Thursday, June 08, 2006

"அனுபவி ராசா அனுபவி!"

"அனுபவி ராசா அனுபவி!"

ஒரு தத்துவவாதியின் உளறல்கள்!!

கே: இந்த இருதய சம்பந்தமான பயிற்சிகள் வாழ்நாளை அதிகரிக்க உதவும் என்கிறார்களே? உண்மையா?

ப: இப்ப, ஒவ்வொருத்தரோட இதயத்துக்கும், இவ்வளவு துடிப்புதான்னு ஒரு கணக்கு பண்ணி இருக்குது! அவ்ளோதான்! சும்மனாச்சிக்கும், பயிற்சி, அது. இதுன்னு டைமை வேஸ்டு பண்ணாதே! அல்லாம் ஒரு நாளைக்குத் தேஞ்சுதான் பூடும்!
வெரசபடுத்தறேன்னு எக்ஸைஸ் பண்றது ஒண்ணும் வேலைக்கு ஆவாது!
இது எப்ப்டி இருக்குன்னா, என்னோட காரோட லைஃபை, வேகமா ஓட்றதால, ஜாஸ்தி பண்றேங்கற மாதிரித்தான்!

நெறைய நாளு உசுரோட இருக்கணுமா.... போய் நல்லாத் தூங்கு!

கே: இந்தக் கவிச்சிய வுட்டுட்டு, நெறய பழம், காய்கறில்லாம் சாப்பிடலாமா?

ப: நீ கொஞ்சம் நெதானமா யோசிக்கக் கத்துக்கணும்! இப்ப, ஒரு மாடு இன்னா சாப்டுது? புல்லும், தவிடும் , வைக்கோலும்! இதெல்லாம் இன்னா? காய்கறி! அப்ப்டீன்னா, மாட்டுக்கறின்றது, இந்தக் காய்கறிங்களை ஒரு ஸ்பெஷலான மொறையில, ஒன் ஒடம்புக்குள்ளே அனுப்பற ஒரு வித்தை. அவ்ளோதான்!

காய்கறி வேணாம்; தானியம்தான் வேணுமா? கோழிக்கறி சாப்பிடு!

கே: இந்தத் 'தண்ணீ' எல்லாம் கொறைக்கணும்னு சொல்றாங்களே.....?

ப: கூடவே கூடாது! ஒயினு பளத்துலேர்ந்து தயாராவுது! ப்ராந்தி, ஒயினை வடிகட்டி வர்றது! அதாவது, ஒயின்ல இருக்கற தண்ணியைக் கூட எடுத்துட்டு சுத்தமாக் கொடுக்கறாங்க! பியர் கூட என்ன? பார்லிலேந்து பண்றது!

குடி மகனே... குடி!

கே: என்னோட ஒடம்பு/கொளுப்பு விகிதத்தை எப்படி கணக்கு போடறது?

ப: நல்லா கவனி! ஒடம்புன்னு ஒண்ணு இருந்தா, கொயுப்புன்னு ஒண்ணு இருந்தே தீரும்! அப்போ, ஒன்னொட விகிதம் ஒண்ணுக்கு ஒண்ணு! .....சரியா! ரெண்டு ஒடம்பா இருந்தா, ரெண்டுக்கு ஒண்ணு!

புரிஞ்சுக்கினியா?!!

கே: எண்ணையில பொரிச்சது ஒடம்புக்குக் கெடுதல்னு சொல்றாங்களே... அதப்பத்தி உங்க கருத்து?

ப: இவ்ளோ நேரம் நான் சொன்னதை நீ கேட்டுக்கினு இருந்தியா, இல்லை எங்கியாவது தூங்கப் பூட்டியா? எதுல பொரிக்கிறாங்க அல்லாத்தையும்? வெஜிடபிள் ஆயில்லதானே? இன்னும் கொஞ்சம் வெஜிடபிள் சேந்தா நீ கொறஞ்சா பூடுவே?

கே: நீச்சல் பளகினா, ஒடம்பு வாகா இருக்கும்னு சொல்றங்களே...?

ப: நீச்சல்னாலே ஒடம்பு வாகாயிடும்னா, போயி திமிங்கலத்தை பாரு! அப்பால வந்து சொல்லு, நீச்சல் நல்லதா, கெட்டதான்னு! வேலயப் பாத்துக்கினு போவியா!

வந்துட்டான்... பெருசா!

நல்லா நெனப்புல வெச்சுக்கொ!
இந்த ஒடம்பு ஒரு நா கல்லறைக்குப் போகப்போவுது! அப்டி போறச்சே, நல்லா கட்டுமஸ்தா கொண்டுபோயி இன்னா லாபம்? நல்லா அனுபவி, இந்த பாடியை நல்லா யூஸ் பண்ணு! போகும்போது, 'ஐய்ய்ய்யா... இன்னா சொகமா இருந்துச்சுப்பா'ன்னு செம சவுண்டு வுட்டுக்கினு போய்ச் சேரு!

நா வர்ட்டா!

அப்பால, எதுனாச்சும் டவுட்டு இருந்தா வந்து கேளு!

சரியா!!

43 பின்னூட்டங்கள்:

Sivabalan Thursday, June 08, 2006 11:23:00 PM  

SK,

//'ஐய்ய்ய்யா... இன்னா சொகமா இருந்துச்சுப்பா'ன்னு செம சவுண்டு வுட்டுக்கினு போய்ச் சேரு!//


சூப்பர்.. கலக்கிடீங்க..

ஆமா SKன்னா தமிழ், தமிழ்னா SKன்னு இருக்கும். அப்போ அது வேற SKன்னு நினன்க்கிறேன்.

நாமக்கல் சிபி Thursday, June 08, 2006 11:42:00 PM  

//அப்பால, எதுனாச்சும் டவுட்டு இருந்தா வந்து கேளு!

சரியா!!//

சர்தாம்பா!

நாமக்கல் சிபி Friday, June 09, 2006 1:41:00 AM  

அது சரி! என்னாச்சுங்க?
திடீர்னு ஆன்மீகம், அரசியலை விட்டுட்டு தத்துவ பகுதிக்கு வந்துட்டீங்க!

SK Friday, June 09, 2006 8:42:00 AM  

!ஒரே கவிதையா எழுதித் தள்ளுறீங்களே; ஒரு மாற்றத்துக்காகவாவது, வேறு ஏதாவது எழுதுங்களேன் என்ற எனது முதல் வாசகியின் [வேற யாரு? எல்லாம் நம்ம வூட்லதாங்க! :))] கட்டளைக்கிணங்க இது எழுதப்பட்டது!

தெள்ளு தமிழ் தொடரும்!

நன்றி சிவபாலன்!

SK Friday, June 09, 2006 9:15:00 AM  

சிவபாலனுக்கு சொன்ன பதில்தான்!!
:))

செல்வன் Friday, June 09, 2006 12:28:00 PM  

மெட்ராஸ் பாஷை கூட நன்றாக வருகிறதே உங்களுக்கு...

ஆனா இதையே தத்துவமா வெச்சு வாழறவங்க நிறைய பேர் இருக்காங்க தான்.என்ன பண்ண?

SK Friday, June 09, 2006 9:13:00 PM  

நீங்க சொறது சரிதான், செல்வன்!

Sivabalan Friday, June 09, 2006 10:15:00 PM  

SK,

//கட்டளைக்கிணங்க இது எழுதப்பட்டது!//


அப்ப, வெளியில் புலி?:)

இலவசக்கொத்தனார் Friday, June 09, 2006 11:09:00 PM  

////அப்பால, எதுனாச்சும் டவுட்டு இருந்தா வந்து கேளு!

சரியா!!//

அண்ணா, இப்படி நான் எழுதினதுக்குத்தான் சிபி வந்து எதேதோ சொல்லறாரு. என்னமோ பேராசிரியராம், விவேக்காம், நடு ராத்திரி தொலைபேசி அழைப்பாம்.

எதுக்கும் நீங்க கொஞ்சம் பார்த்தே நடந்துக்குங்க.

SK Saturday, June 10, 2006 12:31:00 AM  

இ.கொத்ஸ்,
என்ன சொல்றீங்க?
பயம்ம்மா இருக்கே!

கொஞ்சம் விவரம சொல்லுங்கய்யா!

நாமக்கல் சிபி Sunday, June 11, 2006 11:10:00 PM  

//என்னமோ பேராசிரியராம், விவேக்காம், நடு ராத்திரி தொலைபேசி அழைப்பாம்.

எதுக்கும் நீங்க கொஞ்சம் பார்த்தே நடந்துக்குங்க.
//

கொத்ஸ்!
நம்ம வேலையை நீங்களே செஞ்சிட்டீங்க, நன்றி!

முழுசா சொல்லிடுங்க! பய புள்ள என்னமோ ஏதோன்னு பயந்துபோய்க் கெடக்கு!

(எஸ்.கே வுக்கு பயமா? யார் சொன்னது ஒன்லி ஃபியர் (Fear Not Bear))

dondu(#4800161) Sunday, June 18, 2006 9:47:00 PM  

"கே: என்னோட ஒடம்பு/கொளுப்பு விகிதத்தை எப்படி கணக்கு போடறது?

ப: நல்லா கவனி! ஒடம்புன்னு ஒண்ணு இருந்தா, கொயுப்புன்னு ஒண்ணு இருந்தே தீரும்! அப்போ, ஒன்னொட விகிதம் ஒண்ணுக்கு ஒண்ணு! .....சரியா! ரெண்டு ஒடம்பா இருந்தா, ரெண்டுக்கு ஒண்ணு!

புரிஞ்சுக்கினியா?!!"
ரம்பவே பிரிஞ்சிது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

SK Sunday, June 18, 2006 9:53:00 PM  

மிக்க நன்றி!

"ஆறு" பற்றியும் கருத்து சொல்வீர்களென வேண்டுகிறேன்.

பொன்ஸ்~~Poorna Sunday, June 18, 2006 10:29:00 PM  

எஸ்கே, வர வர உங்க முருகனும் வேலால ஒரே (உள்)குத்தா குத்தறாரோன்னு தோணுது.. ஆறு பதிவு மாதிரி இதுலயும் நாகை சிவா ஏதாவது பிடிக்கிறாரான்னு பார்க்கிறேன்.

நமக்கு ஒன்னியும் பிரியலை நைனா. அப்டியே ஓரமா குந்திகினு சிவாவுக்கு வெயிட் பண்ணிகினுகீறேன் :)

SK Monday, June 19, 2006 7:13:00 AM  

-மெய்யாலும் சொல்றேனுங்க, நமக்கு இந்த உள்,வெளிக் குத்துல்லாம் ஒண்ணும் தெரியாதுங்கோ!

எல்லாம் நேராவே சொல்லிட்டு வாங்கிக் கட்டிக்கிறதுதான் வழக்கமுங்கோ!

வவ்வால் Monday, June 19, 2006 7:26:00 AM  

எஸ்.கே வாத்யாரே!

சும்மா சொல்லக் கூடாது ஷோக்கா கீது, படிச்சதும் கொஞ்சம் மெர்சலாயிட்டேன் ,என்னாடா நம்ம எச்பீரியன்ச அப்படியே லவிட்டிக்கிட்டு வந்துட்டார மனுசனு.இப்போ தான் தெரியுது நேத்து முக்காடு போட்டுகினு டாஸ்மாக் கடையாண்ட என்கோடா பேசிட்டு இருந்தது நீங்கதான்னு,நான் மப்புல கொஞ்சமா கொட்டுனத பீராய்ஞ்சுகினு வந்து வலைப்பதிவுல போட்டது தான் போட்ட வாத்தியாரே கடைசில டாங்ஸ் வவ்வால்னு போட மறந்துட்டியே படிச்ச ரிஜன்டான மனுஷன் பண்ற காரியமா இது!

SK Monday, June 19, 2006 8:57:00 AM  

இத்தான்!
மப்புல பேசற பேச்சையெல்லாம் அப்படியே நம்பிடக்கூடாதுன்றது!
ஒன் பேரை போட்டுக்கட்டுமா நைனான்னுகேட்டப்ப, ஃப்ரென்ட்ஸுக்குள்ள அத்தெலாம் வேண்டாம்னு சொல்லிப்புட்டு,
இப்ப வந்து டாங்க்ஸ் வுடலைன்னு டோஸு விடுறியே, நாயமா இது!
சரி, சரி, எனக்கு இன்னா போச்சு!
ரொம்ம்ம்ம்ம்ப டாங்க்ஸ் வவ்வால்!!

நாகை சிவா Monday, June 19, 2006 9:46:00 AM  

//'ஐய்ய்ய்யா... இன்னா சொகமா இருந்துச்சுப்பா'ன்னு செம சவுண்டு வுட்டுக்கினு போய்ச் சேரு!//
சூப்பருங்க... இது இது தான் நம்ம பாலிசியும். போகும் போது எந்த ஒரு வருத்தம் இயல்லாமல் போக வேண்டும்.
கலக்குகிட்டீங்க போங்க....

//எதுனாச்சும் டவுட்டு இருந்தா வந்து கேளு!//
கேட்டா போச்சு...

//ப்ராந்தி, ஒயினை வடிகட்டி வர்றது! அதாவது, ஒயின்ல இருக்கற தண்ணியைக் கூட எடுத்துட்டு சுத்தமாக் கொடுக்கறாங்க! //
இது கொஞ்சம் புரியலைங்க.... ஒயினே தண்ணி தானே, அதை வடிக்கட்டினால் எப்படிங்க/ கொஞ்சம் விபரமாக சொல்லுகளேன். அப்படியே அந்த விஸ்கியை பத்தியும். விஸ்கி மால்டில் இருந்து செய்வார்க்கள் என நம்ம கார்த்திக் சொன்னார். அதை கொஞ்சம் விபரமாக சொல்லுகளேன்

நாகை சிவா Monday, June 19, 2006 11:45:00 AM  

ஐய்யோ பொன்ஸ், நீ ஒரமா குந்திக்குனு இருக்குறது லுக் விடாம நான் நேரா உள்ளே போயி அவர விஷ் வேற பண்ணிடேனே. இருமே, யோசிக்கலாம், எதாவது மாட்டாமலா போகும்.

ஆங்க, கண்டுகிட்டேன்.அது ஒன்னும் இல்லமே, பொழுதன்னைக்கும் வலைமனையிலே சுத்தி கிட்டு இருக்காருல, அதான் அவர் கிட்ட வைத்தியம் பாக்க எவனும் வருவதில்லை. அத பார்த்து அவரு சம்சாரம் நல்லா லீவிட்டு அடிச்சிருச்சு. அதனால் நம்ம அண்ணாத்த இது மாதிரி எல்லாம் அட்வைஸ் கொடுத்து நம்ம உடம்பை டேமேஜ் பண்ணி பின்னால் வைத்தியம் பாக்கலாம் என ஜடியா பண்ணுறாரு. என்ன வாத்தியாரே, நான் சொல்லுறது மெய் தானே.......

SK Monday, June 19, 2006 1:23:00 PM  

//பொழுதன்னைக்கும் வலைமனையிலே சுத்தி கிட்டு இருக்காருல,//

பொறாமை!

//அதான் அவர் கிட்ட வைத்தியம் பாக்க எவனும் வருவதில்லை.//

அசலூர்ல வந்து சும்மா ஒக்கார எவனும் சம்பளம் தரமாட்டாங்கோய்!


//அத பார்த்து அவரு சம்சாரம் நல்லா லீவிட்டு அடிச்சிருச்சு.//

நீருதேன் வந்து ஒத்தடங் கொடுக்கவாரும்!

//அதனால் நம்ம அண்ணாத்த இது மாதிரி எல்லாம் அட்வைஸ் கொடுத்து நம்ம உடம்பை டேமேஜ் பண்ணி பின்னால் வைத்தியம் பாக்கலாம் என ஜடியா பண்ணுறாரு.//

நல்ல மொச மூளைய்யா ஒமக்கு!

நாங்கூடத்தான் நீங்க நெசமாவே கேகிறீயளோன்னு நெனச்சு, இந்த ப்ராந்தி, விஸ்கி பத்தி சில தகவல் சேத்தேன்.
இப்பல்ல பிரியுது, பொன்ஸோட கூட்டு வெச்சு, குட்றத்துக்கு வாரீகன்னு !
சங்கத்து ஆளுகன்னாலே கொஞ்சம் சாக்கிரதையாத்தான் இருக்கணும் போல!

:))

நாகை சிவா Monday, June 19, 2006 1:50:00 PM  

//நாங்கூடத்தான் நீங்க நெசமாவே கேகிறீயளோன்னு நெனச்சு, இந்த ப்ராந்தி, விஸ்கி பத்தி சில தகவல் சேத்தேன்.//
அப்பு, அது நான் மெய்யாலுமே கேட்டது.அத சொல்லுங்க, நம்ம ஜீ,கே யை கொஞ்சம் வளர்த்துக்கலாம்.

பொன்ஸ், கேட்டதால் இந்த பதிவின் உண்மையை வெளி கொண்டு வரும் படி ஆகி விட்டது..தவறு என்னது இல்லை.

அது சரி அது என்னங்க, மொச முளை.

வெற்றி Monday, June 19, 2006 2:00:00 PM  

SK அய்யா,

//கே: எண்ணையில பொரிச்சது ஒடம்புக்குக் கெடுதல்னு சொல்றாங்களே... அதப்பத்தி உங்க கருத்து?

ப: இவ்ளோ நேரம் நான் சொன்னதை நீ கேட்டுக்கினு இருந்தியா, இல்லை எங்கியாவது தூங்கப் பூட்டியா? எதுல பொரிக்கிறாங்க அல்லாத்தையும்? வெஜிடபிள் ஆயில்லதானே? இன்னும் கொஞ்சம் வெஜிடபிள் சேந்தா நீ கொறஞ்சா பூடுவே? //

நீங்கள் மருத்துவர். நீங்கள் சொன்னால் சரியாகத்தானிருக்கும். நான் Vegetarian. எனவே இனி எல்லாத்தையும் மரக்கறி எண்ணையில் பொரிச்சுச் சாப்பிடுகிறேன். :))

பொன்ஸ்~~Poorna Monday, June 19, 2006 2:03:00 PM  

சிவா..
சூப்பராக் கண்டுபிடிச்சு உள்ளர்த்தத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துட்டீங்க.. !!!

என்ன, இந்த மெட்ராஸின் தங்கத் தமிழ் பாஷை தான் உங்களுக்கு அவ்வளவா வரலை..

பர்வால்ல நைனா, அப்டியே ஃப்ரியா வுடு.. அப்பால சங்கத்துல இன்னோரு தபா தமில் க்ளாஸ் எடுக்கசொல பாத்துக்கலாம்...

kekkE PikkuNi #25511630 Monday, June 19, 2006 3:19:00 PM  

ஆத்திகம்னு வந்து பாத்தா எல்லாம் "பட்டை" (விபூதியும் இல்லே, நாமமும் இல்லே) விஷயமா "போட்டு" கீறே! இதுக்கு உங்க ஊட்ல சர்னு சொன்னாங்களா?

தமிள் கடவுளு படம் வேற மேல! என்னாத்த சொல்றது!

SK Monday, June 19, 2006 3:28:00 PM  

கடவுள் அல்லாத்தையும் பாத்துக்கினுதான் இருக்காருன்றதை எவ்ளவு சிம்பாலிக்கா சொல்லியிருக்கேன்! பாராட்டாம திட்றீங்களே!

அல்லாம் "எல்த்" சம்பந்தப்பட்ட விசயம் அம்மணி, கவனிச்சீங்களோ இல்லியா தெரியலியே!

மத்த பதிவுகளும் படிங்க, அப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க!

கப்பி பய Monday, June 19, 2006 3:38:00 PM  

ஷோக்கா கீது வாத்யாரே..

[சதானந்தன் Monday, June 19, 2006 4:29:00 PM  

SK சார் தலசுத்துது இதுக்கு பதில நீங்க இணையதல ஆச்சிரமம் ஒன்ன
ஆரம்பிச்சுடுங்க நாம எல்லரும் பக்தகோடிகள சேர்ந்றோம்

கால்கரி சிவா Monday, June 19, 2006 6:07:00 PM  

Dr.S.K.

தண்ணி அடிக்கலாமா? கூடாதா?. தண்ணி அடிச்ச கொழுப்பு குறையும் என்றாங்க. அப்போ சக்கரை எறுமா ஏறாதா?

கொழுப்புக்கு மாத்திரை சாப்பிடும் போது தண்ணி அடிக்கலாமா?

இல்லை நீங்க சொல்றது எல்லாம் மக்கல் தொகையை குறைக்கும் வழியா?

மருத்துவர் ஐயா, கொஞ்சம் விவரமா சொல்லுங்க

கால்கரி சிவா Monday, June 19, 2006 7:01:00 PM  

Dr.SK,

கொழுப்புக் குறைய மாத்திரை சாப்பிடேறன்.

நான் தண்ணி அடிக்கலாமா கூடாதா?

தண்ணி அடிச்ச சக்கரை ஏறுமா? ஏறாதா?

கொழுப்பு மாத்திரை சாப்பிட்டு தண்ணியும் அடிச்சி கல்லீரல் எகிறுடுமா?

ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்கள்

SK Tuesday, June 20, 2006 12:32:00 AM  

நொந்து நூலாக வைக்கிறீங்களே, மக்கா!

இப்படி ஆளாளுக்குப் பக்கம்பக்கமாத் [குமரன் கவனிக்க!] தாக்கினா நான் என்ன பண்ணுவேன்!

எங்கே சான்ஸுன்னு பொன்ஸும் [குமர்ன் கவனிக்க வேண்டாம்!] கண்குத்திப் பாம்பா அலையறாங்க!

என்னை அடிக்க வரும்போது மட்டும் கரெக்டா குச்சியை எந்தப் பூவிலே விட்டுட்டேன்னு ஞாபகம் வச்சுக்கிட்டு வந்துர்றாங்க!

என்னமோ பண்ணுங்க!

SK Tuesday, June 20, 2006 12:39:00 AM  

நன்றி, "க.ப."
நீங்க உங்க அரிதான பெயரை சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்துல இருக்கீங்க!

SK Tuesday, June 20, 2006 12:45:00 AM  

மருத்துவ சம்பந்தமான கேள்வியைக் கேட்டிருக்கீங்க!

இப்ப மணி 00:36!

ஐஸ்ஹாக்கி கேமுக்குப் போயிட்டு இப்பத்தான் வந்தேன்!
எங்க ஊர் டீம் ஸ்டேன்லி கப்பை ஜெயிச்சுட்ட மகிழ்ச்சியில இருக்கேன்.
விவரமா, காலைல உங்களுக்கு பதில் சொல்றேன்!

வெற்றி, நாங்கதான் சேம்பியன்ஸ்!
கொஞ்சம் வருத்தமா இருக்கும் உங்களுக்கு!
நல்லாத்தான் விளையாடினீங்க!
சும்மா சொல்லக்கூடாது!
வெற்றியை உங்களோட பகிர்ந்துக்கிறேன்!
காலைல "வெற்றி பக்கம்" பாத்ததுமே ஒரு நல்ல சகுனம் மாதிரி தோணிச்சு!
அது வீண் போகல்லை!

நாகை சிவா Tuesday, June 20, 2006 3:22:00 AM  

//சிவா..
சூப்பராக் கண்டுபிடிச்சு உள்ளர்த்தத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துட்டீங்க.. !!! //
தாங்கஸ்...

//மெட்ராஸின் தங்கத் தமிழ் பாஷை தான் உங்களுக்கு அவ்வளவா வரலை.. //
என்னமே பண்ணுறது, நமக்கு இந்த கையில பேசுறது, அரை அவர்(hour), கால் அவர்(hour), அதுக்கோசுரம், கலீஜ் போன்ற வார்த்தைகளை கேட்டாலே ஆவாது. அதுவும் இல்லாமல் சென்னையில் நாலு வருடம் தான் இருந்தேன். அதுல பாதி நாளு நாகைக்கு ஒடி விடுவேன்.

//தமில் க்ளாஸ் எடுக்கசொல பாத்துக்கலாம்... //
நமக்கு இந்த கிளாஸ் என்றாலே அலர்ஜீ. அதனால வேணாமே!


என்ன ஆத்திகம், நம்ம கேள்விகளுக்கு பதில் ரெடியா???

கால்கரி சிவா Tuesday, June 20, 2006 1:24:00 PM  

//ஐஸ்ஹாக்கி கேமுக்குப் போயிட்டு இப்பத்தான் வந்தேன்!
எங்க ஊர் டீம் ஸ்டேன்லி கப்பை ஜெயிச்சுட்ட மகிழ்ச்சியில இருக்கேன்.
விவரமா, காலைல உங்களுக்கு பதில் சொல்றேன்!//

ஐயா, நாங்க (எட்மண்டன்)தோத்துட்டம்

ஆனா நம்ம உடன்பிறப்பு(ராலே) தான் ஜயித்தது. ஆகையால் கோப்பை எங்கள் வீட்டுக்குள்ளேயெ இரூக்கு.

பொன்ஸ்~~Poorna Tuesday, June 20, 2006 1:27:00 PM  

//நமக்கு இந்த கிளாஸ் என்றாலே அலர்ஜீ. அதனால வேணாமே!
என்ன ஆத்திகம், நம்ம கேள்விகளுக்கு பதில் ரெடியா???
//
தம்பி சிவா, கிளாஸ் என்றாலே அலர்ஜின்னு சொல்றீங்க.. அப்புறம் எஸ்கே கிட்ட மட்டும் 'அந்தக்' கிளாஸ் பத்தி கேள்வியா கேட்டுத் தள்றீங்க?!!

எஸ்கே கவனிக்க: குச்சியை வைத்துக் கொண்டு கண்காணிப்பது உங்கள் ஒருவரை மட்டும் அல்ல. யாம் ஒரு நடு நிலை வியாதியாக்கும்!!

SK Tuesday, June 20, 2006 1:59:00 PM  

கா.சிவா,

இப்பத்தான் ஸ்போர்ட்ஸ் சேனல்ல ஒரு கால்கரி ஆளு வந்து இப்படிச் சொன்னாரு!

"Not every Canadian is upset over Oilers' loss. We, Flames in Calgary, are quite satisfied with the Canes' win!!"

அதனால நீங்களும் நம்ம பக்கம்தான்!

நீங்கதான் கால்கரி ஃப்ளேம்ஸ் ஆச்சே!

SK Tuesday, June 20, 2006 2:03:00 PM  

அப்புறம், நான் ஏதாவது சொல்லப் போக, இந்த "வியாதிக்கு" மருந்து இருக்கான்னு இன்னொருத்தர் வருவாரு!

அதனால, நீங்க, நடுநிலை 'வாதி'ன்னே ஒத்துக்கறேன், பொன்ஸ்!

paarvai Friday, June 23, 2006 7:59:00 PM  

கே: நீச்சல் பளகினா, ஒடம்பு வாகா இருக்கும்னு சொல்றங்களே...?

ப: நீச்சல்னாலே ஒடம்பு வாகாயிடும்னா, போயி திமிங்கலத்தை பாரு! அப்பால வந்து சொல்லு, நீச்சல் நல்லதா, கெட்டதான்னு! வேலயப் பாத்துக்கினு போவியா

கலக்கிட்டீங்க எஸ் கே!
நன்றாக இருக்குது! உங்க தமிழ்!
யோகன் பாரிஸ்

SK Friday, June 23, 2006 10:10:00 PM  

பாராட்டுக்கு மிக்க நன்றி, திரு. யோகன் - பாரிஸ்

நரியா Friday, June 30, 2006 1:36:00 PM  

இன்னாமா தமில்ல கூவுறீங்க எல்லாரும் :) இந்த "எல்த்" பத்தி (ஸ்லிம்மாவதற்கு) நம்மலும் கொஞ்சம் போட்டுருக்கோம். வைத்தியரான நீங்க, கொஞ்சம் தயவு செய்து ஆலோசன சொல்லுங்க.

இதோ சுட்டி.

http://siriyapaarvai.blogspot.com/2006/06/4.html

நன்றி!
நரியா

SK Friday, June 30, 2006 1:59:00 PM  

நாரியா,
போட்டுட்டேன்!
போய்ப் பாருங்க!!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP