"தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்"
"தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள்"
தமிழ்ப் பெயரில் தலைப்பு வைத்தாலே வரிவிலக்கு தந்திருக்கும் தமிழக முதல்வரின் கவனத்துக்கு!!
முதன் முதலாய் [இப்படிச் சொல்லலாமோ எனத் தெரியவில்லை! ஏனெனில், நான் கூறவிருக்கும் ஒரு முறைகேடு[ட்ரெண்ட்!!] ]தமிழக திரைப்பட வரலாற்றில் சரித்திரப் படங்களைத் தவிர்த்துப் பார்த்தால், எல்லாத் திரைப்படங்களிலும் ஆங்கிலச் சொற்கள் எப்படியாவது ஒருவகையில் இடம் பெறுவது என்பதே!
இந்தவொரு சூழ்நிலையில், இங்கிருக்கும் நிலைமையினில், இன்னும் வரா "வாழ்த்துகள்" என்கின்ற திரைப்படத்தை பார்த்தேன்!
படம் என்கின்ற முறையில், இது ஒரு சிறந்த கருத்தைச் சொல்லுகின்ற படம்!
அதை விட என்னைக் கவர்ந்த ஒரு அம்சம், இது முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே சொல்லப்பட்ட ஒரு படம் என்பது!
ஆமாம் ஐயா! நம்புங்கள்! ஒரு சொல் கூட உரையாடலிலோ, பாடலிலோ தமிழல்லாச் சொல்லெதுவும் நானிங்கு காணவில்லை!
இப்படியோர் படத்தினை உங்களுக்கெல்லாம் பரிந்துரைக்கின்றேன்!
தமிழ், தமிழ், எனவும், தமிழ் துரோகி எனவும் காலத்தைச் செலவிடும் நண்பர்களே!!
இப்படத்தைப் பாருங்கள்!
நண்பர்களுக்குச் சொல்லுங்கள்!
இதுவே தமிழை வளர்க்க வைக்கும் உங்கள் பணி!
மற்றவரைப் பழித்துத் தமிழ் வளராது!
தமிழைப் போற்றியே தமிழ் வளரும்!
சீமானைப் போற்றுங்கள்!
இந்தப் படத்தை ஒரு வெற்றிப் படமாக்குங்கள்!
பிறகு வந்து பேசுங்கள்!
தமிழக முதல்வரே!
இதற்கு முழு வரிவிலக்கு கொடுங்கள்!
இதனையே இந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் படமாகத் தெரிவு செய்து இப்போதே[இது ஜனவரி என்பதை மிகவே அறிவேன்!!] இந்த ஒரு காரணத்துக்காகவே இப்போதே அறிவியுங்கள்!
செய்வீர்களா?
நம்புகிறேன்!
29 பின்னூட்டங்கள்:
migavum sariyana karuthu.
vari vilaku vendumenil, thalaipil mattum pothathu. Padam muzhuvathum iruka vendum.
edho thamizhil solla mudiyatha marunthu peyargalo, viyathigal peyaro parava illai. Makkaluku puriya vendum.
athai vittuvu cool.. ool sollara padathukellam vari vilakku.
மிகவும் சரியான கருத்து.
//வரி விலக்கு வேண்டுமெனில், தலைப்பில் மட்டும் போதாது. படம் முழுதும் வேண்டும்.
ஏதோ தமிழில் சொல்ல முடியாத மருந்து பெயர்களோ, வியாதிகள் பெயரோ பரவாயில்லை.
மக்களுக்குப் புரிய வேண்டும்.
அதை விடுத்து 'கூல்' ...ஊல் சொல்ற படத்துக்கெல்லாம் வரி விலக்கு.//
நன்றி அனானியாரே!
சொல்லில் செயலில் சொலிக்கும் முயற்சியை
கல்லில் அரசே எழுது.
என்று சொல்லும் நண்பரை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன், வழிமொழிகிறேன்.
என்னவொரு அழகிய தமிழ் வாழ்த்து!!
மிகவும் மனமகிழ்ந்தேன் ஓகையாரே!
அடிக்கடி நிறைய எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டும் என வேண்டுகிறேன்.
'இலக்கணம்' என்று ஒரு படம் வந்ததே. பார்த்தீர்களா?
ஆங்கிலக் கலப்பில்லாமல் நல்ல தமிழில் வசனங்கள் அமைந்த படம்.
( அட! நானும் தமிழில் எழுதிவிட்டேன்,பாருங்கள்!)
அதையும் பார்த்தேன் டீச்சர்!
ஆனால், இது உட்கார்ந்து பார்க்கப்படக்கூடிய படமாகவும் இருந்தது!
மேலும், நான் சொல்வது 2008 பரிந்துரைக்கு!;))
[அப்பாடா! சமாளிச்சுட்டேன்!:))]
டீச்சர் என்ற ஆங்கில வார்த்தையை உபயோகித்து விட்டீர்கள். நீண்ட நேரம் கழித்து என் மனைவி சொன்ன பிறகுதான் எனக்கு உறைத்தது.
தமிழ் தமிழ் என அலறும் திராவிட கட்சிகள் அவர்களின் தொலைகட்சி பெயர்களையும் நிகழ்ச்சிகளயும் தூய தமிழில் வழங்கட்டும்.
சீமானைத்தான் போற்றச் சொன்னேன், திரு. கால்கரி சிவா!
எனக்கு ஒரு விருதும் வேண்டாம் சாமி!
அதான் எனக்கு ஏற்கெனவே ஒரு பட்டம் கொடுத்திட்டாங்களே!:))
அட! நம்ம கால்கரி சிவா வந்துருக்காரே.
இந்தப் பக்கம் பார்த்து ரொம்ப நாளாச்சு. நலமா சிவா?
விஎஸ்கே, கோச்சுக்காதீங்க. உங்க வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு ஒரு நலம் விசாரிப்புதான்:-))))
/ஆமாம் ஐயா! நம்புங்கள்! ஒரு சொல் கூட உரையாடலிலோ, பாடலிலோ தமிழல்லாச் சொல்லெதுவும் நானிங்கு காணவில்லை!/
ஆங்கிலச்சொல் இல்லாத படம் என்று சொல்லுங்கள்.திசைசொல்லை பயன்படுத்தாமல் தனித்தமிழிலா எடுத்தார்கள்?
/இதற்கு முழு வரிவிலக்கு கொடுங்கள்!
இதனையே இந்த ஆண்டின் சிறந்த தமிழ்ப் படமாகத் தெரிவு செய்து இப்போதே[இது ஜனவரி என்பதை மிகவே அறிவேன்!!] இந்த ஒரு காரணத்துக்காகவே இப்போதே அறிவியுங்கள்!/
நீங்கள் கேட்காவிட்டாலும் முழு வரிவிலக்கு கண்டிப்பாக அனைத்து தமிழ்படத்துக்கும் கொடுத்தது போல் இதற்கும் கொடுத்திருப்பார்கள்.
விருதுக்கும் பொற்கிழிக்கும் எல்லாம் ஐயா ஆட்சியில் பஞ்சம் இல்லை. கண்டிப்பாக கொடுப்பார்கள்.இன்று நடிகர் சந்திரசேகருக்கு கூட கொடுத்தார்கள்.இவருக்கு கொடுப்பதில் என்ன தடை?
அட! என்னங்க! முறைப்படி நானே செஞ்சிருக்கணும் அதை!
ஒரு நல்ல ஆசிரியையா[தமிழ்! தமிழ்!!] நீங்க எனக்கு சொல்லாம சொல்லி விளங்க வைச்சிட்டீங்க!
நன்றி!
வாங்க திரு.சிவா!:))
//ஆங்கிலச்சொல் இல்லாத படம் என்று சொல்லுங்கள்.திசைசொல்லை பயன்படுத்தாமல் தனித்தமிழிலா எடுத்தார்கள்?//
எப்படீங்க இப்படியெல்லாம் யோசிக்கறீங்க!
நீங்க ச்சொல்ற மாதிரி சொன்னா, மற்ற மொழிச் சொற்கள் இருப்பதாகக்கூட பொருள் வருமே!
இதில் எல்லாமே தமிழில்தான் இருந்தன. அது திசைச்சொல்லா என்பதை அறிஞர்கள்தான் பார்த்துச் சொல்லவேண்டும்.
மதிப்பெண், பயணச்சீட்டு எல்லாம் தமிழாகத்தான் தெரிந்தன எனக்கு!
மார்க், டிக்கட் என்று வந்திருந்தால் எவரும் தவறாகக் கொண்டிருக்க மாட்டார்கள் அந்தக் காட்சியில்.
கருத்துக்கு நன்றி அனானியாரே!
//சீமானைப் போற்றுங்கள்!
இந்தப் படத்தை ஒரு வெற்றிப் படமாக்குங்கள்!
பிறகு வந்து பேசுங்கள்! //
மாதவன் நடித்து(?) இருக்காவிடில், சீமானை போற்றி வெற்றிப்படம் ஆக்கலாம்.
மாதவனையும்{!!!!????????] தமிழ்வசனம் பேச வைத்ததற்காகவே இதனை ஒரு வெற்றிப் படமாக்க வேண்டும்!
மற்றவர்{????????%%%%%%%********] இப்படத்தில் நடிக்க மறுத்த போதும் இதில் நடித்த மாதவனைப் போற்றி அவரைச் சிறந்த நடிகர் என்வும் அறிவிக்க வேண்டும்!!!!!!!!!!!!!!!
மிகவும் முறையான வேண்டுகோள் எஸ்.கே!
சரியான நேரத்தில் முன் வைத்துள்ளீர்கள்! முதலில் உங்களுக்கு "வாழ்த்துக்கள்"!
"வாழ்த்துக்கள்" படத்தின் உரையாடல் (வசனம்), செய்தவர் யாருங்க? சீமானே தானா?
சீமானுக்கு நம் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள்!
அரசு வரி விலக்குதோ இல்லையோ, நாங்கள் வரி விலகாது பார்க்கிறோம்!
அது சரி,
படத்தில் "நம்ம" பாவனா கயல்விழியா நடிச்சி இருக்காங்க! அவங்கள பத்தி ஒன்னும் சொல்லலைன்னாலும் ஒரு புகைப்படமாச்சும் போட்டிருக்கலாம்! :-)))
நன்றி ரவி!
வாழ்த்துக்கள் இல்லை! வாழ்த்துகள்!
"க்" இல்லை!
தவறாது பாருங்கள்!
நல்ல படம் இது... முதல் 10 நிமிடப் பிராச்சாரத்தைத் தவிர்த்துப் பார்த்தால்!
:))
பதிவும் பதிவு கூறும் செய்தியும் அரௌமை. பாராட்டுதலுக்குரியது. நல்வாழ்த்துகள். பல ஆண்டுகளுக்கு முன்னரே எனது துணைவியார் ( ஓய்வு பெற்ற தலைமைத் தமிழாசிரியை) வாழ்த்துகள் எழுதும் போது "க்" போடக் கூடாது எனக் கூறினார். மனைவி சொல்லே மந்திரமாக இன்று வரை அதைக் கடைப்பிடிக்கிறேன். ஆனால் என்னைத்தவிர, ( ஏன் உங்களையும் தவிர) மற்றவர்கள் எல்லாம் "க்" போட்டுத்தான் எழுதுகிறார்கள், இராம.கி அவர்கள் கூட இரண்டும் சரியெனக் கூறியதாக நினைவு. ம்ம்ம்
துளசி வாழ்த்து(க்)கள் என எழுதுவார்
நல்ல கருத்து.
நன்றி திரு. கோவை சிபி!:))
எதுக்கு வரி விலக்கு வழங்கணும்? இப்போ தலைப்பு வெச்சா வரி விலக்கு என்பதையும் தடை செய்யணும். சினிமா ஒரு வியாபாரம். அதில் வரும் வருமானத்துக்கு வரி கட்டணும், இங்க என்ன பொது சேவையா நடக்குது வரி விலக்கு தர?
என்ன இருந்தாலும் மாச சம்பளம் வாங்கற நமக்கு ஏது வரி விலக்கு? இதெல்லாம் தேவை இல்லாத சமாச்சாரம். இந்த மாதிரி மேட்டருக்கு எல்லாம் வரி விலக்கு தேவை இல்லை என்பதே என் கருத்து.
இதெல்லாம் தமிழ் வளர்ச்சி அடைவதற்கான வழி இல்லை. அதுக்கு உண்டான வழிகளில் பணம் செலவழிச்சா போதும்.
ஆங்கில கலப்பு இல்லாமல் படம் எடுத்தவருக்கு என் வாழ்த்துகள். (நாங்களும் நம்ம முதல்வர், இந்த படப்பெயரில் க் வரக்கூடாதுன்னு சொன்ன உடனே மாறிட்டோமில்ல!)
நடைமுறைக்கு ஒவ்வாத கருத்து உங்களது கொத்ஸ்!
வரிவிலக்கு இப்போது அமலில் இருக்கும் ஒன்று.
அதை வேண்ண்டாம் எனச் சொல்ல நமக்கு உரிமை உண்டு... அதிகாரமில்லை.
இந்தப் படம் ஒரு வரவேற்கவேண்டிய படம் என்னும் கருத்திலேதான் இதனைப் பதிந்தேன்.
கருத்துக்கு நன்றி.
பல்லாயிரக்கணக்கில் முதல் போட்டு இப்படி ஒரு படம் எடுப்பவருக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்பது என் கருத்து.//// நல்லதொரு கருத்தை நம் தமிழில் "மட்டுமே" சொல்ல விழைவதால்!
"க்" வரக்கூடாது என்பதே என் கருத்தும்!:))
//ஆமாம் ஐயா! நம்புங்கள்! ஒரு சொல் கூட உரையாடலிலோ, பாடலிலோ தமிழல்லாச் சொல்லெதுவும் நானிங்கு காணவில்லை!
//
பதிவுக்கு நன்றி!
இதுகுறித்த போட்டி ஒன்றினை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம். அதுகுறித்த பதிவு இங்கே :
http://pstlpost.blogspot.com/2008/01/blog-post_23.html
இந்த வரிவிலக்கு சமாச்சாரம், ரொம்ப சிறு பிள்ளைத் தனம்.
என்னக் கேட்டா, தமிழக அரசின், மிகக் கேவலமான திட்டம் இதுதான்.
கல்லால, காச சேர வழி பாக்காம, இப்படி தொடச்சு காலியாக்க வழி பண்றது, நெம்பத் தப்பு.
தமிழ் வளக்க இதுவா வழி?
ஹைய்யோ ஹைய்யோ! :(
இது போன்ற திரைப்படங்கள் துபை வர நீண்ட நாட்களாகும் என நினைக்கிறேன்.
'வாழ்த்துகள்' வந்தால் பார்க்க ஆசை.
முழுதும் தமிழிலேயே இருந்தால் வித்தியாசமாகத்தான் இருக்கும்.
// சினிமா ஒரு வியாபாரம். அதில் வரும் வருமானத்துக்கு வரி கட்டணும், இங்க என்ன பொது சேவையா நடக்குது வரி விலக்கு தர?//
கொத்தனாருக்கு நேரஞ்சரியில்லை போலிருக்கிறது. வரிவிலக்குக்காக எம்டன் மகன் என்ற பெயரை எம் மகன் என்று பெயர்மாற்றும் உலகில் இப்படி ஒரு முயற்சிக்கு ஊக்கம் தரவேண்டும் என்று சொல்வது தவறா? தமிழ்ப் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்கிற நிலை தமிழின் இன்றைய அவலத்தைக் காட்டுகிறது. வழிமுறையில் உள்ள தவறுக்காக ஊக்குவிப்பதையே தவறு என்று சொல்வதா?
ஆங்கிலக் கலப்பில்லாத ஒரு கதை எழுதிவிட்டு பேரின்பம் அடைந்த கொத்தனாருக்கு நாட்டு நிலைமை புரியவில்லையா? அய்யா கொத்தனாரே,
ஓய்வாக இருக்கிறீர்களா என்று நான் ஒருவரைக் கேட்டேன். அவர் இயல்பாக , ஆமாம் ஒய்வில்தான் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு பிறகு அதாவது ரெஸ்ட்டுலதாங்க இருக்கேன் என்றாரே பார்க்கலாம்! நிஅலிமை அவ்வளவு மோசம். சீமானின் மற்றெந்த கருத்தையும் கணக்கில் கொள்ளாமல் இந்த முயற்சியை நான் மனதார பாராட்டுகிறேன். இப்பதிவில் நடைமுறையில் இருக்கும் வரிவிலக்கு ஏற்பாட்டின் படியே வரிவிலக்குக்கு சிபாரிசு செய்யப்படுகிறது. அப்படி ஒரு வரிவிலக்கு நடைமுறை இல்லையென்றாலும் கூட புதிதாக ஒன்றை உருவாக்கி இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும் என்பதே என் கருத்து.
சினிமா ஒரு வியாபாரம் என்று சொன்னீர்கள் அல்லவா, அங்கு தன் லாப நோக்கையும் பொருட்படுத்தாமல் ஒரு நல்ல முயற்சியை செய்வது ஒரு வீரச்செயலுக்கு ஒப்பானது.
பிரச்சனையின் தீவிரத்தை சற்று எண்ணிப் பாருங்கள்.
அவசரமாக வெளியூர் செல்கிறேன். சர்வேசனை வந்து வைத்துக் கொள்கிறேன்.
நன்றி, ஓகையாரே!
தலைப்பை மட்டும் தமிழ்ப்பெயராக வைத்துவிட்டு படம் முழுதும் பம்மத்து பண்ணும் மற்றவர்க்கு நடுவே இப்படி ஒருவர் ஒரு படம் எடுத்திருப்பது என் கவனத்தை ஈர்த்தது. அதற்காகவே இதைப் பதிந்தேன்.
திரைப்படம் ஒரு வியாபாரம் எனச் சொல்லுகின்ற நிலையில், வருமானத்தை முதலில் வைக்காமல் தமிழுணர்வை படம் முழுதும் வைத்த சீமான் பாராட்டுக்குரியவர் என்பதே என் கருத்து.
இருக்கின்ற சலுகைகள் அவசியமா இல்லையா என முடிவு செய்ய எனக்கு எந்த அதிகாரமும் இல்லை.
அதைத் தகுதியானவர்க்குக் கொடுங்கள் எனச் சொல்வது தவறா?
எனக்குப் புரியவில்லை சாமி!
:))
//'வாழ்த்துகள்' வந்தால் பார்க்க ஆசை.
முழுதும் தமிழிலேயே இருந்தால் வித்தியாசமாகத்தான் இருக்கும்.//
இது ஒரு வித்தியாசமான படம் என்பது பார்க்கும் போது உங்களுக்கே புரியும் நண்பரே! அன்பை வெல்ல அன்பே ஆயுதம் என்னும் ஒரு உயரிய கருத்தும் இதில் வைக்கப்பட்டிருக்கிறது!
பார்த்தபின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!
வாழ்த்துகள் என்பதே, முத்துகள் என்பதே, முத்து குமரன் என்பதே{!!]சரி என முன்பே முடிவாகிவிட்டது!:))
மனைவி சொல் எப்போதும் மந்திரமே!!:))
Post a Comment