Sunday, July 02, 2006

"நல்லோர் நினைவில்......"

"நல்லோர் நினைவில்......"

அன்பு நண்பர்களே!!

வலைப்பூவைப் பற்றியோ, கணினியைப் பற்றியோ, அதிகம் அறிந்திராமல்,
ஏதோ எழுதத் தோன்றுவதை எழுதிப் பதிவு செய்து வரும்
சாதாரண வலைப்பதிவாளனாகிய நான்,
இன்று சற்று எதிர்பாராத ஒரு நேரத்தில்,
எனது, அண்மைப் பதிவான
"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 2"
[பக்கரை விசித்ர மணி]
என்னும் படைப்பை நீக்கி [delete] இருக்கிறேன்.......
திருத்துவதாக [edit] நினைத்துக் கொண்டு!

உங்களில் யாரேனும் இந்தப் பதிவினை பதிவிறக்கம் [download] செய்து வைத்திருந்தால்,
அதனை எனக்கு அனுப்பினால்,
மிகவும் நன்றியுடையவனாக இருப்பேன்!

நன்றி!!

9 பின்னூட்டங்கள்:

செல்வன் Sunday, July 02, 2006 1:26:00 AM  

முருகனருள் முன்னின்று காக்கும்.இது கிடைக்காவிட்டாலும் இதை விட நல்ல பதிவொன்று உங்களிடமிருந்து வரும்.

மா சிவகுமார் Sunday, July 02, 2006 1:30:00 AM  

ஐயா,

என்னிடம் அந்தப் பதிவின் நகல் இல்லை.

ஆனால், இனிமேல் இப்படி நடந்தால் சேமிப்பாக எழுதுபவற்றை ஒரு தனிக்கோப்பாக உங்கள் கணினியில் சேர்த்து வைத்து விடுங்களேன். பிளாக்கர் நமது பதிவுகளை மொத்தமாக பதிவிறக்கம் செய்யும் வசதி கூடக் கொடுக்கவில்லை.

அன்புடன்,

மா சிவகுமார்

SK Sunday, July 02, 2006 1:31:00 AM  

நன்றி செல்வன்!

ந்ல்லதே நடக்கும்!

SK Sunday, July 02, 2006 1:36:00 AM  

மிக்க நன்றி, சிவக்குமார்.
இந்த நல்ல யோசனையை பொன்ஸும், செல்வனும் கூடச் சொல்லியிருக்கிறார்கள்!
காலம் கடந்தாலும், அடுத்து வருபவைகளுக்கு இது பயனுள்ளதாய் இருக்கும்.
இனி அப்படியே செய்கிறேன்.

செல்வன் Sunday, July 02, 2006 1:40:00 AM  

பிடிஎப் கோப்பாக சேமிக்கும் வசதி தமிழ்மணத்தில் உள்ளது.பதிவு கருவி பட்டையில் உள்ள பிடிஎப் இமேஜை அழுத்தினால் உங்கள் பதிவு பிடிஎப்பாக சேமிக்கப்படும்.அதை ஜிமெயிலில் இணைப்பாக அனுப்பிக்கொள்லலாம்.அல்லது தனி போல்டரிலும் சேமித்து வைக்கலாம்

நாகை சிவா Sunday, July 02, 2006 1:43:00 AM  

எஸ்.கே!
உங்கள் தனி மின் முகவரி பார்க்கவும்.
தலைவர் டயலாக் -
"நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான், ஆனால் கைவிட மாட்டான்".
இன்றும் கைவிடவில்லை.
:))))))))))))
ஓம்!!!!!!!!

துளசி கோபால் Sunday, July 02, 2006 2:02:00 AM  

நானும் பதிவுகளை 'நோட்பேட்' ல் எழுதி வைத்துக் கொண்டுதான் ப்ளொக்கரில் பதிகின்றேன்.

இந்த முறையில் நாமே சேமிக்கவும் முடிகிறதே.

SK Sunday, July 02, 2006 2:14:00 AM  

ஆகா! எத்தனை அரிய நண்பர்கள்!

எங்கிருந்தெல்லாம் மயில்கள்!

அத்துணைப் பேருக்கும் நன்றி சொல்வேன்!

அதிலும் சிறப்பாக,
நண்பர் நாகை. சிவாவிற்கு!

தொலைந்து போன பதிவினைத்
திரும்பவும் மீட்டுத் தந்ததோடு அல்லாமல்,

பின்னூட்டங்களையும் சேகரித்து அனுப்பி
என்னை அழ வைத்து விட்டார்!

முருகனருள் முன்னிற்கும் வேளையிலும்,

முகமறியா நண்பர்களால்
நாடைந்த நற்பயனை,

"நல்லோர் நினைவில் நடனம் புரியும்"

முருகனுக்கே காணிக்கையாக்கி,

அனைவருக்கும் அனைத்து நலங்களும் அருள,

அவன் அருளாலே,அவன் தாள் வணங்கி,

என் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

முருகன் அருள் முன்னிற்கும்!!

SK Sunday, July 02, 2006 2:19:00 AM  

இனிமேல் நானும் சேமிக்கத் துவங்குவேன், துளசி. கோபால்!
மிக்க நன்றி!
பட்டால்தான் தெரிகிறது!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP