Friday, February 13, 2009

"காதலென்றால் பெரும் அவஸ்தையென்று.......!!!"

"காதலென்றால் பெரும் அவஸ்தையென்று.......!!!"

"காதலர் தினம்" இன்று!
இந்தக் 'காதல்'னா என்னன்னு மனசு ரொம்பவே அரிச்சுக் குடைஞ்சு கேள்வி மேல கேள்வியாக் கேட்டுகிட்டே இருந்திச்சு.

காதல்னா என்ன?
அது எங்கேருந்து வருது?
எப்படி தொடங்குது?

இதுக்கெல்லாம் பதில் எனக்குத் தெரியவே தெரியாது சாமி! இருந்தாலும் முயற்சி பண்றேன்!

'அடக்கப்படும், அவமானப்படுத்தப்படும்' உறவுகள் எல்லாமே ஒரு மாதிரி போதை!
உள்ளே இறங்கியாச்சுன்னா... மவனே அவ்ளோதான்.... திரும்ப வெளிவரவே முடியாது!

இதை எப்படி நீ சொல்றேன்னு கேட்கலாம்!.... அட! என்னைப் பார்த்துக் கேட்டாங்க சில பேரு! அதான் இப்ப வந்து சொல்றேன்.

எனக்கு நிகழ்ந்த இந்தக் 'காதல்' ஒருவகையிலே அன்பு///வெறுப்பு ரெண்டுமே சம அளவுல கலந்த ஒண்ணு!

பொறுங்க... பொறுங்க? நீங்க என்ன கேக்க வர்றீங்கன்னு புரியுது.... அடப்பாவமே! உனக்கா இப்படி ஒரு நிலைமைன்னுதானே கேக்கப் போறீங்க? மேல படிங்க!.. என் சோகக் கதையை!

இந்த அன்பு//வெறுப்புன்ற சமாச்சாரம் பார்க்கப்போனா நம்ம எல்லார் வாழ்க்கையிலியுமே அசால்ட்டா வந்து போறதுதான்னு நான் சொல்லாமலியே உங்களுக்கெல்லாம் தெரிந்தானே! ஆங்! அப்பிடி... அப்பிடித்தான் தலையாட்டணும்.. சும்மாவாவது இல்லைன்னு பொய் சொல்லக்கூடாது!

இப்ப இன்னும் கொஞ்சம் வெலாவாரியா சொல்றேன்!

என்னோட காதலியை நான் முதல் முதலாப் பார்த்த நிமிஷத்திலேர்ந்து, என்னோட ஆசையை என்னால அடக்கவே முடியலை! 'பட்'டுன்னு விழுந்திட்டேன்!



அன்புக்கு ஒண்ணும் குறைச்சலே இல்லை. அது வெள்ளமாத்தான் பொங்கி வந்திச்சு!


ஆனா, அதே சமயம், நான் அனுபவிச்ச சித்திரவதை இருக்கே... அப்பப்பா... சொல்லி மாளாது!!!!!


தூண்டிவிட்டுட்டு ஏமாத்தறது, ஆசைகாட்டி மோசம் பண்றது, என்னைத்தான் நீ காதலிக்கணும்னு பிடிவாதம் பண்றதுன்னு ஏகப்பட்ட டார்ச்சர்!


அதோட இருக்கச் சொல்ல, காதலோட முழு அர்த்தமும் எனக்குப் புரிஞ்சுது.
' அட! கிடைச்சா இது மாரில்ல கிடைக்கணும்'னு நான் காலரைத் தூக்கி விட்டுகிட்டுத்தான் நடந்தேன் சாமி!



அந்த முதல் சந்திப்புக்கு அப்புறமா நடந்ததையெல்லாம்... இப்ப நினைச்சாலும் குலை நடுங்குது!


எத்தனைப் பொய்கள், எத்தனை ஏமாற்றங்கள், எத்தனை வாக்குறுதி மீறல்கள்!
கணக்குப் போடவே முடியாதுன்னா பார்த்துக்கங்களேன்!



'இனித் தாளாதுடா சாமி'ன்னு வெட்டிரலாம்னு நினைப்பேன்!


அப்ப, வீசுவாங்க பாரு ஒரு அஸ்திரம்!


தன்னைப் போல திறமையான ஆளே இல்லைன்ற மாரி, ஒரு 'ஆக்ட்' கொடுத்து, நம்மளை நம்ப வைச்சு, அப்படியே மெழுகா உருகவைச்சு, ..... பிறகென்ன? ... 'அடியேன் மீண்டு தஞ்சம்'னு போய்க் காலுல விழுந்திருவேன்.. திரும்பவும் தொடரும் சித்திரவதை! அதே பழைய ... மேலே சொன்ன அத்தினியும்.... இன்னும் அதிகமா வந்து தாக்கும்!

இது ஒருவாட்டி, இல்லை, ரெண்டுவாட்டி நடந்தா பரவாயில்லை! நானும் இங்க வந்து அழுதுகிட்டிருக்க மாட்டேன் உங்ககிட்ட!



எத்தனை தடவை! எத்தனை தடவை!


ஒவ்வொரு தடவையும் இதே கதை தான்!


'வேணாம் போ!'ன்னு சொல்ல நினைக்கறப்ப, எப்பிடியோ அதை மட்டும் உஷாராக் கண்டுபிடிச்சு, உடனே, உத்தமமா ஒரு காரியம் பண்ணி என்னை மயக்கறதுல கில்லாடி! நான் ஒரு முட்டாள்! ஒவ்வொரு தடவையும் இதே உண்மைன்னு நம்பி, சரெண்டெர் ஆயிருவேன்.


இந்த நாடகம் இன்னி வரைக்கும் தொடருதுன்னா பாத்துக்கோங்களேன்!

எனக்கும் இப்பல்லாம் ஒரு நெனைப்பு வருதுங்க!



ஒருவேளை இதான் எனக்கும் பிடிச்சுப் போச்சோ? இல்லை, இதை எனக்கு ரொம்பவே பிடிச்சதுனால, நானே இதையெல்லாம் எதிர்பாக்கறேனோ?
தெரியலை சாமிங்களா!

நிச்சயமா இன்னிக்கு சிரிச்சுகிட்டு இருக்கிற எனக்கு, நாளைக்கு என்ன நடக்கப்போகும்னு நல்லாவே தெரிஞ்சும், விட்டில்பூச்சி மாரி, அங்கியேதான் மனசு கிடந்து அல்லாடுது!

அதாங்க காதலோட மகத்தான சக்தி!




நீதான் அதை ஒரு கட்டுப்பாட்டுக்குள்ள வைச்சிருக்கேன்னு நினைப்போம்!
ஆனா, அப்பிடி இல்லை அது! அதான் உன்னை அடக்கி ஆண்டு சர்வாதிகாரம் பண்ணுது! இதான் உண்மை!

இதோ இன்னிக்கு காதலர் தினம். இன்னிக்கும் இதே தான் நடக்கப் போவுதுன்னு உள்மனசு சொல்லுது! அப்பிடித்தான் நடக்கவும் நடக்கும்!

'அடடா! என்ன புலம்பல் ஜாஸ்தியாகிட்டே போவுது? உன்னை இப்படி அவஸ்தைப் படுத்தின அந்த ஆளு யாரு'ன்னு நீங்க கேட்கறது எனக்குக் கேட்குது!

சொல்றேன்! சொல்றேன்! சொல்லாமலியா போயிருவேன்! இதோ சொல்றேன்!

அதுக்கு முன்னாடி அது என்னவெல்லாம் பண்ணிச்சுன்னு கொஞ்சம் சொல்றேன் கேளுங்க~!

காதலோட பிடியில மாட்டிக்கிட்ட நான், "உனைக் கண்டதும் கண்டு கொண்டேன்" எனப் பாடிய நான், இப்ப கண்விழி பிதுங்கி நிக்கறேனே அதாங்க கதை!

[இனி வருவது நேரடியான மொழிபெயர்ப்பு!!]

மதியம் ஒரு மணிக்கு நல்லா சாப்பிட்டுட்டு, டி.வி. முன்னாடி உட்கார்ந்து, என்னோட கல்லூரி பாஸ்கெட்பால் அணி பரிதாபமா போஸ்டன் அணிகிட்ட தோக்கறதைப் பரிதாபமா பார்த்துகிட்டு, எங்காளுங்க எப்பனாச்சும், ஒரு கூடை போட்டதுக்கு கைதட்டி, எதிராளுங்க கூடை மேல கூடையாப் போடும்போது, முகத்தைத் திருப்பிகிட்டு திரும்பிப் படுத்துகிட்டே, முழு ஆட்டத்தையும் பார்த்துத் தொலைச்சேன்!

நல்ல ஒரு நாளை நாசமாக்கினதுக்கு நன்றி சொல்றதா, திட்றதான்னு நினைக்கறப்ப, வந்தாருய்யா எங்க கோச்![Coach]

'ஏதோ தப்பு நடந்திடுச்சு! அடுத்த தடவை சரி பண்ணிருவோம்'னு சொன்னதை அப்பிடியே நம்பி, சொன்னமாரியே ஜெயிச்சும் காமிச்சாரு!

உடனே, திரும்பவும் காதல்!!

அதைத் தொடர்ந்து வரிசையாத் தோல்விகள்! .....நடுவுல அத்தி பூத்தாப்பல ஒரு ஜெயிப்பு!

இப்பிடித்தாங்க பண்றாங்க..... எங்க காலேஜ் டீம் [குழு]!!!!!!
அவதாங்க என் காதலி! என்னோட நார்த் கரோலினா ஸ்டேட் யூனிவெர்ஸிடி! {NC State University]

அதனால, ....... உங்க எல்லாருக்கும் சொல்லிக்கறது என்னன்னா,..........

இந்தக் காதலர் தினத்தன்னிக்கு, உங்களோட காதலி/மனைவி கையைக் கெட்டியாப் பிடிச்சிகிட்டு, அவங்களை வெளியே கூட்டிகிட்டுப் போயி, நல்ல டின்னர் வாங்கி கொடுங்க!

கூடவே இருந்து எல்லாத்துலியும் துணையா இருக்கறதுக்காக, ஒரு பெரிய நன்றி சொல்லுங்க!

என்னோட "ஆளு" என்னை வதைக்கற மாரி இல்லாம, உங்களை சந்தோஷமா வைச்சுகிட்டு இருக்கறதுக்கு .... முடிஞ்சா..... காலுல விழுந்து சொன்னாலும் தப்பில்ல!...ஒரு நன்றி சொல்லிடுங்க!

உங்க உடல் நலத்தை அவங்க நல்லாப் பார்த்துக்கறதுக்கு இன்னொரு நன்றி!
எங்காளு எனக்குப் பண்றதுல்லாம், நலக்கேடுதாங்க!

ஆனா......... இத்தினிக்கபுறமும், .....அவங்க அப்பப்ப உங்களுக்குக் கொடுத்த சில அற்புதமான கணங்களை நினைச்சு, அதுக்காக ஒரு பெரிய 'ஓ' போட்டு நன்றி சொல்லுங்க!

இதாங்க! இதுவேதாங்க!
இந்த சில கணங்கள் தான் நம்ம வாழ்க்கையின் ஆதாரம்!
இதை வைச்சுத்தான், நம்ம மொத்த வாழ்க்கையே சுழலுது!
இதான், நம்மளை உற்சாகப்படுத்தும்! உயர்த்தும்!

இதுவேதான், என்னை என் கல்லூரி மேல, இப்பவும் ஒரு காதலை இன்னிவரைக்கும் வைச்சிருக்கு!


என்னோட எதிரியோட ஆளு ஒரு 'சூப்பர் ஃபிகரா' இருந்தாலும், என்னோட குண்டுப் பொண்ணே என் கண்ணுக்கு அழகா எப்பவுமே தெரியுறா!
இதாங்க காதல்!

இதுக்குக் கண்ணு, மூக்கு, காதுல்லாம் இல்லீங்க!
சொல்லப்போனா, சொல்றமாரி, எதுவுமே இல்லீங்க!
அதாங்க காதல்! தானா வரும்! அனுபவிங்க.... புரிஞ்சவங்கல்லாம்!


கோ ஸ்டேட்!!!!!!!!!!! [Go State!]



***********
[ஒருவிதக் குழப்பத்துடன் இதுவரை படித்து வந்தவர்களுக்கு மட்டும்!!]

கல்லூரியில் படிக்கும் எனது மகனுக்கு [Jai Kumar] திடீரென எனது 'மரபணு' உள்ளில் உந்த,
'எனது சமூக விமரிசனங்கள்' [My social commentary] என ஒரு மின்மடல் அனுப்பத் தொடங்கினார், கடந்த இரு வாரங்களாக!
அப்படி அவர் அனுப்பிய ஒரு மடல்தான் இது! உங்களைப் போலவே, நானும் முதல் சில நிமிடங்களில் குழம்பியது உண்மையே!
படித்து முடித்ததும், கொஞ்சம் பெருமையாகவே இருந்தது!
இன்றைய தினத்துக்கு ஒரு நல்ல பதிவாக அமையும் என எண்ணி, இதைத் தமிழாக்கி இங்கு அளிக்கிறேன். பார்க்கப்போனால், இதுவும் ஒரு 'சுட்ட'பதிவே!]

[விரும்பினால், அவனது ஆங்கில எழுத்தை இங்கே அளிக்கிறேன்!]


நன்றி!!
காதல் வாழ்க!!

Here it is!!

Social Commentary by Jai Kumar

With Valentines this week I felt it appropriate to tackle a question I had
been asked regarding love.

What is love? What isn’t love? Where does it
come from? How does it start?

I don’t claim to know the answers, but I
will begin with this: Abusive relationships are addicting. Once you are in
one there is simply no way out. I was recently requested to discuss the
horribly painful and crushing love life that is Jai Kumar’s.

This relationship in my life can be summed up best by the term: “Love/Hate.” I
know what you must be thinking at this point, Jai I thought you were
single? Clearly, I am not. I know what else you must be thinking,
Love/Hate don’t we all have those moments in our life? Not like I do. I’ll
extrapolate.

From the moment I met my love I couldn’t resist. I was teased
and tempted, wooed and cared for. I felt home when around my love. I was
finally home, or so I thought. Since our initial meeting my life has been
a roller coaster of torment, deceit, lies, and broken promises. I can’t
get out! Each and every time I feel that my heart can’t take it anymore my
love does something to win me back again. It’s remarkable. It’s as if she
knows that I am on the verge of turning my back on her. Just as the moment
approaches when I’ve lost all faith, I’ve sunk lower than I can sink, I am
lifted up by the light of love only to be subsequently squashed, abused,
crushed, and left for dead on the side of the road (That’s what she
said!). Yet no matter what I do, no matter how much I know this is a lost
cause, a losing battle, I keep coming back for more abuse.

That’s the strange thing about love you don’t control it, it controls you. My heart
is a piñata and this Valentine’s Day it will probably be tormented the
same way it was last year. Who is this maiden of distress, this temptress
of the noble hearted? Why it is none other than, you guessed it: NC State
University.

She has put cupids choke hold on me, and I am blinded like Ray Charles
singing with Kanye West during “Gold Digger.” (Or was that Jamie Foxx?
He
can see so that would mean my simile wouldn’t work, but you get the
point.) I will wake up, put on my finest outfit and proceed to the couch
where I will most likely watch my heart get stomped out at 1:00pm. It’s
become a Valentine’s Day tradition. Last year Boston College laid the
beat down and I sat sadly watching my love deprive me of a joyous day in
which we were to celebrate our renewed passion for each other.

So as this year’s day for love approaches, grab the one you’re with, hold them
tight, and take them out to dinner. Thank them for not ripping your
heart out like my love keeps doing to me. Thank them for comforting you
when you are downtrodden, more often than not my love is the source of my
misery. Thank them for caring about your health; my love will be the
death of me. But most importantly thank them for the amazing moments you
two share together, I know I will:

83-79, 41-10, camping out in 0 degree weather for tickets, the 2007 ACC tournament, and so much more. I know my heart will probably get stomped on sooner, rather than later, I know
that a relationship where I do all the loving and State does all the hating isn’t going to get me far in life. But whatelse I know is that even though your arch rival may be dating a supermodel 18 miles away, nothing is better than when your slightly overweight, smart, mildly amusing soccer mom of a love kicks her ass!

As Whitney Houston sang to Kevin Costner in the epic classic Waterworld, “I will always love you.”
GO STATE.

My heart is eternally yours, tread softly, even though I know
you’ll probably run over it with a bull dozer the second this e-mail is
read.

Signed,

Jai Kumar


16 பின்னூட்டங்கள்:

சீமாச்சு.. Friday, February 13, 2009 11:40:00 PM  

VSK,
பையன் நல்லாவே எழுதியிருக்காரு.. அவர் எழுதிய ஆங்கிலப் பிரதியையும் போடுங்களேன். படிச்சிருவோம்..

சீமாச்சு..

வடுவூர் குமார் Friday, February 13, 2009 11:51:00 PM  

குடுங்க அந்த ஆங்கில பதிவு லின்கையும்,படிச்சிடுவோம்.
எங்கே நடுவில மன்னாரு வர வாசனை தெரிஞ்சாலும் வராம போய்விட்டாரே என்ற ஆதங்கம் இருக்கு.
உங்க காதலையும் அருமையாக சொல்லிட்டீங்க.
இந்தக் காதலர் தினத்தன்னிக்கு, உங்களோட காதலி/மனைவி கையைக் கெட்டியாப் பிடிச்சிகிட்டு, அவங்களை வெளியே கூட்டிகிட்டுப் போயி, நல்ல டின்னர் வாங்கி கொடுங்க!
என்னால முடியாது. :-)

VSK Saturday, February 14, 2009 12:24:00 AM  

போடறேங்க! கொஞ்சம் ஆளுங்க வந்து சொல்லட்டுமேன்னுதான்!

நன்றி!

Unknown Saturday, February 14, 2009 5:53:00 AM  

டாக்டர் பேர் சொல்ல வேண்டாமா? 'மரபணு' உந்த, நன்றாகவே எழுதுகிறார். வாழ்த்துக்கள்.
டைரக்டா படிக்கும்போது அதில் வேறு சில பரிமாணங்களை உணர முடியும். எனவே ஆங்கிலத்தையும் போடுங்கள் ஐயா.

VSK Saturday, February 14, 2009 9:16:00 AM  

எல்லாப் புகழும் என் மகனுக்கே! எனப் பாராட்டிய, திரு. சீமாச்சு, வடுவூர் குமார், மற்றும் சுல்தான் அவர்களுக்கு என் நன்றி.

ஆங்கிலப் பதிவையும் இப்போது இணைத்திருக்கிறேன்.

படித்துவிட்டுச் சொல்லவும்.
நன்றி!

superlinks Saturday, February 14, 2009 9:55:00 AM  

உண்மையில் நீங்கள் எல்லாம் மனிதர்கள் தானா?
ஈழத்தில் தமிழ்மக்களை பூச்சிகளை நசுக்குவது போன்று நம் கண் முன்னாலேயே கூட்டம் கூட்டமாக நசுக்கி இரத்தக்களரியான ஒரு படுகொலையை செய்துவருகிறது சிங்கள பாசிச அரசு.
ஈழத்தமிழர்களை நீங்கள் உங்களுடைய‌ இனம் என்று கூட பார்க்க வேண்டாம், உலகில் நம்முடன் வாழும் சக மனிதர்களாக கூட பார்க்க மறுக்கிறதே அன்பும் கருணையும் பொங்கும் உங்கள் காதல் இத‌யம்!
அடேயப்பா உங்கள் காதல் மிகவும் புனிதமானது தான்.
நீங்கள் எல்லாம் உங்களை படித்த நாகரீக மனிதர்கள் என்று வேறு பீத்திக்கொள்கிறீர்கள், ச்சீ ச்சீ வெட்கமாக இல்லை உங்களுக்கெல்லாம் ?

VSK Saturday, February 14, 2009 11:40:00 AM  

கருத்துக்கு நன்றி நண்பரே!

எனது மற்ர பதிவுகலைப் படித்திருந்தால் இப்படி ஒரு பின்னூட்டம் இட்டிருக்க மாட்டீர்கள்.
ஈழத்தில் நடப்பது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அதற்காக [நீங்கள் உட்பட]எவரும் தங்களது அன்றாட வாழ்க்கையில் எதையும் நிறுத்தவில்லை.

நடப்பது நடக்கும்.

ஏன்? இந்தப் படுகொலைகளை நிறுத்த ஒரு மிக எளிய வழி இருக்கிறதே!
அதைச் செய்யலாமே! [எனக்கூட சிலர் வந்து சொல்லக்கூடும்!]

அது என்னவென நான் உங்கலுக்குச் சொல்ல வேண்டியதில்லை.

எனது பிற பதிவுகளைப் படியுங்கள்!

Unknown Saturday, February 14, 2009 2:52:00 PM  

அந்தந்த மொழிகளில் படிக்கும்போதுதான் அதை முழுவதுமாக ரசிக்க முடிகிறது.
ஆங்கில முன்/பின் நவீனத்துவ எழுத்து. நடையில் தேர்ச்சி. பிள்ளைகள் ஒரு படி... ஒப்புக் கொண்டேயாக வேண்டும். நன்றாய் உற்சாகப்படுத்துங்கள் டாக்டர்.

VSK Saturday, February 14, 2009 6:51:00 PM  

மிக்க நன்றி, நண்பரே!

நானும் அவரை தனியே ஒரு ஆங்கில ‘ப்ளாக்’ ஆரம்பிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

பார்க்கலாம்!

நீங்கள் சொன்னதும் சரியே!

என்னதான் திறமையாக மொழிபெயர்த்தேன் என நினைத்தாலும், அவர் சொன்ன உணர்வு இதில் வெளிப்படவில்லையோ எனும் உணர்வு எனக்கும் இருந்தது உண்மை!

ஏதோ... என்னால் முடிந்தது!!
எனக்கு ஒரு பதிவு போட இது உதவியது!
:))

கோவி.கண்ணன் Sunday, February 15, 2009 11:28:00 AM  

:)

பையனோட லவ் லெட்டரையெல்லாம் போட்டு கலக்கிறிங்க,

மருமக என்ன சொன்னாள் ? எதும் ரெஸ்பான்ஸ் ?

VSK Sunday, February 15, 2009 1:28:00 PM  

//பையனோட லவ் லெட்டரையெல்லாம் போட்டு கலக்கிறிங்க,

மருமக என்ன சொன்னாள் ? எதும் ரெஸ்பான்ஸ் ?//

ஆங்கிலம் புரியுமோ புரியாதோன்னுதான், தமிழ்லியும் போட்டேன்!
அதுக்கப்புறமும் இப்படி ஒரு பின்னூட்டம் இட கோவியாரால் மட்டுமே முடியும்!

அவர் காதல் வயப்பட்டது அவரது கல்லூரி பாஸ்கெட் பால் குழுவிடம்!
அவர்கள் தன்னை ஆசை காட்டி மோசம் செய்த கதையைத்தான் அவர் சுவைபடச் சொல்லி இருக்கிறார்!:))

மீண்டும் ஒருமுறை படிக்கவும்!

இலவசக்கொத்தனார் Sunday, February 15, 2009 2:35:00 PM  

பயமுறுத்தும் பெயர் எதுவும் இல்லையே. தலைவர் என்னை மாதிரி ஆளுங்க பின்னூட்டம் போட வசதியா ஒரு பதிவு போட்டு இருக்காரேன்னு வந்தேன். கடைசியில் அது காப்பி பேஸ்ட்!!

ஜூப்பரு!!

VSK Sunday, February 15, 2009 7:29:00 PM  

அப்படிப் பார்த்தா, இங்கே வருகிற 99% பதிவுகள் எல்லாம் ஒருவகையில் காப்பி&பேஸ்ட்தானே, கொத்ஸ்!

ஜூப்பருன்னு சொன்னதுக்கு நன்றி!

கோவி.கண்ணன் Sunday, February 15, 2009 8:22:00 PM  

//ஆங்கிலம் புரியுமோ புரியாதோன்னுதான், தமிழ்லியும் போட்டேன்!
அதுக்கப்புறமும் இப்படி ஒரு பின்னூட்டம் இட கோவியாரால் மட்டுமே முடியும்!

அவர் காதல் வயப்பட்டது அவரது கல்லூரி பாஸ்கெட் பால் குழுவிடம்!
அவர்கள் தன்னை ஆசை காட்டி மோசம் செய்த கதையைத்தான் அவர் சுவைபடச் சொல்லி இருக்கிறார்!:))

மீண்டும் ஒருமுறை படிக்கவும்!//

என்னது கூடை பந்து டீமுக்கா ? பையனுக்கு மந்திரிச்சி விடுங்கோ. நான் கூட ஒரு மருமகளை அழைத்துவரப் போகிறான் என்றல்லவா நினைத்தேன். ஆங்கில கடிதத்தைப் படிக்கவில்லை மன்னிக்கவும்

VSK Sunday, February 15, 2009 10:22:00 PM  

//என்னது கூடை பந்து டீமுக்கா ? பையனுக்கு மந்திரிச்சி விடுங்கோ. நான் கூட ஒரு மருமகளை அழைத்துவரப் போகிறான் என்றல்லவா நினைத்தேன். ஆங்கில கடிதத்தைப் படிக்கவில்லை மன்னிக்கவும்//

இதைக்கூடவா படிக்கலை கோவியாரே!

//இப்பிடித்தாங்க பண்றாங்க..... எங்க காலேஜ் டீம் [குழு]!!!!!!
அவதாங்க என் காதலி! என்னோட நார்த் கரோலினா ஸ்டேட் யூனிவெர்ஸிடி! {NC State University] //

சரி, விடுவோம்! :))

நாமக்கல் சிபி Tuesday, February 24, 2009 5:02:00 PM  

எனக்கு இப்பவும் பிரியலை!

அப்பாலிக்கா வரேன் சாரே!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP