Friday, September 18, 2009

"உன்னைப்போல் ஒருவன்" - திரை விமரிசனம் [சுடச்சுட!!]


"உன்னைப்போல் ஒருவன்" - திரை விமரிசனம் [சுடச்சுட!!]




ரஜினி படங்களுக்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் போய், சும்மா ரசித்துவிட்டு மட்டும் வருவது என் வாடிக்கை.
அதே சமயம் கமல் படங்களுக்கு அதில் எதிர்நேராய்!
'இந்தப் படத்துல என்ன பண்ணி சொதப்பிடுவாரோ; தான் ஒரு ஜீனியஸ்ன்றதுக்காக எப்படியெல்லாம் கதையை மாத்திக் கெடுத்துருவாரோன்ற ஒரு பயம் எப்பவும் அடிவயித்தைக் கலக்கிகிட்டே இருக்கும்!
'வெட்னெஸ்டே'ன்ற ஹிந்திப் படத்தை வைச்சு "உன்னைப்போல் ஒருவன்" எடுக்கறாருன்னதும் எனக்கு ஜுரமே வந்திருச்சு!

தீவிரவாதத்தை ஒரு சாதாரணக் குடிமகன் எப்படி எதிர்கொள்ள முடியும் என்கிற மிக அருமையானதொரு கருத்தை இந்தப் படத்தில் சொல்லியிருப்பாங்க.
நஸுருதீன் ஷா வின் பிரமிக்க வைக்கும் நடிப்பு; அதற்குச் சவாலாக விளங்கும் போலீஸ் கமிஷனர் பாத்திரம், அந்த நிருபர், உதவிக் காவல்துறையினர் என ஒட்டுமொத்தமாக திறம்பட விறுவிறுப்பு குறையாமல் எடுக்கப்பட்ட படம் அது.

அதனால், இன்று இரவு 9 மணிக்குத் திரையிடுகிறார்கள் என்றவுடன் முதல் காட்சிக்கே ஆஜராயிட்டேன்.
இன்றும், நாளையும் வேலைநாள் என்பதால் அதிகக் கூட்டமில்லை. ஒரு 25 பேர்தான் அரங்கில்!
இதுவே 'எந்திரன்' ரிலீஸ்னா எப்டி இருக்கும் தியேட்டர் என யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்!

நேரடியாகப் படம் துவங்கியது.
அதிக மாற்றங்கள் செய்யாமல், அதிகமாகச் சொதப்பாமல் அந்த விறுவிறுப்பு சற்றும் குறையாமல் எடுத்ததற்காக முதலிலேயே கமலுக்கு ஒரு 'சபாஷ்'!

இதன் முக்கியக் காரணம் மோஹன்லால் என்னும் அற்புதமான நடிகரின் சவாலான நடிப்பு.
கடைசிக் காட்சியைத் தவிர தனது உணர்ச்சி மிகுந்த நடிப்பைக் காட்ட கமலுக்கு இதில் வாய்ப்பே இல்லை என்பதை நன்கு புரிந்த மோஹன்லால் காட்சிக்குக் காட்சி வெளுத்து வாங்கியிருக்கிறார்!
குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்ததும் எடுக்கின்ற துரிதமான நடவடிக்கைகள், தலைமைச் செயலருடன் பேசும்போது காட்டும் அலட்சியம், நடக்கப்போவதைப் பற்றிய தெளிவான ஒரு அறிவு என பின்னிப் பெடலெடுத்திருக்கிறார்! அவருக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.
மற்ற நடிகர்களும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து அளவோடு நடித்திருக்கின்றனர்..... குறிப்பாக அந்த இரு துணைக் காவலதிகாரிகள்!

ஏற்கெனவே ஹிந்திப் படத்தைப் பார்த்தவர்களுக்கு இதில் புதிதாக ஏதுமில்லை.... மோஹன்லாலின் நடிப்பைத் தவிர.
ஆனால், இதுபோன்ற படங்களைக் கண்டிப்பாகப் பார்த்திராத தமிழக மக்களுக்கு இது ஒரு திருப்புமுனைப் படம் எனச் சொல்லலாம்.
சொல்லப்போனால், இது தமிழ் ரசிகர்களுக்கு கமல் விடுத்த மறைமுகச் சவால் எனலாம்!

'இந்தக் காலத்துல நம்ம ஆளுங்க நேரா ஒரு கதை சொன்னா எங்கே பார்க்கறாங்க?
ஒரு காதல் கதை, அதுல ரெண்டு குத்துப்பாட்டு, மூணு சண்டை, கொஞ்சம் செண்டிமெண்ட்டு, வடிவேல்/விவேக் காமெடி இதெல்லாம் இல்லைன்னா படம் ஓடாது எனச் சொல்லிவரும் திரையுலகினர் சரியா, ....இல்லை,....தமிழ் ரசிகர்களை அவர்கள் துல்லியமாக எடை போட்டிருக்கிறார்களா என்பதை நிருபிக்கும் பொறுப்பைக் கமல் தமிழ் ரசிகர்களுக்கு விடுத்திருக்கிறார் என அடித்துச் சொல்லுவேன்!

ஹிந்திப் படத்தை அப்படியே தமிழ் ஒலி கொடுத்துகூட கமல் வெளியிட்டிருக்கமுடியும்.
அப்படிச் செய்யாமல், நல்ல நடிகர்களைப் பொருத்தமாகத் தேர்வுசெய்து, காமெடி, சண்டை, பாட்டு என்றெல்லாம் சோதிக்காமல், மிகச் சிறந்த தமிழ்த் திரைப்படத்தை அவர் கொடுக்க முன்வந்ததற்காகவே இதை ஒரு வெற்றிப்படமாக்கச் செய்வது ஒவ்வொரு தமிழ் திரைப்பட ரசிகரின் கடமை என எனக்குப் படுகிறது.

குறைகள்????
இருக்கின்றன!

முதலமைச்சர் பாத்திரத்தில் கலைஞரே நடித்திருப்பதுபோலத் தோன்ற வைத்திருக்கிறார் கமல்!...... குரல் வழியாக!
ஆனால், அதுதான் படத்தின் ஒரே காமெடி ட்ராக்! தவிர்த்திருக்கலாம்!
லக்ஷ்மியின் பாத்திரப் படைப்பு சரியாக வடிவமைக்கப் படவில்லை!
ஸ்ருதியின் இசை வெட்னெஸ்டே படத்திலிருந்து துளியும் மாறவில்லை!
கமலே எழுதிப் பாடிய ஒரே ஒரு பாடல் 'டைட்டிஸ்' போடும்போதும், 'க்ரெடிட்ஸ்' போடும்போதும்! சொல்லும்படியா ஒன்றுமில்லை!
நஸுருஷீன் அளவுக்கு கமலின் நடிப்பு இல்லையென்றே எனக்குப் பட்டது.

ஆனால், இதையெல்லாம் தவிர்த்து நான் முன்சொன்ன காரணத்துக்காகவே இதை ஒரு வெற்றிப் படமாக்கினால், மேலும் தரமான திரைப்படங்கள், வழக்கமான ஃபார்முலாவிலிருந்து மாறி வரக்கூடும் என்னும் நம்பிக்கையை இந்தப்படம் விதைத்திருக்கிறது.
அதைச் செயலாக்கச் செய்வது தமிழ் ரசிகர்கள் கையில்!

தொடக்கத்தில் ரஜினியை இதில் இழுத்திருந்தேன்... காரணமாகவே தான்!
ஒரு தரமான 'ரீ-மேக்' படத்தை எப்படி எடுக்க வேண்டும் என்பதை ரஜினி
கமலின் இந்தப் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளணும்! குசேலன் கொடுமை நினைவில் வந்து தொலைத்தது!

ஆக மொத்தம் 'உன்னைபோல் ஒருவன்'......

.... இதுவரையில் இல்லை!

தரமான தமிழ்ப்படங்கள் வேண்டுமென விரும்பும் எல்லாரும் அவசியம் பாருங்க மக்கா.... திரையரங்கில்!
***********************************************************

20 பின்னூட்டங்கள்:

SP.VR. SUBBIAH Friday, September 18, 2009 12:40:00 AM  

///எல்லரும் அவசியம் பாருங்க மக்கா.... திரையரங்கில்!///

Super! இதுதான் சார் பஞ்ச் லைன்!

VSK Friday, September 18, 2009 12:46:00 AM  

//Super! இதுதான் சார் பஞ்ச் லைன்!//

நன்றி ஆசானே! அந்த வரியைக் கொஞ்சம் இப்படி மாற்றியிருக்கிறேன்!

தரமான தமிழ்ப்படங்கள் வேண்டுமென விரும்பும் எல்லாரும் அவசியம் பாருங்க மக்கா.... திரையரங்கில்!

பாலா Friday, September 18, 2009 1:00:00 AM  

கொடுத்து வச்சவர் நீங்க. ஃப்ளோரிடாவில்... ரிலீஸ் ஆன மாதிரி ஒரு சவுண்டும் இல்லை. :( :(

VSK Friday, September 18, 2009 1:04:00 AM  

//கொடுத்து வச்சவர் நீங்க. ஃப்ளோரிடாவில்... ரிலீஸ் ஆன மாதிரி ஒரு சவுண்டும் இல்லை. :( :(//

அடடா!
ஆனா, சும்மாச் சொல்லக்கூடாது. ரொம்ப நாளைக்கு அப்புறமா, ஒரு நல்ல கமல் படம் பார்த்தேன்!
அவர் அடக்கி வாசிச்சதுதான் இதுல சிறப்பு.
சீக்கிரமே படம் பார்க்கப் ப்ராப்திரஸ்து!:))
நன்றி பாலா!

Jaisakthivel Friday, September 18, 2009 1:22:00 AM  

நம்ம மக்கா எவ்வளவு ஸ்பீடா இருக்காங்க... படம் பார்த்தது 9 மணி, அப்ப முடுஞ்ச சூட்டோட பதிவு... உன்னைப் போல் ஒருவன் யாரும் இல்லை தலைவா?!

butterfly Surya Friday, September 18, 2009 1:29:00 AM  

நேற்று இரவு படம் பார்த்து விட்டேன். அருமை. இரா. முருகன் வசனங்கள் சூப்பர்....

கோவி.கண்ணன் Friday, September 18, 2009 1:32:00 AM  

நீங்கள் எழுதி இருப்பதை வைத்து துணிந்து படத்துக்குச் செல்ல முயற்சிக்கிறேன்

//SP.VR. SUBBIAH said...
///எல்லரும் அவசியம் பாருங்க மக்கா.... திரையரங்கில்!///

Super! இதுதான் சார் பஞ்ச் லைன்!
//

சினிமா டிக்கெட், அமெரிக்காவிற்கு ப்ளைட் டிக்கெட்டால் கிடைக்குமான்னு கேளுங்க சார்

VSK Friday, September 18, 2009 1:37:00 AM  

//நம்ம மக்கா எவ்வளவு ஸ்பீடா இருக்காங்க... படம் பார்த்தது 9 மணி, அப்ப முடுஞ்ச சூட்டோட பதிவு... உன்னைப் போல் ஒருவன் யாரும் இல்லை தலைவா?!//

சின்னப் படந்தாங்க! ஒரு ஒண்ணரை, ஒண்ணேமுக்கால் மணி நேரம்தான்! 9 மணிக்குப் போய், 11.30க்கெல்லாம் வீட்டுக்கு வந்தாச்சு. அதுவும் ஒரு ப்ளஸ் பாயிண்ட்.

Anonymous,  Friday, September 18, 2009 1:38:00 AM  

எங்களுக்கு இன்று இரவு தான் முதல் ரிலீஸ். கண்டிப்பாய் பார்க்கணும்

VSK Friday, September 18, 2009 1:39:00 AM  

//நேற்று இரவு படம் பார்த்து விட்டேன். அருமை. இரா. முருகன் வசனங்கள் சூப்பர்....//
அநேகமா எல்லாம் மொழிபெய்ரப்புதான்! அதுலியும் குறிப்பா அந்தக் கடைசி கமல் டயலாக் அப்படியே வரிக்கு வரி. தமிழ்நாட்டு மக்களையும் சேர்த்தது தவிர.

VSK Friday, September 18, 2009 1:40:00 AM  

//நீங்கள் எழுதி இருப்பதை வைத்து துணிந்து படத்துக்குச் செல்ல முயற்சிக்கிறேன்//

நிச்சயமா பிடிக்கும் படம்!

உங்க ஊருலியே பார்க்கவும்!

VSK Friday, September 18, 2009 1:41:00 AM  

//Blogger சின்ன அம்மிணி said...

எங்களுக்கு இன்று இரவு தான் முதல் ரிலீஸ். கண்டிப்பாய் பார்க்கணும்//

நல்லது! பார்த்திட்டு எழுதுங்க!

SurveySan Friday, September 18, 2009 2:07:00 AM  

நாளைக்கு பாக்கறேன்.



///நஸுருஷீன் அளவுக்கு கமலின் நடிப்பு இல்லையென்றே எனக்குப் பட்டது.
///

மெய்யாலுமா? ஆங்கிலம் பேசும்போது சொழட்டிட்டாரா கமல்? டைலாக் டெலிவரிதான் நம்மவர் கிட்ட கொஞ்சம் 'ஓவரா' இரூக்கும். ஷா அதில் மிளிர்கிறார்.

VSK Friday, September 18, 2009 9:18:00 AM  

//மெய்யாலுமா? ஆங்கிலம் பேசும்போது சொழட்டிட்டாரா கமல்? டைலாக் டெலிவரிதான் நம்மவர் கிட்ட கொஞ்சம் 'ஓவரா' இரூக்கும். ஷா அதில் மிளிர்கிறார்.//

அந்த சொழட்டலைத்தான் எப்பவுமே செய்வாரே! துளிக்கூடப் பதட்டமில்லாமல் நசுருதீன் காட்டிய பொறுமை, மனதுக்குப் பிடிக்காத ஆனால் அதே சமயம் நாட்டுக்குத் தேவையான ஒரு செயலைச் செய்கிறோம் என்கிற பெருமிதம், அமைதியான குரலிலேயே கமிஷனரை மிரள வைப்பது, குரலில் ஒரு வெறுமை எனப் பலவிதத்திலும் கமல் செய்ததைவிடவும் உயர்வாகப் பட்டது.

VSK Friday, September 18, 2009 10:37:00 AM  

Almost on par with my view!! From Sify!!

Unnaipol Oruvan

Movie
Unnaipol Oruvan
Director
Chakri Toleti
Music
Sruthi Hassan
Cast
Kamal Hassan, Mohanlal, Lakshmi, Ganesh Venkatram, Anuja





By Moviebuzz


Kamal Hassan's Chakri-Toleti directed Unnaipol Oruvan is new age Tamil cinema, which we can say proudly, is a must-watch. What elevates the film to a new high is the crisp presentation and outstanding performances from the lead actors, mainly Kamal and Mohanlal, who simply rock.
The film is on par with the original Neeraj Pandey’s A Wednesday, with minor modifications to make it politically correct by including a Hindu mercenary, a gun runner for whom it is just about money.

The dialogues written by Era Murugan are electrifying and justifies the milieu change from the terror-prone Mumbai to much calmer climes of Chennai.

Kamal Hassan and his team have also pointed to the Coimbatore bomb blast and Meenambakkam airport blast to give the film a local flavour. And to add his own secularist view point, one of the Muslim characters justifies his action and says it is all because of Modi and communal politics which led to the Best Bakery case. The film is well intended and is told in an emphatic manner very bravely.

One ordinary day, the Chennai city police commissioner Raghava Maraar (Mohanlal) receives a threatening call on his mobile from a guy (Kamal Hassan), who claims that he has placed five bombs in various parts of the city. The veracity of the caller's claim is confirmed when the cops find a bag with a RDX bomb at the Anna Salai police station.

The anonymous caller wants five hard core terrorists to be freed -- If not, he threatens blasts at various locations in Chennai where he has concealed the bombs. The chief secretary (Lakshmi) on the orders of Chief Minister has given a Maraar a free hand.

Maraar and his crack team of officers, led by a daring brooding cop Arif Khan (Ganesh Venkatram), gets ready to hand over the terrorists to the anonymous caller at an airfield. The story cannot be told further as it would be a giveaway of the stunning and well written climax, which had the entire audiences in the theatre giving a standing ovation at the end. It is a very brave and pathbreaking film, with a running time of only 110 minutes.

The film works because of its ensemble cast and the outstanding performances of Mohanlal and Kamal Hassan. Unlike in the Hindi version where Naseeruddin Shah had an edge over Anupam Kher, here the best dialogues in the film and almost equal screen time is given to Mohanlal.

Kamal's emotional outburst at the end, is heart rending and perhaps one of the finest piece of acting seen in Tamil cinema. Kamal and Mohanlal coming together is worth your ticket money. Ganesh Venkatram has a tailor-made role, and this film is going to be his big ticket to stardom.

Technically the film is picture perfect, with great background score by Sruthi Hassan, that builds the mood.

Chakri Toleti as a director cannot make a better debut as director in a film that will bring about a change in Tamil commercial cinema. Go for it and encourage good meaningful cinema.

Verdict- Excellent

துளசி கோபால் Friday, September 18, 2009 11:40:00 PM  

வசனங்கள் எப்படி வந்துருக்குன்னு சொல்லுங்க.


நான் ஹிந்தி மட்டும்தான் பார்த்தேன்.

VSK Friday, September 18, 2009 11:52:00 PM  

//வசனங்கள் எப்படி வந்துருக்குன்னு சொல்லுங்க.


நான் ஹிந்தி மட்டும்தான் பார்த்தேன்.//

இரா.முருகனின் வசனத்திற்குப் பல இடங்களில் கைதட்டல் கிடைத்தது.
லக்ஷ்மி, கலைஞர் வசனங்கள் கொஞ்சம் சொதப்பலே!

மோஹன்லால், கமல் வசனங்கள் சூப்பர்!

Anonymous,  Saturday, September 19, 2009 12:14:00 AM  

Dear sir
this movie is horrible
i dont know how come so many people in the internet highly exaggerate the movie?

please check review @
http://www.greatandhra.com/ganews/viewnews.php?id=16165&cat=1&scat=12

http://www.indiaglitz.com/channels/telugu/review/11500.html

Unknown Tuesday, September 29, 2009 2:10:00 PM  

தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு அருமையான படம் வந்ததில்லை....படம் எடுத்தா இப்படி எடுக்கணும்....

Anonymous,  Friday, March 05, 2010 7:39:00 AM  

I apologise, but, in my opinion, you are not right. I can prove it. Write to me in PM, we will talk.

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP