை அவரை சந்திப்பேன்!
:))

VSK Friday, November 03, 2006 3:17:00 PM  

வராத வரைக்கும் சந்தோஷம், திரு.நடராஜன்!

மைலாப்பூர் பக்கம் மன்னாரை பார்க்க வரீங்களா?

:))

நம்பர் கொடுத்திருக்கேன்.
கூப்பிடுங்க!

Thekkikattan|தெகா Friday, November 03, 2006 4:06:00 PM  

எஸ்.கே,

இப்பத்தான் உங்களுக்கு இந்த உண்மைகள் எல்லாம் புரிய வருதா? இதெல்லாம் இணையத்தில் சகஜமுங்கோ... எதனையும் தாங்கும் ரப்பர் இதயம் வேண்டுமிங்கே :-))

கவலை வேண்டாம் கூடிய விரைவிலேயே immune ஆகிவிடுவீர்கள்.

தாங்களின் சகோரதரரின் இழப்பிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், எஸ்.கே அவர்களே.

VSK Friday, November 03, 2006 4:33:00 PM  

எல்லாத்தையும் தாங்கற இதயந்தாங்க இது!
எல்லாம் சரி ஆயிடுச்சு!

அனுதாபத்துக்கு நன்றி!

Thekkikattan|தெகா Friday, November 03, 2006 4:42:00 PM  

சரிங்க எஸ்.கே புரிஞ்சுகிட்டேன்.

கைப்புள்ள Friday, November 03, 2006 11:09:00 PM  

//இப்ப எல்லாம் சரி ஆயிடிச்சு!

ராஜா சார்கிட்ட எதனாச்சும் கேக்கணுமா?

இம்முறை அவரை சந்திப்பேன்!
:))//

ஆஹா! மிக்க மகிழ்ச்சி எஸ்கே சார். கடை கோடி ரசிகன் நான். என்னத்த கேக்க போறேன். ஆனா திருவாசகத்தைக் கேட்டுட்டு "கவிதை"னு நானா நெனச்சி எழுதுனது இங்கே இருக்கு...அதுல இலக்கணம் எல்லாம் எதுவுமில்லை. எதோ என் மனசுக்குப் பட்டதை எழுதுனேன். எழுதும் போதே இத ராஜா சார் கிட்ட காட்டனும்னு ஒரு ஆசை. முடிஞ்சா அவரு கிட்ட காட்டுங்களேன். ரொம்ப பேராசை படுறேனோ?
:)

திருவாசகத்துக்கு உருகியவன்

RBGR Saturday, November 04, 2006 1:33:00 AM  

//இதுவரைக்கும் உங்க வாழ்க்கைல வராத ஆளுங்க உங்களோட நெருங்கிய நண்பராவாங்க!//

நண்பர்கள் என்ற பதம் நட்புடன் இருப்பவர்களே எனில் நண்பன் ஏன் எதிரியாகிறான்.
நம் வாழ்வில் எதிரி ஒன்றும் தனியாய் பிறப்பதில்லை.நம்மைப்பிடிக்காத ..நமக்குப்பிடிக்காத நண்பர்தாம் எதிரிகள் என்பது என் எண்ணம்.


//நீங்க ஒண்ணும் பண்ண வேண்டாம்!

அவங்க நினைச்சுட்டா போறும்!

அத்தோட உங்க ஆட்டம் க்ளோஸ்!//


உண்மைங்க...அதுவும் சில அறிவு ஜீவி கும்பல் இருக்குங்க...!
ஏதோ! சி.பி.ஐ. ரகசிய மாநாடு போன்று இவங்களா ஒரு இடத்தில் சந்தித்து "வலைப்பதிவாளர் சந்திப்பு" என்று பேட்டிகள் வேறு கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள்.
அந்த கும்பல் பெல் பாட்டம் போட்ட காலத்தில் இருந்தே வழி வழியாய் உருவானது.

ஆனால்,இந்த பார்ப்பன எதிர்ப்பு என்ற புளித்துப்போன தயிர்சாதம் பத்திபேசும் ஆதரிக்கும் ஒரு கும்பல் சில சமயம் ஏண்டா இதை எல்ல்லாம் பார்த்து நேரம் வீணாக்குகிறோம் என்று எண்ண வைத்தது உண்மை.

லக்கிலுக் Monday, November 06, 2006 2:14:00 AM  

வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

VSK Wednesday, November 22, 2006 5:27:00 PM  

நீங்க பேராசைப் படலைங்க, கைப்புள்ள!

ராஜாசாரைப் பார்த்தேன்!

உங்களைப் போல பல்லாயிரம் ரசிகர்கள் அவரிடமிருந்து இன்னும் வேண்டுவதைத் தெரிவித்தேன்!

கொஞ்சம் விரக்தியாய்ப் பேசினார்!

பணம் இல்லாத எதையும் இனிச் செய்வதாய் இல்லை எனச் சொன்னார்.

வருத்தமாய் இருந்தது.

ஆனால், புரிந்துகொள்ள முடிந்தது.

கொஞ்சம் ஓட்டு போடுங்க!!

VSK Wednesday, November 22, 2006 5:30:00 PM  

I aghree with you, Santhosh!

VSK Wednesday, November 22, 2006 5:36:00 PM  

வாழ்த்துக்கு நன்றி, லக்கிலுக்!

அதுவும் சமீபத்தில் உங்களைச் சந்தித்தபின் படித்த இந்த வாழ்த்தை மனமாற ஏற்று, மகிழ்கிறேன்!

thiru Thursday, November 23, 2006 4:53:00 AM  

நண்பர் SK,

அண்ணனில் மறைவிற்கு ஆழ்ந்த வருத்தங்கள்!

உங்களது பதிவை படித்து SKவிற்கு என்ன ஆயிற்று என தவிக்கிறது. இதுவும் ஒரு அனுபவமாக இருக்கலாமே! கடந்து செல்லுங்கள் நண்பரே. இலவசம் எல்லாம் மனக்கசப்பல்ல.அது எதில் இலவசம் என்பதை பொறுத்தது.

thiru Thursday, November 23, 2006 4:55:00 AM  

SK,

சென்னையில் இருப்பின் வாய்ப்பு அமைந்தால் சந்திப்போம். பின்னர் தொடர்பு கொள்கிறேன்!

VSK Thursday, November 23, 2006 12:24:00 PM  

நண்பர் திரு,

சென்னை சென்று திரும்பியாயிற்று!

நீங்கள் அங்கிருப்பது எனக்குத் தெரியவில்லை.

சந்திக்க முடியாததில் வருத்தமே.

VSK Thursday, November 23, 2006 12:27:00 PM  

பத்திரமாய் வந்துட்டேன் குமரன்.

பதிவு போடணுமான்னு யோசிக்கிறேன்.

சிங்கைக்கு சென்றது கோவியாரை சந்திக்கவே.!!

கூடவே குழ்லியையும், வடுவூர் குமாரையும் சந்தித்தேன்.

விடாது கருப்புடன் பேசினேன்!

வருகிறேன் எனச் சொல்லி ஏமாற்றி விட்டார்!

:))

thiru Thursday, November 23, 2006 1:22:00 PM  

//SK said...
நண்பர் திரு,
சென்னை சென்று திரும்பியாயிற்று! நீங்கள் அங்கிருப்பது எனக்குத் தெரியவில்லை. சந்திக்க முடியாததில் வருத்தமே.//

நண்பரே! நான் சென்னைக்கு வருகிற வாரம் சென்று மூன்று வாரங்களில் திரும்புகிறேன். வருங்காலங்களில் சந்திப்போம்!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP