"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 3
"தனியே... தன்னந்தனியே!" "கைவல்ய உபநிஷத்" - 3
முந்தைய பதிவு இங்கே!
17.
எந்த ஒன்றால் விழித்தல், கனவு காணுதல்,
ஆழ்துயில் என்கிற மூன்று நிலைகளிளும்
ஒளியூட்டப் படுகின்றனவோ
அந்த ப்ரஹ்மன் "நான்" என அறிவாய்
இப்படி அறிந்தவர் எல்லா துயரிலிருந்தும்
விடுபடுகின்றார்
18.
"நானே" சாட்சியும், தூய்மையான தன்னிலை உணர்வும்
என்றும் புனிதமான சதாசிவமாய் இருக்கிறேன்
மகிழ்பவன், மகிழ்வு, மகிழ்வின் பொருள் என்னும்
மூன்றுமாய் மூன்று நிலைகளில் இருப்பதிலிருந்து
வேறுபட்டு இருப்பதுவும் "நானே"!
19.
எல்லாம் பிறந்தது என்னில் இருந்தே
எல்லாம் இருப்பதும் என்னுள் மட்டுமே
எல்லாம் ஒடுங்குவதும் என்னுள்தானே
பன்மை இல்லாத ப்ரஹ்மன் "நானே"!
20.
அணுவிலும் சிறியவன் "நான்"
பிரபஞ்சத்தை விடவும் பெரியவன் "நான்"
மிகவும் அதிசயத் தக்கவன் "நான்"
மிகவும் பழைமையானவன் "நான்"
'புருஷன்' எனச் சொல்லப்படும் ஆண்மை "நான்"
பொன்னார் மேனியனான "நானே" சிவனின் வடிவும் ஆவேன்!
21.
கைகளும் இல்லை; கால்களும் இல்லை எனக்கு!
ஆயினும், எனது சக்தியோ அளப்பரியது!
கண்கள் இல்லாமல் பார்ப்பவன் "நான்"
செவிகள் இன்றியே கேட்பவனும் "நான்"
எல்லாம் தெரிந்தவன் "நான்"
வடிவே இல்லாதவன் "நான்"
எப்போதும் தூய்மையான தன்னிலை உணர்வு "நான்"!
22.
எத்தனையோ மறைகள் இருப்பினும்
அவற்றுள் உணரும் பொருள் "நானே"!
உபநிடதங்களை எழுதியவன் "நானே"!
மறைகளின் பொருளும் "நானே"
மஹிமையோ, இழிவோ "என்னை" ஒன்றும் செய்வதில்லை!
அழிக்க முடியாதவன் "நான்"
பிறப்பு, இறப்பு, உடல், உணர்வு, புத்தி
இவை எதுவுமே "நான்" இல்லை!
23.
நிலம், நீர், தீ, காற்று, வெளி
இவை எதுவுமே "நான்" இல்லை!
இதயக் குகைக்குள் உலாவுகின்ற
அழுக்குகள் எதுவும் இல்லாத,
இரட்டைத்தன்மை இல்லாத,
பிரபஞ்சத்தின் சாட்சியாய்,
இருப்பும், இல்லாததும் இல்லாத,
உயரிய ப்ரஹ்மனை இப்படி அறிவோர்
'அதனை" அடைகிறார்
24.
இப்படி இதனை அறிவதால்,
அடுக்கடுக்காக அலைகடல்போல் வரும்
பிறப்பு, இறப்பு என்னும் துயரம் களைந்து,
"தனியே.. தன்னந்தனியே" என்பதை உணரலாம்!
கைவல்ய உபநிடதம் முற்றிற்று.
****************************
ஜாக்3ரத் ஸ்வப்ன ஸுஷுப்த்யாதி3
ப்ரபஞ்சம் யத் ப்ரகாஷதே
தத்3ப்ரஹ்ம அஹம் இதி ஞாத்வா
ஸர்வ ப3ந்தை4: ப்ரமுச்யதே [17]
த்ரிஷு தா4மஸு யத்3 போ4க்3யம்
போ4க்தா போ4க3ஷ்ச யத்3ப4வேத்
தேப்4யோ விலக்ஷண: ஸாக்ஷீ
சின்மாத்ரோஹம் ஸதா3ஷிவ: [18]
மய்யேவ ஸகலம் ஜாதம்
மயி ஸர்வம் ப்ரதிஷ்ட்டி2தம்
மயி ஸர்வம் லயம் யாதி
தத்3ப்3ரஹ்மாத்3வயம் அஸ்ம்யஹம் [19]
'த்2விதீய க2ண்ட3:'
அணோரணீயான் அஹம் ஏவ தத்3வன்
மஹானஹம் விஷ்வம் அஹம் விசித்ரம்
புராதனோஹம் புருஷோ ஹமீஷோ
ஹிரண்மயோஹம் ஷிவரூபம் அஸ்மி [20]
அபாணிபாதோ3 அஹம் அசிந்த்ய ஷக்தி:
பஷ்யாம்ய சக்ஷு: ஸ ஷ்ருணோம்ய கர்ண:
அஹம் விஜானாமி விவிக்தரூபோ
ந சாஸ்தி வேத்தா மம சித்ஸதா3ஹம் [21]
வேதை3ர் அனேகைர் அஹம் ஏவ வேத்3யோ
வேதா3ந்தக்ருத்3 வேத3 விதே3வ சாஹம்
ந புண்யபாபே மம நாஸ்தி நாஷோ
ந ஜன்ம தேஹேந்த்ரிய பு3த்3தி4ர் அஸ்தி [22]
ந பூ4மிர் ஆபோ ந ச வஹ்னிர் அஸ்தி
ந சாநிலோ மேஸ்தி ந ச அம்பரம் ச
ஏவம் விதி3த்வா பரமாத்மரூபம்
குஹாஷயம் நிஷ்கலம் அத்விதீயம் [23]
அனேன ஞானம் ஆப்னோதி ஸம்ஸாரார்ணவ நாஷனம்
தஸ்மாதே3வம் விதி3த்வைனம் கைவல்யம் பத3மஷ்னுதே
கைவல்யம் பதமஷ்னுத இதி [24]
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
இதி அத2ர்வ வேதே3 கைவல்யோபநிஷத் ஸமாப்தா
*****************************************************
17.
எந்த ஒன்றால் விழித்தல், கனவு காணுதல்,
ஆழ்துயில் என்கிற மூன்று நிலைகளிளும்
ஒளியூட்டப் படுகின்றனவோ
அந்த ப்ரஹ்மன் "நான்" என அறிவாய்
இப்படி அறிந்தவர் எல்லா துயரிலிருந்தும்
விடுபடுகின்றார்
18.
"நானே" சாட்சியும், தூய்மையான தன்னிலை உணர்வும்
என்றும் புனிதமான சதாசிவமாய் இருக்கிறேன்
மகிழ்பவன், மகிழ்வு, மகிழ்வின் பொருள் என்னும்
மூன்றுமாய் மூன்று நிலைகளில் இருப்பதிலிருந்து
வேறுபட்டு இருப்பதுவும் "நானே"!
19.
எல்லாம் பிறந்தது என்னில் இருந்தே
எல்லாம் இருப்பதும் என்னுள் மட்டுமே
எல்லாம் ஒடுங்குவதும் என்னுள்தானே
பன்மை இல்லாத ப்ரஹ்மன் "நானே"!
20.
அணுவிலும் சிறியவன் "நான்"
பிரபஞ்சத்தை விடவும் பெரியவன் "நான்"
மிகவும் அதிசயத் தக்கவன் "நான்"
மிகவும் பழைமையானவன் "நான்"
'புருஷன்' எனச் சொல்லப்படும் ஆண்மை "நான்"
பொன்னார் மேனியனான "நானே" சிவனின் வடிவும் ஆவேன்!
21.
கைகளும் இல்லை; கால்களும் இல்லை எனக்கு!
ஆயினும், எனது சக்தியோ அளப்பரியது!
கண்கள் இல்லாமல் பார்ப்பவன் "நான்"
செவிகள் இன்றியே கேட்பவனும் "நான்"
எல்லாம் தெரிந்தவன் "நான்"
வடிவே இல்லாதவன் "நான்"
எப்போதும் தூய்மையான தன்னிலை உணர்வு "நான்"!
22.
எத்தனையோ மறைகள் இருப்பினும்
அவற்றுள் உணரும் பொருள் "நானே"!
உபநிடதங்களை எழுதியவன் "நானே"!
மறைகளின் பொருளும் "நானே"
மஹிமையோ, இழிவோ "என்னை" ஒன்றும் செய்வதில்லை!
அழிக்க முடியாதவன் "நான்"
பிறப்பு, இறப்பு, உடல், உணர்வு, புத்தி
இவை எதுவுமே "நான்" இல்லை!
23.
நிலம், நீர், தீ, காற்று, வெளி
இவை எதுவுமே "நான்" இல்லை!
இதயக் குகைக்குள் உலாவுகின்ற
அழுக்குகள் எதுவும் இல்லாத,
இரட்டைத்தன்மை இல்லாத,
பிரபஞ்சத்தின் சாட்சியாய்,
இருப்பும், இல்லாததும் இல்லாத,
உயரிய ப்ரஹ்மனை இப்படி அறிவோர்
'அதனை" அடைகிறார்
24.
இப்படி இதனை அறிவதால்,
அடுக்கடுக்காக அலைகடல்போல் வரும்
பிறப்பு, இறப்பு என்னும் துயரம் களைந்து,
"தனியே.. தன்னந்தனியே" என்பதை உணரலாம்!
கைவல்ய உபநிடதம் முற்றிற்று.
****************************
ஜாக்3ரத் ஸ்வப்ன ஸுஷுப்த்யாதி3
ப்ரபஞ்சம் யத் ப்ரகாஷதே
தத்3ப்ரஹ்ம அஹம் இதி ஞாத்வா
ஸர்வ ப3ந்தை4: ப்ரமுச்யதே [17]
த்ரிஷு தா4மஸு யத்3 போ4க்3யம்
போ4க்தா போ4க3ஷ்ச யத்3ப4வேத்
தேப்4யோ விலக்ஷண: ஸாக்ஷீ
சின்மாத்ரோஹம் ஸதா3ஷிவ: [18]
மய்யேவ ஸகலம் ஜாதம்
மயி ஸர்வம் ப்ரதிஷ்ட்டி2தம்
மயி ஸர்வம் லயம் யாதி
தத்3ப்3ரஹ்மாத்3வயம் அஸ்ம்யஹம் [19]
'த்2விதீய க2ண்ட3:'
அணோரணீயான் அஹம் ஏவ தத்3வன்
மஹானஹம் விஷ்வம் அஹம் விசித்ரம்
புராதனோஹம் புருஷோ ஹமீஷோ
ஹிரண்மயோஹம் ஷிவரூபம் அஸ்மி [20]
அபாணிபாதோ3 அஹம் அசிந்த்ய ஷக்தி:
பஷ்யாம்ய சக்ஷு: ஸ ஷ்ருணோம்ய கர்ண:
அஹம் விஜானாமி விவிக்தரூபோ
ந சாஸ்தி வேத்தா மம சித்ஸதா3ஹம் [21]
வேதை3ர் அனேகைர் அஹம் ஏவ வேத்3யோ
வேதா3ந்தக்ருத்3 வேத3 விதே3வ சாஹம்
ந புண்யபாபே மம நாஸ்தி நாஷோ
ந ஜன்ம தேஹேந்த்ரிய பு3த்3தி4ர் அஸ்தி [22]
ந பூ4மிர் ஆபோ ந ச வஹ்னிர் அஸ்தி
ந சாநிலோ மேஸ்தி ந ச அம்பரம் ச
ஏவம் விதி3த்வா பரமாத்மரூபம்
குஹாஷயம் நிஷ்கலம் அத்விதீயம் [23]
அனேன ஞானம் ஆப்னோதி ஸம்ஸாரார்ணவ நாஷனம்
தஸ்மாதே3வம் விதி3த்வைனம் கைவல்யம் பத3மஷ்னுதே
கைவல்யம் பதமஷ்னுத இதி [24]
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:
இதி அத2ர்வ வேதே3 கைவல்யோபநிஷத் ஸமாப்தா
*****************************************************
6 பின்னூட்டங்கள்:
நன்று ஐயா நன்று, ஒன்று மிக்க நன்று.
நன்றி ஜீவாஐயா நன்றி,மிக்க நன்றி.
நல்ல பதிவுகள் சங்கர். தொடருங்கள்.
நன்றி, திவா! தொடர்கிறேன்.
இந்த நிலைக்கு கைவல்யம் என்ற பெயரை வைணவ நூல்கள் சொல்லும். எங்கிருந்து இந்தப் பெயர் வந்தது என்று பார்த்துக் கொண்டிருந்தேன். 'தனியே தன்னந்தனியே என்ற நிலையான கைவல்யம்' என்ற பெயர் இங்கிருந்து தான் வந்திருக்கும் போலிருக்கிறது.
உங்கள் தயவால் இந்த உபநிடதத்தைப் பொருளுடன் இன்னொரு முறை படிக்க இயன்றது. நன்றி எஸ்.கே.
//'தனியே தன்னந்தனியே என்ற நிலையான கைவல்யம்' என்ற பெயர் இங்கிருந்து தான் வந்திருக்கும் போலிருக்கிறது.
உங்கள் தயவால் இந்த உபநிடதத்தைப் பொருளுடன் இன்னொரு முறை படிக்க இயன்றது. நன்றி எஸ்.கே.//
'கேவலம்' என்கிற மூலச் சொல்லில் இருந்து, இந்தக் 'கைவல்யம்' பிறந்தது.
எத்தனையோ விதமாகச் சிந்தித்து இறுதியில் இப்பெயரே பொருத்தம் என வைத்தேன்.... பெரியவர்கள் சொன்னபடி!
நன்றி, குமரன்!
Post a Comment