"நலம் வாழ நான் பாடுவேன்!"
"நலம் வாழ நான் பாடுவேன்!"
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!
முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொலவார்கள்!
அப்படித்தான் அரங்கேறியிருக்கிறது, தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றக் காட்சிகள்!
முதல் அர்ச்சனையே, மக்கள் தேர்ந்தெடுத்த மன்றப் பிரதிநிதிகளை 'விஷப்பாம்புகள்' என வர்ணித்த அவலம்!
அடுத்து நடந்தது, பதவியேற்பு நிகழ்ச்சிகளின் போது காவலரை அடித்து ஓட்டிய திமுக தொண்டர்களின் கண்ணியமற்ற செயல்!
திருவொற்றியூரில், பயந்தவாறே, எம் எல் ஏ/அமைச்சரின் தம்பியின் வெறிச்செயல்கள்!
[ஊர்மக்களில் பலர் வீட்டைப் பூட்டிவிட்டு ஓடி விட்டார்களாமே!]
மரபை மீறி, பதவியேற்பு நிகழ்ச்சியின் போதே அரசு ஆணைகளில் கையெழுத்திட்ட 'மலிவு விளம்பரம்'!
முன்னாள் முதலமைச்சர் ஒரு காரணமுமின்றி சட்டசபைக்கு வர மாட்டேன் என சொல்லியிருக்கும் கேவலம்!
மரபை மறுபடியும் மீறி, அதிமுக பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாத கோழை/பேடித்தனம்!
அருதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், சின்னஞ்சிறு பாண்டியில் தனி ஆட்சி செய்ய வேண்டி, பெரிய தமிழகத்தை விட்டுக் கொடுத்த காங்கிரஸின் பொறுப்பற்ற
குருட்டுதனம்!
இளங்கோவனின் வாக்கு பொய்க்க வேண்டுமென மட்டுமே தமிழகத்தைத் தாரை வார்த்த வாசனின் சுயநலம்!
மத்தியில் மட்டும் 12 மந்திரிகள் வேண்டும்; ஆனால் மாநிலத்தில் அதே நிலையில், "தான் மட்டுமே அரசு அமைக்க வேண்டும்" என்ற அரிப்பில் உள்ள 82 வயது தலைவரின் அராஜகத்திற்கு அடிபோகும் கழக அடிவருடிகள், கூட்டணிக் கேவலங்கள்[தலைவர்கள் எனச் சொல்ல மனம் வர மாட்டேன் என்கிறது!] இவர்களை நினைக்க மனம் குமுறுகிறது!
"மத்தியில் கூட்டாட்சி: மாநிலத்தில் நிபந்தனை அற்ற மற்ற கட்சிகளின் ஆதரவில் ஆட்சி" என்பதற்குத் துணை போன அனைவரையும் பார்த்துக் கேட்கிறேன்!...
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனத்தைப் போல,..........!
இதெல்லாம் நடக்குமெனச் சொல்லி மாற்றம் கொடுங்கள் எனக் கேட்ட தமிழனுக்கு வாய்ப்பளிக்காத தமிழகமே!
மாற்றம் வேன்டுமென மனதார நினைத்தாலும்
மாறி மாறி இலவச அறிவுப்புகளை நம்பியே
முன்னேற்றக் கழகங்களுக்கு வாக்களித்து
ஏமாந்த தமிழகமே!
மீண்டும் ஒருமுறை
உன்னை நீ எண்ணிப்பார்!
இனியாவது வாழ,.......
சுயமரியாதையுடன் வாழ.....
நினை!
உனக்காக நான் இறைவனிடம் வேண்டுவேன்!
நலம் வாழ நான் பாடுவேன்!
21 பின்னூட்டங்கள்:
அய்யா எஸ்.கே!]
//""கூறுவதென்ன?
சீ!
காறி உமிழ்கிறேன்!
தூ! "" //
வி.காந்த் அ ஒத்தைல நிக்க வச்சுட்டாங்க என்ற உங்க ஆதங்கம் புரியுதுங்கய்யா.அதுக்கா இப்ப்டியா மண்ணை வாரி தூத்துறது! உங்க வயத்தெரிச்சல் நீங்க ஜில்லுனு மோர் குடிங்க! ரொம்ப வயறு எரிஞ்சா குடல் புண் வந்து தொலைக்க போவுதுங்கய்யா!
அய்யா, வௌவ்வால்,
நான் மண்ணை வாறித் தூற்றுகிறேன் என்பதும், வயத்தெரிச்சல் என்பதும் உங்கள்
புரியாமையின் பிழையே அன்றி வேறில்லை என்பது,
நான் இரு கழகங்களையும் சாடியிருக்கிறேன் என்பதைப் படித்தால் தெரியும்!
இருந்தும் இப்படித்தான் பின்னூட்ட்ம் இடுவீரெனில்,
நான் என்ன செய்ய முடியும்!???
எனினும், வந்து, படித்து, பின்னூட்டமிட்டதற்கு நன்றி1
என் 'மன உளைச்சலைப்' புரிந்து கொள்ளாமைக்கு!!
மற்றபடி, நான் ஒரு மருத்துவர் என்ற முறையில், எனக்கு குடல் புண் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென எனக்குத் தெரியுமென, பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்!
நாட்டு நிலமையை, அரசியல்வாதிகளின் போக்கை சரியாதான் சொல்லி இருக்கீங்க!
மொத்தப் பதிவையும் படிக்காமல்,
ஒரு பகுதியை மட்டும் தூக்கி வந்து,
என்னை இங்கு சாடியிருப்பது,
என்ன சொல்லி நான் அழுவது!??
//முன்னாள் முதலமைச்சர் ஒரு காரணமுமின்றி சட்டசபைக்கு வர மாட்டேன் என சொல்லியிருக்கும் கேவலம்!
//
எதிர்கட்சித் தலைவர்களின் லேட்டஸ்ட் ஜனநாயக மரபு/கடமை பற்றி சிறிதும் அறியாமல் மேற்கண்டவாறு எள்ளி நகையாடியிருக்கும் எஸ்.கே யாரை
நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
//ஆதரவில் பொட்டை ஆட்சி//
ஐயா! இதுபோன்ற வார்த்தைப் பிரயோகங்களை தங்களிடமிருந்து நான்
சற்றும் எதிர்பார்க்கவில்லை!
(இது சீரியஸான பின்னூட்டம்)
எஸ்.கே,
இப்போவேண்டிய பதிவு. அரசியல் நாகரீகம் நம்மை விட்டு வெகு தூரம் போகிவிட்டது.வோட் போடும் வரை தான் மக்கள். அதன் பிறகு நாம் யாரோ அவர்கள் யாரொ. எல்லோருக்கும் இது பொருந்தும்.
மனம் வெறுத்துபொய்த்தான் இப்பதிவை எழுதினேன்!'நாமக்கல்லாரே'!
சில இடங்களில் காரம் அதிகம் இருப்பதைப் பொறுத்துக் கொள்ளவும்!
இனிமேல் வராமல் பார்த்துக் கொள்கிறேன்!
'பொட்டை' என்ற சொல்லை 'குருட்டுதனம்' என்னும் பொருளிலேயே பயன்படுத்தினேன்!
மாற்றி விடுகிறேன்!
'வெளிகண்டநாதரே!' தங்களின் பாராட்டுக்கு நன்றி!
மாற்றம் கொடுத்த மக்களுக்கு மாறாத அதே காட்சிகளைத் திரும்பத் திரும்ம்ப அளிப்பதை கண்டெழுந்த குமுறலே இது!
'வவ்வால்' அவர்களே!
துக்கி விட்டேன் அதை!
நன்றி!
அதுதான் வேதனையாய் இருக்கிறது, 'மனு'!
மற்றபடி யாரையும் குறைத்துச் சொல்லும் எண்ணமில்லை!
என் தலைப்பில் சொலவதைத்தான் செய்கிறேன்!
"நல்லன சொல்வதில் நடுக்கம் இல்லை!
அல்லன அகற்றிடத் தயக்கம் இல்லை!
வல்லமை தாராயோ! - இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே!"
நன்றி!
//மீண்டும் ஒருமுறை
உன்னை நீ எண்ணிப்பார்!
இனியாவது வாழ,.......
சுயமரியாதையுடன் வாழ.....
நினை!//
தாங்கள் ஏன் தேர்தல் 2060 பற்றி எழுதக் கூடாது ?
தேன்கூடு அறிவிப்பைப் பார்க்கவும்.
:))
நன்றி, 'பச்சோந்தி' அவர்களே!
தேன்கூடின் தொடுப்பு கிடைக்குமா?
இன்னிக்கிதான் இந்தப் பக்கம் வந்தேன். அரசியல்வாதிகளுக்கான உங்கள் சாடல்கள் நியாயமானதே. நான் நினைப்பதையே நீங்களும் எழுதியுள்ளீர்கள்.
எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
சாக்கடையில் மிதக்கும் நச்சுக்கிருமிகளில் சில இரத்தம் குடிக்கும், சில வியாதியைப் பரப்பும். இதில் எது நல்லது என்று நாம் எடுத்துக்கொள்ள முடியும்.
வந்து பாராட்டினதுக்கு மிக்க நன்றி, 'மஞ்சூர் ராஜா'.
அடிக்கடி வாங்க!
அய்யா எஸ்.கே. வணக்கம்!
//புரியாமையின் பிழையே அன்றி வேறில்லை என்பது,
நான் இரு கழகங்களையும் சாடியிருக்கிறேன் என்பதைப் படித்தால் தெரியும்!//
புரியாமையல்ல, தாங்கள் இரண்டு கழகங்களையும் வன்மையாக சாடியதால் தான் புத்திதாக அரசியல் வேடம் பூண்டு இருக்கும் திரையுலக வேடதாரி வி.காந்த் கட்சியின் அறிவிக்கப்படாத கொ.ப.செ வான தாங்கள் ஒற்றை இலக்க இடம் கிடைத்தமையால் அதிகப்படியான மன உளைச்சல் அடைந்தே இப்படி பொங்கி அழுது சே..சே எழுந்து மண் வாரி தூற்றி விட்டீர்கள் என்று சரியாகவே சொல்லியிருக்கிறேன்.
//நான் ஒரு மருத்துவர் என்ற முறையில், எனக்கு குடல் புண் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமென எனக்குத் தெரியுமென, பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்! //
நோய்க்கு இன்னார் மருத்துவர் இன்னார் சாமன்யன் என்று எல்லாம் பாகு பாடு தெரியுமா? எப்படி ஆகினும் தாங்கள் பூரணத்தேக ஆரோக்கியத்துடன்
இருப்பது அறிந்து மட்டற்ற மகிழ்சி அடைந்தேன்,இது தமிழ் கூரும் நல்லுலகு செய்த பெரும்பேறு!
மேலும் எதனையும் தாங்கள் நீக்கி இருக்க வேண்டாம் ,அதில் என்ன பெரிதாக பிழை, அது உங்கள் கருத்து சுதந்திரம். (இப்படிலாம் எதாச்சும் கண்ணுல பட்டா பின்னுட்டம் இட வருவோர்க்கு சுட்டி/தட்டிக் காட்ட ஏதுவாக இருக்கும்
நீங்கள் சரியாகவே சொல்லியிருக்கிறேன் எனச் சொன்னாலும், யாருக்கு மன உளைச்சல், யார் பொங்கி எழுந்தது என்பது அவரவருக்குத் தெரியும்.
எனது 'கேப்டனுக்கு ஒரு கடிதம்' பதிவைப் படித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
தேர்தல் முடிந்து வி.கா. தனியே நல்ல முறையில் ஒரு பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கும் போது, அ.ப. கொ. ப. செ. யான நான் ஏன் பொங்க வேண்டும்!
ஆனால், மண்ணி வாரித் தூற்றியதென்னவோ உண்மையே!
அது, நடந்த அனியாயங்களைப் பார்த்ததால் ஒரு தனி மனிதனுக்கு, தமிழன் என்ற முறையில் எழுந்த உணர்ச்சி வெளிப்பாடு! அவ்வளவுதான்!
அது கழகக் கண்மணிகளுக்கு உறுத்தினால் நான் ஒன்றும் செய்ய முடியது!
என் உடல்நிலை குறித்த தங்களின் கரிசனத்துக்கு நன்றி!
ஒரு சில வார்த்தைகள், வாக்கியங்கள் வேறு பொருள் படும் என சிலர் சொல்லிக் காட்டிய பின், அதனை நீக்குவதும் ஒரு வகை 'கருத்து சுதந்திரமே' என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது, ஒருவரைக் குறித்த வாதங்கள், வேறு யாருக்கேனும் புண்படுத்தும் வகையில் இருந்திருக்குமோ எனவே நீக்கினேன்!
// (இப்படிலாம் எதாச்சும் கண்ணுல பட்டா பின்னுட்டம் இட வருவோர்க்கு சுட்டி/தட்டிக் காட்ட ஏதுவாக இருக்கும் //
ஓகோ! இப்படி ஒருவழி, அதிக பின்னூட்டம் பெற இருக்குதோ!
நண்பர் குமரனுக்குச் சொல்ல வேண்டும், உடனே!!
:-))
எஸ்.கே சார்,
உங்கள் பதிவில் உள்ள கருத்துக்கள் நேர்மையாக உள்ளன.ஆனால் சில வார்த்தைகள் தான் பலருக்கு பிடிக்கவில்லை.அதை மாற்றியதற்கு உங்களை பாராட்டுகிறேன்.
பொதுவாக என் வலைபதிவில் நான் கடைபிடிக்கும் எழுதும் முறை என்னவென்றால் தினமணி,தினத்தந்தி ஆகியவை செய்திகளை எழுதுவதில் என்ன வார்த்தை முறையை கையாளுமோ அவற்றையே கையாள்கிறேன்.
It pays to be politically correct in using words,but not neccasarily in writing articles.
அன்புடன்
செல்வன்
அறிவுரைக்கு மிக்க நன்றி, 'செல்வன் அய்யா!
புதியவன் நான் இவ்வலைப்பதிவுக்கு
சில குட்டுப் பட்டதும் தெளிகிறது!
விரைவில் பண்படுவேன் என நம்பிக்கை உள்ளது.
தயங்காமல், குறைகளைக் கூறலாம்!
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே நல்ல நியாமான அலசல்.தொடர்ந்து எழுதுங்கள். தி ரா ச
முதன்முறை வந்து பாராட்டி, ஊக்கம் கொடுத்ததற்கு நன்றி, திரு. தி.ரா.ச !
Post a Comment