கருணாநிதியின் சொல்லாட்டம்!
கருணாநிதியின் சொல்லாட்டம்!
" நிலமற்ற ஏழைகளுக்கு என்றால், நிலமற்ற அத்தனை ஏழைகளுக்கும் என்று பொருள் அல்ல!"-- அமைச்சர் அன்பழ்கன்!!
அப்டிப் போடு.......அருவாளை!!
அடுத்தது என்ன?
எல்லோருக்கும் இலவச கலர் டிவி என்றால், அத்தனை எல்லோருக்கும் அல்ல!
ரேஷன் அரிசி 10 கிலோ இலவசம் என்றால், எல்லோருக்கும் அல்ல!
உன் நிலத்தை உன்னிடமிருந்து பிடுங்கி, அதை மேம்படுத்தல் என்ற பெயரில் கொள்ளை அடித்துப் பின் உனக்கே அதைத் திருப்பிக் கொடுப்போம்!
நல்ல தமாசு!
27 பின்னூட்டங்கள்:
வணக்கம் அய்யா எஸ்.கே!
// நிலமற்ற ஏழைகளுக்கு என்றால், நிலமற்ற அத்தனை ஏழைகளுக்கும் என்று பொருள் அல்ல!"-- அமைச்சர் அன்பழ்கன்!!//
இப்படிப் போட்டுவிட்டு கருணாநிதியின் சொல்லாட்டம்னு தலைப்பா ! ஒரு வேளை இதான் எஸ்.கே அவர்களின் சொல்லாட்டமா :-))
அப்புறம் ஒரு கொசுறு நாணயமாக கூட்டுறவு வங்கி கடன் கட்டியவர்களுக்கு ,அவர்கள் கட்டியப்பணம் திரும்ப தரபடுமா என அம்மையார் அதி புத்திசாலிதனமா கேட்டதுக்கு ஏதும் கருத்துண்டா?
SK சார், வேறன்ன எதிர்பார்க்க முடியும். பணக்கார நாடுகளே நிலம் டிவி என இலவசங்களைக் கொடுக்க இயலாத போது இந்தியாவில் எவ்வாறு சாத்தியம். இந்த வார்த்தை விளையாட்டுகளால் மக்களை எத்தனைக் காலம் தான் ஏமாற்றுவார்களோ
எஸ்.கே
தேர்தலில் ஜெயிப்பதற்காக இரு கட்சிகளும் நடக்கவே சாத்தியமற்ற வாக்குறுதிகளை கொடுத்தன.அதில் அதிகம் மாட்டிக்கொண்டது திமுக தான்.நிலம் தருவது,டி.வி என காரிய சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளிவிட்டு விட்டன.
2 ரூபாய்க்கு அரிசி தருவேன் என்றதும் குண்டு அரிசியாம்.அது மக்களுக்கு பிடிக்காமல் அதை இப்போது யாரும் விளைவிப்பதே இல்லையாம்.அதை மீண்டும் கொண்டு வரப்போகிறார்களாம்.
தொழிற்சாலைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல் இப்படி கூத்தடிக்கிறார்களே என யோசித்தால் வேதனை தான் மிஞ்சுகிறது.
பாவம் தமிழன்
வந்ததுதான் வந்தீங்க!
கொஞ்சம் நல்லா செய்திகளைப் படிச்சிட்டு வர்றதில்லியா?
அன்பழகன் பெசினது தலைப்பு!
அதே விஷயத்துல கருணாநிதியும் பெஇனதைத்தான் கடைசி வரியா சொல்லி தம்மசுன்னு முடிச்சிருக்கேன்!
இன்னொருதரம் படிங்க ஐயா!
கூட்டுறவு கடன் விஷயத்தைக் கிளறாதீங்க!
அப்புறம் கொடுத்தவன் யோக்கியன்,கொடுக்கதவன் அயோக்கியன்ன்னு சொன்னதெல்லாம் வரும்!!
வந்தவரைக்கும் நன்றி, வவ்வாலையா!
ஸெல்வன்,
என்னத்தைச் சொல்ல!
அவன் செய்தான்; அதனால் நானும் செய்கிறேன் எனத் தொடரும் இந்தக் கேலிக்கூத்துகள் இருபக்கமும் தொடர்வது வேத்னையான நிகழ்ச்சி.
இதனைக் காட்டினால், உடனே முத்திரை குத்தக் கிளம்பும் கூட்டம், அதைவிடக் கொடுமை!!
"நாட்டில் அவமதிப்பும், நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே ! -- கிளியே!
சிறுமைஅடைவாரடீ !"
நன்றி எம்.ஜி.ஆர் !!
"நடிப்புச் சுதேசிகள்" என்று பாரதி இவர்களைக் கொண்டுதான் ஒரு பாடலை எழுதினானோ!!??
எத்தனைக் காலம் தான் ஏமாறுவார் என்று கொஞ்சம் மாற்றிப் பாடவேண்டும் போலிருக்கிறது!
நன்றி கால்கரி சிவா!
திமுக பதவிஏற்று சரியாக இரண்டு வாரம்கூட ஆகவில்லை. அதற்குள் ஆரம்பித்துவிட்டீர்களே. இலவசமாய் கிடைத்தால் எனக்கொன்னு என் சித்தப்பாவுக்கொன்னு என்பது போல கூட்டுறவு கடன் ரத்து என்றால் எல்லா வங்கி கடன்களையும் ரத்து செய் என்று குரல் கொடுப்பது. நிலமற்ற ஏழைகளுக்கு 2 ஏக்கர் என்றால் உடனே ஏதோ ஒரு கணக்குப் போட்டு தமிழ்நாட்டையே கேட்பது என்று ஒரு அளவில்லாமல் போகிறது. ஐயா சற்று பொறுங்கள். குறைந்தபட்சம் 100 நாள் தேனிலவாவது முடியட்டும். அதற்குப்பிறகு குழந்தையைப்பற்றி யோசிப்போம்!
சற்று கவனித்துப் படித்தீர்கள் என்றால், நான் குறை கூறவில்லை, ஒருசில பொறுப்பற்ற பதில்கலையே சுட்டிக்காட்டி இருக்கிறேன் என்பது புரியும்.
மற்றும், கவர்னர் உரை தான் எனது முதல் பட்ஜெட் எனத் தேர்தலுக்கு முன் சொல்லியிருந்ததால், மக்களின் எதிர்பார்ப்பு சற்றுக் கூடவே இருந்த நிலையில் இன்னும் கொஞ்சம் யோசித்துச் செயல்பட்டிருக்கலாம் என்பது என் கருத்து.
வந்து சொன்னதற்கு நன்றி, பிரதிமா!
வணக்கம் அய்யா எஸ்.கே
காதலியைப் பார்த்து சொல்லும் போது வீரமா வானவில்லை வாங்கி தரவா, நட்சத்திரம் பறித்து மாலை சூடவானு லாம் ஒரு முறுக்கில சொல்றது தான் ஆனா ஒரு முழம் பூ வாங்க பையை தடவுவான்.அது போல தேர்தல் கால வாக்குறுதி தந்து இருக்காங்க, அத உடனே நிறைவேறும்னு எதிர்ப்பார்க்க கூடாது ,சட்டில இருந்தா தானே அகப்பைல வரும்.நிதி வேணாமா ? கருணா"நிதி" வச்சு என்ன பண்ண முடியும்.மத்திய அரசின் மாயக்கோல் வைத்து ஏதேனும் வித்தை காட்டக்கூடும் கலைஞ்ஞர் அரசியல் வித்தகர் ஆயிற்றே! தேர்தல் பிரச்சாரம் அப்போவே மன்மோகன் சிங்க் மேல பாரத்த போட்டாரே உங்கள நம்பி தான் சொல்லியிருக்கேனு!
//////நாணயமாக கூட்டுறவு வங்கி கடன் கட்டியவர்களுக்கு ,அவர்கள் கட்டியப்பணம் திரும்ப தரபடுமா என அம்மையார் அதி புத்திசாலிதனமா கேட்டதுக்கு ஏதும் கருத்துண்டா? //////
நடந்த கூத்துக்களைப் பார்த்தப்பின்பு, எந்தவிவசாயியாவது இனி கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்கினால் ஒழுங்காக கட்டுவார்கள் என்று நம்புகிறீர்களா? அப்படிக் கட்டினால் அவர் ஒரு இளிச்சவாயராகத்தான் இருப்பார். பின்னே என்னங்க, எப்படியாவது திராவிடகண்மணிகள் (அதிமுகவையும் சேர்த்தே) கடனை ரத்துசெய்து விடப்போகிறார்கள். பிறகென்ன?
பதில்கலையே
பெஇனதைத்தான்
தம்மசுன்னு
- எஸ். கே, நீங்களுமா?!! கொஞ்சம் பொறுமை தலைவா!! - இப்படிக்கு ர.ம.த
முதன் முதலாய் வந்து
முத்தான மூன்று கருத்துகளைச் சொன்ன
'கொஸ்தோஸோ' அவர்களுக்கு நன்றி!
நாணயமின்றி இருபுறமும்
நாநயத்தை மட்டுமே நம்பி
நாட்டு மக்களை ஏமாற்றும்
இவர்களை விரைவில்
இனம் கண்டு கொள்ள வேண்டும்!
வவ்வால் ஐயா,
நகைச்சுவையுடன் நீங்கள் அளித்த பதிலைப் புரிந்து கொண்டேன்!
நம்பிய காதலிக்கு நயவஞ்சகம் செய்யும் இனத்தோடு,
இந்த அரசியல்வாதிகளையும் சேர்த்ததுதான் அருமை!
நன்றி.
இந்தக் 'போட்டுக் கொடுத்து வாங்கறது'ன்னு சொல்வாங்களே, அதுபோல, ஜெயலலிதா சபைக்கு வந்து வழி சொல்லித் தருகிறார்களோ, என்னவோ!
நடப்பது 'கூத்து' என்று சரியாகச் சொன்னீர்கள்!
இரு கழகங்களும் சேர்ந்து அடிக்கும் 'கூத்து' மக்களை விரைவிலேயே சொரணையற்றவர்களாக மாற்றிவிடும் போல் இருக்கிறது!
ஒருவேளை, அதுதான் இவர்களின் இரகசியக் குறிக்கோள் போலும்!
//இரு கழகங்களும் சேர்ந்து அடிக்கும் 'கூத்து' மக்களை விரைவிலேயே சொரணையற்றவர்களாக மாற்றிவிடும் போல் இருக்கிறது!//
இன்னும் நாளாகும்னு நினைக்கிறீங்க?!! இப்போவே அப்படித் தானே இருக்கு?!!!
நான் குறிப்பிட்டது இன்னும் கொஞ்ச நஞ்சம் சொரணையோடு இருக்கின்றவர்களைப் பற்றி!
அப்பாடா, முதல்முறையாக, பொன்ஸிடமிருந்து திட்டுகள் இல்லா ஒரு பின்னூட்டமும் வாங்கி விட்டேன்! :))
ஆத்தா! நான் பாஸாயிட்டேன்!! :)
நாடு போகின்ற போக்கை நினைத்தால் கவலையாக இருக்கின்றது
கலர்டிவி - இலவசங்களின் போதையில் மக்கள் சிக்கிக்கொண்டார்கள்.
இப்பொழதே சீரழிக்கும் சீரியல்கள் மக்களை தகாத உறவுகளுக்கும் மோசமான சிந்தனைகளையும் தூண்டிக்கொண்டு வருகின்றது. இந்த லட்சணத்தில் எல்லா வீடுகளுக்கும் கலர் டிவியும் கொடுத்து கேபிள் இணைப்பும் கொடுத்தால் அவ்வளவுதான் உறவுகளின் புனிதத்தனமை கெட்டு கலாச்சாரம் சீரழிந்து போய்விடும் .
கலாச்சாரத்தைக் காக்கின்றோம் என்று சொல்லிவிட்டு கண்ணகி சிலையை நிறுவது பெரிய விசயமல்ல.. கலாச்சாரத்தை சீரழியாமல் பாதுகாக்க வேண்டும்
ரொம்பச் சரியான கவலையைத் தெளிவாகத் தெரிவித்திருக்கிறீர்கள். நிலவு நண்பன் அவர்களே!
இது போல நியாயமாகக் கவலைப் படும் கூட்டம் அதிகரித்து, ஒன்றும் சேர்ந்தால், அதுவே, நாட்டின் இன்றையத் தேவையை நிறைவு செய்யும்!
கருணாநிதியின் சொல்லாட்டம் என்றவுடன்,
கருணாநிதி எதாவது ஒரு இலக்கியத்தில் இருந்து யாரோ சொன்ன ஒன்றை, கொஞ்சம் பூசி மொழுகி தான் சொன்னது என்று கூறியுள்ளாரோ என்று நினைத்தேன். ஆனால் இது வேறு மாதிரியாக உள்ளது. ஆனால் பூசி மொழுகுவது மட்டும் மாறவில்லை( தேர்தல் அறிக்கைகளை).
சொல்லப்போனால், நாம் எல்லாருமே
ஏதோ ஒன்றைப் படித்தோ,
தழுவியோத் தானே
பதிவிடுகிறோம், 'ஜெயக்குமார்'!!
என்ன, ""கற்பனை வளம்""[!!] உள்ள
கருணாநிதி போன்றோர்
சொல்ல வருவதை
சுவையாகச் சொல்லிச்
செல்கின்றார்!
ஆனால், இது கொஞ்சம் ரொம்பவே ஓவர்!
:))
//என்ன, ""கற்பனை வளம்""[!!] உள்ள
கருணாநிதி போன்றோர்
சொல்ல வருவதை
சுவையாகச் சொல்லிச்
செல்கின்றார்!//
கருணாநிதி பிடித்த அணி எந்த அணி?
.
.
.
.
.
"இல்பொருள் உவமையணி"
.
.
.
.
.
இல்லாத நிலங்களை இருப்பதாக கூறியுள்ளாரே.
.
.
.
.
.
இவையெல்லாம் அடுத்த தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு "எடுத்துக்காட்டு உவமையணி" யாகப்போகிறது என்பது மட்டும் நிச்சயம்.
:)))
நம்முள் இந்த நகைச்சுவை உணர்வு இருப்பது குறித்து மகிழ்சி!
//அப்பாடா, முதல்முறையாக, பொன்ஸிடமிருந்து திட்டுகள் இல்லா ஒரு பின்னூட்டமும் வாங்கி விட்டேன்!//
எவ்வளவு மன உளைச்சலுக்கு உட்பட்டிருந்தால் நண்பர் SK இப்படி கூறியிருப்பார். இதுநாள் வரை நண்பரை தொடர்ந்து திட்டி வந்த பொன்ஸ் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
//இதுநாள் வரை நண்பரை தொடர்ந்து திட்டி வந்த பொன்ஸ் அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். //
பார்த்தி, இது எஸ்கேவின் தமிழுக்கும் பொன்ஸின் ரசனைக்கும் இடையே உள்ள திட்டு மற்றும் செல்லக்குட்டு.. இதில் புகுத்து எட்டப்பர் வேலை பார்க்கவேண்டாம்.. கண்டனங்களை கண்டம் தாண்டி விமானம் மூலம் சென்னைக்கே திருப்பி அனுப்பி வைக்கிறேன் :)
வணக்கம் எஸ்.கே
தங்களது தி.மு.க.அ.தி.மு.க விளக்கம் பதிவு செயல் படவில்லை பிளாக்கர் 404 file not found error msg எனக்காட்டுகிறது.சரி பார்க்கவும்.ஆரம்பவரிகள் மட்டும் பார்த்தேன் செமையா கலாய்ச்சு இருக்கிங்க உடனே படிக்கலாம்நு பார்த்தா ஒபன் ஆகலை .
Thanks, vavval!
I will set it right!
Post a Comment