"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 20
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"-- 20
முந்தைய பதிவு இங்கே!
18.
'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு. '[355]
ராபர்ட் தொடர்ந்தான்.
'இவ்வளவு நேரம் நான் சொன்னது எதையும் நீ சரியாக் கவனிக்கலைன்னு புரியுது. நாம கண்டுபிடிக்க மாட்டோம். நம்மளால முடியாது.
அவரா வருவாரு. ஆனா, ஒரு சில அடையாளம் இருக்குதாம். நான் முன்னே சொன்னேனே, அந்த திரவப் பொருள், திடப்பொருள்னு ரெண்டு.
அது இவங்க கிட்ட இருக்குமாம். அந்தக் கஷாயம் மாரி இருக்கறதை குடிச்சுத்தான் இவங்க எப்பவுமே இளமையா இருக்காங்களாம். பல நோய்களுக்கெல்லாம் கூட அது மருந்தாகுமாம்.
அந்தக் கல்லைத்தான் சித்தர் கல்லுன்னு சொல்றதாம். எல்லார்கிட்டயும் அதைப் பாக்க முடியாது. பெரிய பெரிய சித்தருங்க கிட்டத்தான்
இருக்குமாம். அந்தக் கல்லை வெச்சுத் தேய்ச்சா போதுமாம், செம்புல்லாம் கூட தங்கமாயிடும்.' இதெல்லாம் அந்தப்புஸ்தகத்துல போட்டிருக்கு."
'ஆ' வென்று வாயைப் பிளந்து அவன் சொன்னதை அதிசயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான் கந்தன்.
'நமக்கும் கூட இது கிடைச்சதுன்னா நல்லாயிருக்குமே' என ஒரு சிந்தனை ஓடிற்று.
'அந்தக் கல்லை எப்படி நாம அடையறது?' என்றான்.
'அது தெரிஞ்சா நான் ஏன் இங்கே இருக்கேன். இந்நேரம் என் ஊருக்குப் பறந்திருப்பேனே!' எனச் சொல்லிச் சிரித்தான் ராபர்ட்.
'எல்லாத்தையும் இந்தப் புஸ்தகங்கள்ல சொல்லியிருக்காங்க. ஆனா, ஒண்ணும் புரியலை. சுலபமா சொல்லியிருந்தா, இத்தனை பாடு
படவேண்டாம்ல'
'இதெல்லாம் எழுதி எத்தனை வருஷம் இருக்கும்? கந்தன்.
'இப்பத்தான் இதெல்லாம் ஒரு புஸ்தகமாவாச்சும் நமக்குக் கிடைக்குது. இதெல்லாம் வாய் வழியா வந்ததாம். எழுதி ரொம்பக் காலம் ஆயிருச்சு'
பேச்சை நிறுத்திவிட்டு, புத்தகத்தைப் படிக்கத் தொடங்கினான் கந்தன்.
ராபர்ட் சுற்றிலும் பார்வையை விட்டான்.
ஆங்காங்கே சிறு சிறு கூட்டமாய் பஸ் பயணிகள் பிரிந்து மர நிழல்களில் உட்கார்ந்திருந்தார்கள்.
உதவி வருவதற்கான எந்தவொரு தடயமும் இல்லை.
காவல்துறை வண்டியும் அப்போதே சென்றுவிட்டது!
'இது எந்த இடமுங்க?' பக்கத்தில் இருந்த ஒரு தாடிக்காரரிடம் கேட்டான்.
கையிலிருந்த பீடியைப் புகைத்தபடியே இவனைத் திரும்பிப் பார்த்தார் அவர்.
ஒரு வெள்ளைக்காரன் வந்து தமிழில் பேசுவதைக் கண்டு ஆச்சரியப் பட்டாற்போல் தோன்றவில்லை அவருக்கு.
'வாங்க தம்பி! சரியான இடத்துக்குத்தான் வந்திருக்கீங்க! நீங்க இருக்கற தோரணையைப் பார்த்தா, சாமியாருங்க, சித்தருங்களைத் தேடிகிட்டு வந்த மாரி
இருக்கு. அப்பிடிப் பாத்தா, இது ஒரு காட்டுப் பிரதேசம். நாமக்கல் தாண்டி வந்திருக்கீங்க. தோ, அந்த மலைக்கு அந்தப் பக்கம்லாம் ஒரே காடுதான். கொல்லிமலைன்னு ரொம்பப் பிரபலமான இடம் அங்கே... அந்த மலைக்கு அப்பால இருக்குதாம். ஆரும் ஜாஸ்தி அங்கேல்லாம் போறதில்ல. மலைஜாதி ஆளுங்கதான் அங்கேல்லாம். நெறைய சித்தருங்க இருக்கறதா பேசிக்கறாங்க!'
ராபர்ட் பரவசமானான்.
தாடிக்காரரின் கையைப் பிடித்துக் குலுக்கினான்.
'ரொம்ப தேங்ஸுங்க. நல்ல தகவல் சொன்னீங்க! நீங்க அவங்களைப் பார்த்திருக்கீங்களா? என ஆவலுடன் கேட்டான்.'
தாடிக்காரர் உதட்டைப் பிதுக்கினார்.
'அதெல்லாம் ஆரு பாத்தா? எல்லாம் சொல்லக் கேள்விதான். அங்கே இருக்கற மலைஜாதி ஆளுங்களைக் கேட்டா எதுனாச்சும் தகவல் தெரியலாம்'
என்றவருக்கு நன்றி சொல்லிவிட்டு, கந்தனிடம் போனான்.
'நீ சொன்னதும் சரிதான். மனுஷங்களையும், சகுனத்தையும் பார்த்தாக் கூட பாதி விஷயம் தெரிஞ்சிரும் போல~!' என்றபடி
கந்தன் கையிலிருந்த புத்தகத்தை வாங்கிக் கொண்டே,
இந்தப் பக்கமாப் போனா, சித்தருங்களைப் பார்க்கலாமாம். அதோ, அந்தத்
தாடிக்காரர் சொன்னாரு. எனக்கு சேலத்துல ஒண்ணும் வேலை இல்லை. அங்க போனா, இதைப் பத்தி தகவல் கிடைக்கும்னு யாரோ
சொன்னாங்கன்னு வந்தேன். இப்ப, அது கிடைச்சாச்சு. இதுவும் ஒரு சகுனந்தான்! நான் கிளம்பறேன்' என ஆயத்தமானான்.
கந்தன் யோசித்தான்.
புதையலைப் பாக்கப் போகணும்தான். ஆனா, இவன் சொல்ற விஷயமும் நல்லாத்தான் இருக்கு. எல்லா ஊரையும் சுத்திப்பாருன்னு வாத்தியார்
வேற சொல்லியிருக்காரு.
'உன் மனசு என்ன சொல்லுதோ, அதன்படி நட'ன்னு அந்த ராசாவும் சொன்னாரு. இப்ப இவன் மட்டும் தனியாத்தான்
போறான். பஸ்ஸு எப்போ கிளம்பும்னு யாருக்கும் தெரியலை. இங்கேயே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருப்பது? கலவரம்வேற ஜாஸ்தியாவுதுன்னு
இன்ஸ்பெக்டர் சொல்லிட்டுப் போயிட்டாரு. இங்கேயே இருந்து என்ன நடக்குமோன்னு தெரியாம இருக்கறதைவிட, காட்டுக்குள்ள போனா
நம்க்கும் ஒரு பாதுகாப்பா இருக்கும். அதிர்ஷ்டம் இருந்திச்சின்னா, யாராவது சித்தர் பார்வைல கூட மாட்டினாலும் மாட்டலாம்' என்ற
நினைப்புடன்,
'நானும் உன்கூட வரலாமா?'ன்னு கேட்டான்.
ராபர்ட் அவனை வியப்புடன் பார்த்தான்.
'ஒருத்தொருத்தனுக்கும் ஒரு வழி இருக்கு...... அவனவன் விதியைக் கண்டறியன்னு ஒரு பெரியவர் சொன்னாரு என்கிட்ட. உன் வழி வேற;
என் வழி வேறதான். ஆனாக்க, நாம ரெண்டு பேருமே ஒருவிதத்துல, அவங்கவங்க விதியைத் தேடிகிட்டுத்தான் போறோம். இங்க இருக்கற மத்தவங்கள்லாம் அப்படித்தான். ஆளாளுக்கு ஒரு கவலை இருக்கு. இவங்களோட நான் ஒட்ட மாட்டேன். எனக்கு என்னமோ உன்கூட வர்றது நல்லதுன்னு படுது.'
கந்தன் மேலும் பேசவே, மறுப்பேதும் சொல்லாமல்,
'சரி! கிளம்பு!' என்றான் ராபர்ட்.
கண்டக்டரிடம் போய்,' இப்படியே போனா, கொல்லிமலைக்குப் போயிறலாம்னு அந்தத் தாடிக்காரர் சொன்னாரு. எங்க ரெண்டு பேருக்கும் போக வேண்டிய இடமும் அதான். அதனால, நாங்க இப்படியே போயிக்கறோம்' என்றான்.
'கலவரம் அது இதுன்னு பயந்து, இப்படியே கிளம்பறீங்களாக்கும். இதோ இந்த நிமிஷம், நாங்கள்லாம் உசிரோடத்தான் இருக்கோம்.'
என்றபடியே ஒரு ஆப்பிளைக் கடித்தபடி பக்கத்தில் உட்கார்ந்திருந்த டிரைவர் சிரித்தார்.
'இதோ, இந்த ஆப்பிளைக் கடிக்கறப்போ, அதை மட்டும்தான் நான் நினைக்கறேன். பஸ்ஸை ஓட்டறப்ப அது மட்டும்தான் கவனம் இருக்கும்.
ஏன்னா, நான் எப்பவும் நேத்தியை நினைச்சோ, இல்லை நாளைக்கின்னோ வாழறதில்ல. இதோ, இந்த நிமிஷம்தான் நிச்சயம். இந்த நொடியில வாழறப்போ, நீதான் ராஜா! உலகமே உனக்கு சொர்க்கமா இருக்கணும்னா,.... நீ எப்பவும் இதான்,..... இந்த நிமிஷம்தான் சாசுவதம்னு இருக்கணும்.
அதையே நினைச்சுகிட்டு, எங்க போனாலும் நல்லா இருங்கப்பா' என விடை கொடுத்தார்.
தாடிக்காரரைப் பார்த்து, மீண்டும் ஒருமுறை வழியைச் சரியாகக் கேட்டுக் கொண்டு, அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு,
இருவரும் எதிரே தெரிந்த ஒற்றையடிப் பாதை வழியே நடக்கலானார்கள்.
தாடிக்காரர் இவர்கள் போவதைப் பார்த்தபடியே சிரித்தார்.
தன் மேல் துண்டை ஒரு முறை உதறிப் போர்த்தினார்.
உள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது !!!
[தொடரும்]
*************************************
அடுத்த அத்தியாயம்
37 பின்னூட்டங்கள்:
என்னடா இது ட்ரைவர் தத்துவம் பேசறாரேன்னு பார்த்தா கடைசி வரியில் விஷயத்தைச் சொல்லிட்டீங்க. ஹ்ம்ம். சுவரிசியமாத்தான் (;-)) போயிக்கிட்டு இருக்கு!!
அதென்னங்க ராபர்ட் கூட ரசவாதம் கத்துக்கறதுலெயெ குறியா இருக்கா(ன்)ர்?
எத்தனைபேர் இப்படி இதுலெயெ வாழ்க்கையைத் தொலைச்சிருக்காங்கன்னு எங்க தாடிமாமா கதைகதையா சொல்லி இருக்கார்.
அப்ப நாங்கெல்லாம் ரொம்பச்சின்னப் பசங்க. அவர் சொல்றதையெல்லாம் 'ஆ'ன்னு கேட்டுக்கிட்டுக் கற்பனையில் மூழ்கிருவோம். நான் வீட்டுலெ இருக்கும் அண்டா குண்டா எல்லாத்தையும் தங்கமா மாத்திருவேன் என் கற்பனையில்.
வயசு வித்தியாசம் இல்லாம எல்லாரையும் இழுக்குது பாருங்க தங்கம். அதுதான் அதோட விசேஷம்:-)
//தாடிக்காரர் இவர்கள் போவதைப் பார்த்தபடியே சிரித்தார்.
தன் மேல் துண்டை ஒரு முறை உதறிப் போர்த்தினார்.
உள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது !!!
//
ஆஹா! சித்தரே வந்து வழி சொல்லிட்டாரா? சூப்பர்!
மீ த ஃபர்ஸ்டு! !??????????????
//சுவரிசியமாத்தான் (;-)) போயிக்கிட்டு இருக்கு!!//
எ.பி.யைத் தவிர்த்துவிட்டு, அன்னம் மாதிரி பாராட்டை மட்டும் எடுத்துக்கறேன்.கொத்ஸ்!
:))
//வயசு வித்தியாசம் இல்லாம எல்லாரையும் இழுக்குது பாருங்க தங்கம். அதுதான் அதோட விசேஷம்:-)//
ரொம்பப் பேரை இந்தத் தங்கம் படுத்தர பாட்டை சொல்லமேன்னுதான், டீச்சர்!
//ஆஹா! சித்தரே வந்து வழி சொல்லிட்டாரா? சூப்பர்!//
இவர் சித்தர் இல்லீங்க சிபியாரே!
இவர் கூத்தன்... அவருக்கும் மேலே!
:))
கொத்ஸும், டீச்சரும் இன்னிக்கு முந்திகிட்டாங்க!
:)
//இவர் கூத்தன்... அவருக்கும் மேலே!//
!?
ஓ! பிறை சூடிய பித்தனா? அவன் சித்தர்களுக்கும் மேலானவன்தான்!
அவனைத்தானே தேடிகிட்டிருக்கிறேன்!
என் கண்ணுல அகப்பட மாட்டேங்குறானே!
கந்தனுக்கு வழி சொல்லுனம் தாடிக்கார கூத்தன் எனக்கும் வழி சொல்லுவாரா?
//இவர் சித்தர் இல்லீங்க சிபியாரே!
இவர் கூத்தன்... அவருக்கும் மேலே//
ஆமா! இவரு சீனியர் சித்தர்!
//நாமக்கல் சிபி said...
கந்தனுக்கு வழி சொல்லுனம் தாடிக்கார கூத்தன் எனக்கும் வழி சொல்லுவாரா?
//என் கண்ணுல அகப்பட மாட்டேங்குறானே!//
தேடுங்க சிபியாரே!
எத்தனையோ பேருக்குக் கிடைச்சிருக்காரு!
அதைவிட அதிகம் பேருக்கு எட்டாதவராவும் இருக்காரு!
உங்க அதிர்ஷ்டம் எப்படியோ?
அவனே அறிவான்!
"இன்ன தன்மையன் என அறியவொண்ணா... எம்மான்...எளிவந்த பிரான்" அவன்!
//ஆமா! இவரு சீனியர் சித்தர்!//
ஹ்ம்ம்ம்! அப்படியும் சொல்லலாம்!
:))
நான் எங்க இருப்பேன்? எப்படி இருப்பேன்னு யாருக்கும் தெரியாது!
ஆனா தெரியவேண்டியவங்க கண்ணுக்கு, தெரிய வேண்டிய நேரத்துக்கு கரெக்டா தெரிவேன்!
//என்னடா இது ட்ரைவர் தத்துவம் பேசறாரேன்னு பார்த்தா கடைசி வரியில் விஷயத்தைச் சொல்லிட்டீங்க//
கொத்ஸ்!
மெய்யாலுமே நல்லா தத்துவம் பேசக் கூடிய டிரைவர் ஒருத்தர் இருந்தார்.
நாமக்கல் - கொல்லிமலை ரூட்! அவரு பேரு அங்கமுத்து!
அவரு கூட பேசிகிட்டே மலைப் பாதைல பயணம் செய்யுறது நல்லா இருக்கும்! இது 90களில்! இப்பவும் இருக்காரான்னு தெரியலை!
//சூதாடிச் சித்தன் said...
நான் எங்க இருப்பேன்? எப்படி இருப்பேன்னு யாருக்கும் தெரியாது!//
ஆஹா! சித்தருங்க நடமாட்டம் ஜாஸ்தியாவுதே!
வாங்க சாமி!
:))
//மெய்யாலுமே நல்லா தத்துவம் பேசக் கூடிய டிரைவர் ஒருத்தர் இருந்தார்.
நாமக்கல் - கொல்லிமலை ரூட்! அவரு பேரு அங்கமுத்து!
அவரு கூட பேசிகிட்டே மலைப் பாதைல பயணம் செய்யுறது நல்லா இருக்கும்!//
நல்ல தகவலுங்க!
இவரைப் பத்தி[அங்கமுத்து ஐயாவைத்தான்!] தெரிஞ்சவங்க வந்து சொல்லுங்க.
:))
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி. சித்தர் யாரு ? பித்தர் யாரு ?
//கஞ்சா சித்தர் said...
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி. சித்தர் யாரு ? பித்தர் யாரு ?//
கதையைப் படிச்சுகிட்டே வாங்க!
ஒரு தெளிவு கிடைக்கலாம்!
:)
//கதையைப் படிச்சுகிட்டே வாங்க!//
இங்கு கும்மியடிக்க அனுமதி உண்டா ?
//இங்கு கும்மியடிக்க அனுமதி உண்டா ?//
இங்கு வேண்டாமே, ப்ளீஸ்!
நன்றி!
[இதைத் தொடர்ந்து வந்த சில பின்னூட்டங்கள் மறுதலிக்கப் பட்டன.]
பொன்னார் மேனியன்.பொன்னாரம் சூடியவராக அப்பப்போ
வந்துட்டுப் போகிறாரா பித்தசித்தர்...
இப்படி ஒரு வழிகாட்டி கூட வரக் கந்தன் எத்தனை கொடுத்து
வைத்து
இருக்கானோ.
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"
ஒவ்வொரு அத்யாயமும் சிலிர்க்க வைக்குதுங்க...
ப்ரமாதம்...
//தாடிக்காரர் இவர்கள் போவதைப் பார்த்தபடியே சிரித்தார். தன் மேல் துண்டை ஒரு முறை உதறிப் போர்த்தினார். உள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது !!! //
நினைக்கும் போதே ப்ரமிப்பா இருக்கு...
நீங்க யாராவது சித்தர்கள பார்த்துருகீங்களா?
திருவண்ணாமலைல கூட நிறைய சித்தர்கள் இருக்கிறதா கேள்வி பட்டிருக்கேன்.
"சித்தர்" [எ] "கனவு மெய்ப்படும்!"
ஒவ்வொரு அத்யாயமும் சிலிர்க்க வைக்குதுங்க...
ப்ரமாதம்...
//தாடிக்காரர் இவர்கள் போவதைப் பார்த்தபடியே சிரித்தார். தன் மேல் துண்டை ஒரு முறை உதறிப் போர்த்தினார். உள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது !!! //
நினைக்கும் போதே ப்ரமிப்பா இருக்கு...
நீங்க யாராவது சித்தர்கள பார்த்துருகீங்களா?
திருவண்ணாமலைல கூட நிறைய சித்தர்கள் இருக்கிறதா கேள்வி பட்டிருக்கேன்.
//பொன்னார் மேனியன்.பொன்னாரம் சூடியவராக அப்பப்போ
வந்துட்டுப் போகிறாரா பித்தசித்தர்...
இப்படி ஒரு வழிகாட்டி கூட வரக் கந்தன் எத்தனை கொடுத்து
வைத்து
இருக்கானோ.//
நாம் எல்லாருமே கொடுத்து வைத்தவர்கள்தான் வல்லியம்மா.
நம் அனைவருக்குமே இது போன்ற ஆலோசனைகள்,அறிவுரைகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது.
நாம் தான் இவற்றை அலட்சியப் படுத்திவிட்டு, புத்தி என்னும் அஹங்காரத்தை நம்பிக் கொண்டு அதுதான் மனசு சொல்வது எனத் தவறாகப் புரிந்து செயல்படுகிறோம்.
உள்மனசு எப்போதுமே நமக்கு நல்லதைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறது.
அறியாமை, ஆணவம் என்னும் அஹங்கரங்கள் அதைப் பார்க்க விடாமல் செய்கின்றன.
பொன்னார் மேனியன் -- நல்ல சொல்லாடல் வல்லியம்மா!
நன்றி!
உள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது
ஓ ரசவாதம் ஆரம்பமா? கூடவே வரேன் நீங்க போங்க மேலே
தத்துவ மழை பொழிகிறது. தில்லைக்கூத்தன் மூண்றாம் முறையாக கந்தனுக்குத் தரிசனம் கொடுக்கிறான். கந்தனையே பின் தொடருகிறான். கந்தனுக்கு வழி காட்டுகிறான். கதை மேலும் மேலும் எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது.
ராபர்ட்டுக்கு ஏன் இப்பிடித் தங்க ஆசை? இப்பிடித்தான் ஒருத்தர் தங்கம் தங்கம்னு அலஞ்சான். கூப்புட்டு விசாரிச்சப்பதான் தெரிஞ்சது... அது எதிர்வீட்டுத் தங்கம்னு. அது மாதிரி...ராபர்ட்டு?
//சூதாடிச் சித்தன் said...
நான் எங்க இருப்பேன்? எப்படி இருப்பேன்னு யாருக்கும் தெரியாது!//
ஆஹா! சித்தருங்க நடமாட்டம் ஜாஸ்தியாவுதே!
வாங்க சாமி!
:))
LOL!!! சிரிக்கவைத்த அனானி சித்தர்களும் வடிவேல் பாணியில் உங்கள் பதிலும்.
----
கொல்லிமலைக்கு போயிட்டாங்களா.. ஆகா.. நான் கொல்லிமலைக்கு போன கதையை(காமடி+திரில்லர்) ஞாபகம் படித்திவிட்டது உங்கள் கடந்த இரண்டு பாகங்களும். அரப்பளீஸ்வரர் அருள்புரியட்டும் கந்தனுக்கு.
நீங்க பின்னாடி வர்றதுதான் பெரிய தைரியம் எனக்கு திரு. திராச !
:))
// கதை மேலும் மேலும் எதிர்பார்ப்பைத் தூண்டுகிறது.//
ஒருதடவைகூட கந்தன் அவரை உணரவில்லை; கவனிட்த்தீர்களா, திரு.சீனா.!!
ஆனால், சொன்னதை மட்டும் உள்வாங்கிக் க்கொண்டான்.
அதுதான் சூட்சுமம்!
நன்றி.
//ஒவ்வொரு அத்யாயமும் சிலிர்க்க வைக்குதுங்க...
ப்ரமாதம்...//
ரொம்ப நன்றிங்க திரு. வசீகரா.
தொடர்ந்து வந்து கருத்து சொல்லுங்க!
//ராபர்ட்டு?//
ஒவ்வொருவரின் தேடலூம் ஒவொரு விதமா அமையுது என்பதைச் சொல்ல வந்தேன், ஜி.ரா.
//ஆகா.. நான் கொல்லிமலைக்கு போன கதையை(காமடி+திரில்லர்) ஞாபகம் படித்திவிட்டது உங்கள் கடந்த இரண்டு பாகங்களும். அரப்பளீஸ்வரர் அருள்புரியட்டும் கந்தனுக்கு.//
இதுக்காக உங்களுக்கு ஒரு தனி நன்றி சொல்றேன், சத்தியா!
எப்படில்லாம் வந்து சித்தர் உதவி பண்றாரு!
ஆச்சரியமா இல்லை!
கந்தன் ராபர்ட்வுடன் பயணம் செய்ய புறப்பட்டு விட்டாச்சா...
அங்கு அங்கு வந்து சரியாக வழி நடத்துகிறார்களே கந்தனை...
நல்லதே நடக்கட்டும்
//தாடிக்காரர் இவர்கள் போவதைப் பார்த்தபடியே சிரித்தார்.
தன் மேல் துண்டை ஒரு முறை உதறிப் போர்த்தினார்.
உள்ளிருந்த தங்க வில்வமாலை ஒரு கணம் மின்னியது !!!
//
இதெல்லாம் கொஞ்சம் நம்பரமாதிரி இல்லை துளசி டீச்சர் சொன்ன மாதிரி.
ஒவ்வொரு தத்துவங்களும் அருமை.
//அங்கு அங்கு வந்து சரியாக வழி நடத்துகிறார்களே கந்தனை...//
பாருங்க நாகையாரே!
உங்களுக்குப் புரிஞ்சது மங்களூர் சிவா நம்பற மாரி இல்லையேன்றாரு!:))
எல்லாமே அவரவர் புரிதலிலும், நம்பிக்கையிலும்தான் இருக்கு.
//இதெல்லாம் கொஞ்சம் நம்பரமாதிரி இல்லை துளசி டீச்சர் சொன்ன மாதிரி.
ஒவ்வொரு தத்துவங்களும் அருமை.//
மேல நாகை சிவா என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க!:))
நாம் என்ன செய்ய விரும்பறோமோ, அதையே இந்த உலக ஆத்மாவும் கூட இருந்து உதவி பண்ணும்னு முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தேன்.
அதை வைச்சுப் பார்த்தீங்கன்னா உங்களுக்கு விளங்கும் திரு. ம. சிவா!
Post a Comment