Friday, June 15, 2007

சிவாஜி ..... பாஸ்!!

"சிவாஜி பாஸ்" !!!!

சிவாஜி பார்த்தாச்சு!

எழுதச் சொல்லி சிங்கையாண்டவர் கட்டளை!

ஆனால், இதை ஒரு விமரிசனம் எனக் கொள்ளாமல், படத்தைப் பற்றிய என் கருத்து எனக் கொள்ளவும்!

முதல் நாள், முதல் ஷோ!

திரையரங்கில் நல்ல கூட்டம்!

ஆனால், ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை!
[எங்க ஊர் அப்படி!]

விளக்குகள் அணைந்ததும், சென்னை எங்களூருக்குள் வந்தது!

விசில் சத்தம் பறக்க, பேப்பர் துண்டுகள் பேப்பர்மாரி பொழிய, கைத்தட்டல்கள் காதைத் துளைக்க, சிவாஜி துவங்கினார்!

கதையைப் பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை; சொல்வதற்கும் ஒன்றுமில்லை!

ஆரம்ப நாட்களில் வந்த கிசுகிசுக்கள் போல ஒரு ஒற்றை வரிக்கதை.

நல்லெண்ணத்துடனும், பெரும்பணத்துடனும் தாயகம் திரும்பிய ஒரு இளைஞனின்[!!] ஆசைக்கனவுகள், இங்குள்ள பணபலத்தாலும், ஆட்சித் திமிராலும் எப்படி முறியடிக்கப்பட்டு, அதைத் தன் அதிரடி ஆட்டத்தால் [நிஜமாகவே அதிரடிதான்!] வெற்றி கொள்கிறான் என்பதுதான் கதை.

இந்தக் கதைக்கு கதாநாயகி தேவையே இல்லை!

ஆனால், தமிழகம் தாங்குமா!

எனவே.... எண்டர் ஷ்ரேயா... மூலக்கதையுடன், அதன் நிகழ்வுகளுக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஒரு காட்சிக்களன்களுடன்!

ஆனால், அவர் இல்லாவிட்டால், அந்த பாடல் காட்சிகள் எப்படி இருக்கமுடியும்.

காமெடி வேணுமே!

கம் ஆன் விவேக்!!

சரி, படம் எப்படி?

3 மணி நேரப்படம்.

ஒரு நிமிடம்கூட போர் அடிக்கவில்லை!

ஒருசில காட்சி அமைப்புகள்[ஆஃபீஸ் ரூம், ம்யூசிக் ஸ்டோர்] அடிக்கடி ரிபீட் ஆனாலும், படம் தொய்வில்லாமல் போகிறது!

ரஜினி ஃபார்முலாபடி, முதல் ஒரு மணி காமெடி, அடுத்த ஒரு மணி கொஞ்சம் கதை, கடைசியில் அதிரடி என எதிலும் மாற்றமில்லை.

ரஜினி கெட்டப், உடை, மேக்கப் என படு இளமையாக ஜொலிக்கிறார்!

பாடல் காட்சிகளில் படுகவனம் எடுத்துக் கொண்டு நடித்திருக்கிறார்!

ரஜினி ரசிகர்களுக்கு விசில் அடித்து மாளாத வண்ணம் காட்சித் தேர்வுகள்!

மெயின் பஞ்ச் டயலாக், "ச்ச்சும்மா அ....தி....ரு...தில்ல"! வரும்போதெல்லாம், அரங்கம் புத்துணர்சி பெற்று நிமிர்ந்து உட்காருகிறது.

ஷ்ரேயாவுக்கு வேலையே இல்லை, பாடல் காட்சிகளைத் தவிர எனச் சொல்லலாம். அழகாக இருக்கிறார்.

ஆடியோவில் கேட்பதைவிட, சில பாடல்கள், அரங்க அமைப்பாலும், ஒரு சில புதுமைகளாலும் திரையில் மிக நன்றாக வந்திருக்கின்றன. ....குறிப்பாக "ஸ்டைல்" பாடல் படமாக்கப்பட்ட விதம்..... அற்புதம்!!


ஏ.ஆர்.ரஹ்மான் இசை நல்லா வந்திருக்கு!

விவேக் காமெடி ஒரு ப்ளஸ் பாயிண்ட்!

பாதி ரஜினி வேலையை இவரே செய்து விடுகிறார். ஆரம்ப காட்சி ஒன்றில், ரஜினி ஒரு பஞ்ச் டயலாக் விடுக்க வாயைத் திறக்கும் போது, அவரை அடக்கிவிட்டு, இவர் தொடர்கிறார்!!

வில்லனை எதிர்கொள்ள, சிவாஜி எடுக்கும் செயல்கள், சற்றும் நடக்கக் கூடிய ஒன்றல்ல!

சண்டைக்காட்சிகள் ஆங்கிலப்படங்கள் பல பார்த்திருக்கும் நம் தமிழக மக்களுக்கு மிகவுமே பிடிக்கும்!

படம் பார்க்க விரும்பும் ரசிகர்களின் ஆர்வத்தைக் குலைக்க விரும்பாததால், ஒரு சில கருத்துகள் மட்டுமே சொல்லவிழைகிறேன்.

திரைப்படம் என்பது வெறும் கற்பனை.


நடக்க வேண்டும் என டைரக்டர் விரும்பும் ஒரு கருத்தை, நடக்காது எனத் தெரிந்த ஒரு கருத்தை, இது மாறாதா, மக்கள் துயர் தீராதா என வெதும்பும் ஒரு கருத்தை,

நம்பமுடியாத, எவராலும் பின்பற்றி செய்யமுடியாத வழியில், ஒரு அதிரடி நாயகன் செய்வதாகக் காட்டி,

இந்த அவலத்தை மட்டும் மக்கள் மனதில் விதைத்து, இது பற்றிய தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவே சிவாஜி அமைந்திருக்கிறது.

ஒரு மூன்று மணி நேரப் படத்தின் மூலமாக நாடும், அரசியலும், தீயவர்களும் மாறிவிடுவார்கள் என்றெல்லாம் நம்பிட வேண்டாம், இந்தக் கசப்பான மருந்தை பொழுதுபோக்கு அம்சங்கள், பிரம்மாண்டம் கலந்து கொடுப்பதே திரைப்படம் என்பதுதான் இயக்குநரின் கருத்தாக இருந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.

அந்த வகையில் பார்த்தால், ரஜினி என்னும் காந்த சக்தியின் மூலமாக, பெரும்பாலான மக்களைச் சென்றடைய வைத்திருக்கிறார் ஷங்கர்.

இது முழுக்க முழுக்க ஒரு ரஜினி படம்!


ஆனால், படையப்பாவோ, சந்திரமுகியோ அல்ல!

ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அதிலும், அந்த மொட்டை பாஸ் ரஜினி[பெயர் எம்ஜிஆர்!] சிம்ப்ளி சூப்பர்!


மற்றவர்கள், இதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய கருத்தை.... கருப்புப் பணத்தை ஒழிக்க தன்னால் என்ன செய்ய முடியும்.... எனச் சிந்தித்தாலே போதும்.

போர் அடிக்காமல் போகிறது படம்!

அதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுகள்.

சிவாஜி...... பாஸ்!





68 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் Friday, June 15, 2007 1:54:00 AM  

//நடக்க வேண்டும் என டைரக்டர் விரும்பும் ஒரு கருத்தை, நடக்காது எனத் தெரிந்த ஒரு கருத்தை, இது மாறாதா, மக்கள் துயர் தீராதா என வெதும்பும் ஒரு கருத்தை,

நம்பமுடியாத, எவராலும் பின்பற்றி செய்யமுடியாத வழியில், ஒரு அதிரடி நாயகன் செய்வதாகக் காட்டி,

இந்த அவலத்தை மட்டும் மக்கள் மனதில் விதைத்து, இது பற்றிய தன் வருத்தத்தைப் பகிந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவே சிவாஜி அமைந்திருக்கிறது.//

எஸ்கே ஐயா,

நல்ல நேர்மையான விமரசனம். பாராட்டுகள்.

வருத்தைத்தை பகிர்ந்து கொள்கிறது என்று சொல்வது உங்கள் பாணி.
(நீங்கள் நல்லதை பார்பதாக சொல்லுபவர்)

வருத்ததை எதிர்பதாக பரிமாணத்தை காட்டி காசாக்குகிறார் (சினிமா அரசியல்) என்பது ஷங்கர் படங்களைப்பற்றி பொதுவாக வரும் குற்றச் சாட்டு.

வேண்டுகோளை செவிசாய்த்து உடனடியாக பதித்ததற்கு பாராட்டுக்கள்.

இம்சை Friday, June 15, 2007 1:57:00 AM  

சிவாஜி சூப்பர் சிவாஜி சூப்பர் சிவாஜி
சிவாஜி சூப்பர் சிவாஜி சூப்பர் சிவாஜி சிவாஜி சூப்பர் சிவாஜி சூப்பர் சிவாஜி சிவாஜி சூப்பர் சிவாஜி சூப்பர் சிவாஜி சிவாஜி சூப்பர் சிவாஜி சூப்பர் சிவாஜி சிவாஜி சூப்பர் சிவாஜி சூப்பர் சிவாஜி சிவாஜி சூப்பர் சிவாஜி சூப்பர் சிவாஜி சிவாஜி சூப்பர் சிவாஜி சூப்பர் சிவாஜி சிவாஜி சூப்பர் சிவாஜி சூப்பர் சிவாஜி சிவாஜி சூப்பர் சிவாஜி சூப்பர் சிவாஜி

கோவி.கண்ணன் Friday, June 15, 2007 1:59:00 AM  

நேரடியாக படம் பார்த்தவர் என்ற முறையில் தமிழ்மணத்தில் வந்த முதல் விமர்சனம்.

:))

VSK Friday, June 15, 2007 1:59:00 AM  

படிச்சு பின்னூட்டியதுக்கு மிக்க நன்றி, கோவியாரே!

மணி 2!

இப்பவாவது படுக்கப் போகலாமா!

:))

நாமக்கல் சிபி Friday, June 15, 2007 1:59:00 AM  

//மற்றவர்கள், இதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய கருத்தை.... கருப்புப் பணத்தை ஒழிக்க தன்னால் என்ன செய்ய முடியும்.... எனச் சிந்தித்தாலே போதும்//

இதுதான் வி.எஸ்.கே பஞ்ச்!

சிம்ப்ளி சூப்பர்ப்!

VSK Friday, June 15, 2007 2:04:00 AM  

ஒத்துக்கறேன், திரு. இம்சை!

VSK Friday, June 15, 2007 2:04:00 AM  

நேரடியாகப் பார்த்தது மட்டுமல்ல, நேர்மையாகவும் எழுத முயன்றிருக்கிறேன்!

மீண்டும் நன்றி,கோவியாரே!

VSK Friday, June 15, 2007 2:06:00 AM  

முக்கிய கருத்தை முக்கியமா கவனிச்சு சொன்னதுக்கு நன்றி, சிபியாரே!

[என் பெயரும் சங்கர் தானே!]

மனதின் ஓசை Friday, June 15, 2007 2:10:00 AM  

//திரைப்படம் என்பது வெறும் கற்பனை.
//

புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொண்டால் சரி. :-))

//
நடக்க வேண்டும் என டைரக்டர் விரும்பும் ஒரு கருத்தை, நடக்காது எனத் தெரிந்த ஒரு கருத்தை, இது மாறாதா, மக்கள் துயர் தீராதா என வெதும்பும் ஒரு கருத்தை,

நம்பமுடியாத, எவராலும் பின்பற்றி செய்யமுடியாத வழியில், ஒரு அதிரடி நாயகன் செய்வதாகக் காட்டி,

இந்த அவலத்தை மட்டும் மக்கள் மனதில் விதைத்து, இது பற்றிய தன் வருத்தத்தைப் பகிந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவே சிவாஜி அமைந்திருக்கிறது.
//

ஷங்கர் படங்கள் எல்லாமே அதெ போல்தான். அந்த முயற்சியில் பெரும்பாலும் வெற்றியே பெற்றிறுக்கிறார்.

Unknown Friday, June 15, 2007 2:11:00 AM  

அருமையான விமர்சனம். ஆக மொத்தம் சந்திரமுகியின் சாதனையை முறியடிக்க சிவாஜி கிளம்பிவிட்டார் என தெரிகிறது.

அடிச்சு தூள் கிளப்பிய எங்கள எஸ்.கே வாழ்க,வாழ்க

கோவி.கண்ணன் Friday, June 15, 2007 2:22:00 AM  

//[என் பெயரும் சங்கர் தானே!]//

உங்கள் பெயர் சரிதான். இயக்குனர் பெயர் ஷங்கர் !
sa not sha
:))

அதிகம் பார்வை இடப்பட்ட இடுகையில் வர என்னால் ஆன முயற்சி !
:)))))

உண்மைத்தமிழன் Friday, June 15, 2007 2:54:00 AM  

//ஒரு மூன்று மணி நேரப் படத்தின் மூலமாக நாடும், அரசியலும், தீயவர்களும் மாறிவிடுவார்கள் என்றெல்லாம் நம்பிட வேண்டாம், இந்தக் கசப்பான மருந்தை பொழுதுபோக்கு அம்சங்கள், பிரம்மாண்டம் கலந்து கொடுப்பதே திரைப்படம் என்பதுதான் இயக்குநரின் கருத்தாக இருந்திருக்க வேண்டும் என எண்ணுகிறேன்.//

நூற்றுக்கு நூறு உண்மை ஸார்.. இந்த மாதிரி டெக்னிக்கில் ஷங்கர் பிரில்லியண்ட்.. அதுதான் உங்களையும் படம் பார்க்க வைத்து அர்த்தராத்திரியில் இம்சையாக எழுத வைத்திருக்கிறது..

நடுநிலையான விமர்சனம் ஸார்.. இதற்கு எனது பாராட்டுக்கள்..

கூடவே ஒரு சின்ன சந்தேகம் ஸார்..

நேத்துல இருந்து ஒரு 'பார்ட்டி' 'இம்சை.. இம்சை.. இம்சை'ன்னுட்டு எங்கிட்டுப் போனாலும் கூடவே போய் 'இம்சை'யைப் பரப்பிக்கிட்டிருக்கு.. இப்ப இந்த 'இம்சை'கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது..?

ப்ரியன் Friday, June 15, 2007 5:22:00 AM  

நல்ல விமர்சனத்துக்கு நன்றி

/*திரைப்படம் என்பது வெறும் கற்பனை. நடக்க வேண்டும் என டைரக்டர் விரும்பும் ஒரு கருத்தை, நடக்காது எனத் தெரிந்த ஒரு கருத்தை, இது மாறாதா, மக்கள் துயர் தீராதா என வெதும்பும் ஒரு கருத்தை,

நம்பமுடியாத, எவராலும் பின்பற்றி செய்யமுடியாத வழியில், ஒரு அதிரடி நாயகன் செய்வதாகக் காட்டி,

இந்த அவலத்தை மட்டும் மக்கள் மனதில் விதைத்து, இது பற்றிய தன் வருத்தத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நிகழ்வாகவே சிவாஜி அமைந்திருக்கிறது./*

படம் முடிந்ததும் போட்ட டைட்டில் கார்டில் கடைசி வரி இது

கனவு மெய்ப்பட வேண்டும்

Anonymous,  Friday, June 15, 2007 6:43:00 AM  

எஸ்.கே சார், நீங்க கூட சினிமா பாப்பீங்களா ? அதுவும் ரஜினி படம் பர்ஸ்ட் ஷோ.

MSATHIA Friday, June 15, 2007 8:57:00 AM  

அடக்கமான, தெளிவான விமர்சனம். உங்கள் கருத்து என்று ஏன் இத்தனை அடக்கம்(அமரருள் உய்க்கவா? ;-)). நான் படத்தை பார்க்கவில்லை, இப்போதைக்க் பார்க்கும் உத்தேசமும் இல்லை. ஆனால் இதைவிட படாடோபத்தை விலக்கி உட்கருத்தை மட்டும் சொல்லிய மிக நல்ல விமர்சனம்.

Anonymous,  Friday, June 15, 2007 9:29:00 AM  

/*மற்றவர்கள், இதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய கருத்தை.... கருப்புப் பணத்தை ஒழிக்க தன்னால் என்ன செய்ய முடியும்.... எனச் சிந்தித்தாலே போதும்.
*/

contradicting with your post...

Kannabiran, Ravi Shankar (KRS) Friday, June 15, 2007 9:33:00 AM  

//சிவாஜி பார்த்தாச்சு!
எழுதச் சொல்லி கட்டளை!//

அது என்ன கட்டளை?
உங்களுக்கே கட்டளை இடுவது யார் தலைவா? :-)

கட்டளை சிங்கையில் இருந்து!
காட்சி அமெரிக்காவில் இருந்து!!

//சிவாஜி - பாஸ்//
தலைவர் படத்துக்கு வெறும் பாஸ் தானா SK? 60/100, 70/100 எல்லாம் இல்லியா? :-)

VSK Friday, June 15, 2007 10:10:00 AM  

//ஷங்கர் படங்கள் எல்லாமே அதெ போல்தான். அந்த முயற்சியில் பெரும்பாலும் வெற்றியே பெற்றிறுக்கிறார்.//

ஷங்கர் படங்கள் எல்லாமே அதே போல்தான் என்றாலும், ரஜினி இதன் ஹீரோ என்பதால், இதற்கு மறா படங்களை விட அதிக மக்கள் வருவார் என்பதால் இந்தக் கருவைத் தேர்ந்தெடுத்தார் என எண்ணுகிறேன், திரு. மனதின் ஓசை!

இது போன்ற கருத்துகள் கொண்ட சிறப்பான படங்கள் வந்ததில்லையா என்ன?

சரியான [மசாலா] கலவை இல்லாததால் அவையெல்லாம் ஓரிரு வாரங்களிலேயே பெட்டிக்குள் சென்றடைந்தன.

அந்த வகையில் தான் என் கருத்தைச் சொல்லியிருக்கிறேன்.

VSK Friday, June 15, 2007 10:12:00 AM  

//ஆக மொத்தம் சந்திரமுகியின் சாதனையை முறியடிக்க சிவாஜி கிளம்பிவிட்டார் என தெரிகிறது.//


நன்றி, செல்வன்.

சந்திரமுகியின் சாதனையை வசூலில் முறியடிக்கலாம்.

ஆனால், ரஜினி ரசிகர்களைத் தவிர பெருமளவில், ரிபீட் ஆடியன்ஸ் வருவார்களா என்பது கேள்விக்குறியே!

அவர்களே போதும் என்கிறீர்களோ!!
:))

VSK Friday, June 15, 2007 10:13:00 AM  

//I TOO AGREE //

நன்றி, திரு. ராஜா.

VSK Friday, June 15, 2007 10:17:00 AM  

//அடிச்சு தூள் கிளப்புங்க, கோவியாரே!

இதுக்கே ரிப்பீட் ஆடியன்ஸுன்னா, சிவாஜி நிச்சயம் மெகா ஹிட்தான்!!
[செல்வனுக்கு சொன்னதை பார்க்கவும்!]

:))//

அடிச்சு தூள் கிளப்புங்க, கோவியாரே!

இதுக்கே ரிப்பீட் ஆடியன்ஸுன்னா, சிவாஜி நிச்சயம் மெகா ஹிட்தான்!!
[செல்வனுக்கு சொன்னதை பார்க்கவும்!]

:))

VSK Friday, June 15, 2007 10:21:00 AM  

//நடுநிலையான விமர்சனம் ஸார்.. இதற்கு எனது பாராட்டுக்கள்..//

மிக்க நன்றி, திரு. உண்மைத்தமிழன்!

/இப்ப இந்த 'இம்சை'கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது..? //
இம்சையா எழுத வெஐத்திருக்கிறது என எனாஇயும் சொல்லிவிட்டு, இம்சையிலிருந்து எப்படி தப்பிப்பது என்ற இந்தக் கேள்வியில் ஏதும் உள்குத்து இல்லையே ஐயா!
:))

இம்சையும் ஒரு இன்பம்தன்.
அனுபவிங்க, இல்லேன்னா, மட்டுறுத்துங்க!
எலிக்குட்டி உங்க கையில தானே இருக்கு!
:))

VSK Friday, June 15, 2007 10:23:00 AM  

//படம் முடிந்ததும் போட்ட டைட்டில் கார்டில் கடைசி வரி இது

கனவு மெய்ப்பட வேண்டும்//


குறிப்பிட்டுச் சொன்னதற்கு நன்றி, திரு. ப்ரியன்.

நினைச்சுகிட்டே இருந்து சொல்லாமல் விட்ட ஒரு குறிப்பை இங்கு பதிந்ததற்கு மீண்டும் நன்றி.

VSK Friday, June 15, 2007 10:26:00 AM  

//எஸ்.கே சார், நீங்க கூட சினிமா பாப்பீங்களா ? அதுவும் ரஜினி படம் பர்ஸ்ட் ஷோ. //

என்னங்க இப்படி கேட்டுட்டீங்க, திரு. அனானி?

நிறைய பார்ப்பேனுங்க!

ரஜினி படத்துக்கு ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவுக்கு டிக்கட் கிடைக்குது .

விட்டுருவோம!
:))

நன்றி

VSK Friday, June 15, 2007 10:28:00 AM  

//அடக்கமான, தெளிவான விமர்சனம். உங்கள் கருத்து என்று ஏன் இத்தனை அடக்கம்(அமரருள் உய்க்கவா? ;-)). நான் படத்தை பார்க்கவில்லை, இப்போதைக்க் பார்க்கும் உத்தேசமும் இல்லை. ஆனால் இதைவிட படாடோபத்தை விலக்கி உட்கருத்தை மட்டும் சொல்லிய மிக நல்ல விமர்சனம்//

என்னங்க ஆட்டோ ரேஞ்சுல மிரட்டறீங்க?[//(அமரருள் உய்க்கவா? ;-))//
:))

மெதுவாவே பாருங்க.
ஒண்ணும் அவசரமில்லை.
ரொம்ப நாள் ஓடும்.

பாராட்டியதற்கு நன்றி.

VSK Friday, June 15, 2007 10:30:00 AM  

//Excellent Review!

Great!//

ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க, சிபா!

நன்றி!

VSK Friday, June 15, 2007 10:31:00 AM  

//contradicting with your post...//

எப்படி காண்ட்ரடிக்ட் பண்ணறீங்கன்னு சொல்லலியே, திரு. அனானி?

VSK Friday, June 15, 2007 10:35:00 AM  

//தலைவர் படத்துக்கு வெறும் பாஸ் தானா SK? 60/100, 70/100 எல்லாம் இல்லியா? :-) //

ரிஸல்ட் வர்றப்ப பாஸா, ஃ பெயிலான்னுதான் வரும், ரவி!

மார்க் லிஸ்ட் அப்புறமாத்தான் வரும்!

பாஸுன்னாலே 40 முதல் 100 வரை எனத்தானே அர்த்தம்?

அதெல்லாம் மக்கள் கொடுப்பாங்க!

VSK Friday, June 15, 2007 11:04:00 AM  

திரு. முரளி,

தாங்கள் அனுப்பியுள்ள சுட்டியை பதிக்க இயலாமைக்கு வருந்துகிறேன்.

கருப்பு பணத்தை[திருட்டு விசிடியை] ஒழிக்க ஏதோ என்னாலான சிறு முயற்சி!
:))

புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

நன்றி.

(த)தள Friday, June 15, 2007 11:36:00 AM  

Sir... neenga entha oorula padam paathengannu solla mudiyuma? entha show.. entha time.. entha cinema.

VSK Friday, June 15, 2007 12:06:00 PM  

//(த)தள said...
Sir... neenga entha oorula padam paathengannu solla mudiyuma? entha show.. entha time.. entha cinema.//

ஊர்: கேரி,[Cary] வட கரோலினா, அமெரிக்கா.[NC USA]
அரங்கு: கேலக்ஸி[Galaxy]
நேரம்: 8:00 p.m.

VSK Friday, June 15, 2007 12:08:00 PM  

டிக்கட்டை ஸ்கேன் பண்ணனுமா?
[மன்னிப்பும் கேட்கட்டுமா, தாயே!- மனோஹரா ஸ்டைலில்!]

"சும்மா அதிருதில்ல!"

Anonymous,  Friday, June 15, 2007 12:36:00 PM  

Shankar's movie are mostly based on "aadhangam". Yes. If none of us can do it in the real life ,atleast let us do it in the reel life. Be it corruption, education, medicine, we are unable to stop ourselves participating in that. Of course people enjoy the movie, just pass it on as another entertainer. "people" includes me. We all want to take home the message. But fail to implement it.

Anonymous,  Friday, June 15, 2007 2:24:00 PM  

///
//contradicting with your post...//

எப்படி காண்ட்ரடிக்ட் பண்ணறீங்கன்னு சொல்லலியே, திரு. அனானி?
///

Part of review, You said...
/* திரைப்படம் என்பது வெறும் கற்பனை. நடக்க வேண்டும் என... */
and
/* ஒரு மூன்று மணி நேரப் படத்தின் மூலமாக நாடும், அரசியலும், தீயவர்களும் மாறிவிடுவார்கள் என்றெல்லாம் நம்பிட வேண்டாம்...*/

VSK Friday, June 15, 2007 2:24:00 PM  

மரத்தில் மறைந்தது மாமத யானை!

பிரம்மாண்டத்தைப் பார்த்துவிட்டு, மெஸ்ஸேஜை மறந்து விடுகிறோம்!

நன்றி Sridhar.

VSK Friday, June 15, 2007 2:32:00 PM  

நீங்க நம்பலைன்னாலும் அதாங்க உண்மை.

படங்கள் ஒரு தீர்வைத் தர முடியாது.

ஏனெனில், போட்ட பணத்தை எடுக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தயாரிக்கப் படுபவை அவை.

மிகைப்படுத்தல் என்பது சர்வ சாதாரணமாக நடக்கும் அங்கே!

பிரச்சினையை உள்வாங்கி, நடைமுறையில் எப்படி செய்யலாம் என்றே அனைவரும் சிந்திக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

இதற்கெல்லாம் தீர்வைச் சொல்லி வரும் படங்கள் ஏதவது ஓடியிருக்கிறதா?

ஷங்கர் ரஜினி மூலம் அனைவரையும் அரங்கத்துக்கு வரவழைத்து இப்பிரச்சினையை உணர வைத்திருக்கிறார்.... ஒரு தெர்மாமீடர் போல.

இனி, சிகிச்சை செய்வது நாமாகத்தான் இருக்க வேண்டும்!

நன்றி.

ஓகை Friday, June 15, 2007 2:38:00 PM  

இணையத்தில் சிவாஜிக்கான முதல் விமர்சனம் உங்களுடையதாக இருக்கும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

Anonymous,  Friday, June 15, 2007 3:04:00 PM  

/*
பிரச்சினையை உள்வாங்கி, நடைமுறையில் எப்படி செய்யலாம் என்றே அனைவரும் சிந்திக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

இதற்கெல்லாம் தீர்வைச் சொல்லி வரும் படங்கள் ஏதவது ஓடியிருக்கிறதா?

ஷங்கர் ரஜினி மூலம் அனைவரையும் அரங்கத்துக்கு வரவழைத்து இப்பிரச்சினையை உணர வைத்திருக்கிறார்.... ஒரு தெர்மாமீடர் போல.

இனி, சிகிச்சை செய்வது நாமாகத்தான் இருக்க வேண்டும்!
*/

surpriced to see this from such a matured blogger. you should be kidding me... :)

SurveySan Friday, June 15, 2007 3:20:00 PM  

how much did you spend?

the normal $8 or $10 ?

VSK Friday, June 15, 2007 3:23:00 PM  

எதிர்பாரததெல்லாம் நடப்பதுதானே வாழ்க்கையின் ரகசியம் ஓகையாரே!

தற்செயலாக அமைந்தது இது!

நான் பார்த்ததும், கோவியார் என்னை எழுதச் சொன்னதும்!

திட்டமிட்ட ஒன்றல்ல!
:))

VSK Friday, June 15, 2007 3:26:00 PM  

பதிவில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்கோ, அல்லது சிவாஜி திரைப்படம் பற்றிய கருத்தாகவோ உங்கள் பின்னூட்டம் அல்லாமல், ரஜினி என்ற ஒரு நடிகரைப் பற்றிய உங்களது சொந்தக் கருத்தாகவும், தூற்றும் வகையிலும் அமைந்திருப்பதால், உங்களது பின்னூட்டத்தைப் பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறேன், திரு. அனானி.

VSK Friday, June 15, 2007 3:30:00 PM  

முதல் நாள் முதல் ஷோ என்பதால் டிக்கட் விலை அதிகம் தான், திரு.சர்வேசன்.
20 டாலர்கள்!

சிவாஜி படம் உள்லிட்ட 16 பாடல்கள் அடங்கிய சிடி ஒன்றும் வழங்கப்பட்டது இதில்!

அதிகம் பேர் வரமாட்டார்கள் இவ்விலையில் என்பதற்காகவும், கூட்ட நெரிசலில் என் மனைவியை அழைத்துச் செல்ல விரும்பாததாலும், வசதியாகப் படம் பார்க்கலாமே என்பதாலும், 2 - 3 ஆண்டுக்ளுக்கு ஒருமுறை வரும் ரஜினி படத்துக்கு கொடுப்பதில் தவறில்லை எனக் கருதியதாலும் இதைப் பொருட்படுத்தவில்லை.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...கண்ணக் கட்டுதே!

VSK Friday, June 15, 2007 3:39:00 PM  

//surpriced to see this from such a matured blogger. you should be kidding me... :) //


இதில் மெச்சூரிட்டி என்ன இருக்கிறது, அனானியாரே!

திரைப்படங்களை ஒரு பொழுது போக்கு என்ற அளவில்தான் நான் அணுகுகிறேன்.

அதற்கும் ஒரு மெச்சூரிட்டி தேவையென நினைக்கிறேன்.

வெள்ளித்திரை மாயையில் நான் சிக்குவதில்லை!

அவையெல்லாம் ஒரு படம் சொல்லும் பாடம்!
அவ்வளவே!

பாடங்கள் மதிப்பெண் தருவதில்லை.
படிப்பதால், அதில் இருக்கும் சாரத்தைக் கொள்வதால் மட்டுமே!

Anonymous,  Friday, June 15, 2007 4:02:00 PM  

/*இதில் மெச்சூரிட்டி என்ன இருக்கிறது, அனானியாரே!
*/
On the first hand, It didn't meant to comment you personally in a negative way. If it did, I'm sorry. I meant to communicate you are a matured blogger. But you deriving out a message from fantacy movie, That was unexpected. As you said...
/*
திரைப்படங்களை ஒரு பொழுது போக்கு என்ற அளவில்தான் நான் அணுகுகிறேன்.
*/
This is It - "just" entertainment, nothing else...no message, no social BULL-SHIT, Nada. Bottom line - they have a skin/fantacy to sell, they want our money, we pay into their pocket (as ticket) - there ends the duo.

I believe you won't take it personally. Take it easy :). Nice review, except that contradicting part :)

Anonymous,  Friday, June 15, 2007 4:37:00 PM  

என்னங்கன்னா இப்படி டுபுக்கு விட்டு மொய் எழுத வச்சிட்டிங்க ! படம் முழுவதும் சங்கரின் வாந்தி ! பாவம் ரஜினி இந்தப்படத்தோட ஓய்வு எடுக்கலலாம் என்று நினைத்திருப்பார், நல்ல செலவு செய்து பல பேருக்கு வேலை வாய்ப்பு தந்திருக்கும் இந்த முயற்ச்சி பாரட்ட படவேண்டியது மத்த படி" சிவாஜி சாரி"

VSK Friday, June 15, 2007 4:41:00 PM  

//I believe you won't take it personally. Take it easy :). Nice review, except that contradicting part :)//

While I agree with you on your assessment on movies, I believe it is just a genearal sweeping statement.

Some movies do have a core plot [black money in this movie for example] and weave a yarn around it to extract money.

A casual observer may miss it but not a matured one.

Like a swan, he/she can leave out the trash and take up the core message as food for thought, I think!

BTW, I am not at all offended but I do have to admit that you are a hard nut to crack!

It took 4 posts to extract what's your line of thinking!

Good sailing!
:))

VSK Friday, June 15, 2007 4:45:00 PM  

அப்படியா சொல்றீங்க திரு. ஆனந்?

யாரையும் மிஸ்லீட் பண்ண இதை எழுதவில்லை.

படம் பார்த்து வீடு திரும்பியதும் என் மனதில் பட்டதைச் சொன்னேன்.

I am sorry you didn't like it.

VSK Friday, June 15, 2007 5:01:00 PM  

சிஃபி விமரிசனம் கூட என் கருத்தை ஒட்டியே வந்திருக்கிறது!


http://sify.com/movies/tamil/review.php?id=14472447&ctid=5&cid=2429

துளசி கோபால் Friday, June 15, 2007 5:15:00 PM  

DVD வர்ற வரைக்கும் நாங்க காத்திருப்போம்.
( நாங்க வாங்குறது ஒரிஜனல். அதனாலே கூடக் கொஞ்சம் நாள் ஆகும்)

கதை இப்பத் தெரிஞ்சுபோச்சு.

அதுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி.

அன்புத்தோழி Friday, June 15, 2007 5:27:00 PM  

//நல்லெண்ணத்துடனும், பெரும்பணத்துடனும் தாயகம் திரும்பிய ஒரு இளைஞனின்[!!] ஆசைக்கனவுகள், இங்குள்ள பணபலத்தாலும், ஆட்சித் திமிராலும் எப்படி முறியடிக்கப்பட்டு, அதைத் தன் அதிரடி ஆட்டத்தால் [நிஜமாகவே அதிரடிதான்!] வெற்றி கொள்கிறான் என்பதுதான் கதை//

அப்பாடா உண்மையாகவே கதை தெரிஞ்சிடுச்சு. உள்ளதை உள்ளபடி எழுதிய வி எஸ் கே அய்யா வாழ்க ( சும்மா தமாஷு தப்பா எடுத்துக்காதீங்க). எட்டு கட்டி விடாமல் அழகாக கூறியிருக்கிறீர்கள். உண்மையிலேயே நல்ல விமர்சனம் அய்யா.

VSK Friday, June 15, 2007 5:42:00 PM  

பாஸ் உங்களையும் வரவழைச்சுட்டாரே!

நீங்க வந்து இவ்வளவு சொன்னதே பெருசு!

டிவிடி-ல பார்த்ததும், மறக்காம சொல்லுங்க, எப்படி இருந்துச்சுன்னு!

ரொம்ப நன்றி டீச்சர்!
:))

Tulsi Friday, June 15, 2007 7:26:00 PM  

//பாஸ் உங்களையும் வரவழைச்சுட்டாரே!//

எனக்கு(ம்) வேடிக்கைப் பார்க்கப் பிடிக்கும்:-)))))

கூட்டமா இருந்தா எட்டிப் பார்க்காமப் போகமாட்டேன்

VSK Friday, June 15, 2007 10:12:00 PM  

அய்யா பாஸு,
நம்ம டீச்சரம்மா வந்திருக்காஹ!
துள்சி வந்திருக்காஹ!
இன்னும் ஆராரோ வந்திருக்காஹ!

படம் ஹிட்டுதான்!

ச்ச்ச்சும்மா அ..தி..ரு..தில்ல!

:))

நன்றி, துள்சி!

கோவி.கண்ணன் Saturday, June 16, 2007 1:24:00 PM  

//எழுதச் சொல்லி சிங்கையாண்டவர் கட்டளை!//

பார்த்துட்டோம்ல...விமர்சனத்தைப் பாருங்க...'சும்மாவே' அதிருதுல்ல !
:))

VSK Saturday, June 16, 2007 1:28:00 PM  

பார்த்துட்டோம்ல!!

நல்லாயிருக்கு உங்க விமரிசனமும், கோவியாரே!!

சிறில் அலெக்ஸ் Saturday, June 16, 2007 2:54:00 PM  

SK,
சிவாஜி திரட்டி ஒரு தானியங்கி திரட்டி. RSS வழியா 'சிவாஜி'ன்னு வார்த்த இருக்கிற எல்லா பதிவுகளும் தானாகவே வந்திடும். உங்க பதிவும் நிச்சயம் வந்திருக்கும்.

ஆக சிவாஜி பாத்துட்டீங்க..

நான் இன்னைக்குத்தான் :) அதுவரைக்கும் விமர்சனங்கள் படிப்பதில்லைன்னு முடிவு.

:)

Anonymous,  Monday, June 18, 2007 2:25:00 AM  

57 கமெண்ட் என்றதும் ஆர்வமாக கமெண்டுகளை பார்த்தேன். அதில் 40 கமெண்டுகளாவது VSK போட்டிருக்கிறார் :-)

அன்புத்தோழி Monday, June 18, 2007 7:52:00 AM  

அய்யா, நான் இட்ட பின்னூட்டம் வர வில்லையே, நான் ஏதாவது தவறாக எழுதி விட்டேனா? தவறாக இருந்தால் அறியா பொண்ணுனு மன்னிச்சுடுங்க, பிளீஸ்.

VSK Monday, June 18, 2007 8:57:00 AM  

அன்பான தோழியின் அன்பு பாராட்டுக்கு அன்பான நன்றி!

தங்களது பின்னூட்டம் கவனிக்காமல் விட்டுப் போனது.

நமக்கெல்லாம் 20க்கு மேல பி.ஊ. வர்றதே அதிகம்.

30 - 40ன்னு வந்ததும் ஒண்ணும் புடி படலை!
ஹிஹிஹி!

மன்னிக்கவும்!

VSK Monday, June 18, 2007 9:00:00 AM  

//57 கமெண்ட் என்றதும் ஆர்வமாக கமெண்டுகளை பார்த்தேன். அதில் 40 கமெண்டுகளாவது VSK போட்டிருக்கிறார் :-) //

என்னங்க அனானியாரே!

நீங்க கொத்ஸ் நோட்ஸைப் படிச்சதில்லியா?

அதை முதல்ல படிச்சிட்டு வாங்க!

;)))

அன்புத்தோழி Monday, June 18, 2007 7:26:00 PM  

அய்யா, தயவு செய்து மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம். வயதில் பெரியவர்கள் ஆசிர்வாதம் செய்ய வேண்டும். என் நமஸ்காரங்கள்.

Anonymous,  Tuesday, June 19, 2007 7:24:00 AM  

நான் படித்த சிவாஜி விமர்சனங்களிலேயே, மிகவும் கலர்புல்லான விமர்சனம் இதுதான்..

நன்றாக அனலைஸ் செய்து எழுதி இருக்கிறீர்கள்....

விமர்சனம் பாஸ் பாஸ்...

VSK Tuesday, June 19, 2007 8:26:00 AM  

கனிவான அன்புக்கு மீண்டும் நன்றி, அன்புத்தோழி!

VSK Tuesday, June 19, 2007 8:29:00 AM  

சிவஜி பாஸ் என்பது இப்போது உறுதியாகிவிட்டது!

மார்க் லிஸ்ட் வரவேண்டியதுதான் பாக்கி!

பாராட்டுக்கு நன்றி, செந்தழலாரே!

"நலிந்தோர்க்கு நல்லது செய்யும் சாமி" விரைவில் வரும்!

:))

நாகை சிவா Wednesday, June 20, 2007 1:42:00 AM  

Pass Pass Sivaji Pass Pass....

Boss Boss Super Star Boss Boss...

நல்ல விமர்சனம் ...

வந்தாச்சு... இனிமேல் தொடர்ந்து வருகை தரப்படும்.. இம்சை கொடுக்கப்படும் ...;-)

VSK Wednesday, June 20, 2007 10:20:00 AM  

ஆகா! புலி பாயத் தொடங்கியாச்சா!

உகாண்டா போனதையும் பார்த்தேன்.

சந்தோஷமா இருக்கு சிவா!

இந்த வலைப்பதிவைப் பற்றி...

எனக்கு தெரிந்த ஆன்மீகம், இலக்கியம், கதை, கவிதை, அரசியல் மற்றும் நிகழ்வுகள்.

  © Blogger template Blogger Theme by Ourblogtemplates.com 2008

Back to TOP