Wednesday, February 25, 2009

"ரஹமான் சொல்லத் தவறினார்!”

"ரஹமான் சொல்லத் தவறினார்!”



தமிழனுக்கெல்லாம் பெருமை சேர்க்கும் விதமாக, இசைப்புயல் திரு.ஏ.ஆர்.ரஹமான் இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்று நம் நாட்டுக்கும், தமிழினத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார்.

விருதுகளை வாங்கும்போது, “எல்லாப் புகழும் இறைவனுக்கே” எனச் சொல்லித் தமிழையும் உலக அரங்கில் ஒலிக்கச் செய்தது எமக்கெல்லாம் மிகவும் பெருமையாக இருக்கிறது.


அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!

அதே சமயம், நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு சொல் அவரிடமிருந்து வராததில் எனக்கு மிகப் பெரிய ஏமாற்றம் என இங்கே பதிய விழைகிறேன்.


கோடானுகோடி மக்கள் உலகெங்கிலும் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் கணங்களில், ஒரு தமிழன் என்கிற முறையில் அவர் செய்ய வேண்டிய கடமையிலிருந்து தவறிவிட்டார் எனக் கருதுகிறேன்.

இது போன்ற உலகக் கவனத்தை ஈர்க்கும் நிகழ்வுகளில் துணிச்சலோடு தமது கருத்துகளைச் சொன்ன நிகழ்வுகள், ஒலிம்பிக் போட்டியில் தொடங்கி பல அரங்குகளில் நிகழ்ந்திருக்கின்றன.

அப்படி ஒரு வாய்ப்பு தமிழரான ரஹமானுக்கு வாய்த்தபோது, அவர் அதைச் செய்யாமல் விட்டுவிட்டார்!


எனது மனவருத்தத்தை அவரே இசையமைத்த ‘உயிரே, உயிரே, வந்து என்னோடு கலந்துவிடு’ என்னும் மெட்டில் ஒரு பாடலாக இங்கு அளிக்கிறேன்.

நன்றி.


தமிழே! இசையே! நீ ஏன்செய்யத் தவறிவிட்டாய்
தமிழா! ரெஹமான்! ஏன் ஒருவார்த்தை சொல்லவில்லை!

அமிழ்தாம் தமிழால் நீ அரியணையில் ஏறிநின்றாய்
இனிமைத் தமிழில் நீ இறைவனுக்கு நன்றி சொன்னாய்
[தமிழே! இசையே!]

தமிழ்நாட்டில் பிறந்தாய் தமிழாலே வளர்ந்தாய்
தமிழிசைக்குப் புகழ் சேர்த்தாய்

தமிழ்நாடு தாண்டியும் புகழ்பெருகச் செய்தாய்
உலகுன்னை வாழ்த்துதின்று

நீ ஒரு வார்த்தை தமிழ்கூறி உலகோரைக் கவர்ந்தாய்
அதற்காகப் பாராட்டுவேன்

உலக அரங்கத்தில் தமிழ்மொழியின் இனிமை
உலகோரும் அறியச் செய்தாய்

ஆனால்.... ஆனால்.... நீ ஒரு வார்த்தை சொல்லமறந்தாய்
[தமிழே! இசையே!]


"எம்தமிழரங்கே விதிசெய்த சதியால்
தினந்தோறும் சாகின்றார்

உணவில்லை நீரில்லை உடுத்திடவும் உடையில்லை
இருப்பதற்கோர் இடமுமில்லை

இவர் துயர்தீர உலகோரே குரல்கொடுப்பீர்!" என்று
ஒருவார்த்தை சொல்லி யிருந்தால்

வரும் எதிர்காலம் உன்புகழை தினம் பாடும் அன்றோ
இதுவேனோ புரியவில்லை

அடடா! அடடா! நீ உன் கடமை செய்யமறந்தாய்!


தமிழே! இசையே! நீ ஏன்செய்யத் தவறிவிட்டாய்
தமிழா! ரெஹமான்! ஏன் ஒருவார்த்தை சொல்லவில்லை!

அமிழ்தாம் தமிழால் நீ அரியணையில் ஏறிநின்றாய்
இனிமைத் தமிழில் நீ இறைவனுக்கு நன்றி சொன்னாய்
[தமிழே! இசையே!]

வாழ்த்துகள் திரு ரஹமான்! மேன்மேலும் விருதுகள் உங்களை வந்து சேரட்டும்!!

43 பின்னூட்டங்கள்:

தமிழ் Wednesday, February 25, 2009 10:17:00 PM  

தமிழை உரைத்த உதடுகள்
ஈழத்தைப் பற்றி இயம்பிருந்தால்
உலகத்தின் கண்களும் திரும்பிருக்கும்

வாழ்த்துகள் உங்களுக்கும், ஒரு
வாய்ப்பினை நழுவ விட்டோம் என்பதை
உரைத்த உங்களின் இடுகைக்கும்

அன்புடன்
திகழ்

VSK Wednesday, February 25, 2009 10:25:00 PM  

உணர்வினைப் புரிந்து உரைத்தமைக்கு நன்றி, திகழ்மிளிர் அவர்களே!

SurveySan Wednesday, February 25, 2009 10:41:00 PM  

ஹ்ம். அவர் ஒரு இசைக் கலைஞர். அந்த வேலையை அவர் ஒழுங்கா செய்யறாரு.
அவரை எதுக்கு இதில் இழுக்கணும்னே தோணுது.

யார் யார் என்னென்ன ப்ரெஷர் கொடுத்தாங்களோ? யாரு கண்டா?

Marlon Brando தனது ஆஸ்காரை வாங்க மறுத்தார். செவ்விந்தியர்களை ஒடுக்குவதை எதிர்த்து.
http://surveysan.blogspot.com/2009/02/blog-post_23.html

VSK Wednesday, February 25, 2009 10:56:00 PM  

//ஹ்ம். அவர் ஒரு இசைக் கலைஞர். அந்த வேலையை அவர் ஒழுங்கா செய்யறாரு.
அவரை எதுக்கு இதில் இழுக்கணும்னே தோணுது.

யார் யார் என்னென்ன ப்ரெஷர் கொடுத்தாங்களோ? யாரு கண்டா?

Marlon Brando தனது ஆஸ்காரை வாங்க மறுத்தார். செவ்விந்தியர்களை ஒடுக்குவதை எதிர்த்து. //

உண்மைதான் சர்வேசன்.
அதனால்தான் ஒருநாள் கழித்து இதனைப் பதிந்தேன்.
இசைக்கலைஞர் என்பதற்கு முன், அவர் ஒரு தமிழர் என்னும் ஆதங்கத்திலேயே இதைச் சொன்னேன்.
மற்றபடி அவர் விருது பெற்றதில் எனக்கும் பெருமையே!

கோவி.கண்ணன் Wednesday, February 25, 2009 10:56:00 PM  

ரஹ்மான் பதிவு போட்டாச்சா ?

ஒருவிழாவில் அதனுடன் தொடர்பில்லாத ஒன்றை பேசுவது மேடை நாகரீகம் இல்லை. விழா மேடையை திசைத்திருப்பினார் என்ற விமர்சனங்கள் எழும். சொல்லதது ஒன்றும் தவறு இல்லை.

அதிகாரவர்க்கமே ஆமையாக சுறுங்கிக் கிடைக்கையில், ஆறுதல் கூற 'தமிழன்' என்ற பெருமையை பெற்று தந்ததற்கு பாராட்டி மகிழ்வோம்

VSK Wednesday, February 25, 2009 10:59:00 PM  

நூறு பேருக்கும் மேல் வந்து படித்துவிட்டு, மௌனமாகச் சென்றதே இப்பதிவில் சொல்லிய கருத்தின் உண்மை என நம்புகிறேன்.

அனைவருக்கும் நன்றி!

கோவி.கண்ணன் Wednesday, February 25, 2009 11:01:00 PM  

//VSK said...
நூறு பேருக்கும் மேல் வந்து படித்துவிட்டு, மௌனமாகச் சென்றதே இப்பதிவில் சொல்லிய கருத்தின் உண்மை என நம்புகிறேன்.

அனைவருக்கும் நன்றி!
//

தமிழர்கள் சபை அறிந்து நடந்து கொள்வதில் வல்லவர்கள். நான் ரகுமானைச் சொன்னேன்.

VSK Wednesday, February 25, 2009 11:03:00 PM  

உலக நடப்பு உங்களுக்குத் தெரியாமல் போனதில் எனக்கொன்றும் ஆச்சரியமில்லை கோவியாரே!

இராக் போர், மற்றும் பல உலகக் கொடுமைகளைப் பற்றிய கருத்துகள் இதே மேடையில் முன்னர் ஒலித்தது உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான்.

நன்றி.

VSK Wednesday, February 25, 2009 11:08:00 PM  

//தமிழர்கள் சபை அறிந்து நடந்து கொள்வதில் வல்லவர்கள். நான் ரகுமானைச் சொன்னேன்.//

அந்த வாய்மூடித்தனத்தைத்தான் நானும் சொன்னேன்!

எங்கு பேசணுமோ அங்கு பேசாமல் மௌனம் காப்பதில்!

நானும் ரஹமானைத்தான் சொன்னேன்!

சீமாச்சு.. Wednesday, February 25, 2009 11:13:00 PM  

VSK,
நீங்க சொல்லிட்டீங்க. அவுரு எடத்துல இருந்து பார்த்திருந்தீங்கன்னா தெரிஞ்சிருக்கும். ஓரு பெரிய அவார்ட்-டுக்கான் முடிவை சில நிமிடங்களில் அறிவிக்கப் போறாங்க. இந்தியாவே நம்மை எதிர் பார்த்திட்டிருக்கு, அது தனியொருவனின் பெருமை என்பதை விட நாட்டின் பெருமை என்ற நிலை வந்துவிட்டது. அப்பொழுது அவர் நிலையை உங்களால் வர்ணிக்க முடியாது.

அங்கு அவர் போனது ஒரு இந்தியராக. அவரால் பேசியிருக்க முடியாது.

அவரைச் சொல்லிக் குற்றமில்லை யென்பது என் தாழ்மையான கருத்து.

தவிரவும், சில பிரபலங்களுக்கு Current Affairs Knowledge பத்தாது. அவருக்கு அப்பொழுது இலங்கைப் பிரச்சினையின் ஆழம் தெரிந்திருக்க வாய்ப்பில்லாமலும் இருந்திருக்கலாம்.

இங்கே என் ஆபீஸில் ஒரு பெரிய ஆபீஸ்ர். தமிழ்தான்.. பேச்சுவாக்கில் கேட்டேன் "இலங்கைத் தமிழர் பிரச்சினை பெரிசாயிட்டிருக்கு ஃபாலோ பண்றீங்களா" ன்னு கேட்டேன்..

"அப்படியா !! நேரமே இல்லை சார்.. ! போன வாரம் Super Bowl கூட பாக்கலைன்னா பாருங்களேன்" என்றார்.

அவரைச் சொல்லிக் குற்றமில்லை..

மனிதர்கள் பலவிதம்

கோவி.கண்ணன் Wednesday, February 25, 2009 11:26:00 PM  

சூடான இடுகைக்குச் செல்ல வாழ்த்துகள் !

VSK Wednesday, February 25, 2009 11:28:00 PM  

சொல்லத் தவறிவிட்டாரே, சொல்லியிருக்கலாமே என்னும், எத்தைத் தின்னா பித்தம் தெளியும் என்கிற ஆதங்கம்தான் இது சீமாச்சு அவர்களே!

மற்றபடி,
குறையொன்றுமில்லை கோவிந்தா!:)

இங்கிருப்பவருக்கு நீங்கள் சொல்வது ஒத்து வரலாம்.
ஆனால்... ரஹமான்.... கன்னத்தில் முத்தமிட்டால்... நம்பமுடியவில்லை, அவருக்கு இது தெரியாதென!

VSK Wednesday, February 25, 2009 11:31:00 PM  

பலன் ஈழத் தமிழருக்குச் சென்றால் மகிழ்வேன்!
நன்றி, கோவியாரே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) Thursday, February 26, 2009 5:02:00 AM  

சொல்லியிருக்கலாம்; சொல்லாமல் விட்டுவிட்டார்.
அவர் அரசியல் போக்குகள் எப்படியோ!
சக தமிழனாக பெருமிதத்துடன் பாராட்டுகிறேன்.
அவர் திறமையை.

Anonymous,  Thursday, February 26, 2009 6:59:00 AM  

sample



http://www.youtube.com/watch?v=2QUacU0I4yU&feature=channel


http://www.youtube.com/watch?v=M7Is43K6lrg&feature=channel

VSK Thursday, February 26, 2009 7:21:00 AM  

மிக்க நன்றி திரு. கபீஷ்!

VSK Thursday, February 26, 2009 7:22:00 AM  

இப்படிச் சொல்வது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது திரு. யோகன்பாரிஸ்!


நானும் சொல்லியிருக்கலாமே எனவே சொன்னேன்!

நன்றி.

VSK Thursday, February 26, 2009 7:23:00 AM  

மார்லன் பிராண்டோ, மைக்கேல் மூர் இவர்கள் ஆஸ்கர் விருது பெற்றபோது பேசிய பேச்சுகளின் யூ-ட்யூப் அளித்தமைக்கு மிக்க நன்றி, திரு. அனானி.

Anonymous,  Thursday, February 26, 2009 8:30:00 AM  

//திரு. அனானி.//

Thanks, Your are Welcome :)

Machi Thursday, February 26, 2009 11:01:00 AM  

சரியாக சொன்னீர்கள் VSK. அருள் பிரகாசம் என்ற MIA எழுதிய "ஓ...சாயா" ஆஸ்காருக்காக பரிந்துரைக்கப்பட்ட இன்னொரு பாடல்.

ரகுமானுக்கு வாழ்த்துக்கள். சொல்லி இருக்கலாம் என்ற உங்கள் ஆதங்கத்தை பகிர்ந்துகொள்கிறேன்.

Cheran Thursday, February 26, 2009 11:03:00 AM  

Did MIA(Mathangi Arulpragasam) said anything about eelam tamil suffering at the Grammy awards? No.

Then why are we expecting Rahuman to say something about our plight.
I see him as a musician and good in what he is doing. I respect him for that.

It is true that if he said something about the plight of the tamils there, it would have been a welcome movevin Tamil Nadu and few days later everyone forgets and move on with their life's. Which is reality!

I don't think we Tamils yet figure it out what is the best way to propagate our message to the world in a positive way. Mean time we should refrain criticizing others.

My company give awards to best 10 employees each year. By the way I never won one but if I win would I express the plight of eelam tamils at that stage?
May be not. is that mean I am a traitor? NO

-kannan NC

VSK Thursday, February 26, 2009 12:06:00 PM  

சரியாகப் புரிந்தமைக்கு நன்றி, திரு. குறும்பன்.

VSK Thursday, February 26, 2009 12:08:00 PM  

Dear "News Collection".

I think you are missing the point here, my friend. I am not criticizing ARR. In fact I have actually congratulated him. But there are certain forums and platforms which are viewed by millions and people have often used them effectively in the past to focus their point of view. It is different from your office situation.
Please watch the youtubes of Marlon Brando and Michael Moore saying such in the Oscars posted here by a friend.
I dont blame him for not mentioning it but would have felt happier had he done so.
Thats all.

Any small bit done to attract world attention is the need of this hour, I think.

May be you should read the comments I got in my blog and also watch the You Tubes which were sent to me by a friend.

By the way, to answer to the other querry, MIA didnt win an Oscar. But when her song O! Chaya was nominated, she was interviewed in a London TV and there she did speak of the Tamils' plight. Here is the clip and my comments for it. Thanks.

இதைவிட அருமையாக உலக அரங்கில் சொல்ல ஒரு சந்தர்ப்பம் இப்போதிருக்கும் நிலையில் கிடைக்காது! அதனை மிக அருமையாகப் பயன்படுத்தி, உரக்கக் குரல் கொடுத்த மாயாவுக்கு என் மனமார்ந்த நன்றி.

இதனை அனைவரும் கேட்கவேண்டுமென விரும்புகிறேன்.

அளித்த உங்களுக்கும் நன்றி சிநேகிதி!



2009/1/29 Snegethy

http://www.vakthaa.tv/play.php?vid=2892

Thanks.

shabi Thursday, February 26, 2009 1:58:00 PM  

enya oru tamilan award vangirukkiratha patthi pesama avaru ilangai piracchanaya sollala atha sollalanu oru padhivu adhu oru pinnoottam idhapadikka padivu poda enna pola 26 nadharinga

VSK Thursday, February 26, 2009 2:25:00 PM  

//enya oru tamilan award vangirukkiratha patthi pesama avaru ilangai piracchanaya sollala atha sollalanu oru padhivu adhu oru pinnoottam idhapadikka padivu poda enna pola 26 nadharinga//

இலங்கைப் பிரச்சினை பற்றியோ, தமிழீழம் பற்றியோ அவர் பேசணும்னு நான் சொல்லவே இல்லீங்களே ஷாபி!

அவதிப்படும் தமிழர் நிலையைப் பார்க்கச் சொல்லி ஒரு குரல் கொடுத்திருந்தால் நல்லா இருக்குமேன்னு சொன்னேன்.

ஒரு தமிழனாக இதைச் சொல்வதில் தவறில்லை என நினைக்கிறேன்.
தமிழன் ஒன்றல்ல; இரண்டு விருதுகள் வாங்கியதில் எனக்கும் மகிழ்ச்சியே!

கருத்துக்கு நன்றி.

shabi Thursday, February 26, 2009 2:40:00 PM  

award vangittar avara patthi news podanum anga (oscar)poi enga tamileelattha patthi pesanum avar oru music director avar music mattum kelunga pudikkudhu pudikkalannu vimarsanam podunga atha vittuttu avar thamileelam patthi pesalannulam varutthapadakoodadhu

VSK Thursday, February 26, 2009 3:19:00 PM  

//award vangittar avara patthi news podanum anga (oscar)poi enga tamileelattha patthi pesanum avar oru music director avar music mattum kelunga pudikkudhu pudikkalannu vimarsanam podunga atha vittuttu avar thamileelam patthi pesalannulam varutthapadakoodadhu//

அவர் ஒரு இசையமைப்பாளர். அதற்காகத்தான் விருது என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒன்றே. ஒரு தமிழனாக அவர் இதைச் செய்திருந்தால், மகிழ்ந்திருப்பேன் எனவே சொல்லுகிறேன் நண்பரே!
தமிழீழம் பற்றி நான் பேசச் சொல்லவில்லை. பதிவை மீண்டும் ஒரு முறை படியுங்கள். கூடவே பின்னூட்டத்தில் ஒரு நண்பர் கொடுத்திருக்கும் இரு வீடியோவையும் பாருங்க.நன்றி.

வெத்து வேட்டு Thursday, February 26, 2009 9:09:00 PM  

VSK: did you say anything to Prabaharan who is the main reason for current Tamils' plight?
or any advice to him is irrelevent???

VSK Thursday, February 26, 2009 9:18:00 PM  

YES! It is irrelevant here my friend!
Thank you.

நாமக்கல் சிபி Thursday, February 26, 2009 9:52:00 PM  

நூறு பேருக்கும் மேல் வந்து படித்துவிட்டு, மௌனமாகச் சென்றதே இப்பதிவில் சொல்லிய கருத்தின் உண்மை என நம்புகிறேன்.//

ஆமாம்!

VSK Thursday, February 26, 2009 11:20:00 PM  

//Many people have spoken on this same stage regarding extremely controversial subjects to bring forth awareness from public. It is too much to expect from Rahman, and I certainly hadn't. As a person who has grown up with his music since a child, I was happy for the recognition he got.

Manithargal intha Tamizhar avalathukku kaaranam. Iraivan nazh arul purivaanaaga, seekiramE.

-Kajan //

உங்களது பின்னூட்டத்தில் இருந்து பதிவுக்குத் தொடர்பான கருத்தை மட்டுமே வெளியிட்டிருக்கிறேன் நண்பர் காஜன்!
தவறாக எண்ண வேண்டாம்.

நீங்கள் சொன்னதுபோல பலரும் பல கருத்துகளைச் சொல்லிய இந்த மேடையை ரஹமான் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே உண்மை.

ஆனால், அது அவர் உரிமை.

செய்திருந்தால் நல்லா இருந்திருக்கும்.

நன்றி.

VSK Thursday, February 26, 2009 11:21:00 PM  

//நூறு பேருக்கும் மேல் வந்து படித்துவிட்டு, மௌனமாகச் சென்றதே இப்பதிவில் சொல்லிய கருத்தின் உண்மை என நம்புகிறேன்.//

ஆமாம்!//

நல்ல கருத்துக்கு எப்போதும் வந்து வாழ்த்தும் உங்களுக்கு நன்றி சிபியாரே!

Joe Friday, February 27, 2009 3:35:00 AM  

சரி விடுங்க, ரஹ்மான் தேவையில்லாமல் அரசியலில் சிக்க விரும்பாமல் இருக்கலாம்.

எனக்கு தெரிந்தவரை மியா இதைப்பத்தி நிறைய பேட்டிகளில் பேசியிருக்கிறார். அதனால் சில பேருடைய வெறுப்பையும் சம்பாதித்து இருக்கிறார்.

ஆ.ஞானசேகரன் Friday, February 27, 2009 6:40:00 AM  

சொல்லியிருக்கலாம்! சொல்லவேண்டியா நிலையில் அவர் இருப்பதாக எண்ணவில்லை என்றுதான் நினைக்கின்றேன். சொன்னால் பாராட்டலாம். சொல்லவில்லை என்று குறை கூறும் பொறுப்பில் அவர் இல்லை... அவர் சாமானிய இசை மேதை... அவர் வேலையில், அவர் சரியாக இருக்கின்றார். இதற்கு பொறுப்பானவர்கள் மெளனம் சாதிக்கும் போது, இவரை குறை கூறுவது எனக்கு ஒப்பில்லை? பொறுப்புல்ல அரசில் தலையை சேஏஏஏஏஏஎ அடிக்காலாம் தப்பில்லை

VSK Friday, February 27, 2009 8:59:00 AM  

//சரி விடுங்க, ரஹ்மான் தேவையில்லாமல் அரசியலில் சிக்க விரும்பாமல் இருக்கலாம்.

எனக்கு தெரிந்தவரை மியா இதைப்பத்தி நிறைய பேட்டிகளில் பேசியிருக்கிறார். அதனால் சில பேருடைய வெறுப்பையும் சம்பாதித்து இருக்கிறார்.//

விட்டாச்சுங்க!
வழக்கமான நம்ம ஆன்மீகப் பதிவுப் பக்கம் நேத்தே திரும்பியாச்சு.
சொல்லணும்னு தோணிச்சு. அவ்ளோதான்
மத்தபடி சொல்லித்தான் ஆகணும்னு திட்டற கூட்டத்துல நான் இல்லவே இல்லை.
அவரது இசைத் திறமையை நான் மதிக்கிறேன்.
நன்றி, திரு. ஜோ!

VSK Friday, February 27, 2009 9:03:00 AM  

//சொல்லியிருக்கலாம்! சொல்லவேண்டியா நிலையில் அவர் இருப்பதாக எண்ணவில்லை என்றுதான் நினைக்கின்றேன். சொன்னால் பாராட்டலாம். சொல்லவில்லை என்று குறை கூறும் பொறுப்பில் அவர் இல்லை... அவர் சாமானிய இசை மேதை... அவர் வேலையில், அவர் சரியாக இருக்கின்றார். இதற்கு பொறுப்பானவர்கள் மெளனம் சாதிக்கும் போது, இவரை குறை கூறுவது எனக்கு ஒப்பில்லை? பொறுப்புல்ல அரசில் தலையை சேஏஏஏஏஏஎ அடிக்காலாம் தப்பில்லை//

அவர் சொல்லித்தான் இருக்கணும்னு நான் வாதிடவில்லை திரு. ஞானசேகரன்.

இத்தனை பேரை ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வாய்ப்பு இவருக்குக் கிடைத்தபோது, சொல்லியிருந்தால், அவரது புகழ் இன்னமும் சிறந்திருக்கும் எனக் கருதினேன்.

சொன்னால்தான் தமிழன் எனத் தூற்றவில்லை.
சொல்லியிருந்தால் தமிழன் மகிழ்ந்திருப்பான் எனக் கருதினேன்.
உங்களது கடைசி வரியுடன் எனக்கு முழு உடன்பாடே!
நன்றி.

தி. ரா. ச.(T.R.C.) Sunday, March 01, 2009 1:15:00 AM  

நூறு பேருக்கும் மேல் வந்து படித்துவிட்டு, மௌனமாகச் சென்றதே இப்பதிவில் சொல்லிய கருத்தின் உண்மை என நம்புகிறேன்.//

ஆமாம்

VSK Sunday, March 01, 2009 11:38:00 AM  

நன்றி. தி.ரா.ச. ஐயா!

VSK Sunday, March 01, 2009 11:44:00 AM  

//Many people have spoken on this same stage regarding extremely controversial subjects to bring forth awareness from public. It is too much to expect from Rahman, and I certainly hadn't. As a person who has grown up with his music since a child, I was happy for the recognition he got.

Manithargal intha Tamizhar avalathukku kaaranam. Iraivan nal arul purivaanaaga, seekiramE.

-Kajan //

I agree with your views Mr. Kajan. Thank you.

இலவசக்கொத்தனார் Sunday, March 01, 2009 8:25:00 PM  

//நூறு பேருக்கும் மேல் வந்து படித்துவிட்டு, மௌனமாகச் சென்றதே இப்பதிவில் சொல்லிய கருத்தின் உண்மை என நம்புகிறேன்.//

இதுக்கு ஆமாம் போட்டு ரொம்ப பேர் ஏத்தி விடறாங்க. உங்களோட எதுக்கு இங்க சண்டை போடணும்? நாம சண்டை போட்டு என்ன ஆக போகுதுன்னு சும்மா போறவங்களும் அதிகம் என உணர்ந்து கொள்ளுங்கள்.

VSK Sunday, March 01, 2009 9:04:00 PM  

பதிவுலகில் பழம் தின்னு கொட்டை போட்ட ஆளுன்னு உங்களைப் பலபேர் சொல்லுவாங்க.
நானும் அதை நம்பினேன்.
இந்தப் பின்னூட்டம் அதைத் தகர்த்து விட்டது, கொத்ஸ்!
சும்மாப் போகுபவர்கள் இங்கே அதிகம்.
மறுப்பவ்ர் உடனே வருவார்!
இது இணைய லக்ஷணம்!
இது தெரிந்தும் இப்படிச் சொல்வதின் பொருள் என்னவோ கொத்ஸ்!?

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP