காக்கிச்சட்டை குண்டர்கள்
காக்கிச்சட்டை குண்டர்கள்
அரசியலுக்காக ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளைப் புரிந்து கொள்ள முடியும்.
அவர்களுக்காக உயிரையும் பணையம் வைத்து எது வேண்டுமானாலும் செய்யும் அவர்கள் தொண்டர்களைத் தெரிந்து கொள்ள முடியும்.
அவர்களிடம் கைக்கூலி பெற்றுக்கொண்டு அடிதடியிலிறங்கும் ரவுடிகளை அறிய முடியும்.
கண்டும் காணாதது போல் விட்டுவிடும் ஒரு சில கயமைப் போலீஸைத் தெரியும்.
ஆனால்,..........,
தமிழகத்தையே வெட்கித் தலை குனிய வைக்கும், வெட்கக்கேடான, காட்டுமிராண்டித்தனமான சம்பவம் இன்று அரங்கேறியிருப்பது மானமுள்ள ஒவ்வொரு தமிழனும் கவலைப் பட்டு கூனிக் குறுக வேண்டிய ஒரு நிகழ்வு.
தமிழக வரலாற்றில் இது ஒரு கறுப்பு வெள்ளிகிழைமை என்றால் மிகையில்லை.
பதவி வெறி எந்த அளவிற்கு ஆட்டுகிறது என்பதற்கு இதை விட வேறு உதாரணம் தேவையில்லை.
ஒட்டுமொத்த போலீஸும் இந்த அவமானகரமான நிகழ்வில், கட்டளைக்குக் கட்டுப்பட்டு, ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை அறியும் போது, தமிழக போலீஸின் மானம் எங்கே இருக்கிறது என்று அதல பாதாளத்தில் கூடத் தேடிப் பிடிக்க முடியவில்லை.
மாநகர காவல் அதிகாரி இதற்கு முழுப் பொறுப்பேற்று உடனே பதவி விலகினால், நாளை அவரது பெண்டு பிள்ளைகள் மதிப்பார்கள் .
செய்வாரா?
சிறையில் இருக்கும் கைதிகள் கூட வெளியில் வந்து ஓட்டுச் சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போடச் செய்வதில் போலீஸின் துணை இல்லையென்று மறுக்க முடியுமா?
சென்னை மத்தியச் சிறைத் தலைமை அதிகாரி உப்பு போட்டு சோறு தின்பவர் என்றால், உடனடியாக பதவி விலக வேண்டும்.
மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி உடனடி பதவி நீக்கம் செய்யப் பட வேண்டும்.
சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பேற்று, உள்துறை அமைச்சர் உடனே ராஜிநாமா செய்ய வேண்டும்.
முழுப் பொறுப்பேற்று உடனடியாக முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஆளுநர் என்று ஒருவர் இருக்கிறாரே, அவர் உடனடியாக நடந்தவைகளை மத்திய அரசுக்கு, தார்மீக பொறுப்பேற்று, இந்த ஆட்சியைக் கலைக்கப் பரிந்துரை செய்ய வேண்டும்.
மன் மோஹன் சிங் உடனடியாக இந்த அரசைக் கலைக்க வேண்டும்.
அப்துல் கலாம் என்னும் பெரிய மனிதர் அலங்காரப் பொம்மையாக இல்லாமல், உடனடியாக ஆளுநரை தில்லிக்கு வரக் கட்டளையிட்டு, நடந்ததற்கு முழு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்.
இவையெல்லாம் நடக்க வில்லையெனின்,....
தமிழன் நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாக வேண்டும் !
"இதெல்லாம் தமிழகத்தில் இருந்து, குறிப்பாக சென்னையில் இருந்து, எனக்கு வந்த சில மனக் குமுறல்கள்."
நடந்ததைக் கேள்விப்பட்டு மனது பெரிதும் வருந்துகிறது.
தப்பிக்கும் , மற்றவர் மேல் பழி சுமத்தும் அரசின் போக்கினைக் கண்டு மனம் வெதும்புகிறது.
அனைத்து வலைப்பதிவர்களும் தமிழர் மானம் கருதி ஒரே குரல் கொடுக்க வேண்டும், கட்சி பேதமின்றி என உள்ளம் விரும்புகிறது!
நடக்குமா?
முருகன் அருள் முன்னிற்கும்!
காக்க காக்க கனக வேல் காக்க!
[தயவு செய்து, இப்பதிவைக் கேலி செய்து பின்னூட்டங்கள் இட வேண்டாம். மட்டுறுத்தப் படும்.]
21 பின்னூட்டங்கள்:
எஸ்.கே
சிறை கைதிகளை வைத்து அராஜகம் நடத்தியது இதுவரை உலக அரசியலில் நடக்காத புதுமை. சைக்கிள் செயினை ஆயுதமாக உலகுக்கு அறிமுகப்படுத்தி புண்ணியம் தேடிக்கொண்ட திமுக இப்போது இந்த பெருமையையும் தேடிக் கொண்டுள்ளது.
மகளிரணி நடனம் அதிமுகவின் சாதனை. இப்படி மாற்றி மாற்றி சாதனை செய்யும் இவர்களை அடித்து விரட்டி மக்கள் சாதனை செய்யும் நாள் எப்போது?
//சென்னை மத்தியச் சிறைத் தலைமை அதிகாரி உப்பு போட்டு சோறு தின்பவர் என்றால், உடனடியாக பதவி விலக வேண்டும்.//
கைதிகள் பரோலில் ராஜமரியாதையுடன் அழைத்து வரப்பட்டுள்ளனர். குடும்பத்தில் நெருங்கிய உறவினர் மரணம், திருமணம் என அரிதிலும் அரிதாக பயன்படுத்தபட வேண்டிய பரோலை அரசியலுக்கு பயன்படுத்தி சாதனை செய்துள்ளது திமுக.
எந்த ஒரு அரசியல் கட்சியை ஆதரித்தோ எதிர்த்தோ இப்பதிவு எழுதப் படவில்லை, செல்வன்.
ஒட்டு மொத்த தமிழரையும் பார்த்து மற்றவர் காறித் துப்பும் நிலையைக் கொண்டு வந்தவர் எவராயினும் அவரை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்ட கணைகள் இவை.
நன்றி.
இவனுக்கு அவன் சளைத்தவன் இல்லை என்பதைக் காட்டுதற்கு அகப்பட்ட பகடைக் காய்களா ஒன்றுமறியாத அப்பாவித் தமிழ் மக்கள்?
ஆறவில்லை எனக்கு.
குற்றமிழைத்தவர் எவராயினும் அவர்கள் பொறுப்பேற்க வேன்டும்.
//ஒட்டு மொத்த தமிழரையும் பார்த்து மற்றவர் காறித் துப்பும் நிலையைக் கொண்டு வந்தவர் எவராயினும் அவரை நோக்கி மட்டுமே தொடுக்கப்பட்ட கணைகள் இவை.//
அந்த "எவர்" வேறு யாருமில்லை.
திமுகவும், அதிமுகவும் தான்.
தங்களை இந்தியாவின் ஸ்காட்லேண்ட் யார்டு என்று வர்ணித்துக் கொள்ளும் தமிழகப் போலிஸ் உண்மையில் பிஹார் போலிஸைவிட கேவலமான ஒன்று..
இவ்வளவு தூரம் போலிஸை கேவலமாக்கிய பெருமை திராவிட கட்சிகளையே சாரும்.
வாழ்க திராவிடக் கட்சிகள்.
பாலா
//அந்த "எவர்" வேறு யாருமில்லை.
திமுகவும், அதிமுகவும் தான்.//
உங்கள் கருத்துடன் முழுதுமாய் உடன்படுகிறேன்.
ராமதாஸ், வாசன், நல்லுசாமி போன்ற விஷய்ம் த்ரிந்தவர்கள் எல்லம் இந்த இரு கழகங்களின் பின்னால் அரசியல் ஆதயங்களுக்காக துணை போவதுதான் பெரிய சோகம்.
இவர்கள் தனித்து சிறப்பாகவொரு விழிப்புணர்வை ஊட்ட முடியும்.
செய்ய வேண்டும்.
இன்றில்லையெனினும், நாளையாவது நிச்சயம் பலன் கிடைக்கும்.
இந்த விஷயத்தில், உடனடியாக காவலகத்திற்கு சென்று முறைப்படி புகார் செய்த விஜய் காந்தை பாராட்டுகிறேன்.
கண்டனம் இன்னும் தெரிவிக்காமல் அஞ்சும் மற்றவரைப் பழிக்கிறேன்.
சொல்பவர் சொன்னால் கேட்பவர்க்கு புத்தி எங்கே போயிற்று என்று சொல்வார்கள் பாலா.
இந்த போலீஸ் இப்படி நடந்து கொண்டது தீராத களங்கம்
ஒரு தவறான முன்னுதாரணம்
லத்திகா சரணைத்தான் குற்றம் சாட்ட வேண்டும்.
அவர் பிள்ளைகள்:ஐப் பற்றி அவர் கவலைப் பட்ட மாதிரியே தெரியவில்லையே.
என்ன ஒரு தாய் இவர்?
நாளை அக்குழந்தைகள் பள்ளியிலும், பொதுவிலும் படப்போகும் அவமானத்தைப் பற்றி சிந்தித்தாரா இவர் என கேள்விக்குறியாயிருக்கிறது.
அட நீங்க வேற எஸ்.கே. விபரம் புரியாம பேசிக்கிட்டு இருக்கீங்க.
கள்ள ஒட்டு புகாரே இல்லைனு கமிஷ்னர் பேட்டிக் கொடுத்து இருக்கார். நீங்க என்னடானா அவரை ராஜினமா செய்ய சொல்லுறீங்க....
:((((((((((((
உங்களின் கோபம் எனக்குப் புரிகிறது இது நியாயமானது. இது போன்ற சம்பவம் ஒரு மாபெரும் கரும் புள்ளி என்பதில் ஐயமில்லை. இதனை வன்மையாக கண்டிக்க வேண்டும்.
Hariharan has left a new comment on your post "காக்கிச்சட்டை குண்டர்கள்":
அடப் போங்க எஸ்கே சார்,
எதுவுமே நடக்காத மாதிரி "மும்பைய்க்கர் ஸ்பிரிட்டுடன்" சோத்தாலடித்த பிண்டமான தமிழன் ஜெவைத் தைரியலட்சுமியாக்கியும், கருணாநிதியை தமிழிந்தமிழாகவும் பெருமிதத்துடன் கொண்டாடுவான்! சனிக்கிழமையே சன் டீவியில் ஏதானும் ஒரு எழவு சீரியல் பார்த்தவாறே!
சுயமாய் சிந்திக்க, பகுத்தறிவைப் பயன்படுத்தும் மஞ்சள் துண்டு மாணிக்கத்த்தின் ஒரிஜினல் அரசியல் திரா'விட' ஆட்சியாச்சே இது!
சன் குழும வர்த்தக வெற்றி தொடர்ந்து நிலைப்பதற்க்காக 82வயது தனித்தமிழ், முத்தமிழ், தமிழிந்தமிழ் நடத்தியிருக்கும் பிரத்யேக Sting Operation -மத்தியசிறை பரோல் கைதிகள்சார் அறச்சீற்றம்!
கீழ்த்தர, கொலைவெறித்தாண்டவ அரசியலில் தமிழகம் பீகாருக்கு முன்னோடியாக்கப்படும்!
கூட்டணிக் களவாணிகளுக்கு காண்டிராக்ட்கள் எனும் எலும்புத்துண்டங்களைப் போட்டால் தமிழகம் அமைதிப்பூங்காதானே!
இந்த உண்மைச் செய்திகளை பொது மக்கள் வசம் எடுத்துப் போவதற்கு
"நச்சு"ன்னு இருக்குன்னு சொல்ல தமிழ்முரசு, நடுவுநிலைமைக்காக
சன் செய்திகள் இருக்கே!
பட்டாக்கத்தியோட பூத்துக்கு வந்தவர்கள் தீவாளிக்குள்ள சிக்குன் குனியாக் கொசுவைக் கொல்லத்தான் ஆயுதம் ஏந்தினாங்க!
மக்களுக்காக, அவர்கள் நலனுக்காகத்தான் தைரியலட்சுமியால் சிறைப்படுத்தப்பட்ட இந்தத் தியாகிகள் மத்தியசிறையினின்று பரோலில் வந்து கொசுவை வாளால் வெட்டி வீழ்த்தினார்கள்!
தமிழகம் அமைதிப்பூங்கா எஸ்கே சார்!
அன்புடன்,
ஹரிஹரன்
அப்துல் கலாம் கனவு காண சொன்னது உண்மைதான். அதுக்காக இப்படியா? விட்டா தமிழ்நாட்டுல சிக்குன்குனியா இருக்குன்னு அநியாயமா, அபாண்டமா பழி போடுவீங்க போல இருக்கே. எல்லாம் கழகங்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுதான் நடந்து இருக்கு. அதுதான் முக்கியம், நாட்டின் சட்ட திட்டங்கள் எல்லாம் அப்புறம்தான்.
சென்னையில் இந்த அராஜகத்தை எதிர்த்து குரல் விடும் மார்க்கஸிஸ்ட் சிவப்பர்கள் கூட்டணியிலிருந்து வெளி வருவார்களோ? மத்தியில் வேண்டாம் ஐயா, மாநிலத்திலாவது? அதெல்லாம் நடக்காது.
இவங்க கிட்ட இருந்து இப்போதைக்கு நமக்கு விமோசனமே கிடையாது. பதட்டப்படாம வேலையை பாருங்க. இந்த மாதிரி பதிவுகள் போட ஏன் ஆத்திகம் என்ற வலைப்பதிவு? இன்னும் ஒன்றுதான் தொடங்குங்களேன்.
என்னாத்தை சொல்வேனுங்கோ, நாகை சிவா!!
உங்கள் மனவருத்தம் நன்றாகப் புரிகிறது, ஹரிஹரன்.
ரொம்பவும் வருத்தமாயிருக்கிறது.
எஸ்கே ஐயா !
வழக்கமாக முருகன் கோவிலுக்குள் நுழைந்தது போல் இருக்கும் உங்கள் (ஆத்திகம்)பதிவுகளைப் படித்ததும்.
இந்த பதிவும் கொஞ்சம் மாறுபட்ட முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றது. அது திருச்செந்தூர் முருகன் கோவில். முழுவதும் படித்ததும் உணர்ந்தேன் இந்த பதிவு ஒரு 'சூரசம்ஹாரம்'
முருகன் அருள் முன்னிற்கும். திருச்செந்தூர் முருகன் அருள் முன்னிற்கும் !
எஸ்கே ஐயா !
சின்ன வேண்டுகோள். அரசியல் மற்றும் பொது விசயங்களுக்கு, கசடற போல் ஒரு தனிப் பதிவு ஆரம்பிக்களாமே !
கோவிலுக்கு (ஆத்திகத்துக்கு) வருபவர்கள் நாடவிரும்புவது (இந்த வருபவர்களில் நானும் உண்டு) மன அமைதியை !
தீபாவளிக்கு ஆறாம் நாள் மகா கந்த சஷ்டி.
சூர சம்ஹாரம் நிகழ்ந்த நாள்!
அன்று அதைக் காணவே கோயிலில் கூட்ட்ம் கூடும்!
அதன் பாதிப்பு இது என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
மிக்க நன்றி, கோவியாரே!
"நல்லன சொல்வதில் நடுக்கமில்லை
அல்லன அகற்றிடத் தயக்கமில்லை!
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே."
இதுவும் இறைவனை வேண்டும் ஒரு செயல்[ஆத்திகம்]தானே, கோவியாரே!
உங்களோட கோபம் பாத்து என்னதான் நடந்துதுன்னு ஒரு ஆர்வம் வந்து எல்லா ந்யூஸும் படிக்க வச்சிருச்சு! ஆமாங்க நாட்டு நடப்பு தெரியாம வேற எங்கயோ காணாமப் போய் இருந்தேன்! :) ... இப்ப தெரியும் ஏன் கோவம், என்ன கோவம்னு! இது ரொம்ப நல்ல கோவம்.
//
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே."
இதுவும் இறைவனை வேண்டும் ஒரு செயல்[ஆத்திகம்]தானே
//
அருமையான வாக்கியம்.
கண்டிக்கதக்கது.. கலைஞர் அரசு நியாமன தேர்தலை நடத்த தவறிவிட்டது..
ஆத்திகம் என்னும் தலைப்பை மட்டும் பார்க்காதீர்கள் இ.கொ.
அதற்குக் கீழே எழுதியிருக்கும் வாக்கியத்தையும் படியுங்கள்.
இருப்பினும், உங்கள் நல்லெண்ணத்தையும், ஆலோசனையையும் நிச்சயமாய் கவனிக்கிறேன்,
நன்றி.
I agree with you, d-o-n-i-v.
Thanks for your comments.
மிக்க நன்றி, மதுரா.
இன்றைய வாக்குப்பதிவு அமைதியாக இருந்ததாகத் தகவல்கள் சொல்லுகின்றன.
சென்னையைத்தன் கவனிச்சாச்சே1
இனிமேல் மற்றவை எக்கேடு கெட்டால் என்ன?
மிக்க நன்றி, சிபா.
உங்கள் எல்லா கமெண்டுகளையும்,வந்தவரைக்கும் போட்டிருக்கிறேனே!
மாடரேஷனிலும் ஒன்றும் மீதி இல்லையே.
மற்றொரு பதிவில் வந்ததையும் இட்டு விட்டேன்.
வேறு ஏதாவது இருப்பின் சொல்லவும். நன்றி.
இன்றைய வாக்குப்பதிவு அமைதியாக இருந்ததாகத் தகவல்கள் சொல்லுகின்றன.
சென்னையைத்தன் கவனிச்சாச்சே1
இனிமேல் மற்றவை எக்கேடு கெட்டால் என்ன?
Post a Comment