Monday, May 11, 2009

"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்!

"புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் துரோகிகளா?"- ஒரு அலசல்!


அகதிகளாக அயல்நாடுகளில் தஞ்சமடைந்த ஈழத்தமிழர்களைத் துரோகிகள் எனச் சாடும் குரல் இப்போது வெளிப்படையாக ஒலிக்கத் துவங்கியிருக்கிறது!
எழுபதுகளின் இறுதிக் காலத்திலிருந்து ஈழப் பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பவன் என்னும் முறையில் ஒரு சில கருத்துகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
இது முற்றிலும் சரியான கணிப்பு எனச் சொல்ல மாட்டேன்.
ஆனால், எனக்குத் தெரிந்த அளவிலான உண்மைகளை மட்டுமே இங்கு சொல்ல விழைகிறேன்.

இப்போது எல்லா நாடுகளிலிருந்தும் நல்ல வாய்ப்புகளைத் தேடி அயல்நாடுகளுக்குச் செல்வதைப் போலவே, மேற்படிப்புக்காகவோ, அல்லது வேலை வாய்ப்பைத் தேடியோ, இலங்கையிலிருந்தும் பலர் 50, 60-களில் அயல்நாடுகளுக்குச் சென்று ஒரு நல்ல நிலைமையில் இருந்து வந்தார்கள்.

எழுபதின் ஆரம்பத்தில், தமிழருக்கு எதிரான அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அதனை எதிர்க்க ஈழத்தில் பல தமிழ் அமைப்புகள் தோன்றின.
இவர்களது பாதுகாப்பில் சற்று தைரியமாக உலாவிய ஈழத் தமிழர்கள் மேலும் கொடுமைக்கும் வன்முறைக்கும் சிங்களவரால் ஆட்படுத்தப்பட்டபோது, பலர் அகதிகளாகத் தமிழகத்துக்குக் கள்ளத்தோணி மூலம் வரத் தொடங்கினர்.

எம்.ஜி.ஆர் அவர்களின் முழு ஆதரவும் இருந்ததால், அவர் அப்போது மத்திய அரசுக்கும் தோழனாக இருந்ததால், அவரால் இந்த அகதிகளை தமிழகத்தில் குடிவைக்க முடிந்தது.
இப்போது, தமிழ் அமைப்புகளின் வீரர்களும் தமிழகத்துக்குள் தாராளமாக வந்து, பயிற்சிகளும் கூடப் பெற முடிந்தது!

இந்தக் கால கட்டத்தில், இதில் யார் பெரியவன் என்னும் போட்டி வலுக்கவே, அதன் காரணமாக பல சண்டைகளும் தமிழக எல்லைக்குள் நடந்தன!

இதன் எதிரொலி இலங்கையிலும் தெரிய, அதன் காரணமாக அச்சுறுத்தப் பட்ட, அல்லது அச்சப்பட்ட மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் தப்பிச் செல்ல முனைந்தனர்.
இந்த நிலையில், சிங்கள அரசும் பல தமிழ் கிராமங்களில் சிங்களவரைக் குடியேற்ற, அதன் கொடுமையிலிருந்து தப்பிக்கவே பல லட்சம் மக்கள் வெளிக் கிளம்பினர் அகதிகளாக!


இதில் பலர் போராளிகளாகவும் மாறி, போராட்டத்தைத் தொடங்க, தங்கள் பிள்ளைகளை விட்டுப் பிரிய மனமில்லாத சொந்தங்களில் பலர் அங்கேயே தங்கி புலிகளின் பாதுகாப்பில் வாழத் தொடங்கினர்.
அகதிகளாகச் சென்றவரை அலட்சியமாகப் புலிகள் இகழவில்லை என்பதே நான் அறிந்த செய்தி.
மாறாக அவர்களிடமிருந்து பண உதவி, நிலையை வெளி உலகத்துக்கு எடுத்துச் சொல்லும் பணி போன்ற உதவிகளை மட்டும் எதிர்பார்த்து, வாங்கிக் கொண்டனர்.
ஒரு சில அச்சுறுத்தல்களும் நிகழ்ந்தன என நான் அறிவேன்.

ஆனால், கடந்த 8 மாதங்களாகக் காட்டிவரும் தீவிரத்தை அதற்கு முன்னால் சரியாக இவர்கள் செய்யவில்லை என்பது என் கணிப்பு! கிளிநொச்சி விழும்வரை, புலிகளிடமே அனைத்துப் பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு, அவர்கள் எப்படியும் வென்றுவிடுவார்கள் என எண்ணிக்கொண்டு, இங்கொன்றும் அங்கொன்றுமாக மட்டுமே இவர்களின் செயல்பாடு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மையும் கூட!

இப்படி அகதிகளாகச் சென்றவர்கள் ஐரோப்பிய, பிரித்தானிய, அமெரிக்க கானடா நாடுகளால் அரவணைக்கப்பட்டு, அவர்களுக்குக் குடியேற்ற உரிமைவரை வழங்கப் பட்டன!

அந்தந்த நாடுகளின் சீதோஷ்ணம், பண்பாடு, வாய்ப்பு, வசதி அனைத்துமே இவர்களுக்குக் கிடைக்க வழி செய்த அந்தப் பெருந்தன்மைக்கு இடையே, இவர்களை வேற்று கிரக மனிதர்போல், தனி இடத்தில் வைக்கப்பட்ட அவலம் இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்! எந்தவிதமான உரிமையும் இவர்களுக்கு அளிக்காமல், ஒருசில கடத்தல் வேலைகள் ஈழப்போர் ஆதரவாளர்களால் செய்யப்பட்டது என்பதால், குற்றவாளிகள் போல காவல் துறையின் கண்காணிப்பிலேயே இவர்கள் இன்றுவரை காலம் தள்ளுகிறார்கள் என்பதே வேதனையான உண்மை.

இதற்கு முழுப் பொறுப்பும் மத்திய அரசையே சாரும்! தமிழக முதல்வர் தட்டிக் கேட்டால் இது நடக்கும். செய்யவில்லை... எம்.ஜி.ஆர். தவிர!

மேலைநாடுகளுக்குச் சென்ற அகதிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பு வசதிகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு, அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்குக் கட்டுப் பட்டு வாழ்வினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவருமே சுகமாக வாழ்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
ஒரு சிலர் நல்ல நிலையில் இருந்தாலும், இவர்களில் பலர் இன்னமும் அடிமட்ட வாழ்க்கையே வாழ்கிறார்கள் என்பதே உண்மை!

ஆம்! இவர்களிடம் நம்மவர் கண்ணுக்குப் பகட்டாகத் தெரியும் ஆடைகள் இருக்கின்றன! ஏனென்றால் அது குளிர் நாடு! அங்கு 'ஜாக்கெட்' என்னும் கம்பளி ஆடை அணியாவிட்டால் விறைத்துப்போய் விடுவார்கள்!
ஆம்! இவர்களிடம் 'கார்' இருக்கிறது! அது ஓட்டைக் காராக இருந்தாலும் அதுதான் இவர்களை ஓரிடத்திலிருந்து அடுத்த இடத்துக்குக் கொண்டு செல்ல உதவும் சாதனம் என்பதால்!
இதையெல்லாம் வசதி என எண்ணாதீர்கள்!
அத்தனையும் கடன் கணக்கில்!!
பலர் உணவு விடுதிகளிலும், பெட்ரோல் பங்குகளிலும், சாதாரண வேலை செய்து கொண்டு தங்கள் வயிற்றைக் கழுவுகிறார்கள்.

இவர்கள் உடல் அங்கே வாழ்ந்தாலும், அநேகம் பேர் இன்னமும் ஈழக் கனவில்தான் இருக்கிறார்கள்!
தொலைக்காட்சிகள் மூலமாக மட்டுமே தகவல்களைக் கண்டு, தினமும் அழுதுகொண்டிருக்கும் பலரைப் பார்த்திருக்கிறேன்!
அதனாலதான், அங்கு ஏதாவது ஒன்று என்றால் இங்கே வீதிகளில் இறங்கி எதிர்ப்பைத் தெரிவிக்கிறார்கள்!
அதற்கு இந்த நாடுகளின் சட்டம் இடம் கொடுக்கிறது என்பதால்!

இவர்கள் ஏன் திரும்பவும் ஈழத்துக்கே சென்று போராடக் கூடாது என ஒரு கேள்வி எழலாம்!

இன்றைய நிலையில் அங்கு கால் வைத்த அடுத்த கணமே கைது செய்யப்பட்டு அழிக்கப்படும் பட்டியலில்தான் இவர்களில் பலர் இருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

இதைத் தவிர, அரசினால் ஆபத்தில்லை என்றாலும், பணத்துக்காக ஆட்கடத்தும் கும்பல்களினால் உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து வருமோ எனவும் அச்சப்படுகிறார்கள்.

இறங்கியவுடன், கையில் ஆயுதம் கொடுத்து, நீ போய் உன் உரிமைக்காகப் போராடு எனச் சொல்ல அவர்களுக்கு அங்கே ரத்தினக் கம்பளம் விரித்திருக்கவில்லை.
இந்த நிலையில் அவர்களை அங்கே போகச் சொல்வது விளக்கைத் தேடி விட்டில் பூச்சியை அனுப்புவது போலத்தான் என்பதை மற்றவர்கள் உணர வேண்டும்!

இன்னொன்றும் எனக்குத் தெரிந்த ஒரு தகவல்!

இவர்களில் 80% பேர் நாளை ஈழம் பிறந்தால் அங்கு செல்ல மாட்டார்கள்!
இந்த வாழ்க்கைச் சூழ்நிலையில் குழந்தை குட்டிகளைப் பெற்று வளர்த்து வரும் இவர்களில் பெரும்பாலோனோர் என்னிடம் சொல்லிய கருத்து இதுதான்!
அங்கிருக்கும் மக்கள் நன்றாக வாழ இங்கிருந்து என்ன உதவிக்ள் செய்ய முடியுமோ, அத்தனையும் செய்ய இவர்கள் தயார்! ஆனால் திரும்பிச் செல்ல மாட்டார்கள்.

இதுதான் யூதர்கள் நிலையிலும் நடந்தது!

இவர்கள் துரோகிகளா?
நிச்சயம் இல்லை!
தப்பி பிழைத்தவர்களா?
ஆம்!
அதற்கு இவர்களுக்கு உரிமை இருக்கிறதா?
நிச்சயமாக இருக்கிறது!

எனவே, இவர்களைத் தூற்றுவதை விடுத்து, இந்தப் பிரச்சினைக்கு என்ன விதத்தில் ஒரு தீர்வு நம்மால் தர முடியும் எனப் பாடுபடுவோம்.
முடியவில்லை என்றால் சும்மாவாவது இருப்போம்!
அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மீண்டும் சொல்கிறேன்! இவையெல்லாம் நானறிந்த செய்திகளை வைத்து எனக்குப் பட்ட கருத்தே! இது சரியா, தவறா என மற்றவர் வந்து சொன்னால் மகிழ்வேன்!
நன்றி, வணக்கம்!

27 பின்னூட்டங்கள்:

குறும்பன் Monday, May 11, 2009 9:16:00 PM  

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். புலம்பெயர்ந்தவர்கள் துரோகிகள் அல்ல. நம்ப வைத்து கடைசியில் கை கழுபவர்களே துரோகிகள்.

கோவி.கண்ணன் Monday, May 11, 2009 9:29:00 PM  

//அந்தந்த நாடுகளின் சீதோஷ்ணம், பண்பாடு, வாய்ப்பு, வசதி அனைத்துமே இவர்களுக்குக் கிடைக்க வழி செய்த அந்தப் பெருந்தன்மைக்கு இடையே, இவர்களை வேற்று கிரக மனிதர்போல், தனி இடத்தில் வைக்கப்பட்ட அவலம் இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்! எந்தவிதமான உரிமையும் இவர்களுக்கு அளிக்காமல், ஒருசில கடத்தல் வேலைகள் ஈழப்போர் ஆதரவாளர்களால் செய்யப்பட்டது என்பதால், குற்றவாளிகள் போல காவல் துறையின் கண்காணிப்பிலேயே இவர்கள் இன்றுவரை காலம் தள்ளுகிறார்கள் என்பதே வேதனையான உண்மை.
//

உண்மை, வெட்கமாகத்தான் இருக்கிறது. இந்த லட்சனத்தில் வந்தாரை வாழவைக்கும் பூமின்னு வேற சொல்லிக்கிறானுங்க.

வெண்காட்டான் Monday, May 11, 2009 9:49:00 PM  

இவர்களில் 80% பேர் நாளை ஈழம் பிறந்தால் அங்கு செல்ல மாட்டார்கள்!

ithai solluvatahal ungaluku enna payan.. athai vidungal ippadi engal urimai poorai malungadikkum karuthukalai koora pala pathivarkal vangum kaasuku elutha irukkirarkal. avarkal varuvarkal varamaatarkal. aanal avarkal oru thadavaiyaavathu paarka varuvarkal eelam vendarl. avarkalil pillaikal varuvarkal. sila kevalamaana karuthukal kooda engal ethirikal irukkirarkal. ehtaum neram kaalam paarthu kooravendum. 80% alla kooda irukkalam. athai ippadi solluvarhtal ungaluku ennapayan. emmai kevalamaaka alikkum ethiri ithayum mika valiyuruthi koori varukindarn. neengal eaan avanuku sammalam vaangamal velai paakireerkal. ungal karuthukalai kalam paarthu sollungal. china india endu pooti pootukondu pulikalayum tmail makkalyum alikirarkal thangal nalanukkaka. singalam யாரை கழுவிவிடும், யாருக்கு கழுவிவிடும் endu ungaluku theriyaatha. tamillan meka kevalamaaka alinthukollum poothu tamillarin chinna puthiyai kaatavendam. eelathamilkal ellarukum irukkum. (ennakum kooda irukkalam)

VSK Monday, May 11, 2009 9:54:00 PM  

இந்த துரோகிகளுக்குப் பாடம் சொல்லும் நேரம் இது!
நன்றி திரு. குறும்பன்!

VSK Monday, May 11, 2009 9:57:00 PM  

//உண்மை, வெட்கமாகத்தான் இருக்கிறது. இந்த லட்சனத்தில் வந்தாரை வாழவைக்கும் பூமின்னு வேற சொல்லிக்கிறானுங்க.//

வந்தாரை வாட வைக்கும் பூம்மின்னு சொல்லலாம்!
நன்றி கோவியாரே!

VSK Monday, May 11, 2009 10:06:00 PM  

நீங்கள் எழுதியதை மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன் திரு. வெண்காட்டான்!
இது எவருக்காவும் எழுதப்பட்ட பதிவு அல்ல!
எனக்குத் தெரிந்த உண்மைகளை நேர்மையாகச் சொல்லி இருக்கிறேன்.
யூதர்கள் கூடத்தான் போகவில்லை எனவும் சொல்லி இருக்கிறேன்.
இதில் அவமானம் ஏதுமில்லை.
எவருக்காகவும் வக்காலத்து வாங்கவும் நான் இதை எழுதவில்லை.
உங்கள் கருத்துகளை மதிக்கிறேன்.
நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, May 11, 2009 10:47:00 PM  

தக்க நேரத்தில் தக்க பதிவு SK ஐயா!

இதனால் போர் நிறுத்தம் ஏற்படப் போவதில்லை ஆயினும்,
பல புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தங்களையே எண்ணியெண்ணி மறுக வேண்டிய நிலை இராது!

புலம் பெயர்ந்தாலும், இன்றும் தங்களால் இயன்ற வரை, அந்தந்த நாட்டு அரசாங்கங்களைத் திரும்பிப் பார்க்கவாவது வைத்துள்ளார்கள்! லண்டன் நாட்டு அமைச்சர் கொழும்புக்குச் செல்லவாவது வைத்துள்ளார்கள்! இத்தனையும் கையில் அதிகாரம் இல்லாமலேயே!

இங்கே தமிழகத்திலோ, புலம் பெயரா விட்டாலும், சொந்த அரசாங்கத்தையே திரும்பிப் பார்க்க வைக்க முடியவில்லை! இத்தனை அதிகாரம் கையில் இருந்தும்!

புலம் பெயராத தமிழகப் பூனைகளுக்கு முன்னால் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தலை உயர்த்தி நிற்கலாம்!
ஆனால்.....
அப்போதும் அவர்கள் தலை, சோகத்தால் கவிழ்ந்த வண்ணம் தான் உள்ளது! :(

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, May 11, 2009 10:48:00 PM  

//இந்த லட்சனத்தில் வந்தாரை வாழவைக்கும் பூமின்னு வேற சொல்லிக்கிறானுங்க.//

கோவி அண்ணே...
அது (தமிழர் அல்லாத) வந்தாரை வாழ வைக்கும் பூமி! :(((

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, May 11, 2009 10:59:00 PM  

//இந்தக் கால கட்டத்தில், இதில் யார் பெரியவன் என்னும் போட்டி வலுக்கவே, அதன் காரணமாக பல சண்டைகளும் தமிழக எல்லைக்குள் நடந்தன!//

சண்டை மட்டுமா? கொலைகளும் தான்! :((
தமிழினம் வாங்கி வந்த வரம்!

//இவர்களை வேற்று கிரக மனிதர்போல், தனி இடத்தில் வைக்கப்பட்ட அவலம் இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்! எந்தவிதமான உரிமையும் இவர்களுக்கு அளிக்காமல், ஒருசில கடத்தல் வேலைகள் ஈழப்போர் ஆதரவாளர்களால் செய்யப்பட்டது என்பதால், குற்றவாளிகள் போல காவல் துறையின் கண்காணிப்பிலேயே இவர்கள் இன்றுவரை காலம் தள்ளுகிறார்கள் என்பதே வேதனையான உண்மை//

கிட்டத்தட்ட சாதிக் கொடுமை போன்று தான் இதுவும்!
தனிப் பள்ளி, ஊருக்கு ஒதுக்குப் புறமாகத் தனி இடம்-ன்னு எல்லாமே தனி தான்!

சமத்துவபுரம் கண்டவர்கள், இதில் சமத்துவம் காணாதது ஏனோ?

அகதிகளைக் கல்வைத் தகுதி வாரியாகவோ இல்லை பிற தகுதிகள் வாரியாகவோ பிரித்தெடுத்து, முறையான அரசாங்க அடையாளங்களுடன் தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்ய முடியாதா என்ன?
விசா வழங்கி, அதன் காலம் கடந்த பின்னர், திருப்பி அனுப்பி வைக்க முடியாதா என்ன? மத்திய அரசுக்கு தன் மீதே அவ்வளவு தான் நம்பிக்கை! :(

அகதிகள் என்று வந்தவர்கள் அத்தனை பேருமே போராளிகள்/படிக்காதவர்கள் என்று இவர்களுக்குள்ளாக வெத்து நினைப்பு!

இந்திய அரசுக்கு, அது வங்காள தேசமாகட்டும், ஈழம் ஆகட்டும், முறையான அகதி/குடியுரிமைத் திட்டமே கிடையாதே! அரசுடைக் கேபிள் திட்டம் மட்டும் நல்லா போடுவாங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, May 11, 2009 11:09:00 PM  

//இதற்கு முழுப் பொறுப்பும் மத்திய அரசையே சாரும்! தமிழக முதல்வர் தட்டிக் கேட்டால் இது நடக்கும். செய்யவில்லை... எம்.ஜி.ஆர். தவிர!
//

எம்.ஜி.ஆர் அவர்கள் கூட உதவி தான் செய்ய முடிந்ததே தவிர, அகதிகளை மைய நீரோட்டத்தில் கலக்க வைக்க எல்லாம் முடியவில்லை! அவர் முதல்வராய் இருந்த போதும் மண்டபம் முகாம் போன்று தனி முகாம்கள் தான்!

அவரால் என்ன செய்ய முடியும்? வெளியுறவுத் துறை அவர் கையில் இல்லையே!

ஆஸ்திரேலியா, கனடா, இலண்டனில், ஒரு ஈழத் தமிழர் அகதியாய் வந்து மைய நீரோட்டத்தில் கலக்க முடிகிறது!
தொப்புள் கொடி உறவு என்று சொல்லும் தமிழகத்தில் மட்டும் கலக்க முடியவில்லை! தூ.....

இந்த அகதிகளைப் பற்றிப் பேச எந்த தமிழக அரசியல்வாதிக்கும் நேரமில்லை! எதிர்க் கட்சிகளுக்கும் நேரமில்லை! அவர்களை மாதம் ஒரு முறை பார்த்து வர நேரமில்லை! இதில் ரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் பேச்சு வேற!

சொந்த தமிழக மண்ணில் இருக்கும் ஈழத் தமிழர்களைக் காக்க வழி தெரியாதாம்!
கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத வீர/வீராங்கனைகள், வானம் ஏறி வைகுண்டம் காட்டத் துடி துடிக்கிறார்கள்!

குறைந்த பட்சம் தமிழக அரசு, தமிழ் ஈழ அகதிகள் நல்வாழ்வு துறை-ன்னு தனி அமைச்சகமோ, வாரியமோ வாவது அமைக்கலாம்!

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, May 11, 2009 11:14:00 PM  

//அத்தனையும் கடன் கணக்கில்!!
பலர் உணவு விடுதிகளிலும், பெட்ரோல் பங்குகளிலும், சாதாரண வேலை செய்து கொண்டு தங்கள் வயிற்றைக் கழுவுகிறார்கள்//

அப்படியே ஓரளவு நடுத்தர வாழ்க்கை வாழ்ந்தாலும், அவர்களைத் துரோகிகள் என்று சொல்ல இவர்கள் யார்?

அரசியல்வாதிகள் முதற் கொண்டு அதிகாரிகள் வரை, ஈழத்துக்காக உண்ணாமலும், உடுத்தாமலும், மணம் செய்து கொள்ளாமலுமா வாழ்கிறார்கள்?
போர் புரியும் குழுவினரே கூட, ஓரளவு சுமாரான காலங்களில், கலை/கேளிக்கை, நல்ல அசைவ உணவு என்று இருக்க வில்லையா?

ஏதோ புலம் பெயர்ந்து விட்டால் மட்டும் துரோகமா? :(((

Kannabiran, Ravi Shankar (KRS) Monday, May 11, 2009 11:20:00 PM  

//ஆனால், கடந்த 8 மாதங்களாகக் காட்டிவரும் தீவிரத்தை அதற்கு முன்னால் சரியாக இவர்கள் செய்யவில்லை என்பது என் கணிப்பு!//

ஓரளவு உண்மை என்றாலும், ஒரு அரசால் செய்ய முடியாததை, தனித் தனிக் குழுக்கள் பெரிதாக செய்து விட முடியாது SK ஐயா!
போர் மூண்டு பலர் சாகும் நிலையில், இவர்கள் உண்ணாவிரதம் இருந்தால், லண்டன் அரசு திரும்பிப் பார்க்கும்!
ஆனால் போர்க் கொடுமைகள் அதிகம் இல்லாமல், போராளி-அரசு யுத்தத்தின் போது, இவர்கள் உண்ணாவிரதம் இருந்தால் எந்த அரசு தான் திரும்பிப் பார்க்கும்?

PLO-வுக்கு ஐ.நா-வில் இடம் உண்டு அல்லவா? அது போலவாச்சும் ஈழத்துக்கு ஐ.நா-வில் அங்கீகாரம் பெற வேணுமானால் முயற்சித்து இருக்கலாம்! ஆனால் அதனால் பெரிதாக உதவி ஒன்றும் வரப் போவதில்லை!

வல்லரசு துணையின்றி மெல்லரசுகள் உருவானதாக, இருபதாம் நூற்றாண்டு சரித்திரங்கள் அதிகம் இல்லை!

VSK Monday, May 11, 2009 11:28:00 PM  

//இங்கே தமிழகத்திலோ, புலம் பெயரா விட்டாலும், சொந்த அரசாங்கத்தையே திரும்பிப் பார்க்க வைக்க முடியவில்லை! இத்தனை அதிகாரம் கையில் இருந்தும்!

புலம் பெயராத தமிழகப் பூனைகளுக்கு முன்னால் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தலை உயர்த்தி நிற்கலாம்!
ஆனால்.....
அப்போதும் அவர்கள் தலை, சோகத்தால் கவிழ்ந்த வண்ணம் தான் உள்ளது! :(//

ஒரு சில வரிகளிலேயே கலங்க வைத்து விட்டீர்கள் ரவி... இப்படி ஓர் அவலத்தை எடுத்துச் சொல்லி!!

Anonymous,  Tuesday, May 12, 2009 12:56:00 PM  

தமிழீழத்தை விட்டு ஓடியவர்கள் நாயிலும் கீழானவர்கள். இதை சொன்னவர் புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை.

Anonymous,  Tuesday, May 12, 2009 6:28:00 PM  

புலிகளின் ஆஸ்தான கவிஞர் புதுவை இரத்தினதுரை வெளிநாடுகளுக்கு சென்ற இலங்கைதமிழர்கள பற்றி சொன்ன கவிதையின் சில வரிகள்.
//நாய்சாதி ஓடி நக்கிப் பிழைக்கட்டும்
தப்பிப்பறந்து தமிழன் என்று சொல்ல வெட்கி கப்பலிலே எறி கனடாவில் நக்கட்டும் ...//
இப்படி பாடிவிட்டு அந்த மக்களின் பணத்தை வறுகுவதிலேயே புலிகள் கண்ணாயிருந்தன.

VSK Saturday, May 16, 2009 10:46:00 PM  

தொடர்ந்து பல நல்ல கருத்துகளைச் சொல்லி இப்பதிவுக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறீர்கள் ரவி.

உங்கள் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன். நன்றி.

வல்லரசுகள் வந்து உதவி செய்வதற்குள் அங்கு ஒன்றும் மிஞ்சாது போலிருக்கே!:((

VSK Saturday, May 16, 2009 10:48:00 PM  

புதுவை ராஜதுரை சொன்னதெல்லாம் ஆரம்ப காலத்தில் மட்டுமே எனவும், அவரே தன் நிலையைப் பிறகு மாற்றிக் கொண்டார் எனவும் அறிகிறேன் அனானியாரே!

கருத்துக்கு நன்றி.

வாசுகி,  Tuesday, May 26, 2009 7:55:00 AM  

என்னைப் பொறுத்தவரைக்கும் புலம் பெயர் தமிழர்களில் புலி ஆதரவாளர்கள் மகா துரோகிகள். ஏனென்றால் தங்கள் பிள்ளைகளை விடுமுறைக்கு மட்டும் தாயகம் அழைத்து சென்று ஐயோ சரியான வெயில், சரியான நுளம்பு, கொசு என சலித்துக் கொள்ளும் இவர்கள் (including me) வெளிநாடுகளுக்கு வர வசதியில்லாத வறிய பெற்றோரின் பிள்ளைகள் போராடி (விரும்பியோ, விரும்பாமலோ) ஈழம் அமைத்து தர வேண்டும் என நினைப்பதும் போராட்டத்தை ஆதரிப்பதும் எந்த வகையில் நியாயம்?
யார் வயிற்றில் பிறந்திருந்தாலும் பிள்ளைகள் பிள்ளைகள் தானே.

எனது அபிப்பிராயப்படி இவ்வாறானவர்கள் துரோகிகள், சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள்.

VSK Saturday, May 30, 2009 11:49:00 PM  

நல்ல கருத்து திருமதி வாசுகி!
இவர்களில் பெரும்பாலானோர் திரும்பவும் செல்ல மாட்டார்கள் என்பது என்னை வியப்பிலும், வேதனையிலும் ஆழ்த்திய ஒரு செய்தி!
ஆனாலும் இவர்களின் உணர்வு இன்னமும் ஈழத்தின்பால் இருப்பது ஒரு ஆறுதலளிக்கும் செய்தி என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.
தன்னால் முடியவில்லை. முடியப் போவதும் இல்லை என்னும் போதும், தன்னால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்னும் துடிப்பு இவர்களிடம் இன்னமும் இருக்கிறது.
இது அடுத்த தலைமுறைகளுக்கும் செல்லுமா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியே!
நன்றி.

seethag Sunday, May 31, 2009 12:57:00 AM  

"தனி இடத்தில் வைக்கப்பட்ட அவலம் இந்தியாவில் மட்டுமே நிகழ்ந்தது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்! எந்தவிதமான உரிமையும் இவர்களுக்கு அளிக்காமல், ஒருசில கடத்தல் வேலைகள் ஈழப்போர் ஆதரவாளர்களால் செய்யப்பட்டது என்பதால், குற்றவாளிகள் போல காவல் துறையின் கண்காணிப்பிலேயே இவர்கள் இன்றுவரை காலம் தள்ளுகிறார்கள் என்பதே வேதனையான உண்மை."

that is a huge accusation .did you realise? it is unsubstantiated to some extent?POst rajiv's murder what you said is true. infact all those screaming for tamil elam , wonder ever gone to madapam camp and seen the plight..of the refugees.

People also were given land at inexpensive prices near gudalur etc.I have met these persons.

I personally had classmates from jaffna and srilanka , pre rajiv 's death(in medical colleges).They were given admissions straight away ,not much questions asked.Even the validity of their ceritficates were not questioned. Among themselevs they used to joke that some of their friends from colombo came to chennai and got in to medical school with false certificates.It was the same with the IIT i heard.Infact they had a quota unitil rajiv died.

regarding the track of accomodating refugees please dont compare india with other westen countries. Obivious reasons. Every western country has a detention camp and if the immigration authorities dont want to give visa the person can be sent back TO afghanistan even.I understand ,you want to support elam tamils, but please dont just rubbish india .(many of the jaffna tamils used to do and it used to upset me then,today they are all in the uk/us/canada with their medical degrees that they got from india.)

By the way i dont want anyone to now start attacking that i am supporting rajapakshe /the ipkf misbehaviour. For me fundamentally violence is an anathema.

VSK Sunday, May 31, 2009 11:12:00 AM  

I am talking only about the present plight of Tamil refugees in India and I standby what I have said.

Whereas in the Western countries the Tamil have been given equal rights, such rights were denied from the beginning in India. Of course they were given some facilities in India, they were never given a status and this is a fact.
I am not talking rubbish but wanted to place the realities . Thats all!
Thanks for your comments.

வாசுகி Sunday, May 31, 2009 12:12:00 PM  

ஆகா பீதிய கிளப்புறாங்கப்பா,
எனது பெயரில் ஏற்கனவே ஒருவர் கருத்து தெரிவித்து இருப்பதால் நானும் தெரிவிக்கவேண்டிய கட்டாயம்.
முதலில் அது நான் இல்லை.

புலம் பெயர்ந்த ஈழ மக்கள் துரோகிகள் இல்லை.
இப்பவெல்லாம் துரோகி என்பதற்கு என்ன வரைவிலக்கணம் என்று ஒருவருக்கும் விளங்குவதில்லை
போல.
புலம் பெயர்ந்தவர்களும் முன்பு ஏதோ ஒரு யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தான்.
இன்று இவ்வளவு வேலைப்பளுவின் மத்தியிலும் அவர்கள் தான் மக்களுக்கு ஏதாவது
நல்லது நடக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்.
அவர்களின் முகங்களை பார்க்கும் போது தெரிகிறது அவர்கள் உண்மையான‌
அக்கறையில் தான் செய்கிறார்கள் என்று,

//வாசுகி said...
ஏனென்றால் தங்கள் பிள்ளைகளை விடுமுறைக்கு மட்டும் தாயகம் அழைத்து சென்று ஐயோ சரியான வெயில், சரியான நுளம்பு,............................................
எனது அபிப்பிராயப்படி இவ்வாறானவர்கள் துரோகிகள், சுயநலவாதிகள், சந்தர்ப்பவாதிகள். //

இது பிழையான கருத்து,
துரோகம் என்பது கடுமையான வார்த்தை, அதை கையாளும் போது தயவு செய்து யோசிக்கவும்.

VSK Sunday, May 31, 2009 2:10:00 PM  

நீங்கள் சொன்னதே என் உண்மையான கருத்தும்..... உண்மையான வாசுகி!:))

இவர்கள் துரோகிகள் இல்லையென என்ப்தே என் கருத்தும்.
அதுவே இக்கட்டுரையின் நோக்கம்!
நன்றி!

seethag Sunday, May 31, 2009 5:31:00 PM  

"I understand ,you want to support elam tamils, but please dont just rubbish india ."


I didnot say 'you' wrote rubbish.When i said 'rubbish' i meant dont attack india just like that.


I dont know the political complexities, but if bangladesh refugees can get assimilated as indians why not sreelankan tamils?so whose responsibilities is it? the state government or the centre.?

I am sorry you sound offended but the reality is as ordinary citizens we have limited knowledge of many issues and we form opinions.

I am forced to write in english s i have a system which is not helping me to download in tamil.Not being a techie it is taking time for me to figure out.

VSK Sunday, May 31, 2009 8:46:00 PM  

இந்தியாவைத் தாக்கும் நோக்கம் சிறிதும் இல்லை எனக்கு சீதா அவர்களே!

இந்தியாவில் மட்டுமே இந்த நிலை இவர்களுக்கு நடந்தது என்னும் உண்மையை மட்டுமே சொன்னேன்.
நன்றி.

Anonymous,  Sunday, May 31, 2009 9:18:00 PM  

நானும் ஒரு புலம்பெயர்ந்த தமிழன். ஈழத்துக்காக ஈழ நிலத்தில் இருந்து போராடும் ஒருவன் என்னை துரோகி என்று சொல்ல முடியும். அதை நான் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதற்கு நான் புலி ஆதரவாளனாகவோ அல்லது எதிர்ப்பாளனனாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

அடிப்படையில் புலப்பெயர்வு என்பது பெருமளவாக நடந்தது புலம்பெயர் சமூகத்தை உருவவாக்கியது. இந்த சமூகத்தைப் பார்த்து ஈழத்தில் இருக்கும் ஒவ்வொருவனும் அங்கே போராடி சுதந்திரம் பெற வேண்டும் என்ற எண்ணத்தை தாண்டி தமது தாயகத்தை விட்டு புலம்பெயரும் சிந்தனையை தூண்டுகின்றது.

புலம்பெயர்ந்தவர்கள் பொருளாதரத்தில் மேம்பட்டு வசதிவாய்ப்பை பெற்று தமது குடுமம்பங்களுக்கும் உறவுகளுக்கும் பொருளாதார உதவியை செய்யும் போது அதை பார்க்கும் ஒவ்வொருவரும் எப்படியாவது புலம்பெயரவேண்டும் தமது பிள்ளைகளை புலம்பெயர்ந்தவர்களுக்கு திருமணம் செய்யவேண்டும் என்று விரும்புகின்றனர்.

எனவே தாயகத்தில் இருந்து மக்கள் மீள விரும்புகின்றனரே தவிர தாயகத்தை மீட்க விரும்பபவில்லை.
இந்தவகையில் நான் அவர்களை விரும்பியோ விரும்பாமலோ போராடாமல் நீங்களும் புலம்பெயர்ந்து வசதியாக பாதுகாப்பாக வாழுங்கள் என்று போதிக்கின்றேன். இதனால் தாயக மீட்பு என்பது சாத்தியப்படமால் போகின்றது. தாயக மீட்பை சிதைக்கும் எவரும் துரோகியாக முடியும் என்பது கருத்து.

ஆரம்பத்தில் படித்தவர்கள் வசதிவாய்ப்புள்ளவர்கள் இலண்டன் கனவுகளுடன் புலம்பெயர்ந்தனர். அவர்கள் ஏனையவர்களை தூண்டினார்கள் ஏனையவர்கள் கனடா சுவிஸ் நோர்வே ஜேர்மனி பிரான்ஸ் என பல்வேறு கனவுகளை உருவாக்கினார்கள்.

எதிரியுடன் சேர்ந்து தன்னினத்தை அழிப்பது. தன்னித்தின் போராட்டங்களை அடையாளம் தேடலுக்காக விமர்சிப்பது தன்னித்தை எதிரியுடன் இணைந்து அழிப்பது. இவ்வவாறு துரோகம் மலிந்த சமூகத்தில் தாயக மீட்பை பொறுத்தவரை புலப்பெயர்வும் ஒரு துரோகமே. புலம்பெயர்ந்தவர்களின் பெரும்பான்மையானவர்கள் அழிக்கப்படும் இனத்துக்காக குரல் கொடுக்கின்றானர். அவ்வாறு குரல்கொடுப்பதையும் எதிர்க்கும் புலம்பெயர் மக்களும் உள்ளனர். துரோகம் என்பதில் இருந்து மக்களை பிரிக்க முனைந்தால் நாட்டுக்காக போராடி மடிந்து போனவர்கள் மட்டுமே மிஞ்சுவார்கள். இருப்பவர்கள் என்னுமொருவனை பார்த்து துரோகி என்று கூற தகுதியற்றவர்கள். இதுதான் தமிழினத்ததின் சிறப்பு.

VSK Sunday, May 31, 2009 9:54:00 PM  

மிகத் தெளிவாக உங்கல் நிலைபாட்டைச் சொல்லி இப்பதிவின் நோக்கத்துக்கு சிறப்பு சேர்த்திருக்கிறீர்கள் அனானியாரே!

ஆனால், துரோகம் என்பது சற்று அதிகப்படியான சொல் எனக் கருதுகிறேன்.

தாயக மீட்பு ஒரு காலகட்டத்தில் இந்தப் புலம் பெயர்ந்தவர் உதவியால் மட்டுமே தொடர்ந்து நடைபெற முடிந்தது என்னும் உண்மையையும் மறுக்க முடியாது.

ஆனால், நீங்கள் சொன்னது போல, மரித்தவர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பாரபட்சமின்றிச் சுய விமரிசனம் செய்து கொள்ள வேண்டிய நேரம் இது என எண்ணுகிறேன்.
மிக்க நன்றி.்

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP