//நீ எனக்குச் சொல்//
//நீ எனக்குச் சொல்//
உன்னுடன் இருந்த நேரங்களை
நினைத்திங்கே பார்க்கையிலே
ஒன்றெனக்குப் புரிந்தது!
நீ ஒரு யானை!!
ஆம்!
உருவத்தைக் காட்டிப்
பழிக்கிறேனெனச் சொல்லாதே!
உனக்கே தெரியும்
நீ பிடியல்ல, கொடியென்று!
இருப்பினும் உன்னை
யானையெனச் சொன்னதுவும்
ஏனென்று கேட்கிறாயா?
சொல்லுவேன் கேள்!
உன்னுடன் இருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
ஆனந்தம்! ஆனந்தம்!
உனைப் பிரிந்து
உன்நினைவைச் சுவைக்கும்
ஒவ்வொரு நொடியும்
ஆனந்தம்! ஆனந்தம்!
இப்போது சொல்!
நீயும்,யானையும்
ஒன்றன்றோ!!
இருந்தாலும்
ஆயிரம் பொன்!
மறைந்தாலும்
ஆயிரம் பொன்!
நீ உணர்வதும்
அதுதானே!!
நீ எனக்குச் சொல்!
18 பின்னூட்டங்கள்:
எஸ்கே, ஒரு யானை போட்டோ போட்டதுக்கு இப்படி உங்க பழைய நினைவுகள் எல்லாம் அப்படியே மேல எழும்பி வந்திடுச்சு போலிருக்கு.. !!!
ஒண்ணொண்ணா போட்டோ ரீலீஸ் பண்ண வேண்டியது தான்.. :)
பின்னூட்டம் மட்டும் போட்டுக்கறேன்னு சொல்லி ஒரு பதிவு போட்டதுக்கு அப்புறம் அடுத்தடுத்து பதிவெழுத ஐடியா வந்து கிட்டே இருக்கு!!! :)
அய்யா எஸ்.கே!
இந்த கவிதை வந்தாலும் 1000 பொன் வரலைனாலும் 1000 பொன்(பின்னூட்டம்) தானா ?
அது சரி இந்த கவித ஏதோ யாருக்கோ சமர்ப்பணம்னு எழுதினா போல இருக்கே,யாருக்குனு விலாவாரியா சொன்னா மக்கள்ஸ் தெளிவடைவாங்க :-))
( நாய்கவிதைகளே நிரம்ப வந்த தமிழ்மணத்தில் யானைக்கவிதை இனிமே ஒரு சுத்து யானை கவிதைகள் உலா வருமா அதற்கான மணி ஓசையா இந்த கவிதை)
அடடா அடடா அருமையோ அருமை
SK,
//நீ எனக்குச் சொல்!//
அருமை.
நன்றி
என்னங்க பண்றது! எல்லாம் நம்ம கையில ஒண்ணும் இல்லை, பொன்ஸ்!
அது தானா வருது!!
நீங்க சொல்லிட்டிங்கள்ளே, வவ்வால் அய்யா!
நாய், யானை ஆவதில் வியப்பேதும் உண்டா?
இரண்டுமே ஒரே ஈரெழுத்து [ந, ய] தானே!
அடடே! குமரன் நீங்க எப்பவும் தூரத்துல இருந்துதான் பார்த்து மகிழ்வீங்க!
உங்களையே ஒரு பின்னூட்டம் இட வைத்ததென்றால், நிச்சயமாக, இதில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது என்றுதான் அர்த்தம்..... இல்லை, இல்லை,....பொருள்!
நன்றி!
நீங்க யானை படம் போடறதுக்கு முன்னமேயே என் கவிதை எழுதப்பட்டு விட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன், பொன்ஸ்!!!
ஐடியாதான் நீங்க கொடுத்துக்கிட்டே இருக்கீங்களே!
ரொம்ப தேங்க்ஸ்!!
உங்க நம்பிக்கையைக் காப்பாத்திட்டேனா, சிவபாலன்!??
நன்றி!!
நம்ம ஆளு உருவதிலும், உள்ளதாலும் யாணை ஒத்திருக்கும் என்பதை சொல்லாமலே சொல்லியதற்கு ந்ன்றி.தி.ரா.ச
நம்ம ஆளுன்னு நீங்க யாரச் சொல்றீங்கன்னு சொன்னா, கொஞ்சம் பிரச்சினையின் தீவிரத்தைக் குறைக்கலாம்!!
:))))
test post to see if this comes on right had side.After changing settings you should resend them to thamizmanam.I did that and now after publishing this comment please vote for yourself and refresh your page.within 2 minutes it should appear in thamizmanam homepage.(dont forget to refresh thamizmanam page too)
எஸ்கே,
இவை தங்களின் பழைய நினைவுகளா ?
அப்படியென்றால் இது பல எழுதவும்.
பொன்ஸ் யானையின் ஓட்டம் மிகவும் அழகாக இருக்கிறது.
நன்றி.
யானை என்ற வார்த்தையைப் பார்த்ததுமே பொன்ஸ் இங்க வந்திருப்பாங்கன்னு நினைச்சு அப்படியே பின்னூட்டப் பகுதியில வந்து பார்த்தேன். கரெக்டா பொன்ஸ் தான் முதல் பின்னூட்டம். இன்னும் துளசியக்காவைக் காணோமே!
எஸ்.கே கவிதை நல்லா இருந்தது!
SK அய்யா,
அருமை.படிக்கச் சுவையாக இருந்தது.
நன்றி
அன்புடன்
வெற்றி
இது போல, இன்னும் சில 'மலரும் நினைவுகள் உண்டு! எழுதுகிறேன்! நன்றி, 'பச்சோந்தி'!
நீங்க நினைத்தால் அது தவறாகுமா, சிபி!
'துளசிஅக்கா' வந்து பார்த்துப் படித்ததாகச் சொன்னார்கள்!
பாராட்டுகளுக்கு நன்றி, வெற்றி அவர்களே!!
sorry namba aaloda(sk)aalu. varththai thavari vitten TRC
Post a Comment