"கிழுமத்தூராரின் தொடரும் [அன்புத்]தொல்லைகள்!"
"கிழுமத்தூராரின் தொடரும் [அன்புத்]தொல்லைகள்!"
"மருதநாயகம் என்று நீ கண்டுபிடித்துச் சொன்னதில், கிழுமத்தூராருக்கு ரொம்ப சந்தோஷம்!" என்று மயிலை மன்னார் வாங்கிக் கொடுத்த டீயை உறிஞ்சியவாறே சொன்னேன்!
"உட்டாலங்கடி விசயம் இது! அத்தான் நம்ம கையில அப்பவே கமல் ஸார் சொல்லிட்டாரே! இதெல்லாம் நம்க்கு ஜுஜுப்பீம்மா" என்று சிரித்தான், மன்னார்!
"ம்க்க்கூம்! இப்ப என்ன ஆயிற்று தெரியுமா?" என்று அவனைக் கோபத்துடன் பார்த்தேன்!
:"இன்னா? இன்னா ஆச்சு இப்ப? எவனாவுது உங்கிட்ட ராங் பண்றானா? சொல்லு! ரெண்டு தட்டு தட்டிறலாம்!" என்று பரிவுடனும், சற்றே வேகத்துடனும் கேட்டான், மன்னார்!
அவன் கோபப்பட்டால் என்ன ஆகும் என்று எனக்கு நன்கு தெரியுமாதலால், உடனே அவனை சமாதானப்படுத்தவெண்ணி, "சே! சே! அதெல்லாம் ஒன்றுமில்லை மன்னார்! நீ டென்ஷன் ஆகாதே! நம்ம கிழுமத்தூரார் இப்ப இன்னுமொரு கமல் கவிதையைப் போட்டு உன்னை டெஸ்ட் பண்ணுகிறார்! அவ்வளவுதான் விஷயம்!" என்றேன்.
"ப்பூ! இம்புட்டுத்தானா! நான் என்னவோ ஈதோன்னு நெனச்சுட்டேன்! இன்னா கவித அது! படி பாப்பம்" என்றான் மன்னார்.
கீழ்வரும் அக்கவிதையை.....
"அமலை அன்னை அவள் ஆரணாகாரி
அந்திப் போதனை யானுட னாடுவள்
உமையாள் உடையாள் உயிர்கிழத்தி
உரிமையுடன் தவங்கலைக்கும்
ஆட்டணத்தி மனங்கொணும் நேர்முலையாள்
தினங்காணக் கல்லாக வீற்றிருப்பள்
கனந்தாங்கும் களத்தியாய் கலவிசெய்கையிலென்
தடந்தோளைக் கடித்துச் சந்தோஷம்
சொல்லிடுவள் நாபிக்கொடி நறுக்கியெனை
நர மேட்டிலொரு லோபத்தெருவினிலே
மறுபடி எறிந்திடுவள் சப்பிடும்
வாய்கதற முலைபிடுங்கி யகற்றி
செப்பிடும் வார்த்தைகள் மெல்லத் தந்திடுவள்
நித்தமு மாறிடும் ஜீவ தாளத்தில்
என்னுடன் ஆடிடும் ஆசைநாயகி
காமுகி க்ராதகி
மாதவி கண்ணகி ஸ்நேகிதி"
.......நான் படித்ததும், ஒரு இரண்டு, மூன்று தடவை திருப்பிப் படிக்கச் சொன்னான்! ஒரு பீடியைப் பற்றவைத்துக் கொண்டு சிறிது நேரம் நெற்றியைச் சுருக்கியவாறே நிதானமாக யோசித்தான்! திடீரெனப் பிரகாசமானான்!
"சும்ம ஸொல்லக்கூடாதுப்பு! நெசமாவே அந்த ஆளுக்கு மண்டை முளுக்க மூளைன்னு நான் ஸொன்னதுல தப்பில்லப்பா! ஆகா! ஆகா! இன்னாமா எளுதியிருக்கான் மனுசன்!" என்று ரொம்பவும் புகழ்ந்தான்!
சற்று பொறுமை இழந்த நான், "என்னதான் சொல்லியிருக்கிறார் என்று சொல்லிவிட்டு பிறகு உன் புகழ்ச்சியை வைத்துக் கொள்ளேன்!" என்று பொறாமையுடன் சொன்னேன்... எனக்குப் புரியாதது அவனுக்குப் புரிந்துவிட்டதே என்னும் ஆதங்கத்தில்!
"இந்தக் கவிதயை வரிக்கு வரி படிச்சேன்னா அர்த்தம் அனர்த்தமாத்தான் போயிடும்! ஏதோ பலான விசயத்த ஸொன்ன மாரித்தான் இருக்கும்! ஆனா, ரொம்பப் பெரிய விசயத்த இன்னா அசால்ட்டா ஸொல்லிருக்காரு தெரியுமா? நா மொத்தக் கருத்தயும் ஸொல்றேன்! அப்ப்டியே எளுதிக்கோ!" என்று ஆணையிட்டான், மன்னார்.
கீழே வருவது அவன் சொன்னது!
" இப்ப ஒனக்கு ஒன் சினேகிதனைப் புடிக்கும், என்னிய ஒனக்கு புடிக்குமே அதுமாரின்னு வெச்சுக்க! ஸரியா!
என்னியவுட ஒன் தங்கசிய ஒனக்கு ரொம்பப் புடிக்கும்; அத்த வுட ஒன் அம்மாவ ஒனக்கு ரொம்ப ரொம்பப் புடிக்கும், கரீட்டா!
இப்ப ஒன் பொஞ்சாதி வந்தவொடன, அவுங்களை ஒனக்கு ரொம்பப் புடிக்குது! இல்லியா!
அது ஒனக்கு ஒரு பொண்ணக் குடுத்துச்சு! நீ இப்ப இன்னா பண்ற? ஆகா! ஒலகத்துல, இத்த வுட, சந்தோசம் தர்றது வேற ஒண்ணுமில்லன்னு மயங்கற! வாஸ்தவமா இல்லியா?
ஆனா..... இதுக்கெல்லாம் மேல நீ எத்த ரொம்ப நேசிக்கற? தமிள, தமிள் மொளிய!
ஏன்னு கேளு!
ஏன்னா, அதுதான் ஒனக்கு அல்லாமாவும் இருக்கு! எப்ப்டீன்ன்றியா? அவர் ஸொன்ன மாதிரியே ஸொல்லிக் காட்றேன் பாரு! ஒனக்கு புரிஞ்சிடும்!
அஞ்சு ருவா கொடுத்து ஒரு பொஸ்தவத்த வாங்கிப் படிக்கற நீன்னு வெச்சுக்க, சந்தோசமா இருக்கு ஒனக்கு.
அத்தப் படிக்கறப்ப, அவ, ...அத்தான் தமிள், தமிள்மொளி... கூடவெ இருக்கா ஒன்னோட!
ஒனக்கு அம்மாவா, பொண்டாட்டியா, சில சமயம் வேசியாக் கூட இருப்பா அவ, நீ பாக்கற பார்வைல, படிக்கிற புக்குல!!
நல்ல பொஸ்தவத்த படிக்கிறப்போ, நல்ல பொண்ணு மாரி, கெட்ட சமாச்சாரத்தப் படிக்கிறப்பொ, ஒன்னியக் கெளப்பி வேடிக்கை பாக்கற வேசி மாரி, சே! இத்தெல்லாம் தப்பு; இனிமே நல்ல புக்குதான் படிக்கணும்றப்போ, ஒன்னைத் தூண்டறமாரி ஒரு புக்கைக் காமிச்சு ஒன் மனச மாத்துவா! ஆனாக்காண்டி,.... இத்தாலயெல்லாம், 'நீ ஒன் அறிவத்தான் வளத்துக்கறே'ன்னு ஸொல்லி, ஒன்னிய ஆசைகாட்டி மயக்குவா!
அவ பொல்லாதவ, ராட்சசி, வேசி, பத்தினி, ஒனக்குத் தோளியும் கூட! ஆனா, நீ அவளக் கண்டுக்கலையின்னா, கல்லு கணக்கா குந்திக்கினே இருப்பா! நாம தான் அவளத் தேடிப் போவணும்!
இதுமாரி ஆராச்சும் வருவாங்களா ஒன்கூட எப்பவும், அல்லாமாமும்?
வரமுடியாது!
அதான் நம்ம தமிள் மொளியோட அருமை, பெருமை!
இத்தத்தான் நம்ம ஒலகநாயகன் மறமொகமா ஸொல்றாரு! வெளங்கிச்சா?"
என்று சர்வ சாதாரணமாகச் சொன்னவனை 'ஆ'வென்று வாயைப் பிளந்தவாறு பார்த்துக் கொண்டே இருந்தேன்!
"ஸரி, ஸரி! டீ ஆறிப்போச்சு! மாஷ்டர்! நம்ம தம்பிக்கு இன்னோரு டீ ஷ்ட்ராங்கா போடு!" என்று மிதப்பாகச் சொன்னான் மயிலை மன்னார்!
"அது சரி, மன்னார்! மிக அழகாகச் சொல்லி விட்டாய்! எல்லாம் சரிதான்! ஆனால், ஏன் "அமலை அன்னை" என்று ஆரம்பித்திருக்கிறது இக்கவிதை?" எனக் கேட்டேன் நான்.
"அமலைன்னா ஆரு? நம்ம மதர் மேரி! அவுங்க ஆரு? கன்னி களியாத தாயி! தமிள்த்தாயும் அப்ப்டித்தான்! ஆரு அத இன்னாம்மாரி சீரளிச்சாலும், தன்னோட கன்னித்தம்மய இளக்காம, அப்டியே என்னிக்கும் புச்சா இருக்கறதனால, அமலைன்னு ஸொல்லியிருக்காரு கமல்!" என்றான் மயிலை மன்னார்!
மேற்கொண்டு அவனை எதுவும் கேட்க மனமின்றி, அவன் சொன்னதை அப்படியே உங்கள் முன் வைக்க கணினியைத் தேடி ஓடினேன், ..... டீயைக் குடித்தபின் தான்!!!
இல்லாவிட்டால் மயிலை மன்னார் விட மாட்டானே!
(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))
23 பின்னூட்டங்கள்:
மந்தைவெளி மன்னாரும்,ஆழ்வார்பேட்டை கமலும்,மாயவரம் எஸ்கேவும்,கிழுமத்தூர் மகேந்திரனும் நண்பர்களானது எப்படி?இதுக்கு ஒரு விளக்கம் உடனடியாக தேவை
//
செல்வன் said...
மந்தைவெளி மன்னாரும்,ஆழ்வார்பேட்டை கமலும்,மாயவரம் எஸ்கேவும்,கிழுமத்தூர் மகேந்திரனும் நண்பர்களானது எப்படி?இதுக்கு ஒரு விளக்கம் உடனடியாக தேவை //
அவன் மயிலை மன்னார்
(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))(:))
நைனா இது இதத்தான் நான் உங்கிட்ட எதிர்பாத்தேன் அதுக்குள்ள நம்ம ஜிகே அங்கன வந்து இதையெல்லாம் கொண்டுபோய் மன்னாரான்ட காட்டுனா உன்னைய கலீஜ் பன்னிடுவாருன்னி மொரட்டுனார் எனக்கும் உன்னும் பிரில இது என்னா அம்புட்டு மோசமன கவுஜயான்ன்னு அப்டீக்காண்ட ரோசிச்சீ பாத்தா நம்ம ஆளுங்க அதை கைமா பன்னி பிச்சி பிச்சி படிக்காசொல்ல அர்த்தம் அப்படிதான வரும்னு, நல்ல வேல பேட்ட பாசைல சொன்னாத்தான் நம்ம கவுஜய ரசிக்காங்க இதுவரைக்கும் கவுஜ எளுதி பத்து பின்னூட்டம் வாங்குனது இந்த மாதிரி கவுஜக்கி தான் உன் தயவுகு ரொம்ப நன்றிபா... அப்புரம் ஒரு சேதி நாலைக்கும் ஒரு ஆட்டம் இருக்கு அது அனேகமா எல்லாருக்கும் வெளங்கும்னுகீரன் இல்லன்னா கோச்சுக்காம கொஞ்சம் மன்னாரான்ட காட்டி தேத்துபா
எஸ்.கே,
அசத்திட்டீங்க... நன்றி!
நீங்கள் நினைத்த பொருள் வந்திருக்கிறதா? கிழுமத்தூராரே!
அந்த 'அமலை' விளக்கத்தைப் பற்றி உங்கலிடம் கேட்கச் சொன்னான், மன்னார்!
// அப்புரம் ஒரு சேதி நாலைக்கும் ஒரு ஆட்டம் இருக்கு அது அனேகமா எல்லாருக்கும் வெளங்கும்னுகீரன் இல்லன்னா கோச்சுக்காம கொஞ்சம் மன்னாரான்ட காட்டி தேத்துபா //
நாலைக்கேவா?
கொஞ்சம் டைம் கொடுங்க சாமி!
இதனால் திருக்குறளை எடுத்துக் கொண்டு அவனிடம் போகவே நேரம் இல்லாமல் போகிறது!
என்னமோ .... செய்யுங்கள்!
:))
'இயற்கை நேசி'கள் எல்லாம் வந்து 'அசத்திட்டீங்க!' என்று சொன்னதில் மன்னாருக்கு ரொம்பவுமே மகிழ்ச்சி!
'டேங்ஸ்' சொல்லச் சொன்னான்!
கன்னி மேரி... கன்னித்தமிழ் நல்ல ஒப்பீடு :)
தெய்வத்தன்மையால்
தேவனை பெற்றெடுத்ததனால் கன்னி மேரியாக சித்தரிக்கப்பட்டு போற்றப்பட்டு வனங்கப் படுபவள் அன்னை அமலோற்பவ கன்னி மேரி.
அதேபோல் திராவிட மொழிகளைப் பெற்றெடுதாலும் தன் இயல்பு மாறாமல் என்றும் செழுமையுடன் வளமாக, என்றும் புதிதாக இருப்பது கன்னித் தமிழ்.
மருத நாயகம் இதைத்தான் செப்புகிறாரா என்று தெரியவில்லை. ஆனால் மன்னார் சொல்வது
மிக அருமையான ஒப்பீடு.
மன்னாருக்கும், மன்னாரின் நண்பர் தமிழ் புகழையே திருப்புகழாகப் பாடும் எஸ்கேவுக்கும் பாராட்டுக்கள்.
//இத்தத்தான் நம்ம ஒலகநாயகன் மறமொகமா ஸொல்றாரு! வெளங்கிச்சா?".//
வெளங்கிச்சு மன்னாரு!உன்னுடைய தமிள் மொளி அறிவு சூப்பர்!
நல்ல வெளக்கம் கொடுத்திருக்க!
நன்றி மன்னாரு!
மன்னாரிடம் அடிக்கடி இதேபோல் மல்லுக்கட்டி தமிழ் வளர்க்கும் அண்பர் திரு.SK அவர்களுக்கும் நன்றி!
அன்புடன்...
சரவணன்.
அந்த மொத்தக் கவிதையிலேயே எனக்கு மிகவும் பிடித்தது, மன்னார் சொன்ன 'அமலை' விளக்கம்தான்!
அதையே நீங்களும் சொன்னது மகிழ்வாய் இருக்கிறது!
நன்றி, கோவியாரே!
மன்னார் சார்பிலும், என் சார்பிலுமாக, இரு கை கூப்பி நன்றி தெரிவிக்கிறோம், சரவணன்!
என் நைனா, நீங்களும் பீடி வழிப்பீங்களா என்ன மயிலை மன்னாருடன் சேர்ந்து.
//மயிலை மன்னாரும்,ஆழ்வார்பேட்டை கமலும்,மாயவரம் எஸ்கேவும்,கிழுமத்தூர் மகேந்திரனும் நண்பர்களானது எப்படி?இதுக்கு ஒரு விளக்கம் உடனடியாக தேவை ??
உடனடியாக தேவை :)
இப்பதாம்பா புரியுது இந்த கவுஜ!
மன்னார்தான் பீடி எல்லம் வலிப்பான்! [வழிப்பான் இல்லை!:)]
நான் சிங்கிள் டீயோடு சரி!
அப்பப்ப, கொஞ்சம் பான்பராக் போடறது உண்டு!!
போதுமா தகவல்கள், சிவா!
உபயோகமா பதிவைப் பத்திக் கேப்பீங்கன்னு பார்த்தால், இப்படி கேட்டிருக்கிறீர்களே!!
:(
//உடனடியாக தேவை :)//
(:))(:))(:))
//இப்பதாம்பா புரியுது இந்த கவுஜ!//
மன்னார் வயித்துல பாலை வாத்தீங்க, தம்பி! (:))
ரொம்ப நன்றி!
எஸ் கே ஐயா!
என்ன? தலையைச் சுத்த வைக்கிறாரே! என விழி பிதுங்கினேன். மன்னார்- அச்சொட்டாக விளக்கிவிட்டார். மன்னாரின் புலமையை மெச்சுகிறேன்.கன்னிமேரி- கன்னித் தமிழ் அருமை!
யோகன் பாரிஸ்
"திருக்குறள பாரிஸ்லேந்து வந்து பாராட்டிட்டு போனாரே அவரு இங்கியும் வந்து சொல்ட்டாரா!" என்று ரொம்ப மகிழ்ந்தான் மன்னார்!
நன்றி, திரு. யோகன்!
நானும் அப்பப்ப கொஞ்சம் வைரமுத்து, மேத்தாலாம் படிப்பேன். சில கம்யூனிஸ்ட் கவிதைகள் படிச்சாலும் பிரியாது. அதான் மேல அவ்ளோ இல்ல.
எங்க பக்கத்தூர்க்கார் (கிழுமத்தூர் லப்பைக்குடிக்காடு பக்கம்தானே) கமலின் கவிதைன்னு போட்டப்போ, அத்த மாரி இதும் பூட்ட கேசுன்னுதான் நினச்சேன்.
எஸ்.கே யும் மன்னாரும் அசத்திட்டாங்கப்போ....
எஸ்கே ஐயா, மன்னாரு தமில் சொல்லித்தரச்சே என்னையும் சேத்துப்பாரா?
கமலின் நல்ல கவிதை. உங்களின் நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்.
பாராட்டறதுக்கெனவே ப்ளாக் வெச்சுக்கிட்டு செய்யுறீங்க!
உங்களை சேத்துக்காமலா?!
அடுத்த முறை மன்னாரிடம் போகும் போது நீங்களும் கண்டிப்பாக உண்டு, திரு. சுல்தான்!
மறக்காம வந்துருங்க! சரியா!
வந்து சொன்னதற்கு நன்றிங்க!
என்னங்க நடக்குது இங்க ?
//மன்னார் வயித்துல பாலை வாத்தீங்க, தம்பி! //
இன்னும் எத்தினி நாளிக்கு தான் பாலையே வார்த்துகிட்டு இருப்பிங்க?
வேற எதுனா வித்யாசமா பீல் பண்ணுங்க SK!!
//என்னங்க நடக்குது இங்க ?//
தோடா! இத்தப்பாரு! இவரு ஜாலியா மருதை அது இதுன்னு போயி சிரிச்சிட்டு வருவாரு! அப்பால வந்து இன்னா நட்குதுன்னுவாராம்! நாம சொல்லனுமாம்! பட்ச்சா தெர்ல இன்னா நட்க்குதுன்னு?!
சரி, சரி, மொதக்கா ஒரு தபா மேலீர்ந்து முச்சூடும் பட்சிட்டு அப்பால வந்து கேளு ரவிசார் !
:))
//இன்னும் எத்தினி நாளிக்கு தான் பாலையே வார்த்துகிட்டு இருப்பிங்க?
வேற எதுனா வித்யாசமா பீல் பண்ணுங்க SK!!//
எது வாத்துச்சோ அத்தானேப்பா சொல்ல முடியும், தம்பி!
நீங்க வந்து 'கவு'ஜன்னு சொன்னவொட்னெ கவ்வுலேந்து இன்ன வரும்...ஆங்...பாலு...அதன் நெனப்புக்கு வந்துச்சு!
அத்தான் அப்டி சொன்னேன்!
அடுத்தவாட்டி வேற சொல்றேன் இன்னா?
கோவிச்சுக்காத கண்ணு!
:))
Post a Comment