Sunday, June 22, 2008

"இதுதாண்டா தமிழ்நாடு!"

"இதுதாண்டா தமிழ்நாடு!"



இன்று நான் கேட்ட ஒரு செய்தி!

நான் போற்றும் கர்மவீரர் காமராஜ் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வு.

ஒரு மாணவன், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறான்.

கல்லூரிக்கு விண்ணப்பிக்கிறான்

கிடைக்கவில்லை!

தன் தந்தை... ஒரு எம்.எல். ஏ!!

அதுவும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.!!

தனக்கா சீட் இல்லை?

குமுறுகிறான்.

தந்தையிடம் சென்று முறையிடுகிறான்.

தந்தை முதல்வரிடம் சென்று செய்தியைச் சொல்கிறார்.

விவரத்தைக் கேட்ட முதல்வர், கல்லூரி முதல்வருக்கு தொலை பேசுகிறார்.

முதல்வரிடமிருந்தே அழைப்பு வந்ததைக் கேட்ட முதல்வர் பதறுகிறார்.

'இல்லை ஐயா! 15 இடங்கள்தான் ஒதுக்கப் பட்டிருக்கின்றன. இந்த மாணவன் பதினாறம் இடத்தில்... அதான்...' எனப் பணிவாகத் தெரிவிக்கிறர்.

கல்வி அமைச்சருக்கு அடுத்த தொலைபேசி.

அவரும் 15 இடங்கள்தான் என உறுதிப் படுத்துகிறார்.

இதனால் நல்ல திறமையான மாணவர்கள் வீணாக்கப்படுகிறார்களே, என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்கிறார்.

மாலை நேரக் கல்வித் திட்டம் பிறக்கிறது.

இவர்களையும் அரவணைத்துக் கொள்ள, இடங்களின் ஒதுக்கீடு இப்போது முப்பதாக உயர்கிறது.

எம்.எல்.ஏ. ஐ அழைக்கிறார்.

'சீட்டு இப்போ முப்பதா அதிகப் படுத்தியாச்சு. ஒன் பையன் பதினாறுன்னு நினைச்சு சீட்டு உறுதின்னு நெனைச்சுக்காத. விண்ணப்பிக்கச் சொல்லு. முப்பதுக்குள்ள வந்தா கிடைக்கும். சரியா!' என்கிறார்.

தமிழகம் இப்படியும் ஒரு காலத்தில் இருந்தது என்பதைச் சொல்லவே இப்பதிவு!

35 பின்னூட்டங்கள்:

Subbiah Veerappan Sunday, June 22, 2008 2:53:00 PM  

////தமிழகம் இப்படியும் ஒரு காலத்தில் இருந்தது என்பதைச் சொல்லவே இப்பதிவு! ////

அது தமிழகத்தின் பொற்காலம்!
அதை நினைத்துப் பெரு மூச்சு விடலாம்
அவ்வளவுதான் வி.எஸ்.கே சார்!

Unknown Sunday, June 22, 2008 4:22:00 PM  

மக்கள் நலன், நீதி, நேர்மை என்று உருப்படாத தத்துவங்களை பேசிக்கொண்டு,தானும் பிழைக்காமல் கட்சிக்காரனையும் பிழைக்க விடாமல், சாகும்போது சட்டைபையில் நாற்பது ரூபாயுடன் செத்தவரை பற்றி எழுதி என்ன பலன் எஸ்கே? ஆட்சிக்கு வந்தவுடன் உலகின் பெரும்பணக்காரர் பட்டியலில் சேர்ந்தவர்களை பற்றி எழுதினால் எதாவது பலனுண்டு.

rapp Sunday, June 22, 2008 4:26:00 PM  

நான் தவறை சரியென்று சொல்லவரவில்லை. ஆனால் இத்தகைய மாற்றம் உலகத்தின் எல்லா மூலையிலும் நீக்கமற நிரஞ்சிருக்குன்னு நினைக்கிறேன். காமராஜர் காலத்திலும் அதற்கு முந்தைய காலங்களை பற்றி இப்படித்தான் கூறிக் கொண்டிருந்திருப்பார்கள். அதனால் எவ்விடத்திலும் ஒரு வகை நிறைவை காண்பதே நம்மை நேர் பாதையில் செலுத்தும் என்பது என் கருத்து.

துளசி கோபால் Sunday, June 22, 2008 6:21:00 PM  

நானும் அம்மா சொன்ன ஒரு சம்பவம் சொல்லிக்கவா?

அப்ப அம்மா மேலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர். காலரா ஊசி போடும் சீஸனில் ஒரு சேரிக்குப் போயிருந்தப்ப, ஏழ்மை நிலையில் இருந்த ஒரு வயசான பெரியவர் வரிசையில் வந்து ஊசிப் போட்டுக்கிட்டாராம். அவர் பெயரைப் பதிவு செய்யக் கேட்டப்ப, வெள்ளைக்கக்கன்னு சொல்லி இருக்கார்,
பக்கத்துலே இருந்தவங்க சொன்னாங்களாம் கக்கனோட அப்பான்னு.

அம்மா ஆடிப்போயிட்டாங்க. அப்ப கக்கன் அவர்கள் சுகாதார மந்திரி!!!

இலவசக்கொத்தனார் Sunday, June 22, 2008 6:24:00 PM  

அட என்னங்க இது.

இந்தாப்பா தம்பி அப்படின்னு அந்த எம்எல்ஏவைக் கூப்பிட்டு நீ ஒரு காலேஜ் திறந்துக்க. உம் பையனுக்கு ஒரு சீட் குடுத்துக்க. அப்படியே இன்னும் 200 பேருக்குக் குடு. நாட்டுல எல்லாம் நல்லாப் படிக்கட்டும். எனக்கு ஒரு 4 பெரிய சூட்கேஸ் குடுன்னு சொல்லுவாங்களா இப்படி 30 சீட் 10 சீட்டுன்னு பேசிக்கிட்டு. என்ன பொற்காலமோ!!

VSK Sunday, June 22, 2008 6:39:00 PM  

யாருக்குப் பலனுண்டு எனச் சொல்கிறீர்கள் செல்வன்?

:)

VSK Sunday, June 22, 2008 6:42:00 PM  

//அதனால் எவ்விடத்திலும் ஒரு வகை நிறைவை காண்பதே நம்மை நேர் பாதையில் செலுத்தும் என்பது என் கருத்து.//
ஒப்புக் கொள்கிறேன் திரு. 'ராப்'.

இதைக் கேட்டவுடன் பதியத் தோன்றியது.

நன்றி.

VSK Sunday, June 22, 2008 6:45:00 PM  

அவ்வளவுதான் நாம் செய்ய முடியும் ஆசானே!!

வஞ்சப்புகழ்ச்சியாகச் சொல்வதாக நினைத்து, இந்தத் தலைமுறையினர் சிலர் சொல்லிய பதில்களைக் கீழே படியுங்கள்.

நமது நோக்கே எப்படி மாறியிருக்கிறது, மாற்றப்பட்டிருக்கிறது எனப் புரியும்

VSK Sunday, June 22, 2008 6:49:00 PM  

திரு. கக்கன் அவர்களைப் பெற்றியும் பல நிகழ்வுகள் சொல்ல்லக் கேட்டிருக்கிறேன் டீச்சர்.

பதவி போனதும் பஸ் ஸ்டாண்டில் நின்ற கதை கூட உண்டு.

நன்றி..

VSK Sunday, June 22, 2008 6:50:00 PM  

//இந்தாப்பா தம்பி அப்படின்னு அந்த எம்எல்ஏவைக் கூப்பிட்டு நீ ஒரு காலேஜ் திறந்துக்க. உம் பையனுக்கு ஒரு சீட் குடுத்துக்க. அப்படியே இன்னும் 200 பேருக்குக் குடு. நாட்டுல எல்லாம் நல்லாப் படிக்கட்டும். எனக்கு ஒரு 4 பெரிய சூட்கேஸ் குடுன்னு சொல்லுவாங்களா இப்படி 30 சீட் 10 சீட்டுன்னு பேசிக்கிட்டு. என்ன பொற்காலமோ!!//

விளையாட்டாகவோ, வேதனையாகவோ நீங்கள் சொல்லி இருந்தாலும், இப்படி எல்லாம் நம் பார்வையை மாற்றியது எது, கொத்ஸ்?

Kavinaya Sunday, June 22, 2008 7:42:00 PM  

//எவ்விடத்திலும் ஒரு வகை நிறைவை காண்பதே நம்மை நேர் பாதையில் செலுத்தும் என்பது என் கருத்து.//

வழிமொழிகிறேன்.

கோவி.கண்ணன் Sunday, June 22, 2008 8:38:00 PM  

//காமராஜர் காலத்திலும் அதற்கு முந்தைய காலங்களை பற்றி இப்படித்தான் கூறிக் கொண்டிருந்திருப்பார்கள். அதனால் எவ்விடத்திலும் ஒரு வகை நிறைவை காண்பதே நம்மை நேர் பாதையில் செலுத்தும் என்பது என் கருத்து//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்........

இதுதான் பல பெருசுங்களுக்கு புரிவதே இல்லை.

:)

Subbiah Veerappan Sunday, June 22, 2008 9:33:00 PM  

////ஆட்சிக்கு வந்தவுடன் உலகின் பெரும்பணக்காரர் பட்டியலில் சேர்ந்தவர்களை பற்றி எழுதினால் எதாவது பலனுண்டு.////

hired தொண்டர்கள் வீட்டிற்கு ஆட்டோக்களில் வந்து போடுவார்கள் (மாலைகள் அல்ல!)

Subbiah Veerappan Sunday, June 22, 2008 9:37:00 PM  

/////Blogger இலவசக்கொத்தனார் said...
அட என்னங்க இது.
இந்தாப்பா தம்பி அப்படின்னு அந்த எம்எல்ஏவைக் கூப்பிட்டு நீ ஒரு காலேஜ் திறந்துக்க. உம் பையனுக்கு ஒரு சீட் குடுத்துக்க. அப்படியே இன்னும் 200 பேருக்குக் குடு. நாட்டுல எல்லாம் நல்லாப் படிக்கட்டும். எனக்கு ஒரு 4 பெரிய சூட்கேஸ் குடுன்னு சொல்லுவாங்களா இப்படி 30 சீட் 10 சீட்டுன்னு பேசிக்கிட்டு. என்ன பொற்காலமோ!!/////

அதானே!உங்களுக்கு சீட் வாங்கிக்கொடுத்தால் மக்கள் மன்றத் தேர்தலில் நிற்கத்தாயாரா?
எந்தத் தொகுதி வேண்டும்? ப.சி தெரிந்தவர்தான்!

VSK Sunday, June 22, 2008 10:13:00 PM  

//தமிழகம் இப்படியும் ஒரு காலத்தில் இருந்தது என்பதைச் சொல்லவே இப்பதிவு!//

இந்த கடைசிவரியைப் படிக்க வில்லையோ கவிநயா? :))

கோவி.கண்ணன் Sunday, June 22, 2008 10:52:00 PM  

//காமராஜர் காலத்திலும் அதற்கு முந்தைய காலங்களை பற்றி இப்படித்தான் கூறிக் கொண்டிருந்திருப்பார்கள். அதனால் எவ்விடத்திலும் ஒரு வகை நிறைவை காண்பதே நம்மை நேர் பாதையில் செலுத்தும் என்பது என் கருத்து.//

நெத்தியடி.....!
:)

VSK Sunday, June 22, 2008 11:55:00 PM  

//நெத்தியடி.....!:)//

அடிக்கறவங்க அடிச்சுக்கட்டும்!
நான் ஒரு நிகழ்வை மட்டுமே பதிந்தேன்.
குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுத்தால், நான் ஒண்னும் பண்ண முடியாது!
நிறைவாய் வாழ வாழ்த்துகள்!!

கோவி.கண்ணன் Sunday, June 22, 2008 11:58:00 PM  

//VSK said...

அடிக்கறவங்க அடிச்சுக்கட்டும்!
நான் ஒரு நிகழ்வை மட்டுமே பதிந்தேன்.
குத்தமுள்ள நெஞ்சு குறுகுறுத்தால், நான் ஒண்னும் பண்ண முடியாது!
நிறைவாய் வாழ வாழ்த்துகள்!!//

வீஎஸ்கே ஐயா,

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கட்டும்,

பற்ற வைக்க முயற்சிக்கிற பரட்டைகள் செயல் அதைவிட கேவலமானது தானே. பற்றவைக்கிற நெஞ்சும் பரபரப்பாக இருக்கும்.

VSK Monday, June 23, 2008 12:01:00 AM  

//பற்ற வைக்க முயற்சிக்கிற பரட்டைகள் செயல் அதைவிட கேவலமானது தானே. பற்றவைக்கிற நெஞ்சும் பரபரப்பாக இருக்கும்.//

அதான் நல்லாவே தெரியுதே கோவியாரே! சொல்லணுமா என்ன!:))

மீ.அருட்செல்வம், மாநில செயலாளர். Monday, June 23, 2008 12:32:00 AM  

"////தமிழகம் இப்படியும் ஒரு காலத்தில் இருந்தது என்பதைச் சொல்லவே இப்பதிவு! ////

இன்னும் கொஞ்சம் பின்னோக்கி கற்காலத்தில பாத்தீங்கன்னா மனிதனுக்கு ஆசையே கிடையாது.துணிமணி கிடையாது. இந்த எம்.எல்.ஏ, எம்.பி.காலேஜ் சீட்டுன்னு எதுவுமே கிடையாது.

காமராஜர் காலத்த விட இந்த கற்காலம் பொற்காலம்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?

We The People Monday, June 23, 2008 5:31:00 AM  

//அதனால் எவ்விடத்திலும் ஒரு வகை நிறைவை காண்பதே நம்மை நேர் பாதையில் செலுத்தும் என்பது என் கருத்து//

rapp சார் ஜெயலலிதா ஆட்சியில் அந்த வகை நிறைவை கண்டாரா??

திவாண்ணா Monday, June 23, 2008 7:13:00 AM  

இன்னும் கொஞ்ச நாள் போனால் இந்த பதிவை படிச்சிட்டு ரீல் விடறார்ன்னு நினைப்பாங்க.

எல்லா கால கட்டத்திலும் புலம்பல்கள் இருந்து இருக்கின்றன. இனியும் இருக்கும். அதற்காக
கடந்த காலத்தை பார்ப்பதை தவறாக சொல்ல முடியாதே! எப்படியெல்லாம் இருந்தோம் என்று தெரியும்போது எப்படி இருக்க வேண்டும் என்றும் தெரியவருமே!

Unknown Monday, June 23, 2008 8:13:00 AM  

பெருந்தலைவருடைய இதுபோன்ற ஒவ்வாரு நடவடிக்கையையும் படிக்கும்போதும் கேட்கும்போதும், இப்படியும் ஒரு மனிதரா? என வியப்பாக இருக்கிறது.

நேர்மை, மனித நேயம் முதலிய நற்பண்புகள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய வியப்பான பொருட்களாகிப் போனதுதான் கொடுமை.

VSK Monday, June 23, 2008 8:47:00 AM  

//காமராஜர் காலத்த விட இந்த கற்காலம் பொற்காலம்னு நான் நினைக்கிறேன். நீங்க என்ன சொல்றீங்க?//

நம்ம தலைமுறையிலேயே இத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைச் சொல்ல மட்டுமே இப்பதிவு. கற்காலத்தைப் பொற்காலமெனச் சொல்ல நான் அங்கு இருந்ததில்லை. நன்றி.

Anonymous,  Monday, June 23, 2008 9:36:00 AM  

//நம்ம தலைமுறையிலேயே இத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைச் சொல்ல மட்டுமே இப்பதிவு. கற்காலத்தைப் பொற்காலமெனச் சொல்ல நான் அங்கு இருந்ததில்லை. நன்றி.//

சார்,

அப்படியே அந்த காலத்தில் அக்கிரஹார தெருக்களில் தீண்டத்தகாதவர் நுழைய முடியாது, தற்பொழுது எவன் வேண்டுமானாலும் போகலாம் என்பது பற்றியும் எழுதுங்க. நிகழ்வுதானே.

VSK Monday, June 23, 2008 9:54:00 AM  

நான் எதை எழுதவேண்டும் என எனக்கு அறிவுறுத்தலைத் தவிர்த்து, அதை நீங்களே செய்யலாமே, திரு. அம்மாஞ்சி.
ஒரு நிகழ்வைத் தொலைக்காட்சியில் பார்த்தேன். மனதைத் தொட்டது. அதைப் பதிந்தேன். அதற்கு இவ்வளவு காழ்ப்புணர்வா? வருத்தமாக இருக்கிறது ஐயா.
சொல்வதை விடுத்து, உள்குத்து வைத்து எழுதும் ரகத்தைச் சேர்ந்தவன் நானல்லன் என்பது என் பதிவுகளைப் படித்திருந்தால் தெரியும். அதை விடுத்து, இதற்கு சாதி முத்திரை குத்தி, தங்களது உணர்வுகளைக் காட்டிக் கொள்ள ஒரு வடிகாலாக பயன்படுத்த வேண்டாம். ஒருவரைப் போற்ற மனமில்லையெனில் பேசாமல் போகலாமே! இங்கு எவரையும் குறை கூற இப்பதிவு எழுதப்படவில்லை என்பதைத் தாழ்மையுடன் சொல்லிக் கொள்கிறேன்.
'காலம்' மாறுது.... மாறும். அப்போது சில நிகழ்வுகள்.... அதுவும் என் கவனத்துக்கு வரும்போது, எனக்கு சரியெனப் பட்டால் பதிவேன். நன்றி.

முகவை மைந்தன் Monday, June 23, 2008 10:47:00 AM  

எதற்கு உங்களை ஆ, ஊனா உள்குத்துன்னு சொல்றாங்களோ? இல்ல, செல்லமா வம்பிழுக்குறாங்களா? உங்கள் பதிவுகள் நான் வாசித்த வரை பொதுவான தளத்தில் தான் இருக்கிறது. மயிலை மன்னாரு, பாரதியார் பாடல்கள்... அருமை ஐயா! தொடர்ந்து எழுதுங்கள். நான் இப்பொழுது தான் உள்ளே நுழைந்திருக்கிறேன். விரைவில் இடுகைகளைப் படித்து பின்னூட்டமிடுகிறேன்.

VSK Monday, June 23, 2008 11:10:00 AM  

//உங்கள் பதிவுகள் நான் வாசித்த வரை பொதுவான தளத்தில் தான் இருக்கிறது. மயிலை மன்னாரு, பாரதியார் பாடல்கள்... அருமை ஐயா! தொடர்ந்து எழுதுங்கள்.//

ஆறுதலான மொழிகளுக்கு என் மனமார்ந்த நன்றி, திரு. முகவை மைந்தன்1

We The People Monday, June 23, 2008 11:44:00 AM  

என் பின்னூட்டம் மட்டுறுந்த்தப் பட்டிருக்கிறதா?

VSK Monday, June 23, 2008 12:02:00 PM  

//என் பின்னூட்டம் மட்டுறுந்த்தப் பட்டிருக்கிறதா?//

இல்லையே. இப்போதுதான் கவனித்தேன். பிரசுரித்திருக்கிறேன். மன்னிக்கவும்.

VSK Tuesday, June 24, 2008 8:51:00 PM  

//பெருந்தலைவருடைய இதுபோன்ற ஒவ்வாரு நடவடிக்கையையும் படிக்கும்போதும் கேட்கும்போதும், இப்படியும் ஒரு மனிதரா? என வியப்பாக இருக்கிறது.

நேர்மை, மனித நேயம் முதலிய நற்பண்புகள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய வியப்பான பொருட்களாகிப் போனதுதான் கொடுமை.//

இதுதாங்க! இதை மட்டுந்தாங்க நான் சொல்ல வந்தேன்.
அழகா புட்டு வைச்சுட்டீங்க திரு. சுல்தான்.

மனித நேயம் மறந்து போனதேன்?

சந்திரமௌளீஸ்வரன் தமிழ்ப் பக்கம் Sunday, June 29, 2008 9:58:00 AM  

காமராஜர் முதல்வராக இருந்த சமயம் அவருக்கு ஒரு முறை பாதுகாப்பு பணியாற்றிய காவலர் ஒருவர் சொன்ன சம்பவம்

திருச்சியில் ஓர் ஓய்வு இல்லத்தில் காமராஜர் தங்கியிருக்கிறார்.. இரவாகிறது.. அவரைப் பார்க்க வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டனர்.. காமராஜர் இரவு உணவுக்குப்ப்பின் உறங்கப் போய்விட்டார்.

காலையில் அவரை அறையில் காணவில்லை.. பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் பதற்விட்டார்.. தேடினார்

அரசு ஓய்வு விடுதியின் வெளியே கட்டிடப் பணிக்காக குவித்து வைக்கப் பட்டிருந்த மணலில் காமராஜர் நிம்மதியாக உறங்குவதைப் பார்த்தார்.. மெதுவாக் கிட்டே போய் அவரை எழுப்பி “ அய்யா என்ன இது இங்கே வந்து படுத்திருக்கிறீர்கள்” என கேட்டார்
அதற்கு காமராசர் , “ ஆமா அந்த குளிர் மெசின நீ பாட்டு போட்டுட்டு போய்ட்டே எப்படி நிறுத்தனும்னு தெரியல.. குளிர் தாங்கல வெளியில வந்து படுத்துட்டேன்”

VSK Sunday, June 29, 2008 11:10:00 AM  

ஒரு முதல்வரின் விஞ்ஞான அறிவின்மையை இது காட்டுவதாக இருந்தாலும், அவரது எளிமையும், அடுத்தவரைத் தொந்தரவு படுத்த விரும்பாத நற்பண்பும் இதில் நன்றாகத் தெரிகிறது!

நன்றி திரு. 'நலம் பெறுக'

BalajiS Monday, June 30, 2008 11:10:00 PM  

For those who want to be "content"with the present should not read HISTORY or worry about the FUTURE.

Please listen to the foll. speech by Nellai Kannan

http://youtube.com/watch?v=n-ekvU7lyZE&feature=related

VSK Tuesday, July 01, 2008 12:39:00 AM  

உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை திரு. பாலாஜி!@

இதுதாங்க தமிழ்நாடு!!

நன்றி, நன்றி, நன்றி!!!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP