"எல்லோரும் கொண்டாடுவோம்!"
"எல்லோரும் கொண்டாடுவோம் !"
நல்விரதம் முடிந்து மகிழ்வுடன் கொண்டாடும் அனைவருக்கும்,
இன்று முதல் சஷ்டி விரதம் தொடங்கும்
என் உளங்கனிந்த ஈகைத் திருநாள் வாழ்த்துகள் !!
இது தொடர்பாக எனக்கு மிகவும் பிடித்த கவிச்சக்கரவர்த்தியின் "பாவ மன்னிப்பு" படப்பாடலை இங்கு பதிவில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்!
இதில் ஒரு சிறப்பு பாருங்கள்.
முகமதிய நண்பர்களின் 40 நாள் விரதம் இன்றுடன் முடிகிறது!
சஷ்டி விரதமும், அதைத் தொடர்ந்து ஐயப்பன் விரதமும், அடுத்த இரு மாதங்களுக்கு!
அது முடிந்ததும், கிறித்தவ அன்பர்களின் ஈஸ்டர் நோன்பு மார்ச் முடிய!
விரதங்கள் நம்மைத் தூய்மைப் படுத்தி நல்வழியில் செலுத்தட்டும்!
அனைவருக்கும் வாழ்த்துகள்!
----------------------------------------------------------------
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
கல்லாகப் படுத்திருந்து
களித்தவர் யாருமில்லே
கைகால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பதில் லாபமில்லே
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம்
இன்றுபோல் ஒன்றாய்க் கூடி
நன்றாய் வாழுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
[அல்லாவின்]
நூறுவகை பறவை வரும்
கோடி வகைப் பூ மலரும்
ஆடவரும் அத்தனையும்
ஆண்டவரின் பிள்ளையடா
கருப்பில்லே வெளுப்புமில்லே
கனவுக்கு உருவமில்லே
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னை என்போம்
முடிவுக்கு தந்தை என்போம்
மண்ணிலே விண்ணைக் கண்டு
ஒன்றாய்க் கூடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
[அல்லாவின்]
ஆடையின்றிப் பிறந்தோமே
ஆசையின்றிப் பிறந்தோமா
ஆடி முடிக்கையிலே
அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?
படைத்தவன் சேர்த்துத் தந்தான்
வளர்த்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்துக் கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே
ஒன்றாய்க் கூடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாவின் பெயரைச் சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்.
-----------------------------------------------------------------
அனைவருக்கும் வாழ்த்துகள்!
25 பின்னூட்டங்கள்:
எஸ்கே ஐயா !
அருமையான டைமிங் பாடல்
நாமெல்லாம் தீபாவளி கொண்டாடிவிட்டோம். அடுத்து நம் இஸ்லாமிய நண்பர்களின் ஈகை திருநாளுக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்று சிறப்பான ஒரு பாடலை வலை ஏற்றி இருக்கிறீர்கள் !
பாராட்டுகள் !
இஸ்லாமிய பதிவு நண்பர்களுக்கு ஈகை திருநாள் வாழ்த்துக்கள் !
முதல் புரிதல் கண்டு,
மனமிகவும் மகிழ்ந்து
இனமென ஒன்றெனக் கோர்க்கும்
குணமதற்கு நன்றி!
மிக்க நன்றி, கோவியாரே!
இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!
நடிகர் திலகத்தின் பாட்டு நண்பர் ஜோவையும் வரவழைத்து விட்டது என் பதிவிற்கு!!
மிக்க நன்றி, திரு. ஜோ!
நூறுவகை பறவை வரும்
கோடி வகைப் பூ மலரும்
ஆடவரும் அத்தனையும்
ஆண்டவரின் பிள்ளையடா
- கவியரசரின் அற்புதமான பாடல்
சரியான நேரத்தில் நினைவுபடுத்தியுள்ளீர்கள்
நல்ல பதிவு!
இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல் வாழ்த்துக்கள்!
அற்புதக் கவிஞனின் அருமையான வரிகள் ஒவ்வொன்றும்!
மிக்க நன்றி, ஆசானே!
//நடிகர் திலகத்தின் பாட்டு நண்பர் ஜோவையும் வரவழைத்து விட்டது என் பதிவிற்கு!!//
உண்மை SK அவர்களே! ஆனால் இங்கே நடிகர் திலகம் மட்டுமல்ல ,மெல்லிசை மன்னருக்கும் கவியரசருக்கும் நாம் ரசிகர்கள் அன்றோ!
நான் விளையாட்டாகத்தான் சீண்டினேன், ஜோ!
:))
நேற்று விஜய் டீவியில் நடிகர் திலகத்தின் மலரும் நினைவுகள் என்று ஒரு இசை நிகழ்ச்சி ஒரு 2 1/2 மணி நேரம் போட்டார்கள்!
அற்புதமான அனுபவம்.
நீங்கள் சொன்ன மூவரும் சேர்ந்து கலக்கிய மிகச் சிறந்த பாடல்களின் தொகுப்பு!
டி.எம்.எஸ், சுசீலா இன்னும் பலர் நேரில் பாடக் கேட்டு மெய் மறந்தேன்!
விடாதீர்கள் இதை!
உங்களுடன் நானும் கலந்து கொள்கிறேன்.
deepavALI, RAMzan..
தீபாவளியில் 'அலி' என்ற இஸ்லாமிய பெயரும், ரம்ஜானில் 'ராம்' என்ற இந்து பெயரும் உள்ளதை என் நண்பர் ஒருவர் மெயிலில் சுட்டிக் காட்டியது இப்போது நினைவில் வருகிறது.
சொன்னதும் தான் கவனித்தேன்!
மிக்க நன்றி, திரு. கடல்கணேசன்!!
சரியான நேரத்தில் சரியான வலையேற்றம்;
இஸ்லாமிய நண்பர்களுக்கு ஈகை திருநாள் நல்வாழ்த்துக்கள!
"ஈவது விலக்கேல்"!
அந்த ஈகை நாளை விலக்காமல் விளக்கிய SK ஐயாவுக்கும் நன்றி.
"எல்லோரும் கொண்டாடுவோம்!", பாடலின் சுட்டி இதோ:
http://ww.smashits.com/associates/bollywoodworld/index.cfm?Page=Audio&SubPage=ShowTracks&AlbumID=2825&Letter=P
சகோதரர்களுக்கு ரமலான் நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.
நல்ல பாடல் எஸ்.கே சார்.
:-)
//விடாதீர்கள் இதை!//
விடவில்லை SK அவர்களே! சிங்கையில் இதற்காகவே விஜய் டீவி கனெக்ஷன் வாங்கி பார்த்து மகிழ்ந்தேன்.
//ஆடையின்றிப் பிறந்தோமே
ஆசையின்றிப் பிறந்தோமா
ஆடி முடிக்கையிலே
அள்ளிச் சென்றோர் யாருமுண்டோ?//
ஈகை திருநாளில், முடிந்தவரை அடுத்தவர்க்கு உதவும் குணம் எல்லோருக்கும் வர இறைவன் அருள் புரியட்டும்.
எல்லோருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.
மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன், நம் நண்பர்களில் யாரவது வந்து இதற்கான சுட்டி கொடுத்துச் சிறப்பிப்பார்கள் என!
அதை மெய்ப்பித்து விட்டீர்கள் ரவி!
மிக்க நன்றி!
[இதை எப்படிச் செய்வது என்பதை மிக, மிக எளிமையாக சொல்லித் தர முடியுமா? நான் ஒரு கணினி டம்மி!]
:))
நன்றி, திரு. நன்மனம்!
ஆகா! யான் பெற்ற இன்பம் நீங்களும் பெற்றது கேட்டு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
அப்படியே பதிவு செய்து வைத்திருக்கிறேன்!!
அடுத்தவருக்கு உதவுவது இருக்கட்டும்.
அடுத்தவரைக் குறைத்துப் பேசுவதைக் குறைத்தாலே போதுமே, BNI
அப்போது [நல்லவற்றை] கொடுக்கும் குணம் தானே வரும் !
நன்றி.
வந்து வாழ்த்தியமைக்கு நன்றி, குமரன்.
//ஆடவரும் அத்தனையும்
ஆண்டவரின் பிள்ளையடா//
அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்கள்.
ஈகைத்திருநாள் வாழ்த்துகளுக்கு நன்றி எஸ்கே.
முஸ்லீம்கள் ரமதான் மாதம் முழுதும் (அதிகபட்சம் 30 நாட்கள்தான்) விரதமிருந்த பின் கொண்டாடுவதுதான் ஈகைத்திருநாள்.
விரதங்கள் நம்மைத் தூய்மைப் படுத்தி நல்வழியில் செலுத்தட்டும்!
ஈகைத் திருநாள் பற்றிய தகவலுக்கும், வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி, நண்பர் திரு.சுல்தான் !
மாளிகை விருந்து பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன்!
டிக்கெட் அனுப்பத்தான் மறந்து விட்டீர்கள்!
:))
வருகைக்கும், சேர்ந்து வாழ்த்தியதற்கும் நன்றி, நண்பர் திரு.நடராஜன்!
Post a Comment