Sunday, June 17, 2007

ஒரு முக்கிய அறிவிப்பு!

ஒரு முக்கிய அறிவிப்பு!!

அனானி அன்பர் ஒருவர் என்னையும் பொருட்டாக மதித்து, என் பெயரில்[VSK] ஒரு தனிப் பூ ஒன்று தொடங்கி என்னைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்!

ஆத்திகம், கசடற[aaththigam, kasadara] என்ற இரு பூக்கள் வழியாக மட்டுமே நான் பின்னூட்டம் இடுகிறேன்!

பதிவுலக நண்பர்கள் என் பெயரில் [VSK] வரும் பின்னூட்டங்களை தயவு செய்து இவ்விரு பூ விலாசத்திலிருந்து வருகிறதா எனச் சோதனை செய்து, பின்னர் வெளியிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் வசதிக்காக, சிலகாலம் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறேன்.

நன்றி.
[இதை எனக்குத் தெரியப்படுத்திய அன்பு உள்ளத்திற்கும்!]
**************************************************************

"தந்தை என்று சொல்லவா"
[என் தந்தையின் நினைவுநாளை ஒட்டி, சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதியது.]

தந்தை என்று சொல்லவா
எந்தை என்று வணங்கவா
சொந்தம் என வந்தோரை
மந்தை என எண்ணாமல்
தம்தம் யென்று நினைத்தவரை
[தந்தை என்று .....]

இன்று எமைப் பிரிந்தாய்
சென்று துயர் கொடுத்தாய்
என்றும் உமைப் போற்றி
இங்கு யாம் இருப்போம்
[தந்தை என்று......]

எத்தனையோ பெற்றாய்
அத்தனையும் முத்துக்கள்
மொத்தமாக சொல்வதென்றால்
எத்தனையோ நேரம் வேண்டும்
[தந்தை என்று.....]

உன்னாலே பிறந்திட்ட
என்னோடு வளர்ந்திட்ட
கண்ணான சோதரரும்
இந்நாளில் பிரிந்திருக்க
என் சொல்வேன் நான் இன்று
[தந்தை என்று.....]

பிள்ளையாய்ப் பிறந்தாலே
பொறுப்புகள் பல உண்டு
பல்லோரையும் வாழ வைக்கும்
கடமையும் கூட வரும்- நீயோ
ஒரே பிள்ளையாய்ப் பிறந்து விட்டாய்
உறவை மட்டுமின்றி
ஊராரையும் வாழ வைத்தாய்
[தந்தை என்று.....]

உன் பிள்ளைகள் உனைப் போல
எந்நாளும் பலர் வாழ
தன்னாலே முடிந்ததெல்லாம்
இன்னாளில் செய்கின்றோம்
நீ இட்ட பிச்சையிது!
[தந்தை என்று]

பாசத்தைக் கொட்டவில்லை
பரிவாய் சொல் சொன்னதில்லை
உன் நெஞ்சில் ஓடி நாங்கள்
உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை

ஆனால்...,


இதுவெதையும் காட்டாமல்
ஏதொன்றும் சொல்லாமல்
எல்லாமே உணர்த்தி விட்டாய்
உன் அன்பு வாழ்க்கை மூலம்!
[தந்தை என்று....]

நினைக்க நினைக்க நெஞ்சம் கனக்கிறது
மணக்க மணக்க உன் ஞாபகம் வருகிறது
வலிக்க வலிக்க என் உள்ளம் அழுகிறது
வணங்க வணங்க என் கைகள் குவிகிறது
[தந்தை என்று....]

இன்னாளில் மட்டுமன்றி
என்னாளும் நினைக்காமல்
என்னாலே இயன்றிடுமோ
மண்ணாளில் வாழும் வரை
[தந்தை என்று....]

நீ உணர்த்திய பாசம் நிஜம்
நீ சொன்ன மொழியும் நிஜம்
நீ வாழ்ந்த வாழ்க்கையும் நிஜம்
நீ என்னுடனே இருப்பதுவும் நிஜம்
[தந்தை என்று....]

உன்னாலே வாழுகின்றேன்
உன்னை நான் நினைக்கின்றேன்
உன் சொல்லைக் கேட்கின்றேன்
உன் பெருமை பாடுகின்றேன்
[தந்தை என்று....]

என் மடியில் நீ படுத்து

இவ்வுலகை விட்டகன்ற
அந்நாளை நிதம் நினைத்து
என் காலம் போக்குகின்றேன்
[உன்னுடன் நான் சேரும் வரை]
[தந்தை என்று....]

உன் குலத்தில் பிறந்தவர்
நன்றாக வாழ்ந்திருக்க
உன் ஆசி வேண்டுகின்றோம்
இன்னாளில் நாங்கள் இன்று !
[தந்தை என்று....]

*************************************************************

ஒரு முக்கிய அறிவிப்பு!!

அனானி அன்பர் ஒருவர் என்னையும் பொருட்டாக மதித்து, என் பெயரில்[VSK] ஒரு தனிப் பூ ஒன்று தொடங்கி என்னைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்!

ஆத்திகம், கசடற[aaththigam, kasadara] என்ற இரு பூக்கள் வழியாக மட்டுமே நான் பின்னூட்டம் இடுகிறேன்!

பதிவுலக நண்பர்கள் என் பெயரில் [VSK] வரும் பின்னூட்டங்களை தயவு செய்து இவ்விரு பூ விலாசத்திலிருந்து வருகிறதா எனச் சோதனை செய்து, பின்னர் வெளியிடுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.

உங்கள் வசதிக்காக, சிலகாலம் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறேன்.

நன்றி.

30 பின்னூட்டங்கள்:

நாமக்கல் சிபி Sunday, June 17, 2007 12:39:00 PM  

//அனானி அன்பர் ஒருவர் என்னையும் பொருட்டாக மதித்து, என் பெயரில்[VSK] ஒரு தனிப் பூ ஒன்று தொடங்கி என்னைப் பெருமைப் படுத்தி இருக்கிறார்!
//

:(

அடக் கடவுளே!

VSK Sunday, June 17, 2007 12:50:00 PM  

என்ன செய்ய?

நன்றி சிபியாரே!

உங்க இன்றைய பதிவு http://kalaaythal.blogspot.com/2007/06/73.
சூப்பர் அல்டிமேட் கலாய்த்தல்!
:))

நன்றி!

ILA (a) இளா Sunday, June 17, 2007 1:48:00 PM  

அட சாமி, உங்களுக்குமா?

Kannabiran, Ravi Shankar (KRS) Sunday, June 17, 2007 2:08:00 PM  

//நினைக்க நினைக்க நெஞ்சம் கனக்கிறது
மணக்க மணக்க உன் ஞாபகம் வருகிறது
வலிக்க வலிக்க என் உள்ளம் அழுகிறது
வணங்க வணங்க என் கைகள் குவிகிறது//

மிகவும் அருமையான வரிகள் SK.
தங்கள் தந்தையின் நினைவுகளுக்கு நானும் என் வணக்கங்களைச் செலுத்திக் கொள்கிறேன்!

ஒன்றுமில்லாத காலங்களில் நம் தந்தையர் சாதித்ததில்,
இன்றுள்ள காலத்தே நாம் அதில் பாதியாவது சாதித்துள்ளோமா என்று எண்ணிப் பார்த்தால்....

அது சரி, கவிதையை ஏன் அறிவிப்பு பதிவில் பதிந்துள்ளீர்கள்?

வவ்வால் Sunday, June 17, 2007 2:22:00 PM  

அட டா இது நம்ம திருவாளர் எஸ்.கே அய்யாவே தானா? நீண்ட நாட்களாயிற்று ஆனாலும் அதே பழைய வழமை மாறாமல் உள்ளார் நன்று .. நன்று! ஆனால் பெயர் மற்றும் வி.எஸ்.கே ஆகிவிட்டது.

எத்தனைக்காலம் கழித்து வந்தாலும் விட்ட இடத்திலிருந்தே தொடங்குவது போல , போலி சமாச்சாரம் இன்னும் இருப்பது , பழச மறக்காத பண்பாளர்களை அடையாளம் காட்டுகிறது :-))

//உங்கள் வசதிக்காக, சிலகாலம் பின்னூட்டம் எதுவும் இடுவதில்லை எனவும் முடிவு செய்திருக்கிறேன்.//

என் வருகை அறிந்து இப்படி சொல்றாப்போல இருக்கே :-))

SurveySan Sunday, June 17, 2007 2:34:00 PM  

hmm. மேன்மேலும் புகழ்பெற வாழ்த்துக்கள்.

:)

இவங்கள பாத்து, உங்க schedule மாத்திக்காதீங்க சார்.
கொஞ்ச நாள் கொலச்சுட்டு வால சுருட்டிட்டு ஓடிடும்.

என்ன ஜென்மங்களோ:(

VSK Sunday, June 17, 2007 3:00:00 PM  

:))
நன்றி, திரு.இளா!

VSK Sunday, June 17, 2007 3:03:00 PM  

மிகவும் சரியாகச்சொன்னீர்கள், ரவி!

அவர்கள் செய்ததற்கு முன்னால் , நாம் செய்கிறோம் எனச் சொல்வதெல்லாம் ஒன்றுமேயில்லை.

அந்த அறிவிப்பு விஷயம் ஒரூ பின் சேர்க்கைதான்!

தந்தையைப் பற்றிய பதிவு எழுதியபின் வந்த யோசனை.

தனிப்பதிவு மட்திப்பு அதற்குக் கொடுக்க வேண்டாமென்றே இதோடு இணைத்தேன்.

தலைப்பு மட்டும் நண்பர்கள் பார்வையில் படுவதற்காக!

VSK Sunday, June 17, 2007 3:07:00 PM  

வாழ்த்துகளுக்கு நன்றி.திரு.சர்வேசன்!

நீங்கள் சொல்வதும் உண்மையே.

அந்த "கொஞ்ச காலம்" தான் நான் சொல்வதும்.

நன்றி.

துளசி கோபால் Sunday, June 17, 2007 5:49:00 PM  

அப்படியா சேதி?

வாழ்த்து(க்)கள்..

புகழின் உச்சிக்கு ஏறிக்கிட்டு இருக்கீங்கன்னு இதுக்கு அர்த்தமாம்:-)))))

கவலைப்படாதீங்க. இந்த எலிக்குட்டி, புலிக்குட்டியெல்லாம் இருக்கு.

இங்கே எங்க பக்கமெல்லாம் செப்டம்பர் முதல் ஞாயிறுதான் தந்தையர் தினம்.

VSK Sunday, June 17, 2007 9:10:00 PM  

இதையெல்லாம் தாண்டி வெற்றிகரமாக வந்தவர் என்ற முறையில், தெம்பூட்டுவதாக இருக்கிறது, டீச்சர், உங்கள் மடல்!

நன்றி!

VSK Sunday, June 17, 2007 9:13:00 PM  

//நீங்கள் மறுபடியும் எஸ்கேயாக மாறுங்கள். அதுதான் நல்ல தீர்வு.//

அட! இது நல்லா இருக்கே!

:))

அனுப்புகிறேன், அந்த வலைப்பதிவை, தனிமடலில்!

VSK Sunday, June 17, 2007 9:14:00 PM  

மிக்க நன்றி, திரு. வி.க.!

இது போன பதிலில் விட்டுப் போய்விட்டது!

:))

கோவி.கண்ணன் Sunday, June 17, 2007 9:28:00 PM  

எஸ்கே ஐயா,

உங்களுக்கு யாரோ ரசிகர் மன்றம் தான் ஆரம்பித்து இருக்கிறார்கள். போலி பெயரில் பதிவு ஆரம்பித்த (ஆ)சாமி ஆபாசமாக எழுத மாட்டார் என நம்புகிறேன்

:)

//நினைக்க நினைக்க நெஞ்சம் கனக்கிறது
மணக்க மணக்க உன் ஞாபகம் வருகிறது
வலிக்க வலிக்க என் உள்ளம் அழுகிறது
வணங்க வணங்க என் கைகள் குவிகிறது//

சிறப்பான வரிகள் !

உங்கள் கவிதை முழுவதும் நன்றாக இருக்கிறது. தந்தை வயதைக் கடந்தும் (இறந்த போது இருந்த வயது) தந்தையை நினைவுறுகிறீர்கள் பாராட்டுக்கள் !

தென்றல் Sunday, June 17, 2007 9:35:00 PM  

கவிதை... நல்லாருக்குங்க, ஐயா!

VSK Sunday, June 17, 2007 9:54:00 PM  

// போலி பெயரில் பதிவு ஆரம்பித்த (ஆ)சாமி ஆபாசமாக எழுத மாட்டார் என நம்புகிறேன்//


நானும் அப்படியே நம்புகிறேன் கோவியாரே!

நன்றி.

தந்தை என்ற ஒரு உணர்வு என்றென்றும் நீங்காத ஒன்று.

அறிவிப்புக்குள் மறைந்த கவிதையைப் பாராட்டியமைக்கும் நன்றி!

VSK Sunday, June 17, 2007 9:56:00 PM  

தென்றலாய் வந்து வீசியமைக்கு நன்றி, தென்றலே!!

:))

கோவி.கண்ணன் Sunday, June 17, 2007 9:57:00 PM  

//அறிவிப்புக்குள் மறைந்த (தந்தை) கவிதையைப் பாராட்டியமைக்கும் நன்றி!//

மறைந்த (தந்தை) கவிதை...
அது எப்படி தெரியாமல் போகும் .

:)

கருப்பு Sunday, June 17, 2007 10:32:00 PM  

உங்களுக்கு எனது இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள் எஸ்கே அய்யா.

இந்த வியடத்தில் என் மனதுக்கு என்ன தோன்றுகிறது எனில் யாரோ அவரின் உண்மையான இனிஷியலுடன் எழுதுகின்றனர் என்று நினைக்கிறேன். அப்படி இருக்கலாம்.

காரணம் எனக்குத் தெரிந்து உங்களுக்கு எதிரிகள் யாருமில்லை.

முக்கிய குறிப்பு:- மேலே என் பெயரில் இருப்பது நான் எழுதியது இல்லை!

Anonymous,  Monday, June 18, 2007 1:05:00 AM  

இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்...!!!!

என்னன்னு சொல்ல, உங்களுக்குமா ?

விட்டுத்தள்ளுங்க....!!!!

அன்புத்தோழி Monday, June 18, 2007 8:00:00 AM  

//உன்னாலே வாழுகின்றேன்
உன்னை நான் நினைக்கின்றேன்
உன் சொல்லைக் கேட்கின்றேன்
உன் பெருமை பாடுகின்றேன்
[தந்தை என்று....]//

தாயைச்சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமுமில்லை. தந்தையை போற்றும் மகன் கிடைத்தால் அந்த தந்தைக்கு வேறென்ன சந்தோஷம் இருக்கும். என்றென்றும் அந்த ஆன்மா உங்களை வாழ்த்தட்டும்.

VSK Monday, June 18, 2007 9:04:00 AM  

உங்களுக்குத் தெரியாமல் போகுமா என்ன, கோவியாரே!

உங்கள் பதிவையும் படித்தேன்.

ரொம்ப நல்லா இருக்கு.

இதையே என் பி. ஊ. ஆக கொள்ளவும்!
:))

VSK Monday, June 18, 2007 9:07:00 AM  

வாழ்த்துகளுக்கு நன்றி, செந்தழலாரே!

விட்டுத் தள்ளுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

வேண்டுமானால் எழுதாமல் இருக்கலாம்.
:))

நீங்கள் தனிமடலில் குறிப்பிட்டுள்ள செய்தியைப் பற்ரியும் எழுத ரொம்ப நாளாகவே ஆசைதான்.
விரைவில் எழுதுகிறேன்!
:))

VSK Monday, June 18, 2007 9:09:00 AM  

அப்படியா?
நீங்கள் போட்டதில்லையா அது!

உங்கள் விருப்பப்படி அதை நீக்கி விட்டேன், திரு. வி.க.

வாழ்த்துகளுக்கு நன்றி.

VSK Monday, June 18, 2007 9:12:00 AM  

அது போன்ற ஆன்மாக்களின் வாழ்த்துகளாலும், தங்களைப் போன்ற அன்பு உள்ளங்களின் ஆதரவாலும்தான் வாழ்க்கை நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கிறது, அன்புத்தோழி அவர்களே.

நன்றி.

எங்கள் பிரான் தயவிருக்க எதுவரினும் யான் அஞ்சேன்!

VSK Monday, June 18, 2007 9:15:00 AM  

கணினி அறிவு அதிகம் இல்லையென்றால் என் போன்றவரின் நிலைமை கொடுமைதான் போலும், பொன்ஸ்!
:))

நல்லதே நடக்கும்.

நன்றி.

நாகை சிவா Wednesday, June 20, 2007 1:47:00 AM  

நேத்து நானே இப்படி தான் வழி தவறி அங்க போயிட்டேன்...

இப்ப உண்மை புரிந்து விட்டது....

நாகை சிவா Wednesday, June 20, 2007 1:51:00 AM  

//கவலைப்படாதீங்க. இந்த எலிக்குட்டி, புலிக்குட்டியெல்லாம் இருக்கு.//

தேவையில்லாமல் இதில் புலியை இழுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்.

நாகை சிவா Wednesday, June 20, 2007 1:52:00 AM  

//பாசத்தைக் கொட்டவில்லை
பரிவாய் சொல் சொன்னதில்லை
உன் நெஞ்சில் ஓடி நாங்கள்
உட்கார்ந்து மகிழ்ந்ததில்லை

ஆனால்...,

இதுவெதையும் காட்டாமல்
ஏதொன்றும் சொல்லாமல்
எல்லாமே உணர்த்தி விட்டாய்
உன் அன்பு வாழ்க்கை மூலம்!//

அருமை... நெகிழக வைக்கும் வரிகள்....

VSK Wednesday, June 20, 2007 10:18:00 AM  

ஆகா! புலி பாயத் தொடங்கியாச்சா!

உகாண்டா போனதையும் பார்த்தேன்.

சந்தோஷமா இருக்கு சிவா!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP