எல்லாரும் இட ஒதுக்கீடு பெற்றிடல் வேண்டும்!
எல்லாரும் இட ஒதுக்கீடு பெற்றிடல் வேண்டும்!!
இலவசங்களை எதிர்பார்த்து
என்றுமே வாழ்ந்திருக்கும் ஒருகூட்டம்
எளியோரைக் காட்டி ஏமாற்றிட எண்ணுகிறது!
எத்திப் பிழைத்திடத் துடிக்கிறது.
மலம் சுமந்த நல்லோரை
மலம் தின்ன வைத்ததுவும்
கடை நிலையில் உள்ளவரைக்
கரை சேர்க்க எண்ணாமல்,
அவர் நிழலில் வாழ எண்ணி
அடுத்தவரைத் தூற்றி வந்து
எல்லா நலனும் பெற்றிட்ட எத்துக்காரர்
இடஒதுக்கீட்டை வாழ்த்துகிறார்
இவர் எண்ணம் எமக்கிங்கு புரியாதா
எதற்கிங்கு இவர் பல்லை இளிக்கின்றாரென்று
தனக்கதிலே என்ன லாபம் என்பதனை மட்டிலுமே
மன்க்கவலை படுமிவரை மன்னித்தல் தகுமோ?
சரியாகச் சொல்லுகின்றேன் கேட்டிடுவீர்!
"இட ஒதுக்கீடு வேண்டும்!!"
ஏழைகட்கும் எளியவர்க்கும்
இன வேறுபாடு இல்லாமல்!!!
எல்லாரும், எல்லாமும் பெற்றிடல் வேண்டும்
அல்லாரும், எளியாரும் அதிக பலன் அடைந்திடல் வேண்டும்!
இல்லாமை இல்லையெனும் நிலையிங்கே வர வேண்டும்!
பொல்லாமை செய்வரைப் புதைத்திடல் வேண்டும்!!
15 பின்னூட்டங்கள்:
எஸ்.கே சார்
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்" என தலைப்பு வைத்ததால் தான் இது யார் கண்ணிலும் படவில்லை என நினைக்கிறேன்.
"இட ஒதுக்கீடு தேவையா/" என தலைப்பு வைத்திருந்தீர்களென்றால் பின்னூட்டங்கள் பறந்து வந்திருக்கும்.
கரெக்டுங்க.. நான் கூட இதை நேத்திக்கு பார்த்துட்டு.. ஏதோ ஆன்மீகப் பதிவு போலிருக்குன்னு விட்டுட்டேன்.. :)
எஸ்கே ஐயா, நீங்க சொன்னா சரிதான்.. இந்த விஷயம் மட்டும் :)
கடைசியில் ஒரு பொடி வைத்து விட்டீர்க்ளே, பொன் ஸ்!
அது சரி, என்ன மறுபடியும் 'ஐயா' வெல்லாம் போட ஆரம்பித்து விட்டீர்கள்!
சும்மா, வழக்கம் போலவே, 'எஸ். கே'ன்னே கூப்பிடுங்க!!
இப்போ 'ஹாட் டாபிக்' இந்த இட ஒதுக்கீடு தானேன்னு எல்லாருக்கும் கொடுங்கப்பான்னு அந்தப் பேரை வெச்சேன், செல்வன்!
எல்லாரும் செல்வனும்,
குமரனும் ஆயிட முடியுமா???
:)))))
SK,
உங்களுக்கு ஒரு பின்னூடமிட்டிருந்தேன். தெரிய்வில்லை அது வந்ததா இல்லையா என்று.
Dear Sivabalan,
Pl send it again. Thanks.
நன்றி SK.
உங்கள் பதிவைப் பற்றி..
உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், உங்கள் தமிழ் மிக அருமை.
இட ஓதுக்கீடு பொருளாதார அடிப்படையிலும் இருக்கலாம். ஆனால் அது எல்லோருக்கும் என்பது இட ஓதுக்கீட்டீன் நோக்கத்தை மாற்றிவிடும்.
மற்ற சமுதாய நன்பர்களுக்கு வேறு ஏதாவது செய்யலாம். (வங்கி கடன் போல).
இட ஒதுக்கீடு ஒரு சமுதாயத்தை ஒடுக்க வந்தது என்பதைவிட பல காலமாக ஒடுக்கபட்டு வந்தவர்களுக்கு விடிவெள்ளி என நான் கருதுகிறேன்.
என்னை பொருத்தவரையில் இட ஓதுக்கீடு பாரதியின் "அக்னிகுஞ்சு"
ஒடுக்கப்பட்ட, அல்லது ஒடுங்கிய சமூகம் உயிர்த்தெழுந்து உயர வர வேண்டும் என்பதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை, நண்பரே!
இட ஒதுக்கீடு என்பது, தகுதியற்ற மற்றவர்கள், அந்தப் போர்வையில் நுழைந்து, யாருக்கு இது சேர வேண்டுமோ, நியாயமாக, அதைக் கிடைக்க விடாமல் தடுத்து, தான் குளிர் காயும் போதுதான்,
அதற்கும் வேறு யாரையோ காரணம் கட்டி, ஏமாற்றும் போதுதான், இதைக் கண்டு மனம் நோகிறது!
'இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்' எனப் பட்டாங்கில் பாடி வைத்தாளே, அவ்வைப்பாட்டி, அதன் பொருளை நாம் இன்னும் சற்று ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
யாரை இன்று குற்றம் சொல்லி சுயநலம் பேணி வாழ்க்கை, அரசியல் நடத்துகிறர்களோ, அவர்களை அடையாளம் கணு கொள்ள வேண்டும் என்றுதான் சொல்ல வருகிறேன்.
நன்றி, சிவபாலன் -- தங்கள் கருத்துக்கு!
//எல்லாரும், எல்லாமும் பெற்றிடல் வேண்டும்
அல்லாரும், எளியாரும் அதிக பலன் அடைந்திடல் வேண்டும்!
இல்லாமை இல்லையெனும் நிலையிங்கே வர வேண்டும்!
பொல்லாமை செய்வரைப் புதைத்திடல் வேண்டும்!! //
என்று ????
எப்போது ????
:(((
உங்கள் சோகமும், ஏக்கமும் புரிகிறது, 'பச்சோந்தி'!
நல்லவர் போல வேடமிட்டு
அல்லவர்க்குத் துணையென்று
இல்லாதவரை சுரண்டி வாழும்
பொல்லாதவரை எல்லாம்
இனம் கண்டு கொண்டால்
விரைவிலேயே உங்கள் ஏக்கம் தீரும்!
சிவபாலன் இந்த இட ஒதுக்கீடை 'அக்னிக்குஞ்சு' எனச் சொன்னார்.
இட ஒதுக்கீடு என்னும் தத்துவம் ஒரு விடிவெள்ளி!
அது சரிவர அனைவருக்கும் போய்ச் சேராமல் தடுக்கிறாரே,
அவரைப் பார்த்து நமக்கு வரும் கோபம்தன் அக்னிக்குஞ்சு என்று நான் நினைக்கிறேன்!
பற்றும்;
ஒருநாள் பெரிய நெருப்பாகி
பற்றி எரியும் காலமும் வரும்!
SK,
தங்களின் கவிதையைப் படித்தேன். இரசித்தேன். தங்களின் தமிழ்நடை நன்றாக இருக்கிறது. கவிதையின் பொருள் பற்றி நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை.
நன்றிகள்.
நன்றி, 'வெற்றி' !
SK சிவபாலனின் கருத்தே என் கருத்தும்.
//இட ஒதுக்கீடு என்பது, தகுதியற்ற மற்றவர்கள், அந்தப் போர்வையில் நுழைந்து, //
இடஒதுக்கீட்டால் பலன் பெறுபவர்கள்/பெற்றவர்கள் தகுதியற்றவர்கள் அல்ல என்பது என் கருத்து.
குறும்பன் அவர்களே!
நானும் இந்த இட ஒதுக்கீட்டுப் போர்வையில் உள்ளே நுழைந்தவர்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்!
தகுதியானவர்களூக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த நல்ல அமைப்பு, எப்படி எல்லா நல்ல திட்டங்களைப் போல நடுவழியில் நாசமானது என்பது நீங்கள் அறியாத ஒன்றில்லை என நன் நிச்சயமய் நம்புகிறேன்
இல்லையென்று மறுப்பீர்களேயானால், நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை!
//
அவர் நிழலில் வாழ எண்ணி
அடுத்தவரைத் தூற்றி வந்து
எல்லா நலனும் பெற்றிட்ட எத்துக்காரர்
இடஒதுக்கீட்டை வாழ்த்துகிறார்
இவர் எண்ணம் எமக்கிங்கு புரியாதா
எதற்கிங்கு இவர் பல்லை இளிக்கின்றாரென்று
தனக்கதிலே என்ன லாபம் என்பதனை மட்டிலுமே
மன்க்கவலை படுமிவரை மன்னித்தல் தகுமோ?
//
தகாது...
ங்கொக்கா மக்கா! போட்டுத் தாக்கு!...இவர்களால் தான் நாடே குட்டிச்சுவராப் போச்சு...
வஜ்ரா ஷங்கர்.
ஆஹா! நமக்குகூட ஆதரவாப் பேசற ஒரு ஆளைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி, 'வஜ்ரா ஷங்கர்'!
Post a Comment